நேர்மறை சக்திகளை எப்படி அதிகரித்து, மகிழ்ச்சியான மற்றும் வெற்றி தரும் வாழ்க்கையை வாழ்வது?

நேர்மறை சக்திகளை எப்படி அதிகரித்து, மகிழ்ச்சியான மற்றும் வெற்றி தரும் வாழ்க்கையை வாழ்வது?

இன்று உலகில் வாழும் அனேக மக்கள் அதிக எதிர்மறை பலன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களது வாழ்க்கை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பெரும் அளவு பாதித்து விடுகின்றது. மேலும் நேர்மறை சக்திகள் குறைவாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். நேர்மறை சக்திகளை (positive energy) அதிகரித்துக் கொண்டால், ஒருவர் தான் மட்டும் நல்ல பலனை பெறாமல், தன்னோடு சுற்றி வாழும் உறவுகளும் பலன் பெரும் வகையில் அது உதவியாக இருக்கும்.

நீங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ள விரும்புகின்றீர்களா? அப்படியானால், இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்:

1. உங்கள் குறிக்கோள் மீது மட்டும் கவனம் வையுங்கள்

நீங்கள் நேர்மறை சக்திகள் பெற்று வாழ்க்கையில் (life) வெற்றி பெற வேண்டும் என்றால், அதற்கு முதலில் நீங்கள் உங்கள் குறிக்கோள் மீது மட்டும் கவனம் வைக்க வேண்டும். அதை தவிர்த்து, பிறர் என்ன செய்கின்றார்கள், பிறர் எப்படி செயல்படுகின்றார்கள் என்று மற்றவர்களை பற்றி நினைத்துக் கொண்டே இருக்கக் கூடாது.

2. உங்களை சுற்றி அனைத்தும் நல்லதாகவே நடகின்றது என்று நம்புங்கள்

Pexels

எப்போதும், நீங்கள் உங்களை சுற்றி அனைத்தும் நல்லதாகவே நடகின்றது என்று நம்ப வேண்டும். உங்களுக்கு பிரச்சனைகள் வந்தாலும், அது நல்லதுக்கே என்று நம்பி, நம்பிக்கையோடு அதனை கையாள வேண்டும். உங்கள் நம்பிக்கையே உங்கள் வாழ்கையில் வரும் துன்பங்களையும், பிரச்சனைகளையும் தவிடு பொடி ஆக்க உதவும். நீங்கள் வெற்றியும் பெறுவீர்கள்.

3. இயற்கையோடு வாழுங்கள்

எப்போதும், இயற்கையின் படைப்பான மனிதர்கள் இயற்கையோடு சார்ந்த வாழ்க்கையை வாழ வேண்டும். ஆனால், இன்றைய மாடர்ன் உலகத்தில் அது குறைந்து கொண்டே போகின்றது. எனினும், உங்களால் முடிந்த வரை, உங்களை சுற்றி இருக்கும் காற்று, சூரிய ஒளி, நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் என்று பஞ்ச பூதங்களின் வடிவில் இருக்கும் இயற்கைக்கு எப்போதும் நன்றி கூறியும், உங்கள் அன்பை வெளிபடுத்தியும் வாழ வேண்டம். இது உங்கள் நேர்மறை சக்திகளை மேலும் அதிகரிக்கும். சுருக்கமாக சொல்லப்போனால், இயற்கையை வணங்குங்கள்.

4. நிதானித்து சிந்தித்து செயல்படுங்கள்

Pexels

எந்த ஒரு செயலாக இருந்தாலும், ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து அதன் பின் செயல்படுவது நல்லது. பதரா காரியம் சிதறாது என்பதற்கேற்ப, நிதானித்து நீங்கள் செயல்படும் போது உங்கள் மனம் மற்றும் ஆன்மா ஒரு நிலையில் இருக்கும். இதனால், நீங்கள் நேர்மறை ஆற்றல்களை பெற்று சரியாக செயல்பட முடியும். வெற்றியையும் மகிழ்ச்சியையும் (happy) பெற முடியும்.

5. வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை முழு மனதோடும், நம்பிக்கையோடும் ஏற்றுக் கொள்ளுங்கள்

உங்கள் வாழ்கையில் எந்த வித மாற்றங்கள் ஏற்பட்டாலும், நேர்மரையோ, எதிர்மரையோ, அதனை முழு மனதோடு ஏற்றுக் கொள்வது நல்லது. மேலும் அதனை நம்பிக்கையோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது நீங்கள் நேர்மறை உணர்வோடு செயல்படவும், வெற்றி பெறவும் உதவும்.

6. உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள்

Pexels

உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். குறிப்பாக பிறரின் வளர்ச்சி மற்றும் வெற்றியை கண்டு வியக்காமல், உங்களை பற்றியும், உங்களின் எதிர் காலத்தை பற்றியும் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள். பிறரை பற்றி நீங்கள் நினைக்கும் போது, உங்கள் சக்தியை நீங்கள் இழகின்றீர்கள் . இது அவர்களுக்கு சாதகமாகி விடும்.

7. உங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துங்கள்

 உங்கள் உடல் நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஆன்மா, மனம் மற்றும் உடல் ஒரு நிலையாக செயல்பட வேண்டியது முக்கியம். இந்த வகையில், உங்கள் உடலுடன் நீங்கள் பேசி, அதன் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு உங்கள் உணவு பழக்கங்கள், சுற்றுசூழல் போன்றவற்றை மாற்றி சௌகரியமாகவம், ஆரோக்கியமாகவும் வாழ முயற்சி செய்யுங்கள். இது நோய் இன்றி வாழவும் உதவும்.

8. தீயவர்களிடம் இருந்து விலகி இருங்கள்

Pexels

முடிந்த வரை தீயவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. அது உங்கள் உறவினராகவோ, நண்பராகவோ, அலுவலகத்தில் இருப்பவர்கலாகவோ, அல்லது பக்கத்தில் வசிப்பவரோ. யாராக இருந்தாலும், ஒருவர் உங்கள் மீதி எதிர்மறை தாக்கத்தை உண்டாக்குகின்றார் என்று தெரிந்து விட்டால், அவரிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

9. உணவு மற்றும் தண்ணீரை அன்போடு எடுத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் தினமும் அருந்தும் உணவு மற்றும் தண்ணீரை அன்போடு அருந்த வேண்டும். இது உங்களுக்குள் நேர்மறை சக்திகளை அதிகரித்து உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவை புத்துணர்ச்சி பெற செய்யும். மேலும் நல்ல தன்னம்பிக்கையோடு உங்கள் வாழ்க்கையை வாழவும் செய்யும். 

மேலும் படிக்க - உடலை சுத்திகரித்து ஆரோக்கியத்தை அதிகரிக்கும் நீர் – டிடோக்ஸ் நீர்!

மேலும் படிக்க - மணவாழ்வு மகிழ்ச்சிகரமான பயணமாக மாற சில உதவிக் குறிப்புகள் !

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!