Acne

மாசு மரு அற்ற மினுமினுப்பான முகத்திற்கு மாம்பழ பேஷியல் ! Detan மேஜிக் !

Deepa Lakshmi  |  Jun 9, 2019
மாசு மரு அற்ற மினுமினுப்பான முகத்திற்கு மாம்பழ பேஷியல் ! Detan மேஜிக் !

சீசன் நேரங்களில் அந்தந்த பழங்களுக்கு ஏற்ற விஷயங்களை அனுசரித்து நாம் அதனை பயன்படுத்துவது வழக்கம்தான். மாம்பழம் இப்போது சீசனில் இருக்கிறது.

மாம்பழம் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. இப்போது மாம்பழத்தை வைத்து முக அழகை மேம்படுத்த முடியும் என்பது சிறப்பான செய்தி.(mango)

முகத்தை நிமிடங்களில் முழு நிலவு போல பிரகாசிக்க வைக்க சிம்பிள் குறிப்புகள் !

வெயிலால் ஏற்படும் சருமத்தின் கருமையை சரி செய்ய பல பார்லர்களில் பணம் செலவழித்தாலும் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதற்கு பதிலாக இந்த மாம்பழ பேஷியலை நீங்களே முயன்று பாருங்கள். வித்யாசத்தை கண்டு பூரிப்பீர்கள்.

மாம்பழம் சாப்பிட நறுக்கும்போது அதில் ஒரு கன்னத்தை மட்டும் தனியே எடுங்கள். அதில் உள்ள சதைப்பகுதியை ஸ்பூன் மூலம் வழித்தெடுங்கள். இதனை நன்கு சுத்தம் செய்யப்பட்ட உங்கள் முகத்தில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்யுங்கள். அதன் பின்னர் மீதி மாம்பழங்களை சாப்பிட்டபடியே ஐந்து நிமிடம் உலர விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள். உங்கள் முகத்தின் நிறம் மேம்பட்டிருப்பதை உடனேயே உணர முடியும்.

மினுமினுப்பான முகம் முதல்.. தழும்புகள் அற்ற தேகம் வரை.. பயோ ஆயிலின் பலவிதமான பலன்கள்!

மாம்பழத்தின் சதைப்பகுதி எடுத்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு 2 ஸ்பூன் மற்றும் தேன் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். பாதாம் பொடியை சற்று சேர்த்து கொள்ளுங்கள். அனைத்தையும் கலந்து நன்றாக முகத்தில் பேக் போடுவது போல போடுங்கள். 15 நிமிடங்கள் உலர்ந்த உடன் முகத்தை நீரால் கழுவுங்கள். இரண்டே முறையில் உங்கள் முகம் அற்புதமாக மின்னுவதை பார்க்க முடியும்.

களங்கமற்ற குழந்தை போல உங்கள் முகமும் ஆக விருப்பமா ! ஜப்பானியர்களின் ஷைனிங் மேனிக்கான அழகு குறிப்புகள் !

எண்ணெய் சருமம் உடையவர்களுக்கான மாம்பழ பேக். மாம்பழ சதை பகுதி , அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் முகத்தில் பேஸ்ட் போல தடவி 15 நிமிடம் உலரவிட்டு கழுவி விடுங்கள். எண்ணெய் பசை அகன்று முகம் பளிச்சென்று இருப்பதை பார்ப்பீர்கள்.

கோடையிலும் டாலடிக்கும் முகம் வேண்டுமா ! சில அழகு குறிப்புகள்!

மாம்பழத்துடன் ஒரு ஸ்பூன் பால் சேர்த்தால் அது க்ளென்சர், மாம்பழத்துடன் ஓட்ஸ் பொடி சேர்த்தால் அது ஸ்க்ரப் , மாம்பழத்துடன் சில துளி வாசனை எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்தால் அது பேஷியல் , மாம்பழத்துடன் கடலை மாவினை சேர்த்து பேஸ்ட் செய்தால் அது பேக் . இந்த நிலைகளில் நீங்கள் முயன்று ஒரு முழுமையான பேஷியலை செய்தால் உடனுக்குடன் ரிசல்ட் தெரியும்.

மேற்கண்ட எளிய முறைகளை உங்களால் வாரம் ஒருமுறை செய்து வர முடிந்தால் இரண்டே வாரங்களில் உங்கள் முகம் மின்னுவதை கருமையின்றி ஜொலிப்பதை காண முடியும்.

நார்த் இண்டியன்ஸ் போல கண்ணாடி மேனி வேண்டுமா ! தலைமுடி முதல் கால்நுனி வரை அழகிற்கு உத்தரவாதம் தரும் ஒரே எண்ணெய் இதுதான் !

                                                                                              

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

—                                 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

Read More From Acne