Health

மாதவிடாய் நாட்கள் : பெண்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சுகாதார குறிப்புகள்!

Nithya Lakshmi  |  Jan 10, 2020
மாதவிடாய்  நாட்கள் :  பெண்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய  சுகாதார குறிப்புகள்!

நம்மில் பலருக்கு இன்னும் மாதவிடாய் சம்மந்தமாக சரியான புரிதல் இல்லாமலேயே இருக்கிறோம் என்பதுதான் உண்மை. அது ஒரு அந்தரங்கமான விஷயம் என்று அதைப்பற்றி அதிக அக்கறை இல்லாமல் இருப்பது மிகவும் தவறு. ஒரு சிலர், தான் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்து பல தவறுகளை செய்யும் வாய்ப்பும் இருக்கிறது! ஒரு பிரச்சனை பெரிதாகும்போதுதான், நாம் இதை முன்கூட்டியே தெரிந்துகொண்டிருந்தால் இந்த அளவிற்கு சென்றிருக்காது என்று நினைத்து வருந்துவோம். நீங்களும் அந்த பட்டியலில் சேர்ந்து விடாமல், மாதவிடாயின் போது எப்படி நம்மை பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வது என்று பார்க்காலம் வாருங்கள்.

1. தினம் ஒரு முறையேனும் குளிக்க வேண்டும்

Pexels

மாதவிடாய் சமயங்களில் உடலின் வெப்ப நிலை மாறி இருக்கும். அப்போது குளிக்க சங்கடப்படுவர். அப்படியல்லாமல், நீங்கள் பேட் மாற்றும்போது, அப்படியே குளித்துவிட்டு வாருங்கள். நிச்சயம் புத்துணர்வாக உணர்வீர்கள். மேலும், உடல் சூட்டினால் அதிக ரத்தப்போக்கு இருந்தால் குறைந்துவிடும்.

2. சோப்பு பயன்படுத்தாதீர்கள்

சோப்பில் உள்ள ரசாயனம் பெண் உறுப்பில் எரிச்சல் ஏற்படுத்தும் என்பதால், வெதுவெதுப்பான நீரில் மட்டும் சுத்தம் செய்யுங்கள். கல் உப்பை சுடு நீரில் கலந்தும் சுத்தம் செய்து கொள்ளலாம். பெண் உறுப்பு மென்மையானது என்பதால், மிகவும் கொதிக்கும் நீரை உபயோகிக்காதீர்கள். மிதமான சூடே போதுமானது. நல்ல கிருமி நாசினியான மஞ்சள் தூளும் கலந்து பயன்படுத்தலாம். மஞ்சள் தூள் உட்புகுந்தால் எரிச்சல் உண்டாக்கலாம். அதனால் கவனமாக பயப்படுத்துங்கள்.

3. தரமான பேட் பயன்படுத்துங்கள்

Pexels

நெகிழி இல்லாத தரமான பேட்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ள பெண்கள் நிச்சயம் கவனமாக பேட்களை பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அறிப்பு, காயங்கள்,கொப்புளங்கள் தோன்றும். பிறகு அதற்கு மருந்து பயன்படுத்த வேண்டி வரும். அதனால் பல பக்க விளைவுகளுக்கும் ஆளாவீர்கள். மருதுவான, பருத்தியாலான பேட்களை பயன்படுத்துங்கள்.அல்லது உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்று நினைத்தால் டம்பான்கள் அல்லது மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்தலாம். இதில் பல வகைகள் இருப்பதால், இதை நன்கு தெரிந்து கொண்டு பயன்படுத்த நினைவில் கொள்ளுங்கள்.

4. பேட்களை அடிக்கடி மாற்ற வேண்டும்

கழிவறையை பயன்படுத்த சங்கடப்பட்டே பெண்கள் பேட்களை மாற்றாமல் இருப்பார்கள். அது உடலுக்கு நல்லதல்ல. நீண்ட நேரம் ஒரே பேட் பயன்படுத்தினால், கிருமிகள் உட்புக ஏதுவாகிவிடும். எனவே, மூன்றில் இருந்து நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும் (மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள் உணர்ந்தாலும் கூட) பேட்டை மாற்ற வேண்டும்.

மேலும் படிக்க – பேன்ட்டி லைனரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஆறு விஷயங்கள்

5. பயன்படுத்திய பேட்களை கழிவறையில் போட்டு விடாதீர்கள்

Pexels

அப்படி பயன்படுத்திய பேட்டிகளை ஒருபோதும், கழிவறை தொட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி விடாதீர்கள். மக்காத பொருட்களால் தயாரிக்கும் பேட்கள் கழிவறையில் அடைப்பை ஏற்படுத்தும். தற்போது எல்லா இடங்களிலும் அதற்கென தனியாக ஒரு குப்பை தொட்டி இருக்கிறது. கட்டாயம் ஒரு தினசரி காகிதத்தில் சுருட்டி பின்னர் குப்பை தொட்டியில் போடுங்கள்.

