பனி போர் முடிந்தது.. இசைஞானியுடன் இணையும் எஸ்பிபி ?!

பனி போர் முடிந்தது.. இசைஞானியுடன் இணையும் எஸ்பிபி ?!

இளையராஜா இல்லாமல் திரையுலகம் இல்லை என்கிற வார்த்தைகள் மிகையானதா என்று யோசிக்கையில் இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது. தமிழ் சினிமாவின் அடையாளமான இசைஞானிக்கு அவரது இசையில் அதிக பாடல்களை பாடிய பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் இருந்து வந்தது எல்லோரும் அறிந்ததுதான்.


எஸ்பிபி (SPB) தனது குரலால் அனைவரையும் வசீகரித்தவர். முறையான சங்கீத ஞானம் இல்லாமல் பாட வந்தவர் அதன்பின்னரே சங்கீதம் கற்று தேர்ச்சி பெற்றார். தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒலிக்காத இளையராஜா எஸ்பிபி பாடலே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இசைஞானிக்கும் பாடகர் எஸ்பிபிக்கும் கெமிஸ்ட்ரி இருந்தது.


ஆனால் ராயல்டி தொடர்பான விவகாரம் இவர்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை மறைய செய்து ஒருவருக்கு ஒருவர் மனக்கசப்பு ஏற்பட காரணமாக இருந்தது. இளையராஜாவின் பாடல்களை இனி நான் பாட மாட்டேன் என்று எஸ்பிபி சொல்லும் வரை இந்த பனிப்போர் தொடர்ந்தது.


கங்கணாவின் தொடர் மௌனம்.. எட்டு நாட்கள் என்ன செய்தார்..இனி இசைஞானி இசையில் எஸ்பிபி குரலை எப்போது கேட்க போகிறோம் என்று அவரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஏங்கினார்கள். இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்பிபி இளையராஜாவின் பாடல்களை மீண்டும் பாடினார். அங்கிருந்த தமிழ் நெஞ்சங்கள் குளிர்ந்தன.


ரசிகர்களின் மன ஓட்டத்தை அறிந்தோ என்னவோ மீண்டும் எஸ்பிபி உடன் இணைந்து பாடல்களை பாட இளையராஜா முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதை நிரூபிக்கும் வகையில் வருகிற ஜூன் 2ம் தேதி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


முதலில் கர்ப்பம் பின்னர் நிச்சயதார்த்தம்.. அதற்கப்புறம்... எமி ஜாக்சனின் புதிய பார்முலா !இந்த சந்தோஷமான நாளில் இளையராஜா உடன் இணைந்து எஸ்பிபி பாட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை தொடர்ந்து அவரது இசையில் எப்போதும் இணைந்திருக்கும் யேசுதாஸ், மனோ, சித்ரா மற்றும் பலர் பாட இருக்கின்றதாகவும் தெரிய வருகிறது.


இசையின் ஐகான்கள் இருவரும் மீண்டும் ஒன்றிணைய போவது இசை ரசிகர்களையும் இளையராஜா எஸ்பிபி ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி இருக்கிறது.


நான் மாறியதால் நாங்கள் பிரிந்தோம்.. உண்மையை ஒப்பு கொண்ட விஷ்ணு விஷால்புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்                            


---                                                      


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                         


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.