logo
ADVERTISEMENT
home / அழகு
ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது? படிப்படியான விளக்கங்கள் உடன் சில உத்திகள்  (How To Apply Eye Shadow In Tamil)

ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது? படிப்படியான விளக்கங்கள் உடன் சில உத்திகள் (How To Apply Eye Shadow In Tamil)

உங்களுக்கு மேக்கப் செய்து கொள்ள ஆசையா ? இருப்பினும் அதை எவ்வாறு பூச வேண்டும் என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?அதிலும் முக்கியமாக ஐ ஷடோவை எவ்வாறு அணிய வேண்டும் என்று தெரியாவிட்டால் அல்லது அதற்கான நுணுக்கங்களை கவனிக்காமல் விட்டால் அது ஒரு கோமாளியின் தோற்றத்தை போல் மாறி விட அதிக வாய்ப்புகள் உள்ளது!! அதை தவிர்க்க நீங்கள் சில குறிப்புகளை கண்டு தெரிந்து கொள்ள வேண்டும். இதை பின்பற்றினால் நீங்கள் எளிதில் ஒரு அழகிய ஐ ஷாடோ லுக்கை பெறலாம். இதற்கான விளக்கங்களை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். வாங்க பார்க்கலாம்!

ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது?

கண் ஒப்பனைக்கு தேவை படும் தூரிகைகள்

அற்புதமான கண் ஒப்பனையை பெற சில டிப்ஸ்

ADVERTISEMENT

ஐ ஷாடோ – ஐ மேக்கப் உதாரணங்கள்

அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

eye parts

ஒரு பெர்பெக்ட் லுக்கிற்கு ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது? (How To Apply Eye Shadow?)

நீங்கள் வலைத்தளங்களில் பல விதமான ஐ ஷாடோ தோற்றங்களை கண்டிருக்கலாம். அதை அனைத்தையும் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இங்கு நாங்கள் உங்களுக்கு தேவைப்படும் அடிப்படைகளை கற்று தருகிறோம். இதை பின்பற்றி இதற்கு மேல் உங்கள் கற்பனை திறனை வைத்து,நீங்கள் போகும் நிகழ்வுகள் படி, உங்களுக்கு ஏற்ற தோற்றத்தை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

1.ப்ரைமர் (Apply Eye Primer)

1

 முதலில் ஒரு ப்ரைமர்ரை கொண்டு உங்கள் கண்களை ஒப்பனைக்காக அமைத்துக் கொள்ளுங்கள்.ப்ரைமர் எந்த ஒப்பனையும் சுமூகமாக அமைக்க தேவைப்படும் ஒரு முக்கிய ஒப்பனைப் பொருள். மேலும் இது உங்கள் ஒப்பனையை அதிக நேரம் தக்க வைக்க உதவும்

2.பவுண்டேஷன் (Apply Foundation)

அதற்கு மேல் முகத்தின் நிறத்திற்கு ஏற்ற படி ஒரு பவுண்டேஷனை தடவுங்கள்.பவுண்டேஷன் இல்லாவிட்டால் கன்சீலரை தடவ வேண்டும். இது உங்கள் கண் ஒப்பனையை தெளிவாக காட்ட தேவைப்படும் ஒரு அடித்தளம்.இதற்கு மேல் ஒரு ட்ரான்ஸ்லுசென்ட் பவுடர் பூசி செட் செய்யவும். 

3.நுட் நிற ஐ ஷாடோ (Apply Nude Coluor Eye Shadow)

இப்போது பெரும்பாலானவர்களுக்கு கருவளையங்கள் கண்களை சுற்றி வருகின்றது. இது உங்கள் கண் ஒப்பனையின் நிறங்களை சிறிது குறைத்து அல்லது பிரகாசமாக காட்டாமல் போக கூடும். ஆகையால் அதை தவிர்க்க ஏதேனும் ஒரு நியூட் நிற ஐ ஷாடோவை பவுண்டேஷனுக்கு மேல் பூசவும்.

ADVERTISEMENT

4. பேஸ், கோண்டூர், க்ரேடிஎன்ட் (Base, Contour, Gradient) 

2

இங்கு நீங்கள்  மூன்று விஷயங்களை நீங்கள் கவனிக்கணும். 

  • இப்போது நீங்கள் எந்த நிறத்தை பூசவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை பிளாட் பிரஷால் கண் மடலில் பூசுங்கள்.
  • அடுத்து, அடர் பழுப்பு நிறத்தை கண் மடலின் மேல் பகுதியில் அதாவது கண்களின் தளத்தில் பூசுங்கள். இது உங்கள் கண்களை நல்ல வடிவமாக காட்ட உதவும். இதுதான் கோண்டூரிங்.
  • அடுத்து, உங்கள் புருவங்களிற்கு கீழ் இருக்கும் பகுதிகளில், இலகுவான நிறம் மற்றும் அடர் நிறத்திற்கு நடுவில் இருக்கும் ஒரு நிறத்தை பூசுங்கள் (க்ரேடிஎன்ட்).

இவை மூன்றும் ( இலகுவான நிறம், நடு நிறம் மற்றும் அடர் நிறம் ) முழு ஐ ஷாடோ லுக்கை அளிக்கும்.

 5. ப்ளேன்ட் (Blend)

இவை அனைத்தையுமே ப்ளேன்ட் செய்வது அவசியம். இதுவே உங்கள் கண்களை அழகாய் காட்ட உதவும். இந்த ப்ளேண்டிங்கை நீங்கள் சிறிது நேரம்  மிதானமாக செய்யவேண்டும் . ஏனென்றால் , நாம் அடித்த எல்லா நிறங்களும் கலந்து, ஒரு அழகிய தோற்றத்தை சரியான முறையில் ப்ளேன்ட் சேய்கயில், நமக்கு கிடைக்கும். அதேபோல், கீழ் கண் இமைகளின் வரிகளிலும் இதே மூன்று நிறங்களின் ப்ளேண்டை பூசுங்கள். 

ADVERTISEMENT

6.ஐ லைனர் (Eyeliner) 

ப்ளேன்ட் செய்த பிறகு, உங்களுக்கு பிடித்த நிறத்தில் ஐ லைனரை வரையுங்கள்.

7.ஹயிலைட்டர் (Highlighter)

தேவை பட்டால், ஹயிலைட் செய்ய ஒரு க்ளிட்டேர் ஐ ஷாடோவை பயன்படுத்தி சிறிதாக கணீர் குழியின் நுனியில் தடவலாம்.

3

8.கண் இமைகள் (Eyelashes & Mascara)

அதற்கு பிறகு, கண் இமைகளை சுருள் செய்யும் கருவியை பயன்படுத்தி அதை சுருள் செயுங்கள். தேவை பட்டாள் செயற்கை கண் இமைகளை பயன்படுத்தவும்.அதற்கு பிறகு, மஸ்கரா பூசவும். கண்களின் கீழ் இமைகளிலும் பூசுங்கள்.

ADVERTISEMENT

9. காஜல் (Kajal Pencil)

ஒரு காஜல் பென்சிலை பயன்படுத்தி, கீழ் இமைகளின் வரிகளில் வரையுங்கள்.

10. புருவங்களை (Eyebrows)

கடைசியாக, உங்கள் புருவங்களை ஒரு ப்ரோ பென்சில் பயன்படுத்தி வரையுங்கள்.

கண் ஒப்பனைக்கு தேவை படும் தூரிகைகள் (Eye Makeup Brushes) 

எந்த ஒரு ஒப்பனையாக இருந்தாலும் அதற்கேற்ற பொருத்தமுள்ள கருவி நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இதுவே உங்களுக்கு ஒரு அற்புதமான தோற்றத்தை அளிக்க உதவும். ஆகையால், இந்த கண் ஒப்பனைக்கு உங்களுக்கு தேவைப்பாடும் மூன்று ப்ரஷுகள் –

  1. ஐ ஷாடோ ப்ரஷ்/பிளாட் ப்ரஷ்  – இது தான் உங்கள் ஐ ஷாடோவை அடிக்க உதவும் முக்கியமான ப்ரஷ்.இங்கே வாங்குங்கள்  
  2. கோண்டூர் ப்ரஷ் /டோம் ப்ரஷ் -இது உங்கள் கண்களின் முக்கிய பகுதிகளை கோண்டூர் செய்ய மற்றும் ஹயிலைட் செய்ய உதவும்.இங்கே வாங்குங்கள் 
  3. ப்ளெண்டிங் ப்ரஷ் -இது , அடித்த நிறங்களை ப்ளேன்ட் செய்ய தேவைப்படும். இங்கே வாங்குங்கள் 

ஒரு நல்ல பிராண்டட் பிரஷ்ஷில் நீங்கள் செலவழிக்கும் போது, நீங்கள் ஒரு அற்புதமான தோற்றதை எளிதில் அடைய உதவும்.

ADVERTISEMENT

அற்புதமான கண் ஒப்பனையை பெற சில டிப்ஸ் (Eye Makeup Tips) 

1. மேக்கப் ப்ரஸுகளை நன்கு கழுவி சுத்தமாக பயன்படுத்தவும். இதுவே ஒரு சிறந்த பினிஷை அளிக்கும்.

2. அழுத்தமான பிரகாசமான ஒப்பனைக்கு உங்கள் பிரஷை தண்ணீரில் தொட்டு அதை ஐ ஷாடோவில் தடவி , பூசுங்கள்.

3. கண் ஒப்பனை அதிக நேரம் நீடிக்க ஒரு பிராண்டட் ப்ரைமர் அவசியம்.

4.எங்கும் ஒழுகாமல் இருக்க, உங்கள் ஐலைனர் அல்லது மாஸ்க்கார வாட்டர்ப்ரூப் ஆக இருந்தால் நல்லது.

ADVERTISEMENT

5.ஐ ஷாடோ மூன்று வகைகளில் உள்ளது – ப்ரெஸ்ஸட்,பவுடர் மற்றும் கிரீம் . இதில் உங்களுக்கு எது சிறந்தது என்று சிந்தித்து பயன்படுத்துங்கள்.

6.புருவங்களுக்கு கீழ் இருக்கும் எலும்பு பகுதியை நன்கு அறிந்து, உங்கள் கண்களின் களத்திற்கு மட்டும் ஐ ஷாடோவை தடவுங்கள். இதுவே ஒரு இயல்பான தோற்றத்தை அளிக்கும்.

ஐ ஷாடோ – ஐ மேக்கப் உதாரணங்கள் (Some Beautiful Eye Shadow Looks)

இப்போது, உங்களுக்கு ஐ ஷாடோவை இவாறு அணியவேண்டும் துன்று தெரிந்திருக்கும். இதை நீங்கள் முயற்சிக்க நாங்கள் சில கண் ஒப்பனை உதாரணங்களை அளிக்கிறோம்.

1. வெளிர் நிற ஐ ஷாடோ நிறத்தில், பழுப்பு நிற லைனர்.இதே நிறத்தில் லிப்ஸ்டிக் மிக அற்புதமாக இருக்கும்.

2. வைன் நிற கண் ஒப்பனைக்கு

3.இதுபோல் ஒரு பளிச்சிடும் நிறத்தில், சேலை மற்றும் ஐ ஷாடோவை மாட்ச் செய்தால் , லிப்ஸ்டிக்க்கை இலகுவாக வையுங்கள். 

4.இதுபோல், உங்கள் ஐ ஷாடோவை பெஸ்டெல் நிறங்களில் தடவி, ஐ லைனரை லிப்ஸ்டிக்குடன் சேரும் நிறத்தில் அடிக்கலாம். 

5. இது கோடைகாலத்திற்கான நிறம் !

ADVERTISEMENT

 

இதுபோல், நீங்களும் உங்கள் ஐ ஷாடோ நிறத்தை லிப்ஸ்டிக், ஐ லைனர் , ப்ளஷ் அல்லது நீங்கள் அணியும் ஆடையுடன் மேட்ச் செய்து அணிந்தால் ஒரு வண்ண ஒருங்கிணைப்பு இருக்கும். இதுவே அழகான தோற்றதை அளிக்கும்!

மேலும் படிக்க – சோனாக்ஷி சின்ஹாவை போல ஸ்மோக்கி கண்கள் – பார்ட்டி லுக் பெற  ஒரு எளிமையான டுடோரியல்

அதிகம் கேட்கப்படும் கேள்விகள் (FAQ’s)

1.ஒரு ப்ளஷை ஐ ஷாடோவாக பயன்படுத்தலாமா?

ஒப்பனையில் நீங்கள் ஒரு ப்ரோ ஆகா இருந்தால், ஒரே பொருளை பல விஷயங்களிற்கு பயன் படுத்தலாம். இவை அணிவதும் நம் கற்பனையில் அடைந்துள்ளது. ஆம் , ப்ளாஷை கண்களின் மேல் பூசலாம். ஆனால் அது சரியான நிறம் மற்றும் அமைப்பில் இருக்கவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அது ஒரு வேடிக்கையான தோற்றத்தை அளித்திடும்!இதிலும், கன்சீலர் அல்லது பாவுண்டேஷன் அவசியம். 

ADVERTISEMENT

2.கண் ஒப்பனையை நீண்ட நேரம் நீடிக்க வைக்க என்ன செய்யவேண்டும்?

ஒரு மேக்கப் மிஸ்டை (mist) பயன்படுத்தி உங்கள் ஒப்பனையை செட் செய்திடுங்கள்.

3. எந்த ஐ ஷாடோ நிறங்களை கண் ஒப்பனைக்கு பயன்படுத்த வேண்டும்?

இதில் எந்த விதிகளும் கிடையாது. உங்களுக்கு பிடித்த நிறங்களை நீங்கள் அணியலாம். மூன்று விதமான நிறங்கள், அதாவது இலகுவான நிறம், நடுத்தர நிறம்,மற்றும் ஒரு அடர் நிறத்தை எப்போதும் ப்ளேன்ட் செய்து பயன்படுத்த தெரிந்தால் போதும்.

4.ஐ ஷாடோ நிறங்களை எவ்வளவு நாட்கள் / வருஷம் பயன் படுத்தலாம்?

இதை நீங்கள் ஓரிரு வருஷம் பயன்படுத்தலாம். அதிலும், கிரீம் ஐ ஷாடோ என்றால் ஒரு வர்ஷம் பயன் படுத்தலாம்.

5.அடர் பழுப்பு நிறம் கொண்ட கண்களுக்கு ஏற்ற ஐ ஷாடோ நிறங்கள்?

பிளம் ஐ ஷாடோ, க்ரெ ஷாடோ,இளஞ்சிவப்பு 

ADVERTISEMENT

6.சில சிறந்த ஐ ஷாடோ பாலெட்டுகள் ? 

மேபிளீன் நியூ யார்க் தி நுட்ஸ் ஐ ஷாடோ பாலெட்
வெட் அண்ட் வைல்ட் ஐ ஷாடோ 

மேலும் படிக்க –   மேக்கப் : யாரும் உங்களிடம் கூறாத சில ஒப்பனை குறிப்புகள்

படங்களின் ஆதாரங்கள் – shutterstock,pexels,youtube,instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

24 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT