பட்டு புடவை என்றாலே, அதற்கு ஒரு தனித்துவம் உள்ளது. இந்த பட்டு புடவைகளை பிடிக்காத பெண்களே இல்லை என்று கூறலாம். மற்ற புடவைகளை விட, பட்டு புடவைகளுக்கு எப்போதும் சிறப்பான வரவேற்பு உள்ளது.
பல நிறங்களிலும், வடிவங்களிலும், மற்றும் ராகங்களிலும் பட்டு புடவைகள்(saree blouse) கிடைகின்றன. ஆனால், இந்த பட்டு புடவைகளுக்கு மேலும் அழகூட்டும் விதமாக அதற்கு ஏற்ற பிளவுஸ் தேர்வுகளும் மிக முக்கியமான ஒன்றாகும். நீங்கள் அணியும் பட்டு புடவை உங்களுக்கு அழகாகவும், நல்ல தோற்றத்தை தருவதாகவும் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் சரியான பிளவுஸ்களையும் தேர்வு செய்ய வேண்டும்.
இன்று கடைகளில் பல வகைகளிலும், ரகங்களிலும் பிளவுஸ்கள் பட்டு புடவைகளுக்கு கிடைகின்றன. அவற்றில் சிறந்த ஒன்றையும், உங்களுக்கு ஏற்ற ஒன்றையும் தேர்வு செய்ய இங்கே உங்களுக்காக சில சுவரசியமணா குறிப்புகள்!
பட்டு புடவை பிளவுஸ்களின் அம்சங்கள்(Features of silk saree blouse)
- பட்டு புடவைகளின் பிளவுஸ்கள் நீங்கள் அணியப்போகும் அந்த விழாவிற்கு ஏற்றதாக இருக்கும் படி தேர்வு செய்ய வேண்டும்
- இந்த பிளவுஸ்கள் பருத்தி பட்டு, சுத்தமான பட்டு மற்றும் ராசில்க் எனப்படும் பட்டு வகை துணிகளால் வடிவமைக்கப்படுகின்றது
- திருமண பட்டு புடவை பிளவுஸ்கள் அதிக வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்படுகின்றது
- தோல், கைகள், முதுகு பகுதி என்று அனைத்தும் மிக கவனத்தோடு வடிவமைக்கபடுகின்றது
- ஒரு எளிமையான பட்டு பிளவுஸ்கள் குறைந்த வேலைபாடுகளுடன் வரும். அவற்றில் குறைவான கற்கள் பாதிக்கும் வேலைபாடுகளே இருக்கும்
- வித விதமான கழுத்து பகுதி, கைகள் என்று பல வடிவங்களில் இந்த பிளவுஸ்கள் வடிவமைக்கப்படுகின்றது
- இவை தனித்துவம் வாய்ந்த தோற்றத்தை தரும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது
பட்டு புடவைக்கான பிளவுஸ்களை தேர்வு செய்ய குறிப்புகள்(Tips and guide to choose blouse for silk sarees)
பட்டு புடவைக்கான பிளவுஸ்களை தேர்வு செய்வது என்பது ஒரு கலை. இதற்கு ஒரு தனி ரசனையும், ஆர்வமும் இருக்க வேண்டும். உங்களுக்கு குழப்பங்கள் இருந்தால், இந்த குறிப்புகள் நீங்கள் ஒரு சரியான தேர்வை செய்ய உதவியாக இருக்கும்;
- நீங்கள் தேர்வு செய்யும் பிளவுஸ் பட்டு புடவையின் டிசைனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்
- பிளவுஸ்சின் நிறம் பட்டு புடவையின் நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மாறுபட்டு இருக்கக் கூடாது
- நீங்கள் தேர்வு செய்யும் பிளவுஸ் எளிமையாக இருக்க வேண்டுமா அல்லது ஆடம்பரமாக இருக்க வேண்டுமா என்று தீர்மானம் செய்யுங்கள்
- புடவையில் இருக்கும் டிசைனுக்கு ஏற்றவாறு பிளவுஸ் டிசைனும் இருக்க வேண்டும்
- நீங்கள் கனமான பட்டு புடவையை தேர்வு செய்திருந்தால், பிளவுஸ்சினி கழுத்து பகுதி எளிமையாக இருக்க வேண்டும்
- கைகளில் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ் பட்டு புடவைக்கு ஏற்ற தேர்வாக இருக்கும்
- பாரம்பரிய டிசைன் முதல் நவீன டிசைன்கள் வரை உங்கள் பட்டு புடவை பிளவுஸ்சுக்கான டிசைன்களை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்களாகவே வடிவமைக்கலாம்.
