Health

இறுதி மாதவிடாய் காலத்தில் எப்படி மனதை அமைதியாகவும், திடமாகவும் வைத்துக் கொள்வது?

Meena Madhunivas  |  Dec 4, 2019
இறுதி மாதவிடாய் காலத்தில் எப்படி மனதை அமைதியாகவும், திடமாகவும் வைத்துக் கொள்வது?

சாதரணமாகவே, ஒவ்வொரு மாதமும் வரும் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் நிலையற்ற மனதோடும், மன அழுத்தத்தோடும், பதற்றத்தோடும் அந்த 2 அல்லது 3 நாட்கள் இருப்பார்கள். இப்படி இருக்கு, இறுதி மாதவிடாய் காலம் என்றால் சொல்லவா வேண்டும்?

இறுதி மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக அளவு மனதில் பதற்றம், எண்ணங்களில் மாற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிக அளவு இருக்கும். இது அவர்களது சொந்த வாழ்க்கை, குடும்பம் மற்றும் அலுவலக வாழ்க்கையை பெரிதும் பாதித்து விடும். எனினும், வேறு வழி இல்லாமல், பெண்கள் அத்தகைய மோசமான சூழலை சமாளித்து தான் ஆக வேண்டும் என்கின்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்கள் தங்களது அழுத்தத்தை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாமல், வேறு உடல் நல பிரச்சனைகளிலும், மன பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்கின்றனர். இது ஆரோக்கியமான வாழ்க்கையை பாதித்து விடக் கூடியதாக இருக்கும்.

நீங்கள் உங்கள் இறுதி மாதவிடாய் காலத்தில் (menopause) இருகின்றீர்கள் என்றால், அல்லது நெருங்கிக் கொண்டு இருகின்றீர்கள் என்றால், இங்கே உங்கள் மனதை நிலையாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ள சில குறிப்புகள்:

1. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்கி விடுங்கள்

Pexels

தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. எந்த நோயாக அல்லது உடல் நல பிரச்சனையாக இருந்தாலும், போதிய தூக்கம் அதனை பெரும் அளவு குணப்படுத்தி விடும். மேலும் இது மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரும். அதனால், எப்போதெல்லாம் நேரம் கிடைகின்றதோ. அப்போதெல்லாம், எந்த கட்டுப்பாடும் இன்றி, தூங்க சென்று விடுங்கள். இது நீங்கள் அமைதியாக உங்கள் மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும்.

2. சரியான உணவு முறையை பின்பற்றுங்கள்

உங்கள் உணவில் சில மாற்றங்களை கொண்டு வருவது முக்கியம். குறிப்பாக அதிக காரம், உப்பு, அதிக இனிப்பு மற்றும் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகள் என்று எடுத்துக் கொள்ளாமல், எளிமையான உணவுகள், குறிப்பாக பச்சை காய் மற்றும் பழ வகைகள், போதிய தண்ணீர், நன்னீர் மீன், கீரை வகைகள், போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை எளிதாக ஜீரணமாவதோடு, உடலுக்குத் தேவையான சத்துக்களை தந்து, இறுதி மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சோர்வு, மற்றும் உடல் வலி போன்றவற்றை போக்க உதவும்.  

3. பாதுகாப்பான உடற்பயிற்சி / யோகா செய்யுங்கள்

Pexels

தினமும் 2௦ நிமிடமாவது பாதுகாப்பான உடற் பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும். இது உங்கள் எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்துவதோடு, உடலில் ஏற்படும் மாற்றங்களை எதிர் கொள்ள உங்களை தயார் செய்யும்.  

4. மூச்சு பயிற்சி மற்றும் த்யானம் செய்யுங்கள்

தினமும் கட்டாயம் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மா ஒரு நிலைப் பெரும். மனம் அமைதியாகவும், நல்ல சிந்திக்கும் திறனோடும் இருக்கும். இதனால் மன அழுத்தமும் குறையும்.    

5. மனதை அமைதிபடுத்தும் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்

Pexels

என்ன செய்தால் மனம் நிம்மதியாகவும், அமைதியாகவும் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை செய்ய முயற்சி செய்யுங்கள். குறிப்பாக இசை, படம் வரைவது, தோட்டம், என்று உங்கள் மனதிற்கு அமைதியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடிய விடயங்களை அவ்வப்போது செய்யுங்கள்.

6. அதிக மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்

நீங்கள் வலியை குறைக்கவோ அல்லது நீரழிவு நோய், இருதய நோய் என்று ஏதாவது ஒரு உடல் நல பிரச்சனைக்கு தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டு இருந்தால், அதனை குறைத்துக் கொள்ள அல்லது முடிந்த வரை தவிர்த்து விட முயற்சி செய்யுங்கள். இத்தகைய மருந்துகள் நிச்சயம் உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கக் கூடும்.

7. நீண்ட விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்

Pexels

 முடிந்த வரை உங்களால் சமாளிக்க முடியாத நேரத்தில் ஒரு நீடு விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் அலுவலகம் மற்றும் உங்கள் (women) தினசரி வீட்டு வேலை, இரண்டுக்கும் பொருந்தும். ஒரு நீண்ட விடுப்பு உங்கள் மனதிற்கும், உடலுக்கும் ஓய்வைத் தரும். இதனால் உங்கள் மனம் புத்துணர்ச்சி பெரும்.  

8. உங்களை நீங்களே பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்

வருவதை முன்னரே அறிந்து கொண்டு, இது இயற்க்கை மற்றும் இதனை நீங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் கடந்து தான் ஆக வேண்டும்  என்கின்ற உண்மையை புரிந்து கொண்டு உங்களை நீங்கள் பக்குவப்படுத்தி, தயார் செய்து கொள்ளவும் வேண்டும். இப்படி செய்தால், பெரும்பாலான மன குழப்பம் மற்றும் அழுத்தம் போன்ற பிரச்சனைகளை நீங்கள் எளிதில் சரி செய்து விடலாம். 

மேலும் படிக்க – இறுதி மாதவிடாய் நாட்களில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்ன? 

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Health