
தற்போது பாலிவுட்டில் மிக அதிமாக பேசப்படும் பிரபலங்களில் சாரா அலிகானும் ஒருவர். 25 வயதில் அனைவர் மனதையும் வசீகரிக்கும் அழகுடன் இருப்பவர் சாரா அலிகான். சயீப் கானின் மகள் அழகாகத்தானே இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் சயீப் மற்றும் கரீனா திருமணத்தின் போது இதே சாரா அலிகான் மிகுந்த பருமனாக காணப்பட்டார். அதுதான் விஷயமே. இப்போது பாலிவுட்டில் சாராவிற்கு சுலபமாகப் படங்கள் கிடைக்கலாம். ஆனால் இதற்காக அவர் கடந்து வந்த வலிகள் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
மாமியாருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா – வைரலாகும் புகைப்படம்
ஏனெனில் சாராவிற்கு PCOS எனும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட ஹார்மோன் சுரப்புகளில் பிரச்னை இருந்தது. அதனாலேயே அவர் தனது இளம் வயதில் 90 கிலோவிற்கும் அதிகமான எடையில் இருந்தார். அது மட்டுமல்ல அதிகப்படியான முடி வளர்ச்சி, ஒழுங்கான மாதவிலக்கு ஏற்படாமை மற்றும் குழந்தை பிறப்பில் கூட பிரச்னைகள் ஏற்படலாம். சாராவைப் போன்றே பல்வேறு பெண்களும் இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் இருந்து எப்படி சாரா அலிகான் வெளியே வந்தார் மற்றும் தன் ஹார்மோன் குறைபாடுகளை எப்படி சரி செய்தார் என்பது பற்றி அனைவரும் தெரிந்து கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பெண்கள் இதில் இருந்து விரைவில் வெளிவரலாம்.
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் லேடி சூப்பர் ஸ்டார் ? விரிவான விபரங்கள் உள்ளே !
தனது PCOS பற்றி முதன் முதலில் காஃபீ வித் கரண் நிகழ்ச்சியில் கரனுடன் பகிர்ந்து கொண்டார். இதனால் முதலில் ஏற்படும் பிரச்னை உடல் எடை அதிகரித்தல்தான். அதன் அதிக முடிவளர்ச்சி போன்ற சிக்கல்கள் வரலாம். ஆண் போன்ற தன்மை அதிகமாகும்.
தனது பழைய விடீயோக்களைக் காட்டி கரண் பேசுகையில் சாரா ஆமாம் அப்போது நான் 95 கிலோ எடையில் இருந்தேன். யாரேனும் நம்மை குண்டாக இருக்கிறாய் என்று கூறினால் நமக்கு கஷ்டமாக இருக்கும். இதற்கு காரணம் எனது PCOS .இப்போதும் அது இருக்கிறது. இதனால்தான் அப்போது நான் குண்டானேன் என்றார்.
முதல் சந்திப்பும்.. அதன்பின்பான பதட்டமும்.. மாதுரி பற்றி மனம் திறந்த சஞ்சய் தத் !
அப்போது அவர் தந்தை சயீப் இடைமறித்து அதிகமாக சாப்பிடும் பிஸ்ஸாக்களால் உடல் எடை கூடாதா என்று கேட்டார். அதற்கு சாரா நான் சிறு வயதில் பிஸ்ஸாக்கள் சாப்பிட்டது உண்மைதான். ஆனாலும் அதற்கேற்ற உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். என்னால் அது முடியவில்லை. இந்த pcos காரணமாக நான் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையவில்லை இதுதான் இதில் உள்ள பெரும் சிக்கல் என்றார்.
இதன் மூலம் சாராவின் டயட் பிளான் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என்பது நமக்கு புரிய வருகிறது. பின் எப்படி தனது 30கிலோ எடையை அவரால் குறைக்க முடிந்தது ? மேலும் பார்க்கலாம்.
அவர் ப்ராட்வேயின் 110வது இடத்தில இருந்தார். அங்கு டாம்’ஸ் பிஸ்ஸா என்றொரு பிஸ்ஸா கடை இருந்தது. தனது கல்லொற்றியின் முதல் இரண்டு வருடம் அந்த பிஸ்ஸா கடையில்தான் கழித்திருக்கிறார். அதன்பின் அதன் அருகிலேயே ஒரு விட்டமின் கடை உள்ளதை தனது மூன்றாவது வருடத்தில் பார்த்திருக்கிறார். அதனால் மனம் மாறிய அவர் தனது உணவு உண்ணும் முறையை மாற்றி விட்டமின் கடைக்கு சென்றிருக்கிறார்.ப்ரோட்டீன்களும் சாலட்களும் அவரது உணவாக மாறியது.
இப்போது இந்தியா திரும்பியபின் சாரா அலிகானின் டயட் என்னென்ன
காலை உணவு
முட்டையின் வெண்கருடோஸ்ட் அல்லது இட்லிகள்
மதிய உணவு
சப்பாத்தி, தால், சாலட், காய்கள் மற்றும் பழங்கள்
நொறுக்குத்தீனி
உப்புமா (சேமியா காய்கறிகள் செமோலினா போன்றவை)
இரவு உணவு
சப்பாத்தியுடன் பச்சை நிறக் காய்கறிகள்
ஒர்க் அவுட்டிற்கு முன்னால்
முஸ்லி மற்றும் ஓட்ஸ் அல்லது பழங்கள்
ஒர்க் அவுட்டிற்கு பின்னால்
ப்ரோட்டீன் ஷேக், சாலட்கள், டோபூ, மற்றும் பருப்பு வகைகள்
சாரா அலிகானின் ஒர்க் அவுட்கள்
விதம் விதமான ஒர்க் அவுட்களை சாரா விரும்புகிறார். காரணம் அதனால் ஒரே வித பயிற்சிகளால் ஏற்படும் சலிப்புகள் நிகழ்வதில்லை.
இந்த இடத்தில் சாரா அலிகான் முக்கியமான ஒரு விஷயத்தை முன் வைக்கிறார். PCOS உள்ள அனைவரும் இப்படி ஒரு எடைகுறைப்பில் இருக்க வேண்டும் என்பதில்லை. இதன் அறிகுறிகளால் உங்கள் டயட் பிளான் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாலே போதுமானது. அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு துணை பொருள்கள்தான் என்கிறார்.
பின் ஏன் நீங்கள் எடை குறைத்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது அவர் நான் சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்க விரும்பியதும் என்னை நான் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததுமே முக்கிய காரணம் என்றார். என்னால் சைஸ் ஸிரோவிற்கு வர முடியாது. அது எனக்கும் தெரியும்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் – பெண்களில் அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவர்
ஆனால் நான் 96 கிலோவாக இருக்க விரும்பவில்லை. அதுவே முக்கிய காரணம் என்றார். பருமனாக காட்சியளிப்பது தோற்றத்தில் மட்டுமல்ல நமது ஆரோக்கியத்திலும் கெடுதல் விளைவிக்கிறது. மன மட்டும் உடல்நிலையை அது பல்வேறு வகையில் பாதிக்கிறது. ஆகவே நான் உடல் எடை குறைக்க விரும்பினேன் என்கிறார்.
சாரா அலிகானின் இந்த எடை குறைப்பு வரலாறு நிச்சயம் உங்கள் மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கும் என்று தோன்றுகிறது.
உங்கள் மனதில் தோன்றும் கமெண்ட்களை நீங்கள் இங்கே கூறலாம்.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.