சினிமாவோ, டிக்டொக்கோ, காலேஜோ, காதலோ எங்கெங்கு பார்த்தாலும் அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் இந்த ஆண்கள்(Mens) செய்யும்
அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை. கொலையே செய்தாலும் அவன் ஆம்பள என்று சொல்கிற இதே சமூகம் தான் துப்பட்டா போடாமல் வெளியில் வரும் பெண்களை திட்டித் தீர்க்கிறது. நாளை மார்ச் 8 பெண்கள் தினம்(Women’s Day) என உலகமே இந்த நாளை விமரிசையாகக் கொண்டாடும்.
அதேநேரம் ஆண்களைப் போல பெண்களும் இந்த பூமியில் சமமாக வாழ்கிறார்களா? என யோசித்தால் இல்லை என்ற பதிலே மிஞ்சும். காலம்காலமாக சமைப்பது, துணி துவைப்பது, செக்ஸ், குழந்தை வளர்ப்பு போன்றவற்றுக்காக தான் பெண்கள்(Women) என்ற எண்ணம் இங்கு பெரும்பாலான ஆண்கள்(Men) மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போயுள்ளது.எத்தனை பாரதியார்கள் பிறந்து வந்தாலும் இந்த ஆண்(Men)-பெண்(Women) பாகுபாடு என்று ஒழியுமோ? என்பது தெரியவில்லை.
காதலனுடன் விளையாட வேடிக்கையான குறுஞ்செய்தி விளையாட்டுகளையும் படிக்கவும்
பாலியல் வன்கொடுமை, ஆபாச வார்த்தைகளில் திட்டுவது, ஆசிட் வீசுவது, ஒருதலைக்காதல் என பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஏதாவது ஒரு வகையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காலத்திற்கு ஏற்ப வன்முறைகளின் வடிவம் மாறிக்கொண்டே உள்ளது. சமீபத்தில் நான் பார்த்த, படித்த ஒருசில சம்பவங்களை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். இதேபோல உங்களைப் பாதித்த சம்பவங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே!
சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்கள் என்பவை மக்கள் தொடர்புக்காகத்தான் ஆனால் சமீபகாலமாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா என எல்லா சமூக
வலைதளங்களிலும் ஆபாச வார்த்தைகளை ஆண்கள்(Men) அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். அதிலும் ட்விட்டர் ரொம்பவே மோசம். தங்களுக்குப் பிடித்த அபிமான நடிகருக்காக அடித்துக் கொள்வது, பிறர்மீதான கோபத்தை தணித்துக்கொள்ள கெட்ட வார்த்தைகளை அள்ளி இறைப்பது
போன்றவற்றை சமூக வலைதளங்களில் செய்யாத ஆண்களை விரல்விட்டு எண்ணி விடலாம். யாரோ ஒருசிலர் சம்பாதிக்க இவர்கள் இங்கே அடித்துக்
கொள்கிறார்கள். சமூக வலைதளத்தில் ஒரு பெண் தனது மனதில் பட்ட கருத்தினை வெளிப்படையாக தெரிவித்து விட்டால் போதும், சிஸ்டர் உங்க
நல்லதுக்குத்தான் என எக்கச்சக்கமான ஆண்கள் உடனே வண்டிகட்டி வரிசையில் வந்து விடுகிறார்கள்.
வன்முறை
இந்த சம்பவம் உங்கள் அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன். தனது அபிமான நடிகர் படத்தினை நன்றாக இல்லை என்று கருத்து சொன்ன ஒரு
பெண்(Women) பத்திரிக்கையாளரை அவரது ரசிகர்கள் கண்டபடி ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித்தீர்த்தனர். கடைசியில் பிரச்சினை போலீஸ் வரை சென்றபின் அந்த நடிகர் பெயருக்கு ஒரு அறிக்கை கொடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார். மாட்டிக்கொண்ட ரசிகரோ கடைசியில் வீடியோ வெளியிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
எவ்வளவு வக்கிரம்
டிக்டொக் ஆப்பில் குடும்பம் குடும்பமாக வீடியோ வெளியிடுவதை ஏராளமான மக்கள் என்ஜாய் செய்கின்றனர். அதேநேரம் டீன்ஏஜ் பெண்களும் இதனை ஒரு பொழுதுபோக்காக வைத்துள்ளனர். எப்போதுமே பிறரைக் கவர்வதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் ஸ்கோர் செய்வர். இது இயற்கையான ஒரு விஷயம். இதற்கு ஒரு ஆண்(Men) தன்னுடைய சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்கிறார், இந்த டிக்டொக்ல இருக்குறவளுகள நல்லா பார்த்து வச்சுக்கணும். பின்னாடி எவளாவது எனக்கு பொண்டாட்டிய வந்துட போறா? இந்த கருத்தினை பலரும் ஷேர் செய்து சூப்பர் என கமெண்ட் செய்கின்றனர். இதைப் பார்த்தபோது கடைசிவரைக்கும் உங்களுக்கு பொண்ணு கெடைக்காது பிரதர் என சொல்லத்தோன்றியது.பொழுதுபோக்கில் கூட இதை ஆண்கள்(Men) மட்டும் தான் செய்ய வேண்டும் என பெரிய லிஸ்ட் வைத்திருக்கின்றனர் போல.
