KhayalRakhna By Philips
  Power Women List
  Bigg Boss

  பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பம்!.. தொகுப்பாளர் இவர்தான்! சில நாட்களில் வெளியாகிறது ப்ரமோ!

  Deepa LakshmiDeepa Lakshmi  |  May 8, 2019
  பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பம்!.. தொகுப்பாளர் இவர்தான்! சில நாட்களில் வெளியாகிறது ப்ரமோ!

  2017ம் ஆண்டு முதல் தமிழ் தொலைக்காட்சியில் புதிய முயற்சியாக வெளியான பிக்பாஸ்  (Bigg boss) யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபலம் அடைந்தது.

  அதன் பின்னர் இரண்டு சீசன்கள் முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் மூன்றாவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

  முதல் சீசனில் ஓவியாவின் உண்மையான மற்றும் நேர்மையான நடத்தை அனைவரையும் கவர்ந்தது. மிக சரியாக யார் வம்புக்கு போகாமல் வாழ நினைப்பவரை அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதை இன்னும் விஸ்தரித்தால் இந்த உலகில் உள்ளவர்களும் அப்படிப்பட்ட சரியான நபர்களை கடைசியில் மன உளைச்சலுக்கு ஆளாக்கத்தான் நினைக்கிறார்கள் என்பதான உலகத்தின் ஒரு விதமான பேட்டர்னை பிக்பாஸ் பார்த்தவர்கள் உணர்ந்தார்கள்.

  நான் மாறியதால் நாங்கள் பிரிந்தோம்.. உண்மையை ஒப்பு கொண்ட விஷ்ணு விஷால்

  மேலும் அதில் இருப்பவர்களின் குணங்களில் தங்களை கண்டடைந்து அதில் தவறுகள் இருப்பின் சரி செய்து கொள்ளவும் தயார் ஆனார்கள். இப்படித்தான் பிக் பாஸ் எனும் தொலைக்காட்சி தொடர் உலக அளவில் பிரபலம் ஆனது.

  இரண்டாவது சீசனில் பிக்பாஸ் தமிழ் சொதப்பியது. எல்லோருமே நடிகர்கள் என்பதால் காமெராவிற்கு முன்னர் இயல்பு நிலைக்கு வருவதற்கே 60 நாட்களை தாண்டியது. உலகத்திற்கு யதார்த்தத்தை சொல்கிறேன் என்று மகத் மற்றும் யாஷிகா புதுவிதமான ஓபன் ரிலேஷன்ஷிப்பை ட்ரை செய்தது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. 

  பனி போர் முடிந்தது.. இசைஞானியுடன் இணையும் எஸ்பிபி ?!

  நித்யா மற்றும் பாலாஜியின் குடும்ப விவகாரங்கள் ஒரு நல்ல முடிவை எட்டினாலும் நாடகங்கள் தொடர்ந்ததால் இப்போது நிரந்தர பிரிவில் இருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் ஆறுதல் என்றால் அது ஜனனி தான். நடுநிலை மாறாமல் இருந்தது அனைவரையும் கவர்ந்தது. ஆரம்பம் முதலே நடிக்காமல் நிஜமாக அந்த வீட்டில் வாழ்ந்த ரித்விகா அந்த போட்டியை சமாளித்து முதல் இடம் வந்தார்.

  வைல்ட் கார்டு ரவுண்டில் என்ட்ரி தந்த விஜயலக்ஷ்மி தனது துணிச்சலால் எல்லோரையும் ஒரு கை பார்த்தது சுவாரஸ்யமாக இருந்தது. ஐஸ்வர்யா தத்தா ஆரம்பத்தில் அமைதி காட்டி பின்னர் அவர் விளையாட்டை வெல்வதற்காக செய்த யுத்திகளை பார்த்து தமிழ்நாடே மிரண்டு போனது இப்படியாக சில விஷயங்கள் பிக் பாஸ் இரண்டை தூக்கி நிறுத்தியது.

  முதலில் கர்ப்பம் பின்னர் நிச்சயதார்த்தம்.. அதற்கப்புறம்… எமி ஜாக்சனின் புதிய பார்முலா !

  இந்நிலையில் பிக் பாஸ் மூன்றாவது சீசன் அடுத்த மாதம் ஆரம்பிக்க இருப்பதால் அதற்கான ப்ரோமோக்கள் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னமும் இதற்கான போட்டியாளர்கள் விபரங்கள் வெளியாகவில்லை. ஆனாலும் அனைவருக்கும் நல்ல செய்தி என்ன என்றால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நமது கமல்ஹாசன் என்பதுதான்.

  அரசியலில் இறங்கியதால் கமல்ஹாசன் வர மாட்டார் என்றும் நயன்தாரா வர போகிறார் என்றும் பல்வேறு செய்திகள் அடிபட்ட நிலையில் இப்போது மீண்டும் கமல்ஹாசன் வருகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் மூன்றிற்கான ப்ரோமோ வீடியோ எடுக்க பூந்தமல்லி ஈவிபி வளாகத்தில் இருக்கும் பிரம்மாண்ட செட்களில் கமல்ஹாசன் கலந்து கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

  இன்னும் சில நாட்களில் இந்த ப்ரோமோவை நீங்கள் விஜய் டிவியில் பார்க்கலாம். மேலும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுப்பும் ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

  புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

  ஐ மிஸ் செல்வராகவன்.. எனக்கென எழுதப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்கிறேன்.. சோனியா அகர்வால்

  —                              

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.