Bath & Body

சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்! வீட்டிலேயே செய்வது எப்படி?

Nithya Lakshmi  |  Nov 4, 2019
சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்! வீட்டிலேயே செய்வது எப்படி?

நன்றாக அலைந்து திரிந்து வந்தபின், சூப்பரா ஒரு ஷவர் பாத் எடுத்துக்கொண்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். எப்போதும் போல சோப்பு பயன்படுத்தாமல், ஜெல் பயன்படுத்தினால், சருமத்திற்கு நல்ல மென்மையான உணர்வைத் தரும்.  இல்லத்திலேயே மிகவும் குறைவான பொருட்களை வைத்து, அதிக சிரமம் இல்லாமல் விரைவில் ஒரு சிறப்பான பாடி வாஷ் (body wash) எப்படி செய்யலாம் என்று விரிவாக காணலாம்.

குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

முதலில், குளிப்பதால்  ஏற்படும் நன்மைகளைப் பற்றி  பார்க்கலாம்.

  1. சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்
  2. இரத்த ஓட்டத்தை சீராக்கும்
  3. இரவில் தூங்கும்முன் குளித்துவிட்டு தூங்கினால், நல்ல உறக்கம் வரும்
  4. உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் புத்துணர்ச்சியூட்டும்
  5. நுரையீரல் நன்றாக சுவாசிக்க உதவும்
  6. தசைப் பிடிப்புகளையும், மூட்டு வலிகளையும் குறைக்கும்

1. சோப்பு இல்லாமல் ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்

Shutterstock

சோப்பினால் அலர்ஜி உள்ளவர்கள், சருமத்தில் பிரச்சனை உள்ளவர்கள், முழுவதும் இயற்கையான இந்த ஆலிவ் எண்ணெய்(olive oil) பாடி வாஷ் தயாரித்து பயன்படுத்தலாம். எப்போது செய்தாலும், இந்த கலவையை சிறிதளவே செய்து பயன்படுத்துங்கள். அப்போதுதான், அதன் இயற்கை தன்மை மாறாமல் இருக்கும். 

தேவையான பொருட்கள்: 

ஆர்கானிக் ஆலிவ் எண்ணெய்
அத்தியாவசியமான எண்ணெய்(லாவெண்டர் அல்லது ரோஸ்மேரி
பயன்படுத்தலாம்)
சக்கரை
எலுமிச்சை சாறு

பொருட்களின் பயன்கள்:

சக்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். எலுமிச்சை அதிகமான எண்ணெய் பதத்தை நீக்க உதவும்.ஆலிவ் எண்ணெயில் இயற்கையான ஈரத்தன்மை கொடுக்கும் பொருள் இருக்கிறது. மேலும், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்(anti-oxidant) பொருட்கள் சருமத்திற்கு ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.சருமம் வயதான தோற்றத்தை அடைவதில் இருந்தும் காக்கிறது. 
 
செய்முறை:

  1. ஒரு கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள்
  2. அதோடு ஒரு சில துளிகள் அத்யாவசிய எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்குங்கள்
  3. ஒரு தேக்கரண்டி சக்கரை சேர்த்து, ஸ்பூன் கொண்டு கரையும்வரை கலக்குங்கள்
  4. ஒரு சில துளிகள் எலுமிச்சை சாரை சேர்க்கவும்
  5. இறுதியாக அனைத்தையும் நன்றாக ஒருமுறை கலந்து கொள்ளுங்கள்

2. சோப்புடன் ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்

Shutterstock

ஒரு சிலருக்கு சோப்பு பயன்படுத்தினால் தான்  அழுக்கு போவதாக தோன்றும். உப்பு தண்ணீரின் தன்மையால் அவ்வாறு  இருக்கலாம். சோப்பு சேர்த்து எப்படி பாடி வாஷ் தயாரிப்பது என்று  பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

ஆலிவ் எண்ணெய்
தேன்
திரவ கேஸ்டைல் சோப்பு
அத்யாவசிய எண்ணெய்(பெப்பர்மின்ட்)

பொருட்களின் பயன்கள்:

தேன்:

அத்யாவசிய எண்ணெய்:

அத்யாவசிய எண்ணெய் பல நறுமணங்களில் வருகிறது. ஜெல்லிற்கு நல்ல நறுமணத்தை தருவதற்காக சேர்க்கப்படும் இந்த எண்ணெய் சில துளிகள் சேர்த்தாலே போதுமானது.

செய்முறை: 

  1. அனைத்து பொருட்களையும் ஒரு கண்ணாடி கிணத்தில் போட்டு நன்றாக கலக்குங்கள்.
  2. பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வெயில் படாத இடத்தில் வைத்துக் கொண்டு பயன்படுத்துங்கள். 

எப்படி பயன்படுத்துவது:

அனைவருக்கும் ஜெல் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்த ஒன்றுதான். இருப்பினும், ஒரு ஈரமான ஸ்பாஞ்சு எடுத்து அதில் ஜெல் சிறிது பயன்படுத்தி, உடலில் தேய்த்துக்கொண்டால் நன்றாக நுரை கிளம்பும். பிறகு, நன்றாக ஷவரில் நின்று குளித்துப் பாருங்கள்! புதியவராக வெளியே வருவீர்கள்!

குழந்தைகள் சோப்பு உபயோகித்தால் உடல் முழுவதும்  சரியாக பயன்படுத்த மாட்டார்கள். ஜெல் தயாரித்து வைத்துக் கொண்டு, வித விதமான அத்யாவசிய எண்ணெயை மாற்றி மாற்றி பயன்படுத்தினால், வெவ்வேறு வாசனைகளில் கலக்கலாம். குழந்தைகளும் குளிப்பதற்கு சங்கடப்படாமல், இரண்டு முறை குளிக்க ஆசைப்படுவார்கள்.நீங்களும் ஒரு சோர்வான நாளுக்குப் பிறகு புத்துணர்ச்சி அடைவீர்கள்! 

 

மேலும் படிக்க – சருமத்தின் மீது ப்ளூபெர்ரி செய்யும் மாயாஜாலம்!

மேலும் படிக்க – பட்ஜெட் விலையில் பளபளப்பாக வேண்டுமா ? பொன்னென உங்கள் தேகத்தை மின்ன செய்யும் பாடி ப்ராடக்ஸ்

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Bath & Body