முதல் சந்திப்பும்.. அதன்பின்பான பதட்டமும்.. மாதுரி பற்றி மனம் திறந்த சஞ்சய் தத் !

முதல் சந்திப்பும்.. அதன்பின்பான பதட்டமும்.. மாதுரி பற்றி மனம் திறந்த சஞ்சய் தத் !

பாலிவுட்டில் பிரியமாக சஞ்சு பாபா என்றழைக்கப்படும் சஞ்சய் தத் 22 வருடங்கள் கழித்து தனது முன்னாள் காதலி மாதுரி தீட்சித்துடன் ஒன்றாக இணைந்து நடிக்கும் திரைப்படம் கலங்க் ( Kalank )


நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் உலகமெங்கும் திரையிடப்படுகிறது.


ஒரு காலத்தில் மாதுரி தீட்சித் மற்றும் சஞ்சய் தத் இருவரும் பாலிவுட்டின் காதல் பறவைகளாக சிறகடித்தனர். சாஜன் என்கிற படத்தில் சஞ்சய் தத் மற்றும் மாதுரி இருவரும் ஒன்றாக நடித்தனர்.அப்போதில் இருந்து இவர்களுக்குள் காதல் தீ பற்றி கொண்டதாக கூறப்பட்டது. தலைப்பு செய்திகளில் இவர்கள் நெருக்கம் பரப்பரப்பாக்க பட்டது. ஆனால் இவர்கள் இருவருமே இந்த செய்தியை மறுத்து வந்தனர்.


அதன் பின்னர் சஞ்சய் தத் தடா சட்டத்தில் சிறைக்கு செல்ல மாதுரி தீட்சித் சஞ்சய் இருவருக்குமான தொடர்பு முற்றிலும் நின்று போனது.


இந்நிலையில் அபிஷேக் வர்மன் இயக்கத்தில் கலங்க் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் 22 வருடங்களுக்கு பின்னர் ஒன்றாக நடிப்பது எல்லோர் மனதிலும் எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கிறது.இது பற்றி பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த சஞ்சய் தத் " 22 ஆண்டுகள் கழித்து நான் மாதுரியை மீண்டும் சந்தித்த சில கணங்கள் நான் பதட்டம் அடைந்தேன். ஆனால் மாதுரி என்னை நிதானப்படுத்தினார்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும் மாதுரியுடன் நடித்தது தனக்கு பெரிய சந்தோஷம் என்றும் தனது குழந்தைகளை செட்டுக்கு அழைத்து வந்து மாதுரியை அறிமுகம் செய்து அவர்களை பேச வைத்தேன் என்று கூறியிருக்கிறார்.


சஞ்சய் தத் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும் முன்னாள் காதலியை கண்ட உடன் அடையும் பதட்டத்தையும் அதனை வெகு இயல்பாக அவர் ஏற்று கொண்டதையும் பார்க்கையில் அவரும் நம்மை போல ஒரு சக மனிதர் என்பதை உணர முடிகிறது.இதை பற்றி மாதுரி தீட்சித் இடம் கேட்கப்பட்ட போது நானும் சஞ்சயும் திரையில் கண்ணியமாக எங்கள் பாத்திரங்களை செய்திருக்கிறோம். படம் பார்க்கும்போது பார்வையாளர்கள் என்ன உணர்வார்கள் என்பதை நான் நடிக்கும்போதே உணர்ந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


தவிர நிஜமாக தான் இரண்டு குழந்தைகளின் தாய் என்பதால் தாய் மற்றும் மனைவி கதாபாத்திரங்களை தவிர்த்து மற்ற வித்யாசமான பாத்திரங்களிலும் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.


முன்னாள் காதலர் சஞ்சய் தத்தை தற்போது சார் என்றுதான் மாதுரி அழைக்கிறார் என்பது கூடுதல் செய்தி.சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் கரண் ஜோகரின் கலங்க் திரைப்படம் இன்று வெளியாகிறது.


கலங்க் திரைப்படத்தில் ஆலியா பட், வருண் தவான், சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோரும் நடிக்கின்றனர். வெளியான பாடல்களில் மாதுரி ஒரு நடன ஆசிரியையாக இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. படம் வெளிவந்தால் தான் அவரது கதாபாத்திரம் பற்றி தெரிய வரும்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


மாமியாருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்


தீபிகா படுகோன் கர்ப்பம்..? விவரங்கள் உள்ளே..!


---                             


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.