ஓவியாவின் '90எம்எல்' தடுமாறுகிறதா? தடம் மாற்றுகிறதா?.. விமர்சனம் உள்ளே!

ஓவியாவின் '90எம்எல்' தடுமாறுகிறதா? தடம் மாற்றுகிறதா?.. விமர்சனம் உள்ளே!

பிக்பாஸ் வழியா தமிழ்நாட்டு மக்களோட மனச குத்தகைக்கு எடுத்த ஓவியாவோட நடிப்புல இன்னைக்கு வெளியாகி இருக்குற படம் 90 எம்எல்(90ml). பிக்பாஸ் முடிஞ்ச உடனே நெறைய படத்துல நடிப்பாங்கன்னு எல்லோரும் எதிர்பார்க்க, பதிலுக்கு ரொம்பவே செலக்டிவான படங்கள மட்டும் ஓவியா தேர்வு செஞ்சாங்க.இதனால 90 எம்எல்(90ml) படத்துக்கு இளைஞர்கள் மட்டுமில்ல பெண்கள் பக்கமும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்துச்சு. பத்தாதுக்கு எஸ்டிஆர் இந்த
படத்துக்கு மியூசிக் போட்டிருந்தாரு. இதனால ஓவியா(Oviya) ரசிகர்கள் மட்டும் இல்லாம சிம்பு ரசிகர்களும் இந்த படத்தை ரொம்பவே ஆவலோட
எதிர்பார்த்துக் காத்திருந்தாங்க.


அந்த எதிர்பார்ப்பு எல்லாத்தையும் 90 எம்எல்(90ml) படம் தக்க வச்சுச்சா, படத்தோட கதை என்ன? ஓவியாவோட நடிப்பு, எஸ்டிஆர் மியூசிக் எல்லாமே
எப்படி இருந்துச்சுன்னு பாக்கலாம் வாங்க.


பசங்களுக்கு சரிசமமா தண்ணி, தம்மு, கஞ்சா, ஊரைச்சுத்துறது, செக்ஸ் பத்தி வெளிப்படையா பேசுறது எல்லாத்தையும் காலம்காலமா பசங்க தான் பண்ணிட்டு இருக்காங்க. அதாவது வெளிப்படையா எல்லோருக்கும் தெரியற மாதிரி. ஒரு பையன் குடிச்சிட்டு ரோட்டுல சுத்துனா இந்த உலகம் குடிகாரன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கும். இதே ஒரு பொண்ணு நடுரோட்டுல தம் அடிச்சா காலம் கெட்டுப்போச்சு அப்படின்னு சொல்லி பொண்ணுங்கள என்னவோ வேற கிரகத்துல இருந்து தப்பிச்சு வந்த மாதிரி பாப்பாங்க. ஒரு பேச்சுக்கு நெஜமாவே பொண்ணுங்க இதுமாதிரி நடந்துகிட்டா? எஸ். இதுதான் 90 எம்எல் படத்தோட கதை.


படத்தோட ஸ்டோரி ஓவியா(Oviya) தன்னோட பாய்பிரெண்ட்டோட ஒரு பிளாட்க்கு குடி வர்றாங்க. அங்க நாலு பொண்ணுங்களோட பிரண்ட்ஷிப் கெடைக்குது. இதுல ஒரு பொண்ணுக்கு மட்டும் மேரேஜ் ஆகல, மத்த எல்லாரும் மேரேஜ் ஆனவங்க. அவங்க எல்லோருக்கும் காதல், செக்ஸ், மேரேஜ் லைப்னு ஆளுக்கொரு பிரச்சினை இருக்கு. ஆரம்பத்துல ஓவியா(Oviya) பார்த்து ஒதுங்கிப் போற பொண்ணுங்க நாளடைவில ஓவியாவோட பிரண்டாகி பார்ட்டி, கிளப், டூர்னு என்ஜாய் பண்றாங்க.ஒருகட்டத்துல இதனால அந்த பொண்ணுங்க என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறாங்க, ஓவியாவோட(Oviya) அவங்க பிரண்ட்ஷிப் தொடருதா? அப்படிங்கிறதுதான் கதை.