மேலும் படிக்க – சென்னையில் ஒரிஜினல் பட்டு புடவைகள் வாங்க சிறந்த கடைகள்.. முகவரி & விவரங்கள்!
புடவைக்கான பிளவுஸ்சை தேர்வு செய்யயும் முறைகள்(Rules to follow when choosing the blouse)
எப்படி ஒரு பிளவுஸ்சை தேர்வு செய்வது என்று தெரிந்து கொள்வதோடு, சில விதி முறைகளையும் நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம். இங்கே உங்களுக்காக அவை;
- அதிக எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட பிளவுஸ் சில சமயங்களில் அசௌகரியமாக இருக்கக் கூடும். அதனால், தேவைக்கேற்ப குறைந்த எம்ப்ரைடரிங் வேலைப்பாடு இருக்கும் பிளவுஸ்சை தேர்வு செய்வது நல்லது
- விரிந்த தோள்கள் உடையவர்களாக நீங்கள் இருந்தால், நன்கு விரிந்த கழுத்து வடிவமைப்பை தேர்வு சிய வேண்டும். மேலும் ஓரங்களில் பட்டை போன்ற பைபிங் தருவது அழகாக இருக்கும்
- சற்று மெல்லிய உடலமைப்பு உடையவர்கள் நீண்ட கைகள், மெல்லிய ஸ்டராப் மற்றும் விரிந்த கழுத்து வடிவமைப்பை வைத்து பிளவுஸ்சை வடிவமைக்கலாம்
- தடிமமான கைகளை உடையவர்கள் கை இல்லாத பிளவுஸ்களை தவிர்ப்பது நல்லது
- நீண்ட கைகளை உடையவர்கள் முக்கால் அல்லது முழு நீல கைகளை கொண்ட பிளவுஸ்களை அணியலாம்
- உடல் பருமனாக இருப்பவர்கள், தொப்பையை மறைக்க, சற்று நீளமான பிளவுஸ்களை வடிவமைக்கலாம். இது சற்று அழகான தோற்றத்தையும் உங்களுக்குத் தரும்
- ரெடி மேட் பிளவுஸ் வாங்கப் போகின்றீர்களா அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்பா தைக்க போகின்றீர்களா என்பதை தீர்மானம் செய்ய வேண்டும்
- நீங்கள் அணியும் பிளவுஸ் உங்களுக்கு சௌகரியமாக இருக்க வேண்டும்
- விழாவன்று அணிவதற்கு முன், பிளவுஸ் தயாரானதும் அதனை ஒரு முறை அணிந்து பார்ப்பது நல்லது
- புடவைக்கு ஏற்ற சரியான பிளவுஸ்சை தேர்வு செய்து அணிய வேண்டும்
- நவீன வடிவங்களை புடவையின் டிசைனுக்கு ஏற்றவரு தேர்வு செய்து அணிய வேண்டும்
- தங்கம், வெள்ளி போன்ற சரிகைகள் வைத்த பிளவுஸ்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்
- நீங்கள் அணியப்போகும் விழா காலத்திற்கு ஏற்றவாறு, துணியின் வகையை தேர்வு செய்ய வேண்டும்
பல வகை பட்டு புடவைக்கான பிளவுஸ்களின் தொகுப்பு(Blouse Collectoins for Silk Sarees)
ஒரே மாதிரியான பிளவுஸ் டிசைன்ஸ் போட யாருக்கு தான் பிடிக்கும். ஒவ்வொரு புடவைக்கும் அதற்கு தகுந்த மாதிரியான பிளவுஸ் டிசைன்களை எப்படி தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய குழப்பமாக இருக்கும். அதற்காக தான் கீழே பல வண்ண டிசைன்களை கொடுத்துள்ளோம்.
1. வலை பிளவுஸ்
இந்த பிளவுஸ் வலைகள் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் பாரம்பரியமான வடிவமும் சேர்த்து அமைக்கப்படும். இதில் அதிக எம்ப்ரைண்டரிங் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையான பிளவுஸ்கள் மிகவும் அழகாக இருக்கும். படர்ந்த தோள்களை உடைய பெண்கள் இதனை தேர்வு செய்யலாம்.
2. திருமண பல்லக்கி டிசைன்
இந்த பிளவுஸ் மூடிய கழுத்து பகுதியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திருமணத்திற்கு ஏற்ற ஒரு வகையாகும். மேலும் இதில் பல எம்ப்ரைடரின் டிசைன்கள் போடப்பட்டிருக்கும். இது மிகவும் அழகான பிளவுஸ் டிசைன்.
3. நகை வடிவங்கள் உள்ள பிளவுஸ்
இந்த பிளவுஸ்களில் நகைகளின் வடிவங்கள் எம்ப்ரைடரிங் செய்யப்பட்டோ அல்லது கற்களால் அலங்கரிக்கப்பட்டோ வடிவமைக்கப்படும். இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த வகை வடிவமைப்பு இன்று பிரபலமாகி வருகின்றது. நீண்ட கழுத்து உடைய பெண்கள் இதனை தேர்வு செய்யலாம்
4. அழகிய கற்கள் வேலைபாடுகள் இருக்கும் பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்களில் பல நிறங்களிலான கற்கள் பத்க்கப்பட்டு அலங்கரிக்கப்படும். இவை பார்ப்பதற்கு ஆடம்பர தோற்றம் கொண்டவையாகவும், அழகானவையாகவும் இருக்கும். இவை படர்ந்த கழுத்து பகுதி இருக்கும் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கு.
5. வட்ட வடிவம் கொண்ட பிளவுஸ்
இந்த டிசைன் ஒரு தனித்துவமான அழகைத் தரும் வகையில் இருக்கும். இவை பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு டிசைனாக இருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் திருவிழாக்கள், மற்றும் சிறப்பு நாட்களில் பட்டு புடவையுடன் அணிய ஏற்ற வடிவமாக இருக்கும்.
6. கிராஸ் கட் வடிவம்
இந்த வகை பிளவுஸ்கள் மற்ற பிளவுஸ்களை விட சற்று மாறுபட்டு இருக்கும். இவை நவீன வடிவமைப்பை கொண்ட பிளவுஸ்கள், இளம் வயது பெண்கள் இந்த வடிவ பிளவுஸ்களை பெரிதும் விரும்பி அணிவார்கள்.
7. கண்ணாடி வைக்கப்பட்ட பிளவுஸ்
இந்த பிளவுஸ் டிசைனில் சிறு சிறு வட்ட வடிவிலான கண்ணாடிகளை கொண்டு அழகிய வடிவங்கள் உருவாக்கப்படுகின்றது. இவை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். குறிப்பாக இவை மற்ற இயல்பாக பிளவுஸ்களை விட சற்று ஆடம்பர தோற்றம் தரக்கூடியதாக இருக்கும்.
8. பப் கைகள் கொண்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்கள் பழைய டிசைனாக இருந்தாலும், இன்று இது இளம் வயது பெண்களிடையே பிரபலமாகி வருகின்றது. இவை பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தை தரும்.
9. கைகளில் அதிக வேலைபாடுகள் கொண்ட பிளவுஸ்
இந்த வகை டிசைன்களில், குறிப்பாக கை பகுதியில் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இவை பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். மேலும் பிளவுஸ்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும்.
