Bollywood

உன்னை நான் ஏற்று கொண்டேன் என்கிற போதே உன் கடந்த காலத்தையும் சேர்த்துதான் ஏற்று கொண்டேன்…. இணையத்தை வைரலாக்கிய மிலிந்த் சோமன் ஜோடியின் காதல் கதை!

Deepa Lakshmi  |  Jun 5, 2019
உன்னை நான் ஏற்று கொண்டேன் என்கிற போதே உன் கடந்த காலத்தையும் சேர்த்துதான் ஏற்று கொண்டேன்…. இணையத்தை வைரலாக்கிய  மிலிந்த்  சோமன் ஜோடியின்  காதல் கதை!

இந்த வருடம் இணையத்தை வைரலாக்கிய ஜோடி யார் என்றால் அது மிலிந் சோமன் (milind soman) அங்கீதா ஜோடிதான். 

மிலிந்த் சோமன் ஆரம்பத்தில் மாடலாக இருந்து பின்னர் நடிகர் ஆனவர். கவர்ந்திழுக்கும் உயரம் மற்றும் வசீகர தோற்றம் கொண்ட மிலிந்த் சோமன் 50 படங்கள் நடித்தவர்

திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !

தமிழ் திரைப்படங்களில் பையா, பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

மிலன் எனும் பிரெஞ்சு நடிகையை திருமணம் செய்த மிலிந்த் 2009ல் அவரை  விவாகரத்து செய்தார். 

அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினார்.  

NGK – நந்த கோபால குமரன் – எனது பார்வை

9 வருடங்கள் தனிமையில் இருந்த பின் கடந்த ஆண்டு அங்கிதா எனும் விமான பணி பெண்னை திருமணம செய்தார்

இவரது திருமணம் சர்ச்சையை உருவாக்கியது. காரணம் இருவர் இடையே இருந்த வயது வித்யாசம். 53 வயதான மிலிந்த் 27 வயது அங்கிதாவை எப்படி மணம் செய்யலாம் என அனைவரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில் அங்கிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மீதான தனது காதல் குறித்த சுவாரஸ்ய கதை பற்றி மனம் திறந்திருக்கிறார்.

 

நாங்கள் சந்தித்து 6 வருடங்கள் ஆன பிறகும் என் கணவரை நேற்றுத் தான் சந்தித்தது போல இருக்கிறது. 

 என் 20 வயதில் என் கணவரை சந்தித்தேன். நான் அப்போது ஏர் ஆசியாவில் பணி புரிந்து வந்தேன். 

அந்த சமயம் என் முன்னாள் காதலரை ஒரு விபத்தில் பறி கொடுத்த சோகத்தில் இருந்தேன். அது தாங்கி கொள்ள முடியாத வலியாக மாறி இருந்தது. 

என் குழந்தையே.. நீ சுமக்கும் இந்த குழந்தைக்கு நன்றி ! திருமணமின்றி தாய்மை அடைந்த காதலி பற்றி நடிகர் அர்ஜுனின் நெகிழ்வான பதிவு !

அதன் பின்னர் இரண்டு மாதத்தில் எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது. ஒரு ஓட்டலில் நண்பர்களோடு தங்கியிருந்த போது அதே ஓட்டலில் மிலிந்தும் தங்கி இருந்தார். 

அது எனது அதிர்ஷ்டம் . ஏன் என்றால் நான் அவரது மிகப்பெரிய ரசிகை. அவரை பார்த்த உடன் சந்தோஷத்தில் என்னுடன் நடனம் ஆட முடியுமா என்று கேட்டேன். 

யோசிக்காமல் அவர் என்னுடன் நடனம் ஆட சம்மதித்தார். அதன் பின்னர் நண்பர்களான நாங்கள் எண்களை பரிமாறி கொண்டோம். நாட்கள் செல்ல செல்ல அவர் மீதான அன்பு காதலாக மாற தொடங்கியது. 

சுச்சி லீக்ஸ் மூலமாக லீக்கான ஐஸ்வர்யாவின் லிப் லாக் – இதுதான் இப்போது இணையத்தில் வைரல் !

என்னுடைய முன்னாள் காதலர் பற்றி அவரிடம் கூறிய போது.. அவர் கூறியது அவர் மீதான அன்பை மேலும் அதிகரிக்க வைத்தது. 

உன்னை நான் முழுமையாக ஏற்றுக் கொண்டேன் என்கிற போது உன் கடந்த கால வாழ்க்கையும் நான் ஏற்று கொண்டேன் என்றுதான் அர்த்தம். 

உன்னுடைய கடந்த காலம் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன். என்று ஆறுதல் கூறினார்.

நயனும் ஷிவனும் நமக்கு கற்றுத் தரும் காதல் பாடங்கள் !

அந்த வார்த்தை மிலிந்த் சோமன் யார் என்பதை எனக்கு உணர்த்தியது. அவர் எனக்கானவர் என்பதை எனக்கு உறுதி செய்தது.

என்று மனம் நெகிழ்ந்து தங்கள் காதல் கதையை கூறி இருக்கிறார்.

ஆனாலும் இணையவாசிகள் மகள் வயது பெண்ணை மணந்து கொண்டது தவறு என்று கூறி வருகின்றனர்.

அதற்குள் அப்பா ஆகிறாரா ஆர்யா? சாயிஷாவின் சந்தோஷ போஸ்ட் !

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

—.                                  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Bollywood