.png)
நயன்தாரா தனது இரண்டாவது இன்னிங்க்ஸை மிக தெளிவாகவும் தரமாகவும் ஆடி வருகிற நிலையில் இப்போது மீண்டும் தனது பிடிவாத குணத்தால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
சிம்பு நயன்தாராவை தீவிரமாக காதல் செய்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவரது தீவிரமான காதலே அவருக்கு எதிராக மாற இருவரும் விலகினார்கள். அதன்பின்னர் பிரபுதேவாவின் காதலில் விழுந்த நயன்தாரா காதலுக்காக நடிப்பை துறந்தார்.
ஐ மிஸ் செல்வராகவன்.. எனக்கென எழுதப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்கிறேன்.. சோனியா அகர்வால்
ஆனாலும் பிரபு தேவா உடன் ஒத்து வராததால் மீண்டும் பிரேக்கப் செய்தார் நயன்தாரா. முதல் காதலரை கூட மன்னிக்க முடியும் ஆனால் இரண்டாவது காதலரை மன்னிக்கவே மாட்டேன் என்று ஒரு காலத்தில் பேசி வந்தார் நயன்தாரா.
சொன்னதை போலவே சிம்பு (simbu ) உடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்தும் கொடுத்தார். அதன் பின்னர் கடந்த வருடம் நடந்த திரைவிழாவில் பிரபு தேவா உடனும் சிரித்தபடி போஸ் கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது.
பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பம்!.. தொகுப்பாளர் இவர்தான்! சில நாட்களில் வெளியாகிறது ப்ரமோ!
இப்போது சில வருடங்களாக விக்னேஷ் சிவனை காதலிக்கும் நயன்தாரா இந்த வருட இறுதியில் நிச்சயதார்த்தம் செய்ய போவதாக பேச்சு அடிபடுகிறது.
இதெல்லாம் எதற்காக நினைவூட்ட வேண்டியிருக்கிறது என்றால் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் 1000 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக்கப்பட உள்ளது. இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் ஒவ்வொரு நடிகர்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம்.
வாவ் ! பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாகும் கார்த்தி !
இந்நிலையில் விஜய், விக்ரம், கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, சத்யராஜ், அமிதாப்பச்சன், ஐஸ்வர் யாராய், கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகர்கள் தேர்ந்தேடுக்கப்பட்ட நிலையில் நயன்தாராவையும் ஒப்பந்தம் செய்ய அணுகியிருக்கிறார் மணிரத்னம்.
அப்போது சிம்பு இந்த படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கண்டிஷன் போட்டதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் தரப்பில் இருந்து இந்த தகவல் சிம்புவின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. நான் இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை நானே விலகி கொள்கிறேன் என்று சிம்பு ஜென்டிலாக விலகி கொண்டாராம்.
நான் மாறியதால் நாங்கள் பிரிந்தோம்.. உண்மையை ஒப்பு கொண்ட விஷ்ணு விஷால்
இதற்கு பின்னணியில் சிம்புவின் நண்பரும் நயன்தாராவின் இந்நாள் காதலரும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. என்ன இருந்தாலும் இன்னொருவரின் வாய்ப்பை நாம் கெடுப்பது சரியான செயல் அல்ல என்று கோலிவுட்டில் பேசி கொள்கிறார்கள்.
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
முதலில் கர்ப்பம் பின்னர் நிச்சயதார்த்தம்.. அதற்கப்புறம்… எமி ஜாக்சனின் புதிய பார்முலா !
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Celebrity gossip
உங்கள் அழகை பராமரிக்க சில குறிப்புகள்!
Deepa Lakshmi
குழந்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால்..குழந்தை இல்லாமை பற்றி நெகிழும் விஜயசாந்தி!
Deepa Lakshmi
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறோம்.. டயானாவின் மகன் இளவரசர் ஹாரி அதிர்ச்சி முடிவு..
Deepa Lakshmi
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரா!
Deepa Lakshmi
செம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா !
Deepa Lakshmi