10. முட்டிக்கை நீளம் உள்ள பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்கள் 20 -30 ஆண்டுகளுக்கு முன் அதிக பிரபலமாக இருந்தது. ஆனால், இன்று இது மீண்டும் பல பெண்களால் விரும்பப்பட்டு, மூகூர்த்த பட்டு புடவைக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டு அணியப்படுகின்றது. இது நல்ல ஆடம்பரமான தோற்றத்தை தரும்.
11. சிறய கைகளை உடைய பிளவுஸ்
இந்த வகை வடிவமைப்பில், பிளவுஸ்சின் கைகள் மிக சிறியதாக இருக்கும். மேலும் இது இளமையான தோற்றத்தையும் பெண்ணுக்குத் தரும், இதில் பல வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதில் பாப் கைகளையும் வைக்கலாம். சற்று மாறுபட்ட தோற்றத்தை இது தரும். அணியவும் சௌகரியமாக இருக்கும்.
12. ஆழமான “U” மற்றும் “V” வடிவிலான பிளவுஸ்
இந்த பிளவுஸ் நீண்ட சரிகை வேலைப்பாடுகளோடு வருகின்றது. இவை பார்ப்பதற்கு சற்று மாறுபட்ட தோற்றத்திலும், வடிவத்திலும் இருக்கும். இது பட்டு புடவைக்கு ஏற்ற ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
13. முக்கால் கைகள் கொண்ட பிளவுஸ்
இந்த பிளவுஸ் முக்கால் நீல கைகளை கொண்டவை. இது வழக்கமான நீளத்தை விட சற்று மாறுபட்டு இருக்கும். இவை சிறப்பு விழாக்களுக்கு பட்டுப் புடவையோடு அணிய ஏற்றதாக இருக்கும். சற்று நவீன தோற்றத்தை தரும்.
14. பேண்ட் காலர் வைக்கப்பட்ட முழு கை பிளவுஸ்
இது மற்ற பிளவுஸ்களை விட சற்று மாறுபட்டது. இதில் காலர் இருக்கும். மேலும் இதில் கைகள் முழு நீளமாக இருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் பார்டி கொண்டாட்டங்களுக்கு பட்டு புடவையோடு அணிய ஏற்றதாக இருக்கும்.
15. நீளமான கைகளை கொண்ட பிளவுஸ்
இந்த பிளவுஸ் நீளமான கைகளை கொண்டிருக்கும். பெரும்பாலான பெண்கள் இதனை பெரிதாக தேர்வு செய்வதில்லை என்றாலும், இது பார்க்க சற்று மாறுபட்ட தோற்றத்தை தரும். அழகாகவும் இருக்கும். இது பார்க்க நேர்த்தியாக இருக்கும்.
16. முட்டிக்கையில் பிரில்ஸ் உள்ள பிளவுஸ்
இந்த டிசைன் பிளவுஸ்களில் முட்டிக்கைகளில் ப்ரில்ஸ் இருக்கும். இவை முட்டிக்கை நீளம் இருந்தாலும், இதன் ப்ரில்ஸ் சற்று நீண்டு முக்கால் கை அளவிற்கு போகும். இது அழகான வடிவம் கொண்ட பிளவுஸ். இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கற்கள், பாசி மணிகள் மற்றும் எம்ப்ரைடரிங் வேலைப்பாடுகளையும் செய்து கொள்ளலாம்.
17. அடுக்கடுக்காய் இருக்கும் கைகள்
இந்த பிளவுஸ் வகையில், கைகளில் இரண்டு அடுக்குகள் இருக்கும். இது பார்க்க முற்றிலும் வேறு வடிவிலான டிசைனாக இருக்கும். எனினும், இது அழகாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும்.
18. காலர் மற்றும் முன் பகுதியில் ஜிப் வைத்த பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்களில் காலர்களும், முன் பகுதியில் நீண்ட ஜீப்பும் இருக்கும். மற்ற பிளவுஸ்களை விட இது முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவமாக இருக்கும்.
