logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
பெண்களின் உடல் எடையை குறைக்கும் 10 அற்புதமான எளிய உடற்பயிற்சிகள்

பெண்களின் உடல் எடையை குறைக்கும் 10 அற்புதமான எளிய உடற்பயிற்சிகள்

உடல் எடையை(weight) குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று எண்ணக்கூடாது.

சிலர் பழைய உடையை அணியும் அளவுக்கு எடையை குறைக்க வேண்டும் என்று இதுபோன்ற முறையற்ற முறையை பின்பற்றுவார்கள். எனவே இது போன்ற தவறான முறையை பின்பற்றினால் நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும். ஆகவே உடல்(weight) எடையை குறைக்க முதலில் நாம் எண்ணும்போது, “உடல் எடை மெதுவாகக் குறைந்தால் போதுமானது” என்று நினைத்து, உடல் எடையைக்(weight) குறைக்க முறையான வழிமுறைகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.

உடல் எடையை(weight) குறைக்க சாப்பிடும் உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவுக் கட்டுப்பாடு இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். சாதாரணமாக, தினமும் 2 கப் சோறு சாப்பிட்டால், உடல் எடையை(weight) குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.

இடைபட்ட நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிடலாம். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

ADVERTISEMENT

உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும்(weight) ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை  செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 3௦ முதல் 45 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால், உடல் கச்சிதமாக விரைவில் மாறிவிடும்.

Also Read: வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உடல் எடையை குறைக்கும் வழிகள்

சரி நீங்கள் மேற்கொள்ள வேண்டிய 10 முக்கிய உடற்பயிற்ச்சியினை இங்கு பார்ப்போம்.

1. பிளாங்க் உடற்பயிற்சி
குப்புற படுத்தவாறான நிலையில், கைகளை உந்தி உடலை மேலே வைத்திருக்க வேண்டும். கால்களை நிலத்தில் ஊன்றி, இடுப்பு பகுதியை மேலே உயர்த்த வேண்டும். அப்போது தலை முதல் கால் வரை உடல் கிடைமட்டமாக இருக்கவும். அந்த நிலையிலேயே 30 முதல் 40 நொடிகள் இருக்கவும்.

ADVERTISEMENT

2. ஜம்பிங் ஜாக்
கைகளை பக்கவாட்டில் தளர்ந்த நிலையில் வைத்து நேராக நிற்க வேண்டும். கால்களை ஒன்றாக சேர்த்துவைக்கவும். இப்போது இரண்டு கால்களையும் அகட்டிக் குதித்து, அதே நேரத்தில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தித் தட்ட வேண்டும். பிறகு, பழையபடி குதித்து கால்களை ஒன்றுசேர்த்தபடியே, கைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும். இதுபோன்று 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

3. ஸ்கிப்பிங்
தரம் குறைவான ஸ்கிப்பிங் கயிற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது உங்களின் பயிற்சியைக் கடினமானதாக மாற்றும். நல்ல தரமான ஸ்கிப்பிங் கயிறைப் பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும்.

4. புஷ் அப்
புஷ் அப் உடற்பயிற்சி செய்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை செய்வதால் உடல் மிகவும் வலிமையாகிறது. தினசரி வேலைகளை செய்வதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. உடலை திடமாகவும், தொப்பை இல்லாமலும் வைத்துக்கொள்ள இந்த உடற்பயிற்சி உதவுகிறது

5. பை சைக்கிள் உடற்பயிற்சி
அடி வயிற்று தசைகளை உறுதிப்படுத்துவதற்காக பை சைக்கிள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

6. எலிப்டிகர் ட்ரெய்னர்
இந்த கருவியின் மூலம் எளிய உடற்பயிற்சி(weight) மேற்கொண்டு, தொப்பையை குறைக்கலாம். 30 நிமிடங்கள் பயிற்சி செய்வதன் மூலம், 300 கலோரி வரை எரிக்க முடியும்.

7. பை சைக்கிளிங்
சைக்கிளில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அது நமது உடல் வலிமைக்கு உதவுகிறது. 30 நிமிட பயணிப்பதன் மூலம், 250-500 கலோரிகள் வரை எரிக்கலாம்.

8. ஓடுதல்
உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகள் எரிந்து, கொழுப்பு சதவிகிதம் குறைந்துவிடுகின்றன. உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும். இதற்கு நல்ல ஷூக்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும். இவை இரண்டில் ஓடுதல் மட்டுமே வேகமாக கொழுப்பை கரைத்து விடுகிறது.

9. யோகா
மன அழுத்தத்தை குறைத்து தாம்பத்திய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட யோகாசனப்பயிற்சி உதவுகின்றது.  யோகாசனத்தை பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

ADVERTISEMENT

10. சலபாசனம்
சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.

செக்ஸ் உணர்வை தூண்டும் பெண்களின் மார்பகம் ஆண்கள் காதலிக்க காரணம்?

கூந்தல் அழகை பராமரிக்கும் கற்றாழையின் 6 அற்புத பயன்கள்

வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்

ADVERTISEMENT

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Also read ways to reduce belly fat.

ADVERTISEMENT
04 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT