மாமியாருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்

மாமியாருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்

கோலிவுட்டின் காதல் பறவைகள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பற்றி பேசாத மீடியாவே இல்லை. இருவரும் வெளிநாடுகளுக்கு பறப்பதும் புகைப்படங்கள் வெளியிடுவதும் என எப்போதும் தங்கள் காதலில் பிசியாக இருக்கின்றனர்.


சமீபத்தில் நயன்தாரா வை அவமானப்படுத்திய ராதாரவி பற்றி பல தகவல்கள் வெளியிட்டு நயனுக்கு ஆதரவாக நின்றவர் விக்னேஷ் சிவன். இவரின் டீவீட்டால் திமுக ராதாரவியை அடிப்படை உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத் தக்கது.எப்போதும் நயன்தாராவோடே இருக்கும் விக்னேஷ் சிவனிடம் எப்போது திருமணம் என்கிற கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த இன்னும் பதில் எனக்கே தெரியாது , தெரியாத கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்வது என்றும் என் திருமணம் எப்போது என்பதை என் அம்மாவிடம்தான் கேட்க வேண்டும் என்றும் மழுப்பலாக பதில் அளித்திருக்கிறார்.மேலும் நயன்தாரா ( Nayanthara) 100 படங்களில் நடித்த பின்னரே திருமணம் செய்ய போகிறார் என்கிற வதந்தியும் பரவி இருக்கிறது.


சமூக வலைத்தளங்களில் அதிகம் காணப்படும் இந்த ஜோடியின் புகைப்படங்களில் சமீபத்திய வரவு நயன்தாரா அவரது வருங்கால மாமியாருடன் எடுத்த செல்ஃபி தான்.அதில் தமிழ் புத்தாண்டை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது அம்மா மற்றும் அவரது சகோதரியுடன் கொண்டாடியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


உன்னை எனக்கு புரிகிறது ப்ரியங்கா ..நிக் பற்றி மனம் திறந்த ப்ரியங்கா !


ராஜா ராணி ஜோடி ஆல்யா மானஸா - சஞ்சீவ் நிச்சயதார்த்தம் - படங்கள் உள்ளே !


---                                                                                                                   


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.