வாவ் ! பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாகும் கார்த்தி !

வாவ் ! பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாகும் கார்த்தி !

இயக்குனர் மணிரத்னம் நீண்ட கால முயற்சிக்கு பின்னர் தனது கனவு படமான பொன்னியின் செல்வனை (ponniyin selvan) இயக்க இருக்கிறார். பலரும் முயன்று எடுக்க முடியாமல் போன இந்தப் படத்தை பட்ஜெட் காரணமாகவே நீண்ட காலமாகத் தள்ளிப் போட்டிருந்தார்.


முன்பே நடிகர் விஜய், மஹேஷ்பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கி வைத்திருந்தும் தேதி குழப்பங்கள் மற்றும் பட்ஜெட் காரணமாக இது தள்ளிப் போனது.இப்போது மீண்டும் பொன்னியின் செல்வன் ஸ்க்ரிப்டை கையில் எடுத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம் முக்கிய கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார். 6 மொழிகளில் 3 பாகங்களாக எடுப்பதில் விருப்பத்தில் இருக்கும் இயக்குனர் அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயிடம் கதையை கொடுத்திருக்கிறார்.


இவர்கள் தவிர பொன்னியின் செல்வன் எனும் சரித்திர பிரம்மாண்ட படத்தில் விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சோழன் வேடத்தில் விக்ரம் நடிக்கிறார் என்பது உறுதியான நிலையில் புகழ்பெற்ற வந்திய தேவனாகும் வாய்ப்பை யார் பெறப் போகிறார் என்று பெரும் சஸ்பென்ஸ் ஆக இருந்த விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.


பொன்னியின் செல்வனில் வந்திய தேவராக நடிக்க தேர்வாகி இருக்கிறார் நடிகர் கார்த்தி. இந்த செய்தியே நம்மை வாவ் போட வைக்கிறது என்றால் படத்தில் கார்த்தியை வந்தியதேவனாக பார்க்கும் நிமிடங்களை யோசித்தால் புல்லரிக்கின்றது.


ஏற்கனவே இயக்குனர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி ஏற்று நடித்த சோழர் கதாபாத்திரம் இன்றளவும் சினிமா ரசிகர்கள் நெஞ்சில் நீந்தியபடியேதான் இருக்கிறது. இதில் கல்கியின் பொன்னியின் செல்வனில் எல்லோரும் நேசிக்கும் கனவு காணும் வந்தியதேவன் கதாபாத்திரத்திற்கு கார்த்தி மிகவும் பொருத்தமான தேர்வு என்றுதான் கூற வேண்டும்.தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடும் குணம் கார்த்திக்கு ஒரு சிறந்த ஆசிர்வாதம். அதனால்தானோ என்னவோ இயக்குனர் மணிரத்னம் கதையின் முக்கிய கதாபாத்திரத்தை கார்த்தியின் கையில் கொடுத்திருக்கிறார்.


அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்னம் பார்வையில் காண நீண்ட காலமாக தவமிருக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் இது ஒரு தேவபிரசாதம் போலத்தான் அமையும் என்பதில் சந்தேகமே இல்லைபடங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.