6. சவுகரியமான சுத்தமான உடை அணியுங்கள்

ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்ற காற்றோட்டம் இல்லாத இறுக்கமான உடை அணிந்தால், நோய் தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால், உடுத்துவதற்கு சவுகரியமான உடை அணியுங்கள். அதேபோல், சுத்தமான, துவைத்து வெயிலில் காயவைத்த உள்ளாடைகளைப் பயன்படுத்துங்கள். மேலும் தினசரி மாற்றி கொள்வது மிகவும் அவசியம்

7. ஈரத்தன்மை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

Pexels

கழிப்பறையை பயன்படுத்திய பின்னர் ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். ஈரத்தோடு வெகுநேரம் அமர்ந்த நிலையில் இருந்தால், பாக்டீரியா பெருக வாய்ப்பை அமைத்துக் கொடுத்ததுபோல் ஆகிவிடும். நிச்சயம் அரிப்பு, தொற்று போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

8. முன்னிருந்து பின் நோக்கி சுத்தம் செய்யுங்கள்

பெண்ணுறுப்பை  சுத்தம் செய்யும்போது எப்போதும், முன்னிருந்து பின் நோக்கி சுத்தம் செய்யுங்கள். ஆசன வாய் அருகாமையில்  இருப்பதால், ஈகோலே(ecole) பாக்டீரியாகள் எளிதில் கர்ப்பப்பை வாயை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கும் இந்த  பழக்கத்தை சொல்லிக்கொடுப்பது அவசியம்.

9. உணவில் அதிக உப்பு சேர்ப்பது / காபி பருகுவதைத் தவிர்க்கவும்

Pexels

மாதவிடாய்(periods) சமயங்களில் உடலுக்கு அதிக நீர்ச்சத்து தேவை. உப்பு உள்ள சிப்ஸ் போன்ற பாக்கெட்டில் அடைத்து வைத்த உணவை சாப்பிடுவதால், உடலில் உள்ள நீர்ச்சத்து மேலும் குறைந்து விடும். அதனால், உப்பை குறைத்து சாப்பிடுவது நல்லது.
அதேபோல், காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், மாதவிடாயின் போது ஏற்படும் வலியின் காரணமாக, அடிக்கடி சூடாக காபி பருக விரும்புவார்கள். காபி உடல் சூட்டை அதிகரித்து, அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தும். மேலும், உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்துவிடும். காஃபின் இல்லாத க்ரீன் டீ பருகலாம்.

10. இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது

மாதவிடாய் சமயங்களில் உடலுக்கு நல்ல ஓய்வு தேவை. அதனால்தான் அந்த காலத்தில் பெண்களை வீட்டில் இருந்து விளக்கி வைத்து எல்லா வேலைகளில் இருந்தும் ஓய்வு கொடுத்தார்கள். நவநாகரிக பெண்கள் பகலிலும் உழைத்து, இரவும் கண் விழித்தால், உடல் ஆரோக்கியம் விரைவில் தேய்ந்துவிடும். குறைந்தது இரவு மட்டுமாவது நல்ல ஓய்வு எடுங்கள்.

மாதவிடாய் உள்ள பெண்களுக்கு இருதய நோய், மார்பகப் புற்றுநோய் வருவதில்லை. இயற்கை தானாக உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற ஒரு முறையை நமக்கு தந்திருக்கிறது. ஆண்களைவிட பெண்களுக்கு வயது முதிர்வை குறைக்கிறது.மாதவிடாயின்(menstrual) சுழற்சியின் அடுத்த நிகழ்வு எப்போது என்று கணக்கிட்டு அதற்கு தகுந்தவாறு உங்கள் வேலைகளை திட்டமிட்டு, நல்ல புரிதலோடு எதிர்கொள்ளுங்கள். இயற்கை நமக்கு கொடுத்த வரம்! நம்மை ஆரோக்கியமாக (wellness) வைத்துக்கொள்வது நம் கைகளில்தான் இருக்கிறது என்று நம்புங்கள். 

மேலும் படிக்க – பீரியட்ஸ் நேரத்தில் ஏற்படும் வலிகளை போக்க சில எளிய குறிப்புகள்

பட ஆதாரம்  – Pinterest

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Health