இருட்டு அறையில் முரட்டு குத்து
துணிச்சலான கருத்துக்களை அதிகம் வெளிப்படுத்துகிற சினிமா துறையில் கூட பாலியல் பாகுபாடு அதிகம் உள்ளது என்பதை சமீபத்தில் நடந்த ஒரு
சம்பவம் நினைவுபடுத்தியது. ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் வந்தபோது அடல்ட் படம் தமிழில் வந்தால்
என்ன? என்றும், இன்னும் இந்த படத்தை சிறப்பாக எடுத்திருக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. சொல்லி வைத்தாற்போல எல்லா
விமர்சகர்களும் இந்த படங்களுக்கு ஒரேமாதிரி தான் விமர்சனம் செய்தனர். பிரபலம் ஒருவர் சென்சார் செய்து வெளியாகும் இதுபோன்ற படங்களை
எதிர்க்கக் கூடாது என கருத்து தெரிவித்தார்.
90 எம்எல்
மேலே சொன்ன அடல்ட் படங்கள் வரிசையில் இந்த வருடம் அனிதா உதீப் இயக்கத்தில் 90 எம்எல் படம் வெளியானது. திடீரென அனைவரும் கலாசார
காவலர்களாக மாறிவிட்டார்கள். இதுபோன்ற படங்கள் பெண்களை சீரழித்து விடும்,இப்படிப்பட்ட படங்களை ஏன் தயாரிக்கிறார்கள்? என
சொல்லிவைத்தாற்போல விமர்சனங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக வெளியாகின. ஒருசில ஊடகங்கள் மட்டும் நடுநிலையாக விமர்சனம் செய்தன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். மேலே சொன்ன அதே பிரபலம் இதுபோன்ற படங்கள் சமூக சீர்கேடு என கருத்து தெரிவித்தார். 90 எம்எல் படமும் சென்சார் செய்யப்பட்டு தான் வெளியானது என்பது அவருக்கும் தெரியும்தானே?
ஏ சர்டிபிகேட்
மற்றவர்கள் சொன்னது போல 90 எம்எல் அவ்வளவு மோசமாக இல்லை. பெண்கள்(Women) எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அப்படம் வெளிப்படையாக பேசியது அவ்வளவு தான். சொல்லப்போனால் இந்த படத்தை தியேட்டரில் பார்க்கும்போது அங்கிருந்த இளைஞர்கள் பல இடங்களில் கைத்தட்டி தங்கள் பாராட்டை வெளிப்படையாக தெரிவித்தனர். சென்சார் செய்யப்பட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய படம் என்றுதான் படத்தை வெளியிட்டுள்ளனர். அதற்கு அந்த இயக்குநர், நடிகை என படத்தில் பணியாற்றிய அனைவரையும் வெளிப்படையாக திட்டுவது எந்தவகையில் நியாயம்? என தெரியவில்லை.
மகளிர் தினம்(Women’s Day)
நாளை மார்ச் 8 பெண்கள் தினம்(Women’s Day) என உலகமே கொண்டாடும். ஆண்களே இந்த நாளில் உங்கள் காதலி, மனைவி, மகள், அம்மா, தோழி என உங்கள் வாழ்வில் இருக்கும் பெண்களுக்கு பரிசுகள் கொடுப்பதை விட அவர்களை ஆபாசமான வார்த்தைகளில் திட்ட மாட்டேன், சுதந்திரத்தில் தலையிட மாட்டேன், அவர்கள் உரிமையை மதிப்பேன் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். பணம், ஆடம்பரம் எல்லாவற்றையும்விட சுதந்திரத்தை தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பதை மனதில் கொள்ளுங்கள். பெண்களே இதுநாள்வரை எப்படி இருந்தீர்கள் என்பதை விட்டுவிடுங்கள். அடக்க ஒடுக்கமான பெண், குடும்பப்பெண் போன்ற போலி ‘டிகிரிகளை’ தூக்கி எறிந்துவிட்டு உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேறப் பாருங்கள். ஏனெனில் ஒரே ஒருமுறை தான் நீங்கள் இந்த பூமியில் வாழப்போகிறீர்கள்!
உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் POPxo-வின் இனிய ‘பெண்கள் தின’ வாழ்த்துக்கள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Celebrations
சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் இவ்வளவு மகிமையானதா.. தரிசிப்போம்..சிறப்பாய் வாழ்வோம்..!
Deepa Lakshmi