Beauty

ஆஹா! வேண்டாத மேக்கப் பொருட்களை வைத்து இத்தனை பயனுள்ள பொருட்களை செய்யலாமா?!

Nithya Lakshmi  |  Oct 16, 2019
ஆஹா! வேண்டாத மேக்கப் பொருட்களை வைத்து  இத்தனை பயனுள்ள பொருட்களை செய்யலாமா?!

நாம் சரியான பௌண்டேஷனை வாங்குவது என்பது அனைவருக்குமே கடினமான காரியம். என்னதான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும், வீட்டிற்கு வந்து பரிசோதித்தால் வேறுவிதமாகத் தெரியும். அதை நாம் திருப்பியும் கொடுக்க முடியாது. கவலையை  விடுங்கள். உங்களுக்காகவே வேண்டாத பௌண்டேஷனை அல்லது வேறு மேக்கப் பொருட்களை(makeup product recycle) வைத்து எப்படி பல பயனுள்ள ஒப்பனை பொருட்களை நாமே தயாரிக்கலாம் என்று விரிவாகக் காணலாம்.

தேவையற்ற பௌண்டேஷனைக் கொண்டு பயனுள்ள மேக்கப் பொருட்கள் செய்வது எப்படி?

முதலில், காலாவதியாகாத, உங்கள் நிறத்திற்கு ஒத்துவராத தேவையற்ற பௌண்டேஷனைக் கொண்டு பயனுள்ள மேக்கப் பொருள்/பொருட்கள் செய்வது பற்றி பார்க்கலாம். 

1. திரவ லிப்ஸ்டிக்(liquid lipstick)

Pexels

நீங்கள் விரும்பும் அளவு பௌண்டேஷன், மற்றும் அதில் சம பங்கு நீங்கள் விரும்பும் நிறத்தில் ஐ ஷேடோ பவுடர்  சேர்த்து, பின் அதில் பாதி அளவு வைட்டமின் ஈ எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான், எளிதாக நீங்கள் விரும்பிய நிறத்தில் லிப்ஸ்டிக் தயார்!

2. சாஃப்ட் மேட் லிப் கிரீம்(soft matte lip cream)

மேல் கூறிய லிப்ஸ்டிக்கில் வைட்டமின் ஈ மாத்திரை முழுவதுமாக சேர்த்து கலந்தால்,  சாஃப்ட் மேட் லிப் க்ரீம் கிடைக்கும். 

3. க்ளிட்டர் மெட்டாலிக் லிப்ஸ்டிக்(Glitter Metalic Lipstick)

Pexels

ஒரு சிறிய கிண்ணத்தில் நீங்கள் விரும்பும் அளவு தேவை  இல்லாத பௌண்டேஷன் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ¼ தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றுங்கள். பின்னர் அதில் சம பங்கு நீங்கள் விரும்பும் நிறத்தில் பவுடர் சேர்த்து, பின்னர் அதில் சிறிது க்ளிட்டர் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கினால் க்ளிட்டர் மெட்டாலிக் லிப்ஸ்டிக் தயார்.

4. ஜெல் ஐ ஷேடோ/லைனர்(Gel eye shadow/liner)

கலர் பவுடர், அதில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் தேங்காய் எண்ணெய் சேர்த்து, பின் சிறிது பௌண்டேஷனை சேர்த்து நன்றாக கலக்குங்கள். பிறகு அதில் சிறிது அலோவேரா ஜெல் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கினால் ஐ ஷேடோ ரெடி!

5. க்ளிட்டர் ஐ ஷேடோ/லைனர்(glitter eye shadow/liner)

Pexels

மேல் கூறிய கலவையில் மேலும் சிறிது க்ளிட்டர் பவுடர் சேர்த்தால், க்ளிட்டர் ஐ ஷேடோ கிடைத்து விடும். 

மேலும் படிக்க – ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது? படிப்படியான விளக்கங்கள் உடன் சில உத்திகள்

 

காலாவதியான மற்ற மேக்கப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது?

சரி இப்போது, காலாவதியான மற்ற மேக்கப் பொருட்களைக் கொண்டு என்ன செய்வது என்று பார்க்கலாம்.

1. லிப்ஸ்டிக், ஐ ஷேடோ போன்றவை மீதமிருந்தால் என்ன செய்வது?

Shutterstock

2. மஸ்காரா காய்ந்து விட்டால் என்ன செய்வது?

அதன் பாட்டிலை நன்றாக கழுவி காய வைத்து கொள்ளுங்கள்.  பிரஷ்ஷைக்கொண்டு உங்கள் புருவ முடிகளை சரி செய்யலாம். நீங்கள் ஐ ப்ரோ பென்சில்  தடவும் முன் உங்கள் புருவத்தை இந்த பிரஷ்ஷினால் சரி செய்து, பின் மையை பயன்படுத்தினால் அழகாக இருக்கும்.

3. பழைய லிப் பாம் வைத்து என்ன செய்வது?

Pexels

முழங்கைகள், முழங்கால்கள், பாதங்களில் உள்ள வறண்ட சருமத்தில் பயன்படுத்தி அந்த இடங்களை மிருதுவாக்குங்கள்.

4. காம்பாக்ட் பாலெட்(compact palette) காலியாகி விட்டதா?

கண்ணாடியோடு வாங்கிய வண்ண பால்லெட்(pallette) காலியாகி விட்டதா? நீங்கள் வைத்திருக்கும் வகை வகையான கை பைகளில் ஒவ்வொன்றிலும் ஒன்று போட்டு விடுங்கள். எங்கு சென்றாலும் இப்போது உங்களிடம் முகக் கண்ணாடி இருக்கும் அல்லவா?

5. காலியான பாட்டில்கள்

Pexels

வாசனை திரவிய பாட்டில்கள், எண்ணெய் பாட்டில்கள், குளியல் உப்பு பாட்டில்கள் போன்றவை அழகான வடிவத்தில் வரும். அவற்றை தூக்கிபோடாமல், சுத்தம் செய்து, பூ ஜாடி போல பயன்படுத்துங்கள். பார்க்க பிரமாதமாக இருக்கும்.

நீங்கள் விலையுயர்ந்த, இதுவரை பயன்படுத்தப்படாத அல்லது முடிந்து போன ஒப்பனை தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கான அனைத்து தந்திரங்களையும் உதவிக்குறிப்புகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதுபோன்ற மேலும் அற்புதமான புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்!

 

மேலும் படிக்க – மேக்கப் : யாரும் உங்களிடம் கூறாத சில ஒப்பனை குறிப்புகள் மேலும் படிக்க – கெட் தி லுக் – ஐஸ்வர்யாவின் டஸ்கி ஸ்கின் குறைபாடற்ற தோற்றத்தை பெறுவதற்கான 12 படிகள் !

பட ஆதாரம்  – Pixabay,Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

Read More From Beauty