ஓவியா(Oviya)பிக்பாஸ்ல பார்த்த அதே ஓவியா(Oviya) தான் கொஞ்சம் கூட மாறாம படத்துலயும் அதே மாதிரி செம ஜாலியா இருக்காங்க. கையில சிகரெட் வச்சுட்டு ஸ்டைலா பேசுறது, தண்ணி அடிக்கிறது, பிரண்ட்ஸ்க்கு ஹெல்ப் பண்றது, கல்யாணம் வேணாம்னு போல்டா சொல்றது, எல்லாத்துக்கும் ஒரு
பிளாஷ்பேக் வேணுமான்னு கலாய்க்கிறது, லிப்கிஸ் எல்லாமே அசால்டா பண்ணிட்டு போறாங்க. பிக்பாஸ்ல நீங்க பார்த்த அதே செம எனர்ஜி
ஓவியாவ இந்த படத்துலயும் பாக்கலாம்.


அனிதா உதீப்படத்தோட விளம்பரம் தொடங்கி எல்லாத்துலயும் ஓவியாவுக்கு இம்பார்ட்டன்ஸ் குடுத்தாலும் கதையில எல்லோருக்குமே நடிக்க ஸ்கோப் இருக்கிறது படத்தோட பெரிய பிளஸ். டிரைலர், வெளம்பரத்துல பார்த்த எந்த சீனையுமே படத்துல கட் பண்ணல. பொண்ணுங்க எப்படி எல்லா விஷயத்தையும் பேசிப்பாங்க. என்ன மாதிரியான பிரச்சினைகள் அவங்களுக்கு இருக்கு அப்படிங்கிறத செக்ஸ், காதல், குடும்பம், வேற பொண்ணோட ஹஸ்பண்ட் தொடர்பு வச்சுக்கிறது, லெஸ்பியன் லவ் கலந்துகட்டி அனிதா உதீப் (இயக்குநர்) இதுதான் கதை அப்படிங்கிற மாதிரி சொல்லி இருக்காங்க. ஆனா திரைக்கதை தான் ஒரு தெளிவில்லாம அங்கங்கே தடுமாறுது.


சிம்பு(Simbu)சிம்புவோ இசையில பாட்டெல்லாம் ஒருதடவ கேட்கலாம் ரகம்தான். அதோட படத்துலயும் ஒரு ஸ்பெஷல் எண்ட்ரி குடுத்து தன்னோட ரசிகர்களுக்கு சின்னதா ஒரு ஸ்பெஷல் ட்ரீட் வேற வச்சு இருக்காரு. கடைசிவரைக்கும் காதல் தான் கல்யாணம் எல்லாம் கெடையாதுன்னு வழக்கம் போல இந்த படத்துலயும் மறைமுகா ஒரு மெசேஜ் சொல்றாரு. 5 நிமிஷம் வந்தாலும் அவரோட நடிப்புக்கு தியேட்டர்ல செம ரெஸ்பான்ஸ்.


இளைஞர்கள்படத்துக்கு நெறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் பசங்களுக்கு சமமா பொண்ணுங்களும் தியேட்டர்க்கு வந்து படம் பாக்குறாங்க. நெறைய
இடத்துல டயலாக்ஸ்க்கு செம கிளாப். பொண்ணுங்கனா இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு நெனைக்குறவங்க, கலாச்சார காவலர்களுக்கு இந்த படம் புடிக்காம போகலாம். அதேநேரம் ஜாலியா ஒரு படம் பாக்கலாம்னு நெனைக்கறவங்க தாராளமா இந்த படத்த தியட்டர்ல போய் பாக்கலாம்.


மொத்தத்தில் 90எம்எல் - இளைஞர்களுக்கானது!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.