Entertainment

பிக்பாஸில் நேசமணி ? எகிற போகும் TRP !

Deepa Lakshmi  |  May 31, 2019
பிக்பாஸில் நேசமணி ? எகிற போகும் TRP !

என்ன நடந்ததோ ஏது நடந்ததோ தெரியவில்லை. மோடியை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்திருக்கிறார் கான்ட்ராக்டர் நேசமணி.

ஒரே நாளில் உலகளவில் முதல் இடம் பிடித்த நேசமணி பற்றித்தான் இப்போது ஊரெல்லாம் இல்லை இல்லை உலகெல்லாம் பேச்சாக கிடக்கிறது.

சுச்சி லீக்ஸ் மூலமாக லீக்கான ஐஸ்வர்யாவின் லிப் லாக் – இதுதான் இப்போது இணையத்தில் வைரல் !

ட்விட்டரின் சிவில் என்ஜினீயரிங் லியர்னர்ஸ் பக்கத்தில் சுத்தியலின் படத்தை போட்டு இதனை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் என்று ஒரு கேள்வி இருந்தது.

த்ரிஷா இனிமேல் சிங்கிள் இல்லை.. தனது உறவுநிலை குறித்து அவரே அளித்த நேரடி பதில்..

விக்னேஷ் பிரபாகர் என்பவர் விளையாட்டாக இதற்கு பெயர் சுத்தியல் என்றும் அடித்தால் டொய்ங் டொய்ங் என்று சப்தம் என்றும் கூறிவிட்டு இதனால்தான் காண்ட்ராக்டர் நேசமணிக்கு அடிபட்டது என்றும் பாவம் நேசமணி என்றும் பதில் அளிக்க போக…

உடனே உலகெங்கும் பாவம் நேசமணி என்கிற ட்வீட் பிரபலமாக தொடங்கி Pray_for_ Nesamani ஹாஷ்டேக் ஆக மாறியது. நேசமணிக்கு சுத்தியலில் அடி விழும் காட்சியை சிலர் விடியோவாக பதித்தனர். அதன் பின்னர் நேசமணி பற்றி நிறைய பேர் பகிர தொடங்கினர்.

  ஒரு உறவில் ஏன் முறிவு நிகழ்கிறது? பிரேக்கப் என்பதன் பின்னணி அறிந்து கொள்ளுங்கள் 

நேசமணி அப்பல்லோவில் அட்மிட் ஆனார் இரண்டு இட்லி கலக்கி சாப்பிட்டார் என்று தொடங்கிய மீம்கள் முதல் நேசமணிக்கே உடல்நிலை சரியில்லை தளபதி 63 அப்டேட் கேட்காதீர்கள் , நேசமணிக்காக பதவியேற்பை தள்ளி வைத்த பிரதமர் வரைக்கும் நேசமணி நேற்று புல் பார்மில் டிவிட்டரில் சுற்றி வந்தார்.

உண்மையாக பிரெண்ட்ஸ் எனும் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு இந்த கதாபாத்திரத்தை அவரது தனித்துவமான நகைச்சுவை மூலம் பின்னியிருப்பார். எவ்வளவு சீரியஸான மனிதரையும் கூட இந்த தொடர் காமெடி சீன் கண்ணில் நீர் வர சிரிக்க வைக்கும். என்றுமே மறக்கமுடியாத காமெடிகளில் நேசமணி காண்ட்ராக்டர் கேரக்டர் ஒன்றாக இருக்க நடிகர் வடிவேலுதான் முக்கிய காரணம். உடன் நடித்த விஜய் மற்றும் சூர்யா இருவருமே அதற்கு இணையாக முகபாவங்களை காட்ட காமெடியின் உயரம் அதிகமானது.

நயனும் ஷிவனும் நமக்கு கற்றுத் தரும் காதல் பாடங்கள் !

அப்படிப்பட்ட காண்ட்ராக்டர் நேசமணி பற்றித்தான் நேற்று பேச்சு. சவ்கிதார் போல அனைவரும் பெயருக்கு முன்னர் காண்ட்ராக்டர் என்று போட்டு நேசமணி பற்றிய ஹைப்பை இன்னும் ஏத்தினர். ஏசியன் பெயிண்ட்ஸ் இதனை விளம்பர உத்திக்காக பயன்படுத்தி அடிபடாத வகையில் நேசமணி இனி பாதுகாப்பாக பெயின்டிங் வேலை செய்ய உத்தரவாதம் அளிப்பதாக கூறியது.

குறைந்த சாட்டின் ஆடையில் குளிர வைத்த காஜல் அகர்வால் – படங்கள் உள்ளே

அதைப்போலவே தங்க தமிழன் ஹர்பஜன் சிங்கும் என்னை போல நீயும் டர்பன் அணிந்திருந்தால் உனக்கு இந்த நிலை வந்திருக்காதே நண்பா நேசமணி என்று பதறினார். நடிகர்கள் சித்தார்த் மற்றும் சமந்தா போன்றோரும் நேசமணி பதிவினை விட்டு வைக்கவில்லை.

அதற்குள் அப்பா ஆகிறாரா ஆர்யா? சாயிஷாவின் சந்தோஷ போஸ்ட் !

இப்படி உலகமே நேசமணி பற்றிய பேச்சாக இருக்க நடக்க இருக்கும் பிக்பாஸில் (biggboss) நேசமணி கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.

கணவன் சரியில்லையா கள்ள தொடர்பு வைத்து கொள்ளுங்கள் அறிவுறுத்திய சைக்காலஜி மருத்துவர் – ட்வீட் செய்த சின்மயி

பிக்பாஸ் 3 பற்றிய அப்டேட்கள் இன்னமும் முழுமையாக வராத நிலையில் நேசமணி பிக் பாஸ் வந்தால் நிச்சயம் சுவாரசியம் அதிகரிக்கும் என்று ஒரு சாரார் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகமே பேசிக்கொண்டிருக்கும் காண்ட்ராக்டர் நேசமணி மட்டும் கலந்து கொண்டால் விஜய் டெலிவிஷனில் TRP எகிற போவது உறுதி என சொல்கின்றனர். நடிகர் வடிவேலுவுக்கு இப்போது வாய்ப்புகள் இல்லை என்பதால் அவர் பிக்பாஸ் வர தகுதியானவர் என ரசிகர்கள் கூறினாலும் நடிகர் வடிவேலு இதனை செய்வாரா என்பதை இப்போது கூறி விட முடியாது.

நீண்ட வருடங்களாக திரையில் காண முடியாத வடிவேலுவை சின்னத்திரையில் பார்க்கவும் மக்கள் ஆர்வமாகவே இருக்கின்றனர். மீம் க்ரியேட்டர்களின் கடவுளான வடிவேலு பிக் பாஸ் வந்தால் எல்லோருக்குமே கொண்டாட்டமாக மாறிவிடும்.

நினைத்து பார்க்க சுகமாக இருந்தாலும் நடந்தால் தானே சந்தோஷம் என்று ஒருபக்கம் பெருமூச்சு விடுகின்றனர் வடிவேல் ரசிகர்கள்.

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Entertainment