19. மணி போன்ற அமைப்பு உடைய கைகள்
இந்த வகை பிளவுஸ்களில் மணிப்போன்ற அமைப்பு கொண்ட கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது மற்ற பிளவுஸ் வடிகங்களை விட மாறுபட்டு, அழகான தோற்றத்தையும் தரும் வகையில் இருகின்றது. இதனை சிறப்பு விழாக்களுக்கு அணியலாம்.
20. குறுகிய அல்லது முட்டிக்கை நீல பாப் கைகள்
இந்த பிளவுஸ் வடிவத்தில் பாப் வைக்கப்பட்டிருக்கும். அது முட்டிக்கை நீளம் வரை வருவதாகவும், அல்லது சிறிய பாப் தோல் பகுதியிலும், அதன் பின்னர் கைகள் முட்டிக்கை வரை நீளமாக இருப்பதாகவும் வடிவமைக்கப்படும்.
21. ரப்பில் கைகள் கொண்ட பிளவுஸ் டிசைன்
இந்த வகை பிளவுஸ்கள் தெளிவான தோற்றம் மற்றும் மற்றும் நேர்த்தியான வடிவம் கொண்டவையாக இருக்கும். இது நவீன மற்றும் பாரம்பரிய வகைகளை சேர்ந்தது என்றும் கூறலாம். இது எளிமையான தோற்றம் தருபவையாக இருந்தாலும், பார்க்க அழகாக இருக்கும்.
22. இன்வேர்டட் “U” வடிவம் கொண்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்கள் இளம் வயது பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும். இது அழகான ஒரு பழமையான தோற்றம் தரும் வகையில் இருந்தாலும், நவீன காலத்திற்கும் ஏற்ற வடிவமாகவே உள்ளது.
23. கழுத்து பகுதி மூடிய, முட்டிக்கை வரையிலான கைகளை கொண்ட பிளவுஸ்
இந்த பிளவுஸ் வடிவத்தில் கழுத்து பகுதி முற்றிலும் மூடப்பட்டு இருக்கும். மேலும் கைகள் முட்டிக்கை நீளம் வரை இருக்கும். இது ஒரு அழகான தோற்றத்தை தந்தாலும், பண்டிகை நாட்கள் மற்றும் விழாக்களுக்கு அணிந்து கொள்ள ஏற்றதாக இருக்கும்.
24. ப்ரில் காலர் வைக்கப்பட்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்களில் காலரில், அதாவது கழுத்து பகுதியில் ப்ரில் வைக்கப்பட்டிருக்கும். இது பார்க்க சற்று முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவமைப்பில் இருக்கும். பார்ட்டி மட்டும் வீட்டில் நடக்கும் சுப காரியங்களுக்கு இதனை பட்டுப் புடவையுடன் அணியலாம்.
25. படகு வடிவ கழுத்து கொண்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ் வடிவமைப்பில், கழுத்து பகுதியில் படகு போன்ற வடிவமைப்பு வைக்கப்பட்டிருக்கும். இது பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு வடிவமாக இருக்கும், மேலும் இதில் பல வேலைப்பாடுகளையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம்.
26. கோல்ட் ஷோல்டர் பிளவுஸ்
இந்த டிசைனில் தோள் பகுதியில் சருமம் தெரியும் வகையில் சிறு துளை இருக்கும். இது பார்ட்டி மற்றும் வீட்டில் நடக்கும் கொண்டாட்டங்களுக்கு அணிய ஏற்ற பிளவுஸ் டிசைனாக இருக்கும். இதனை சில பெண்கள் விரும்பி வடிவமைப்பார்கள். இது பார்க்க அழகாக இருக்கும்.
27. அலங்கரிக்கப்பட்ட பிளவுஸ் டிசைன்கள்
இந்த வகை பிளவுஸ்களில் பல வேலைபாடுகள் செய்யப்பட்டிருக்கும். இவை பிளவுஸ்கள் பார்க்க நல்ல அலங்காரத்தோடும், அழகாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு தேர்வாக இருக்கும்.
