இறுதி மாதவிடாய் நாட்களில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்ன?

இறுதி மாதவிடாய் நாட்களில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்ன?

இந்த பூமியில் பிறக்கும் அனைத்து பெண்களும் ஒரு நாள் இறுதி மாதவிடாய் காலகட்டத்தை கடந்து தான் ஆக வேண்டும். இது ஒரு சிலருக்கு இயற்கையாகவே எந்த தொந்தரவும், உடல் உபாதைகளும் இல்லாமல் நடந்து விட்டாலும், இன்றைய பெரும்பாலான பெண்களுக்கு பல பிரச்சனைகளோடு கடக்கும் சூழல் உண்டாகின்றது. மேலும் இன்றைய பெண்கள் இளம் வயதிலேயே, குறிப்பாக 9 அல்லது 1௦ வயதிலேயே பூப்படைந்து விடுகின்றார்கள். இதனால், 35 முதல் 45 வயது இருக்கும் காலகட்டத்திலேயே இறுதி மாதவிடாய் காலகட்டத்தையும் அடைந்து விடுகின்றார்கள். 2௦, 3௦ ஆண்டுகளுக்கு முன்னர் 55 அல்லது 6௦ வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு இயற்கையாகவே இறுதி மாதவிடாய் ஏற்பட்டு விடும். ஆனால் இன்று அப்படி இல்லை. அப்படி ஒன்றை நினைத்தாலே பெண்கள் அனைவரும் மிகப் பெரிய பயத்தோடு வாழத் தொடங்கி விடுகின்றார்கள். இத்தகைய நிலை ஏற்பட நாம் எடுத்துக் கொள்ளும் உணவும் ஒரு முக்கிய காரணம்.

கடந்த 2௦ ஆண்டுகளில் பல மாற்றங்கள் நம் உணவில் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு கலாசாரத்தோடு, அவர்களது உணவு பழக்கங்களும் உள்ளே புகுந்து விட்டது. இதுவே ஒரு முக்கிய காரணம் என்றும் கூறலாம். மேலும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இதற்கு மற்றுமொரு முக்கிய காரணம்.

எனினும், நீங்கள் இறுதி மாதவிடாய் காலகட்டத்தை நெருங்கி கொண்டிருகின்றீர்கள் என்றால், உங்களுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை (menopause food/diet)பற்றிய ஒரு சிறு தொகுப்பு இங்கே;

1. கால்சியம் நிறைந்த உணவு

 உங்கள் உணவில் போதிய கால்சியம் உள்ளதா என்று கவனியுங்கள். ஒரு நாளைக்கு ஒரு பெண் 1200 மில்லி கிராம் கால்சியம் சட்டு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கால்சியம் கொத்தமல்லி, முடக்காத்தான், பசலி கீரை, பிரண்டை, பால், நன்னீர் மீன், ப்ரொகொலி போன்ற உணவுகளில் அதிக அளவு உள்ளது. இது எலும்புகளை பலப்படுத்துவதோடு, இறுதி மாதவிடாய் காலகட்டத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

மேலும் படிக்க - பெண்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு குறிப்புகள்!

2. இரும்பு

Pexels

இது உங்கள் உடலில் இரத்த போக்கு அதிகம் ஏற்படும் போது, ஹீமோக்ளோபின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும். இரும்பு சத்து அதிகம் பேரீச்சம்பழம், பச்சை கீரை வகைகள், கொட்டை வகைகள், தானியங்கள், இறைச்சி, தேன் போன்றவற்றில் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்கு 8 மில்லி கிராம் அளவு இரும்பு சத்தை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. நார் சத்து

பெண்கள் (women) தினமும் 21 கிராம் நார் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலில் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி, இறுதி மாதவிடாய் காலத்தில் வயிற்றில் ஏற்படும் சில உபாதைகளை தடுக்க உதவும். வாழக்காய், வாழத்தண்டு, பீன்ஸ், வாழைப்பூ, முளைகட்டிய பயிர், அரிசி, அவரைக்காய், காராமணி, கொத்தவரங்காய், பிரண்டை, புதினா, கொத்தமல்லி, மற்றும் கீரை வகைகளில் நார் சத்து நிறைந்துள்ளது.

மேலும் படிக்க - உங்கள் உடல் நலனை அதிகரிக்க நார் சத்தின் முக்கியத்துவம்!

4. தண்ணீர்

Pexels

முடிந்த வரை போதிய தண்ணீர் அருந்த வேண்டும் . தினமும் இவ்வளவு நீர் என்று கணக்கு வைத்துக் கொள்ளாமல், எப்போதெல்லாம் உங்களுக்கு தாகம் எடுகின்றதோ அப்போதெல்லாம், தண்ணீர் அருந்த வேண்டும். மேலும் நீர் சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

5. நல்ல கொழுப்பு

உடல் சீராக வேலை செய்யவும், எலும்புகள் தேய்மானம் ஏற்படுவதை தடுக்கவும், கொழுப்பு சத்து தேவை. எனினும், அது நல்ல கொழுப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் தேங்காய், கொட்டை வகைகள் போன்ற பாதுகாப்பான கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை சிவப்பு இறைச்சியை தவிர்த்து விடுவது நல்லது.

6. வைட்டமின் டி

Pexels

உங்கள் உடலில் கால்சியம் சார வைட்டமின் டி சத்து மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது. எனினும், இது அதிக அளவு சூரிய கதிர்களில் மட்டுமே உள்ளது. மேலும் இந்த சத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், தினமும் இளம் கதிர் விழும் நேரத்தில் சூரிய ஒளியில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டும். குறிப்பாக வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணை தேய்த்து சூரிய கதிரில் நின்று அதன் பின் எண்ணை குளியல் எடுத்துக் கொண்டால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்து கிடைத்து விடும்.

இந்த சத்துக்கள் மட்டும் இல்லாமல், பிற சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் நீங்கள் எடுத்துக் கொள்வது நல்லது. தினமும் மோர், போன்ற பானங்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விட்டு நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாம். நாட்டு கோழி, நட்டு கோழி முட்டை, போன்ற இறைச்சி வகைகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க - கருப்பை பிரச்சனையா? பெண்களின் கருப்பையை வலுவாக்கும் சிறந்த உணவுகள்! 

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!