அதிக வயது வித்தியாசத்தில் 'திருமணம்' செய்துகொள்வது.. 'செக்ஸ்' வாழ்க்கையை பாதிக்கக்கூடுமா?

அதிக வயது வித்தியாசத்தில் 'திருமணம்' செய்துகொள்வது.. 'செக்ஸ்' வாழ்க்கையை பாதிக்கக்கூடுமா?

ஒருகாலத்தில் ஆணைவிட பெண்ணுக்கு வயது வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும்படி பெரியவர்கள் மணமுடித்து வைத்தார்கள். பெண்கள்(Ladies) படிக்கத் தொடங்கி பொருளாதார ரீதியாக காலூன்றத் தொடங்கியவுடன் இந்த வயது வித்தியாசம் சற்று குறைந்தது. நாளடைவில் ஆண்-பெண் இருவரும் சம வயதில் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு காதல் திருமணங்கள்(Marriage) வெகுவாக உதவின. ஒருகட்டத்தில் வயது குறைவான ஆண்களை பெண்கள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்தது.தற்போது ஆண்களோ, பெண்களோ அதிக வயது வித்தியாசத்தில் திருமணம்(Marriage) செய்து கொள்வது பேஷனாகி வருகிறது. குறிப்பாக பழங்காலங்களில் இருந்ததைப் போல தன்னை விட 10-15 வயது குறைவான வயதுடைய பெண்களை ஆண்கள்(Gents) திருமணம் செய்து கொள்வது மீண்டும் அதிகரித்து வருகிறது. நடிகர்கள், மாடல்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் இதுபோல திருமணம் செய்துகொள்வது ட்ரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்து தற்கால இளைஞர்களும் இதுபோல மிகவும் வயது குறைந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.


இதுபோல அதிக வயது வித்தியாசத்தில் திருமணம்(Marriage) செய்து கொள்வது உண்மையிலேயே சரியானது தானா? இதனால் பெண்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை இங்கே பார்க்கலாம்.ஆண்-பெண் வயதுபொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள்(Ladies) இளம் வயதிலேயே முதிர்ச்சி அடைந்து விடுவர். ஒரு 20 வயது எவ்வளவு முதிர்ச்சி இருக்குமோ அதே அளவு முதிர்ச்சியே ஒரு 23 வயதுடைய ஆணுக்கு இருக்கக்கூடும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதேபோல பெண்களின் இளமை என்பது மிகவும் குறுகிய காலமே உடையது. மாதவிலக்கு, குழந்தை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 40 வயதுக்குள்ளேயே பெண்களின் இளமை முடிவுக்கு வந்து விடுகிறது. ஆண்களுக்கு அதுபோல இல்லை. 60 வயதிலும் ஒரு ஆணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


திருமண வாழ்வில் தென்படும் சவால்கள்


செக்ஸ்(Sex) தேவைகள்கணவன்-மனைவி இருவரும் ஒரே வயதில் இருக்கும்போது நாளடைவில் உடல்ரீதியான ஈர்ப்பு ஆணுக்கு குறையக்கூடும். இதன் காரணமாகவே
பெரியவர்கள் ஆணை விட பெண்களுக்கு வயது வித்தியாசம் குறைவாக இருக்கும்படி பார்த்து மணமுடித்து வைத்தனர். படிப்பு, வேலை, சுயசிந்தனை
என ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களை உயர்த்திக்கொண்டு தங்களது சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்தபோது இந்த வயது வித்தியாசங்கள் வெகுவாக குறைய ஆரம்பித்தன.


காதல் திருமணங்கள்இந்த வயது வித்தியாசங்களை வெகுவாகக் குறைத்ததில் காதல் திருமணங்களுக்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக 21-ம் நூற்றாண்டில் காதல் திருமணம் செய்து கொள்வது இளைஞர்கள் மத்தியில் பரவலாக ஆரம்பித்தது. ஜாதி, மதம், வயது வித்தியாசங்களை பின்னுக்குத்தள்ளி பலரும் காதல் திருமணங்களை செய்துகொள்ள ஆரம்பித்தனர். இதனால் ஆண்-பெண் இருவரும் சம வயதில் திருமணம் (Marriage) செய்து கொள்வதும், ஓரிரு வருடங்கள் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வதும் தொடர் கதையாகின.


பெண்களை விடஒருகட்டத்தில் தங்களை விட ஓரிரு வயது மூத்த பெண்களை ஆண்கள் திருமணம் செய்து கொள்வது பேஷனாகியது. காதலுக்கு வயது வித்தியாசம்
ஒரு பெரிய தடையாக இருக்க முடியாது என்பதனை இது உணர்த்தியது. இதுபோல திருமணம் செய்துகொண்ட ஆண்கள் பெரிதாக எந்தவித
பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை. இயல்பாகவே தன்னைவிட ஆண்களை நன்றாக பார்த்துக்கொள்வது பெண்களுக்கு கைவந்த கலை என்பதால் அவர்கள் தங்கள் கணவர்களை நன்றாகவே பார்த்துக் கொண்டனர்.


வயது வித்தியாசம்தற்போதைய காலகட்டத்தில் மீண்டும் ஆண்கள் தங்களை விட 10-15 வயது குறைவான பெண்களை மணம் முடிப்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தங்களைப்போல தங்கள் பெண்ணை வரப்போகிற மாப்பிள்ளையும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் வயது அதிகமாக இருந்தாலும்
பரவாயில்லை என தங்கள் சொந்தபந்தம், உறவினர்கள் மத்தியிலேயே பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்து விடுகின்றனர்.
சொந்தக்காரர்கள் என்றால் பெண்ணை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் அதிகமாக இருப்பதே இதற்குக்காரணம்.


என்னென்ன பிரச்சினைகள்இதுபோல அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வயது வித்தியாசம்
அதிகம் இருப்பதால் ஆண்கள், பெண்களை தங்களுக்கு கீழேயே இருக்க வேண்டும் என எண்ணுவர். திருமணம் முடிக்கும்போது பெண் 20 வயதின்
தொடக்கத்தில் இருப்பார் ஆண்கள் அப்போதே 30 வயதைத் தாண்டி இருப்பார்கள். இதனால் நாளடைவில் செக்ஸ்(Sex) ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த வயதில் ஆண்கள் சற்று முதிர்ச்சியுடன் இருப்பதால் மனைவியை சமமாக நடத்தாமல் ஒரு குழந்தை போலவே நடத்த ஆரம்பிப்பார்கள். அல்லது எல்லா விஷயங்களிலும் தன்னை சார்ந்து இருக்க வேண்டும் என நினப்பார்கள். இது இரண்டுமே தாம்பத்திய வாழ்க்கையை சீர்குலைக்கக்கூடும்.


உறவுக்கு மீறிய தொடர்புநாளடைவில் வயதின் தேவைகள் உறவுக்கு மீறிய தொடர்புகளில் பெண்களை கொண்டு விடக்கூடும். குடும்பம், குழந்தைகள் தொடங்கி கவுரவம், அந்தஸ்து என பல்வேறு விஷயங்களையும் பதம் பார்க்கக்கூடும். அதிக வயது வித்தியாசத்தில் மணம் முடித்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித்தவிப்பதை சமீபகாலமாக கண்கூடாக செய்திகள் வடிவில் பார்த்து வருகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


பெண்ணுக்கு மணம்அதனால் உங்கள் உங்கள் மகள் அல்லது உங்களுக்குத் திருமணம் செய்ய வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தால் அதிக வயது வித்தியாசம் கொண்ட
வரன்களை தவிர்த்து விடுங்கள். அதிகபட்சம் 5 வயது அல்லது ஓரிரண்டு வயது குறைவாகவோ மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்து வையுங்கள்.
மகளோ, மகனோ ஒருகட்டத்தில் யாராக இருந்தாலும் உங்களை விட்டு அவர்கள் தனியாக செல்லக்கூடிய சூழ்நிலை வரும் என்பதை புரிந்து
கொள்ளுங்கள். சொந்த பந்தத்தில் மாப்பிள்ளை பார்ப்பதை விட, உங்களுக்கு எல்லா விதத்திலும் ஏற்றாற்போல மாப்பிள்ளை பார்த்து திருமணம்
செய்துகொள்வது உங்களுக்கும் நல்லது உங்கள் எதிர்காலத்திற்கும் நல்லது என்பதை மனதில் மறவாமல் மனதில் கொள்ளுங்கள்.