28. முதுகு பகுதி திறந்த வடிவம் கொண்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்களில் பின் பகுதியில் பெரிதாக எந்த டிசைனும் இருக்காது. மாறாக முதுகுப்பகுதி தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் திருமண பட்டு புடவைகளுக்கு வடிவமைக்கபடுகின்றது.
29. பாப் கைகள் கொண்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்களில் பாப் கைகள் வெவ்வேறு விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நீண்ட பாப், குறுகிய பாப், என்று உங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்துக் கொள்ளலாம். இது பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு அழகான் வடிவமாக இருக்கும்.
30. பாரம்பரிய இறக்கமான கழுத்து பகுதி கொண்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்களில் கழுத்து பகுதி, குறிப்பாக முன் பக்கம் மற்றும் பின் பக்கம் ஆகிய இரண்டு பக்கங்களிலும் மிக இறக்கமாக இருக்கும். இவை பாரம்பரிய வடிவமைப்பை சார்ந்து டிசைன் செய்யப்படுகின்றது.
31. ஓரங்களில் எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்களில், கைகளின் ஓரங்களில் அழகாக எம்ப்ரைடரிங் செய்யப்பட்டிருக்கும். இவை பார்க்கவும் அழகாக இருக்கும். பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு பிளவுஸ் வடிவமாக இது இருக்கும்.
32. தளர்வான கழுத்து பகுதி
இந்த வகை பிளவுஸ்களில் கழுத்து பகுதி சற்று தளர்வானதாக இருக்கும். மேலும் இந்த டிசைனில் நீங்கள் கைகளோடு அல்லது கைகள் இல்லாமல் வடிவமைத்துக் கொள்ளலாம். இவை பார்டிகளுக்கு அணிந்து கொள்ள ஏற்றதாக இருக்கும்.
33. எளிய முற்றிலும் மூடிய கழுத்து கொண்ட பிளவுஸ்
இந்த பிளவுஸ் வடிவமைப்பில் கழுத்து பகுதி வரை முற்றிலும் மூடப்பட்டிருக்கும். மேலும் இதில் எந்த டிசைன்களும் இருக்காது. பார்க்க மிக எளிமையான ஒரு பிளவுஸ் வகை இதுவாகும்.
34. கட்டங்கள் கொண்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ் டிசைன்களில் எந்த குறிப்பிடத்தக்க வேலைபாடுகலும் இருக்காது. மாறாக, இந்த துணியில் கட்டங்கள் இருக்கும். அவை தனியாக எடுத்துக்காட்டும் வகையில் வேறு நிறத்தில் இருக்கும். இவை ஒரு அழகிய பாரம்பரிய தோற்றத்தை தரும் வகையில் இருக்கும்.
35. ஸ்கூப் கைகள் இல்லாத பிளவுஸ்
இந்த பிளவுஸ் டிசைனில் கைகள் இருக்காது. மேலும் இது மிகவும் எளிமையாகவும் இருக்கும். இதில் எந்த எம்ப்ரைட்ரிங் மற்றும் கற்கள் வேலைபாடுகள் என்று எதுவும் இருக்காது. இது ஒரு மிக எளிமையான டிசைனாக இருந்தாலும், அழகாக இருக்கும்.
36. பைபிங் வைத்த கைகள் இல்லாத பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ் டிசைனில் கைகள் இருக்காது. மேலும் ஓரங்களில் பைபிங் செய்யப்பட்டிருக்கும். அல்லது பார்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கும், இவை பார்க்க அழகாக இருக்கும்.
37. லேஸ் வைக்கப்பட்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்களில் பெரிதாக எந்த வேலைப்பாடுகளும் செய்யப்படவில்லை என்றாலும், கழுத்து, மற்றும் கைகளின் ஓரங்களில் லேஸ் வைக்கப்படும். இவை பார்க்க அழகாக இருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
38. பழமையான ஜெவேல் டிசைன்கள் கொண்ட கைகள் இல்லாத பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்கள் மிக எளிமையான டிசைன்கள் கொண்டவை. இவற்றில் எந்த டிசைன்களும் இருக்காது. மிக எளிமையாக இருக்கும். ஆனால் பட்டு புடவையோடு அணியும் போது பார்க்க அழகாக இருக்கும்.
