Bath & Body

மேக்கப் பொருட்களை பாதுகாக்க சில சிறந்த வழிகள்!

Nithya Lakshmi  |  Nov 12, 2019
மேக்கப் பொருட்களை பாதுகாக்க சில சிறந்த வழிகள்!

நீங்கள் ஒரு மேக்கப் பிரியரா?! உங்கள் விலையுயர்ந்த ஒப்பனை தயாரிப்புகள் உடைந்தால் என்னவாகும் என்று நீங்கள் பதட்டப்பட்டதுண்டா? கவலை வேண்டாம்! இதற்கான எளிய தீர்வுகளை இங்கு காணலாம் . முதலில் , மேக்கப் பொருட்களை பாதுகாப்பான வெயில் அதிகம் படாத இடங்களில் வைப்பது மிகவும் அவசியம். எந்தெந்த மேக்கப் பொருட்களை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், பார்த்து பார்த்து வாங்கிய விலையுயர்ந்த அழகுப் பொருட்கள் உடைந்து விட்டால்(broken), அதை எப்படி சரி செய்யலாம் என்றும், உங்களுக்காக சில குறிப்புகள்.

ஒவ்வொரு மேக்கப் பொருளையும் எப்படி பாதுகாப்பது?

1. கூந்தலுக்கான பொருட்கள்

அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஷாம்பூ, கண்டிஷனர், ஸ்டைல் செய்ய பயன்படுத்தும் சிகிச்சைப் பொருட்களை உங்கள் குளியல் அறையிலேயே வைத்துக்கொள்ளலாம்.எப்போதாவது பயன்படுத்தும் பொருட்களை(makeup product), ஈரமாக இல்லாத இடத்தில் வைத்தால், பொருட்கள் பழுதடையாமல் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும்.

2. திரவ பவுண்டேஷன்

Shutterstock

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், திரவ பவுண்டேஷன் நீண்ட நாட்கள் உடையாமல், தன்மை மாறாமல் இருக்கும். அப்படி வைக்கப் பிடிக்கவில்லையென்றால், ஒரு மேக்கப் பையில் போட்டு, அலமாரியில் வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக, காற்று புகாமல், வெய்யில் படாமல் இருந்தால் போதும், வெகுநாட்கள் பயன்படுத்தலாம். 

3. மாயிஸ்ட்ரைசர்

அதிக ரசாயனங்கள் இல்லாத மாயிஸ்ட்ரைசர்களை ட்ரெஸ்ஸிங் இடங்களில் வைத்துக்கொள்ளலாம்.ஆனால், SPF கொண்ட மாயிஸ்ட்ரைசர்கள் யூவி கதிர்கள் பட்டால், தன்மை மாறி விடும். பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதற்கு ஒரு கருப்பு நிற பாட்டில் வைத்துப் பயன்படுத்தலாம்.

முகத்திற்கு பயன்படுத்தும் சில மாய்ஸ்ட்ரைசர்கள் திறந்தவுடன் நிறம் மாறும் தன்மை உள்ளதாக இருக்கும். அவற்றை அந்த அந்த பாட்டில்களில் கூறியுள்ளவாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும். சில மாயிஸ்ட்ரைசர்கள் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி தயாரித்திருந்தால், நிச்சயம் கூடுதல் கவனம் தேவை. பாக்டீரியா, பங்கஸ் போன்றவை தோன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

4. வாசனை திரவியங்கள்

Shutterstock

நூறு விதமான சின்ன சின்ன பொருட்களால் தயாராகும் வாசனை திரவியம், சூரிய ஒளியில் இருந்தால் தன்மை மாறுவது நிச்சயம். அதனால், அதன் வாசனையை மெதுவாக இழக்க நேரிடும். குளிர்சாதன பெட்டியில் வைத்துப் பயன்படுத்துங்கள்.

5. மஸ்காரா

காற்றுபுகாமல், இறுக்கமாக மூடப்பட வேண்டும். வெயிலும், வெளிச்சமும் பட்டால் எளிதில் அதன் தன்மை மாறி விடும். கண்கள் மீது பயன்படுத்துவதால், மிக கவனமாக பாதுகாக்க வேண்டும்.

6. நெய்ல் பாலிஷ்

Shutterstock

பொதுவாக நகப்பூச்சை குளிர்சாதன பெட்டியில் வைப்பது வழக்கம். அதனால் தன்மை மாறாது என்றாலும், நகப்பூச்சு திடமாகி விடும். அதற்கு பதிலாக ஒரு இருட்டான இடத்தில் வைத்தால், தன்மை மாறாது இருக்கும்.

