
அழகு என்றால் முகம் மட்டுமே என்று நினைத்து முகத்தில் மட்டுமே சிலர் கவனம் செலுத்துவார்கள். உண்மையில் அழகு உடல் மொத்தமும் ஒரே மாதிரி பார்த்து கொள்வதுதான்.
மற்றவர்கள் ரசிக்க நாம் அழகாக இருப்பதை விட நம்மை நாம் நேசிக்கிறோம் என்பதை உணர்த்த நம்மை நாம் அழகாக பார்த்து கொள்வது அவசியம்.
கைகளையும் கால்களையும் நாம் கவனிக்காமல் விடுவதால் அவை சூரிய வெப்பத்தில் நிறம் மாறி முகம் ஒரு நிறமும் கைகள் (hands) ஒரு நிறமுமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையை மாற்ற இப்போதில் இருந்து உங்கள் கைகள் மற்றும் கால்களிலும் கவனம் செலுத்துங்கள்.
கைகள் பொலிவாக இருக்க
கையில் உள்ள அழுக்குகளை நீக்கி கருமையை போக்க எலுமிச்சை சிறந்த பலனை தருகிறது. இதற்கு தேவையானவை
முட்டையின் மஞ்சள் கரு
எலுமிச்சை சாறு
அவகேடோ பழம்
முதலில் அவகேடோ பழத்தை பாதி எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும். அதன் பின்னர் அதனோடு மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு சில சொட்டுக்களை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை கைகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனால் கைகள் மிக மிருதுவாக அழகாக காட்சியளிக்கும்.
வெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் – அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் !
பொலிவான கைகளுக்கு
கைகள் மிருதுவாக பொலிவாக இருக்க ஆலிவ் எண்ணெய் உதவி செய்கிறது. ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை இவற்றை சேர்த்து நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். இது உங்களை கைகளை மென்மையாக பட்டு போல மாற்றி விடும்.
கருமை நிறம் மாற
சிட்ரஸ் அதிகம் உள்ள ஆரஞ்சு திராட்சை எலுமிச்சை போன்ற பழங்களின் சாறுகளை அடிக்கடி கைகளில் தடவி காய வைத்து பின்னர் கழுவி வந்தால் கைகளின் கருமை நிறம் விரைவில் மாற ஆரம்பிக்கும். உலர்ந்த சருமத்தினர் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
“கண் கருவளையங்களால் கவலையா ! பத்தே நாட்களில்
கருவளையங்களை நீக்கும் அற்புத பேக்!”
கைகள் இளமையாக இருக்க
இளமையான முகத்தை போலவே இளமையான கைகள் மிக முக்கியமானவை. இதற்கு தேவையானவை
பால் 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறை முதலில் தேனுடன் கலக்கி அதன் பின் அவற்றோடு பாலை சேருங்கள். இதனை உங்கள் கைகளில் தடவி வட்ட வடிவமாக மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் கழுவி விடுங்கள். இப்படி அடிக்கடி செய்து வர கைகள் இளமையாக இருப்பது நீடிக்கும்.
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. ஆப்பிள் பேஷியல் மூலம் அழகை பராமரியுங்கள் !
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.