39. செமி போட் – பாதி படகு வடிவ கழுத்து
இந்த வகை பிளவுஸ்களில் கழுத்து பகுதி பெரும்பாலும் மூடி இருக்கும். ஒரு சிறிய படகு போன்ற கழுத்து பகுதி வடிவம் இருக்கும். இவை பார்க்க சற்று பழமையான வடிவமாக இருந்தாலும், அழகாக இருக்கும்.
40. கோவில் நகைகளின் பிரதிபலிப்பு
இந்த வகை பிளவுஸ்களில் கோவில் நகைகளின் வடிவங்கள் மற்றும் ஆபரங்களை கொண்டும் டிசைன் செய்யப்பட்டிருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் சற்று வேலைபாடுகளை கொண்டிருக்கும். ஆனால் திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்றதாக இருக்கும், பார்க்க அழகாகவும் இருக்கும்.
41. காசுமாலை வடிவம் கொண்ட
பிளவுஸ்: இந்த பிளவுஸ் முழுவதும், அதாவது, கழுத்து பகுதி, கைகள் என்று சுற்றிலும் காசு மாலையின் பிரதிபலிப்பு இருக்கும். இவை பார்க்க மிகவும் பாரம்பரியம் மிகுந்த பிளவுஸ் டிசைனாக இருக்கும். மிகவும் அழகான ஒரு பிளவுஸ் டிசைன் என்றும் கூறலாம்.
42. அனைத்தும் பெயரில்
இந்த வகை பிளவுஸ்கள் தனித்துவம் வாய்ந்த வடிவம் கொண்டவை. இதில் மணப்பெண் மற்றும் மணமகனின் பெயர்கள் எம்ப்ரைடரிங் மூலமாகவோ அல்லது கற்களின் வேலைப்பாடுகள் கொண்டோ எழுதப்பட்டிருக்கும். இது மற்ற பிளவுஸ் டிசைன்களை விட சற்று மாறுபட்டு இருக்கும்.
43. தெய்வீக அழகு
இந்த வகை பிளவுஸ்களில் பெண் தெய்வங்கள், கடவுள்கள், கோவில் கோபுரங்கள் என்று அழகிய வடிவங்கள் எம்ப்ரைடரிங் அல்லது கற்களாலான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இவை பார்க்க ஒரு தெய்வீக தோற்றத்தை தரும்.எனினும், மிக அழகாகவும் இருக்கும்.
44. ப்ளிங் ப்ளிங்
இந்த வகை பிளவுஸ் மகிவும் ஆடம்பரமான ஒரு டிசைனை கொண்டிருக்கும். பார்க்க அதிக வேலைபாடுகள் செய்யப்பட்டிருப்பதை போலத் தெரியும். இது கற்கள் மற்றும் பாசி மணிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு இதனை வடிவமைத்துக் கொள்ளலாம்.
45. மணப்பெண், மணமகன்
இந்த பிளவுஸ் டிசைனில் இரு கைகளிலும் மணப்பெண் மற்றும் மணமகனின் உருவங்கள் முதுகு பகுதியில் எம்ப்ரைடரிங் செய்யப்பட்டிருக்கும். மேலும் கற்கல் மற்றும் பாசி மணிகள் கொண்டு பல வேலைபாடுகளும் செய்யப்பட்டிருக்கும். இவை ஒரு நல்ல ஆடம்பர தோற்றத்தை தரும் வகையில் இருக்கும்.
46. அதிக அலங்காரங்கள் கொண்ட முட்டிக்கை நீள கைகள் கொண்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்களில் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். குறிப்பாக இதில் அதிக அலங்கார பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். பார்க்க மிக ஆடம்பரமான ஒரு பிளவுஸ் என்றும் கூறலாம். மிக அழகாக இருக்கும். திருமண பட்டு புடவைக்கு ஏற்ற ஒரு நல்ல தேர்வாக இந்த பிளவுஸ் இருக்கும்.
47. முதுகு பகுதியில் பல டிசைன்கள் கொண்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்களில் முதுகு பகுதியில் பல அழகான மற்றும் ஆடம்பர டிசைன்கள் செய்யப்பட்டிருக்கும். இவை பார்க்க கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும். இந்த வகை பிளவுஸ்கள் திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
48. வெளிப்படையான முதுகு பகுதியில் எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட பிளவுஸ்:
இந்த வகை பிளவுஸ்களில் முதுகு பகுதியில் பல மெனக்கெடும் வகையில் வேலைபாடுகள் செய்யப்பட்டிருக்கும். இவை பார்க்க மிக சுவாரசியமாகவும், அழகாகவும் இருக்கும். இத்தகைய பிளவுஸ்கள் திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
49. வெளிப்படையான தங்க ஜரிகைகளால் எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட கைகள்
இந்த வகை பிளவுஸ்களில் தங்க ஜரிகை கொண்டு, குறிப்பாக கைபகுதிகளில் எம்ப்ரைடரிங் செய்யப்பட்டிருக்கும். இவை பார்க்க மிக ஆடம்பரமான ஒரு டிசைனாக இருக்கும். மேலும் மிக அழகாகவும் இருக்கும். இவை திருமண பட்டு புடவைகளுக்கு ஏற்ற ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
50. கலம்கரி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ்
இந்த வகை பிளவுஸ்களில் கலம்கரி வேலைபாடுகள் செய்யப்பட்டிருக்கும். அதுமட்டும் அல்லாது மேலும் கற்கள், எம்ப்ரைடரிங், பாசி மணிகள் என்று பல கலை வேலைபாடுகளும் செய்யப்பட்டிருக்கும். இவை அழகான பிளவுஸ் டிசைனாகும். இளம் வயது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒரு டிசைன் என்றும் கூறலாம்.
கேள்வி பதில்கள் (FAQs)
1. எப்படி பட்டு புடவையும், அதற்கான பிளவுஸ் தேர்வும் சரியாக இருகின்றது என்று கண்டறிவது?
நீங்கள் இரண்டையும் அருகில் வைத்து பார்க்கலாம், அல்லது அணிந்து பார்க்கலாம். அல்லது உங்கள் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் ஆலோசனை பெற்று, உங்கள் தேர்வு சரியானதா என்று உறுதி செய்து கொள்ளலாம்.
2. பல முறை அணிந்த பின்னும் எப்படி பட்டு பிளவுஸ்சை புதிது போல மீண்டும் பயன்படுத்துவது?
நீங்கள் அணிந்த பட்டு பிளவுஸ் பழையதாகி விட்டால், அதனை தாவணி அல்லது லேஹங்கவுடன் அணிய முயர்ச்சி செய்யலாம். உங்கள் பட்டு புடவைக்கு வேறு ஒரு புதிய பிளவுஸ்சை டிசைன் செய்யலாம்.
3. பிளவுஸ்சுக்கு எந்த துணி வகை ஏற்றதாக இருக்கும்?
பருத்தி ஒரு சரியான தேர்வாக இருக்கும். எனினும், பட்டு புடவைக்கு இது ஏற்றதாக இருக்காது. ஆனால் நீங்கள் பருத்தியும் பட்டும் கலந்த துணை வகையை தேர்வு செய்து பட்டு புடவைக்கு பிளவுஸ் தயார் செய்யலாம். மேலும் நீங்கள் அணியும் பிளவுஸ் உங்களுக்கு சௌகரியமாக இருக்க வேண்டும். குறிப்பாக காற்றமாக இருக்க வேண்டும். உடலில் உஷ்ணத்தை உண்டாக்கும் வகையில் இருக்கக் கூடாது.
மேலும் படிக்க – தமிழ்நாட்டின் பாரம்பர்ய ஆடை – புடவை மற்றும் அதன் வகைகள்
பட ஆதாரம் – Instagram
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!