7. மேக்கப் பிரஷ்கள்

குளியலறையில் வைத்தால் ஈரம் பட்டு, எளிதாக பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். ஒரு மேக்கப் பையில் போட்டு நனையாமல் வைக்க வேண்டும். உங்கள் ஒப்பனை தூரிகைகளை அதிக ஒப்பனை மற்றும் அழுக்குடன் காணும்போது, அதை கழுவ வேண்டும் என்றதும் நினைவில் இருக்கட்டும்!

மேலும் படிக்க – மேக்கப் ப்ரஷ் வகைகள் மற்றும் அவற்றின் பயன்கள்

8. பவுடர் மேக்கப் பொருட்கள்

Shutterstock

பவுடர்தானே என்று அலட்சியம் வேண்டாம். உங்கள் நிறத்திற்கேற்ற ஒன்றை தேடித் தேடி பார்த்து வாங்கி இருப்பீர்கள். சூரிய ஒளியில் நிறம் எளிதில் மாறிவிடும். அதனால் மேக்கப் பையில், ஒளி புகாதவாறு வைத்துக்கொள்ளுங்கள்.

உடைந்த ஒப்பனை தயாரிப்புகளை எவ்வாறு சரி செய்வது?

இப்படி  பார்த்து  பார்த்து பாதுகாத்து வைத்திருந்தாலும், சில சமயம் மேக்கப் பொருட்கள் உடைந்து விடுகிறது. அவற்றை சரி செய்து திரும்பவும்  எப்படி பயன்படுத்துவது என்ற குறிப்புகளை காணலாம். 

1. லிப்ஸ்டிக்

புல்லெட் வடிவில் உள்ள லிப்ஸ்டிக் நிச்சயம் ஒருமுறையாவது உடைந்துவிடும். அழகான நிற லிப்ஸ்டிக் இனி எப்படி கைகளில் படாமல் பயன்படுத்துவது என்ற கவலை வேண்டாம்.உடைந்த பகுதியை, லைட்டர் கொண்டு சிறிது சூடாக்குங்கள். இரண்டு பகுதியையும் ஒன்றாக ஒட்டி விடுங்கள். அவ்வளவுதான்! உங்கள் லிப்ஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்தலாம்.

2. ஐஷேடோ

Shutterstock

உடைந்த ஐஷேடோ நிறங்களை தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி ஒரு கிரீம் போன்ற ஐ ஷேடோவை தயார் செய்யலாம். பார்ட்டி பண்டிகை நாட்களில் இது உங்கள் கண்களுக்கு பிரகாசத்தை அளிக்கும்!

3. ப்ரைமர், ஹைலைட்டர், ப்ளஷ், ப்ரோன்சர்

பவுடர் வடிவில் உள்ள இவை அனைத்தும் எளிதில் உடையக்கூடியவை. அவற்றை ப்ரஷில் தொட்டு பயன்படுத்த முடியாமல் ஆகிவிடும்.ரப்பிங் ஆல்கஹாலை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, உடைந்த பவுடர் மீது ஸ்பிரே செய்யுங்கள். பவுடர் ஊறிய பின், ஸ்பூன் அல்லது விரல் கொண்டு கட்டிகளை உடைத்து மீண்டும் பவுடராக்கி விடுங்கள். நன்றாக அழுத்தம் கொடுத்து, மீண்டும் பழைய வடிவில் செட் செய்து விடுங்கள். ஒரு நாள் காய்ந்ததும், எப்போதும் போல பயன்படுத்துங்கள்.

ரப்பிங் ஆல்கஹாலுக்கு பதிலாக, ரோஸ் வாட்டர் அல்லது ஹாண்ட் சானிடைஸர் பயன்படுத்தலாம்.

4. காம்பாக்ட் பவுடர்

Shutterstock

காம்பாக்ட் பவுடர் உடைந்தால், மேல் கூறிய வழியில் மீண்டும் பயன்படுத்தலாம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி அல்லது முகத்திற்கு போடும் பிரைமர் சேர்த்து கலந்து கொண்டு, ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால், சூப்பரான லிக்விட் பௌண்டடேஷன் ரெடி!

இனி விலையுயர்ந்த மேக்கப் பொருட்கள் வீணாகி விட்டதே என்ற கவலை வேண்டாம். சருமம் வெயிலில் சென்றால் நிறம் மாறி, வாடி விடுவதைப்போலத் தான் மேக்கப் பொருட்களும். இதை மனதில் வைத்துக்கொண்டு, பாதுகாப்பாக வைத்து பயன்படுத்துங்கள். 

 

மேலும் படிக்க – மேக்கப் : யாரும் உங்களிடம் கூறாத சில ஒப்பனை குறிப்புகள் மேலும் படிக்க – ‘நோ – மேக்கப்’ மேக்கப் லுக் அடைவதற்கான யுத்திகள்

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !

Read More From Bath & Body