சருமத்தின் மீது ப்ளூபெர்ரி செய்யும் மாயாஜாலம்!

சருமத்தின் மீது ப்ளூபெர்ரி செய்யும் மாயாஜாலம்!
Products Mentioned
POPxo

நாம் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தவுடன், இவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகான சருமம் இருக்கிறது? எப்படி ஒரு முகப்பருவோ அல்லது கரும் புள்ளியோ இல்லாமல் இருக்கிறார்? என்று வியக்கிறோம். ஆனால் இதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள்  என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

உங்கள்  சருமமும் அப்படி ஜொலிக்க வேண்டும் என்றால், நீங்கள் தினமும் கடைபிடிக்க வேண்டிய சிறந்த முறைகள் இருக்கிறது. அதற்கு முதலில் உங்கள் சருமம்(skin) வறண்ட சருமமா, எண்ணெய்ப் பசை உள்ள சருமமா, இரண்டும் கலந்த சருமமா, உணர்ச்சியுள்ள சருமமா அல்லது சாதாரண சருமமா என்று அறிந்து கொள்ள வேண்டும். பிறகு அதற்குத் தகுந்தாற்போல உங்கள் சருமத்தை பராமரிக்க வேண்டும்.

தினமும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சரும பராமரிப்பு செயல்முறை

Pixabay

 • கிளென்சர் - முதலில் முகத்தை சுத்தமாக தூசு, அழுக்கு இல்லாமல் வைத்திருக்க வேண்டும். அதற்கு முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது கழுவி சுத்தம் செய்தாலே, பாதி சரும பிரச்சனைகள் வராது. அப்படி கழுவுவதற்கு உங்கள் சருமத்தின் தன்மைக்கு தகுந்தவாறு, இயற்கையான ஸ்கிரப்பர்களான ஓட்ஸ், அரிசிமாவு, கோதுமைமாவு, கடலைமாவு, பயத்தம்பருப்பு மாவு, பாதாம் என ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள்.
 • டோனர் - கழுவிய பின் ஒரு டோனரை ஒரு பஞ்சில் நனைத்து உங்கள் முகத்தை துடைக்கவும். நீங்கள் கழுவியும் பின் தங்கிய அழுக்குகளை இது நீக்கி விடும். இயற்கை டோனேராக ரோஸ் வாட்டர், வெள்ளரிச் சாறு, தயிர், பால், தேன், முட்டையின் வெள்ளைக்கரு என ஏதாவது ஒன்றை பயன்படுத்துங்கள்.
 • மாய்சரைசர் - பின் முகத்தை ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் சருமத்திற்கேற்ப ஜெல் அல்லது எண்ணெய் பயன்படுத்தலாம். இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை தடவுங்கள் போதும்.
 • சன்ஸ்க்ரீன் - கடைசியாக உங்கள் சருமத்தை பாதுகாக்க இயற்கையான சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். இதுவும் உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ற சரியான பொருளைத் தேர்வு செய்யுங்கள்.

மேலே உள்ளவை உங்கள் சருமத்தைப் பாதுகாக்க நீங்கள் வழிபடும்  வழக்கமாக இருந்தாலும், சரும புத்துணர்ச்சிக்கும், உங்கள் சரும பிரெச்சனைகள் அனைத்திற்கும் ஏற்ற ஒரு ஃபேஸ் பேக் தேவைப்படும். அதற்காக நாங்கள் பரிந்துரைக்கும் மாய பொருள் - புளூபெர்ரி! 

சருமத்திற்கு ஏற்படும் சேதத்தில் இருந்து ப்ளூபெர்ரி (blueberry) காக்கிறது. ப்ளூபெர்ரியில் கொலாஜென் என்னும் தசை நார் புரதம் இருப்பதால், அது சருமத்திற்கு மிகவும் நல்லது. ஒரு நாளிற்குத் தேவையான வைட்டமின் சி ப்ளூபெர்ரியில் இருந்து கிடைத்துவிடும்.

ப்ளூபெர்ரி ஃபேஸ் பேக் (Blueberry face pack)

Pixabay

ப்ளூபெர்ரியைக் கொண்டு எப்படி முகத்திற்கு பேக் தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. வறண்ட சருமம்

வயதாக வயதாக சருமம் வறண்டு, சுருக்கங்கள் தோன்றி, நெகிழ்ச்சியாக மாறிவிடும். அது உங்களை வயதானவர் போல தோற்றுவிக்கும். ப்ளூபெர்ரி மாஸ்க் இதற்கு சரியான தீர்வு தரும்.

தேவையான பொருட்கள்:

 • ஆவியில் வேக வைத்த ப்ளூபெர்ரி சிறிது,
 • 3 தேக்கரண்டி தயிர்

செய்முறை:

ப்ளூபெர்ரியை அரைத்து, தயிருடன் கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.

2. சருமத்தின் நிறம் மாறுதல்

சூரிய கதிரால் உங்கள் முகத்தின் நிறம் மாறி இருந்தாலோ அல்லது உங்களுக்கு எண்ணெய் பசை உள்ள சருமம் இருந்தாலோ இந்த ப்ளூபெர்ரி மாஸ்க் போடுங்கள்.

தேவையான பொருட்கள்: 

 • 15 ப்ளூபெர்ரி,
 • ½ எலுமிச்சை,
 • 2 தேக்கரண்டி பொடித்த ஓட்ஸ்/பாதாம்

செய்முறை:

ஓட்ஸ்/பாதாமை பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். பின் அதோடு எலுமிச்சை சாரையும்,  ப்ளூபெர்ரியையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். 

3. முகப்பருக்கள் 

பல ஆயிரம் ஆண்டுகளாக கற்றாழை தான் சரும எரிச்சல், காயம், மற்றும் முகப்பருவிற்கு சரியான தீர்வாக இருந்தது. இங்கு நாம் ப்ளூபெர்ரியை கொண்டு எப்படி முகப்பருவிற்குத் தீர்வு காண்பது என்று பார்க்கலாம்.

ப்ளூபெர்ரியில் சால்சிலைட்ஸ் என்னும் உப்பு இருக்கிறது. இதுதான் முகப்பருவிற்கு தீர்வாக தயாரிக்கப்படும் எல்லா பொருட்களிலும் இருக்கிறது. இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், தடைப்பட்டிருக்கும் குழிகள், மற்றும் அதில் இருக்கும் பாக்டீரியாவிற்கு எதிராக வேலை செய்யும் தன்மை கொண்டது. முகப்பருவைப் போக்க இந்த ப்ளூபெர்ரி  பேக்கை போடுங்கள்.

தேவையான பொருட்கள்:

 • 10 ப்ளூபெர்ரி,
 • ½ எலுமிச்சை,
 • சிறிது மஞ்சள்தூள்

செய்முறை:

ப்ளூபெர்ரியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிது மஞ்சள் தூளையும், எலுமிச்சை சாரையும் கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்களுக்கு பின் முகத்தை வெது வெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். 

நீங்கள் முயற்சிக்க ஒரு புளுபெர்ரி தயாரிப்பு

உங்கள் பிஸியான கால அட்டவணையில் அவுரிநெல்லிகளைப் பறிக்க உங்களுக்கு நேரமில்லை என்று நீங்கள் நினைத்தால், இங்கே எங்களிடம் ஒரு சிறந்த தயாரிப்பு உள்ளது! இது கெமிக்கல் இல்லாத இயற்கை சார்ந்த தயாரிப்பு. 

POPxo Exclusive
Blueberry Face & Body Gel
INR 499 AT POPxo
Buy

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, புளூபெர்ரி பேஸ் அண்ட் பாடி ஜெல் மேஜிக் பேக் உங்கள் முகப்பருக்களை அழிக்கிறது மற்றும் அதிகப்படியான சருமத்தின் மீதுள்ள எண்ணெயை நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் பயனுள்ள முறையில் கட்டுப்படுத்துகிறது! முகம் மற்றும் உடலில், குளித்த பிறகு இதை மிதமாக மசாஜ் செய்யுங்கள்! 

உடனே முயற்சிக்கவும்!

மேலும் படிக்க - அழகை அதிகரிக்கும் ஆலோவீராவின் அற்புதங்கள்! பட்ஜெட் விலையில் உங்கள் அழகை மேம்படுத்தலாம்!

பட ஆதாரம்  - Pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!