logo
ADVERTISEMENT
home / அழகு
25 வயதில் 500 ரூபாய் இல்லை.. இன்று ஃபோர்ப்ஸ் டாப் 30-ல் ஒருவன்!

25 வயதில் 500 ரூபாய் இல்லை.. இன்று ஃபோர்ப்ஸ் டாப் 30-ல் ஒருவன்!

தன்னுடைய 25 வயதில் பேங்கில் மினிமம் பேலன்ஸ் 500 ரூபாய் இல்லாமல் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு பின்னர் அப்பாவிடம் பணம் வாங்கிக் கட்டிய விஜய் தேவரகொண்டா(Vijai Devarakonda) அடுத்த நான்கு வருடங்களில், 30 வயதுக்குட்பட்டபவர்களுக்கான 30 பேர்கொண்ட ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தான் மேற்கொண்ட விஷயத்தை விஜய்(Vijay Devarakonda) பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா(Vijay Devarakonda) என்பதைவிட அர்ஜுன் ரெட்டி(Arjun Reddy) ஹீரோ என்று சொன்னால் அனைவருக்கும் முரட்டு தாடி,மீசை, கூலிங்கிளாஸ் சகிதம் விஜய் ஞாபகத்துக்கு வருவார். தீராத சினிமாக்கனவுகளுடன் டோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த விஜய்க்கு அர்ஜுன் ரெட்டி(Arjun Reddy), கீதா கோவிந்தம் படங்கள் வழியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க இன்று தென் இந்தியாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென ஒரு தனியிடத்தை விஜய் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஹீரோவாக நடிக்கத் தொடங்கி முழுதாக 3 வருடங்கள் முடிவதற்குள் சென்னையில் இவரது படத்துக்கு பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ(FDFS) காட்சிக்கு
மக்கள் காத்திருந்து டிக்கெட் வாங்க ஆரம்பித்து விட்டனர். தமிழ் மக்களின் இந்த அமோக வரவேற்பால் நோட்டா என்னும் நேரடி தமிழ்ப்படத்திலும்
விஜய் நடித்தார்.அப்படம் பெரியளவில் வெற்றியைக் குவிக்க முடியாமல் போனபோது தானே அதற்குக் காரணம் என பொறுப்பெடுத்துக் கொண்டவர்.

ADVERTISEMENT

பெல்லி சூப்புலு

2011-ம் ஆண்டு தனது 22-வது வயதில் நுவ்வுலே என்னும் படத்தின் வழியாக தனது சினிமா அறிமுகத்தைத் தொடங்கினார். தொடர்ந்து லைப் இஸ் ப்யூடிபுல், எவடே சுப்ரமண்யம் ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த விஜய் 2016-ம் ஆண்டு பெல்லி சூப்புலு படத்தின் வழியாக தனது ஹீரோ பயணத்தைப் பிள்ளையார் சுழிபோட்டு வெற்றிகரமாகத் துவங்கினார். பக்கத்து வீட்டு பையன் போன்ற இவரது கதாபாத்திரமும், இயல்பான கதையும் அப்படத்தை ஹிட்டடிக்க செய்தன.

அர்ஜுன் ரெட்டி(Arjun Reddy)

ADVERTISEMENT

2017-ம் ஆண்டு இவருக்கு சூப்பரான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஆண்டில் இவர் நடித்து வெளியான அர்ஜுன் ரெட்டி டோலிவுட்
தவிர்த்து கோலிவுட்டிலும் அதிர்வலைகளைக் கிளப்பியது. தலைநிறைய முடி, தாடி, மீசை, கூலிங்கிளாஸ் சகிதம் என விஜய் இதில் சற்று
முரட்டுத்தனமாக நடித்திருந்தார். சென்னையிலும் இப்படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. இந்த படத்துக்குப்பின் ஜெட் வேகத்தில் ரசிகர்கள்
எண்ணிக்கை இவருக்கு அதிகரித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

கீதா கோவிந்தம்

ADVERTISEMENT

சாதாரண திரைக்கதை தான் என்றாலும் இப்படத்தில் இடம்பெற்ற இங்கேம் இங்கேம் காவாலே பாடலும் விஜய்-ராஷ்மிகா கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை
மீண்டும் மீண்டும் தியேட்டர்களுக்கு அழைத்து வந்தது. சென்னையில் இப்படம் 50 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. தொடர்ந்து நோட்டா படத்தின் வழியாக தமிழிலும் விஜய்(Vijay Devarakonda) நேரடியாக அறிமுகமானார். சுமாரான திரைக்கதையால் நோட்டா பாக்ஸ் ஆபீஸில் சறுக்க, இவரது நடிப்பில் அடுத்து வெளியான டாக்ஸிவாலா திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியாகி மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. எனினும் தனது நம்பிக்கையை சற்றும் இழக்காமல் தன்னுடைய கேரியரில் தொடர்ந்து விஜய் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ‘டியர் காம்ரேட்’ என்னும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

ஃபோர்ப்ஸ்(Forbes) பட்டியல்:

ஃபோர்ப்ஸ்(Forbes) இந்தியா பத்திரிகை 6-வது முறையாக 2019-ம் ஆண்டுக்கான 30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. விளையாட்டு, பொழுதுபோக்கு, தொழில் உள்ளிட்ட 16 பிரிவுகளில் இருந்து சாதனையாளர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். 16 பிரிவுகளில் 300-க்கும் அதிகமானோர் பட்டியலிடப்பட்டு, அவர்களில் இருந்து 30 இளம் சாதனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். தனிமனித சாதனைகளால் ஏற்படும் தாக்கம், சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்கள், அவர்கள் இருக்கும் துறையில் அடைந்த உயரம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த சாதனையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.அதன்படி இந்தாண்டுக்கான பட்டியலில் 30 சாதனையாளர்களில் ஒருவராக விஜய் தேர்வு செய்யபட்டுள்ளார்.

ADVERTISEMENT

500 ரூபாய் இல்லை

இதுகுறித்து தான் தனது ட்விட்டர் பக்கத்தில் ”எனக்கு 25 வயதிருக்கையில் குறைந்தபட்ச இருப்புத் தொகையான ரூ.500 கூட இல்லாததால் என் வங்கிக்
கணக்கு முடக்கப்பட்டது. அப்போ என் அப்பா என்னிடம் 30 வயதுக்குள் வாழ்வில் செட்டில் ஆகிவிடு என்றார். 4 ஆண்டு கடந்த நிலையில், இன்று
ஃபோர்ப்ஸ்(Forbes) 30 அண்டர் 30 சாதனைப் பட்டியலில் நான் இடம் பெற்றிருக்கிறேன்…’ என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஃபோர்ப்ஸ்(Forbes)  பட்டியலில் இடம்பெறுவது மிகப்பெரிய கவுரவமாகக் கருதப்படும் நிலையில் அதுகுறித்த தன்னுடைய இயல்பான பேச்சின் வழியாக ரசிகர்களை மேலும் விஜய் கவர்ந்து விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

மறுபடியும் தமிழுக்கு வாங்க விஜய்…

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

11 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT