Health

குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் சுரத்தை போக்க வீட்டு வைத்தியம்!

Meena Madhunivas  |  Dec 12, 2019
குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் சுரத்தை போக்க வீட்டு வைத்தியம்!

மழை மற்றும் குளிர் காலம் வந்து விட்டாலே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் சளி மற்றும் சுரம் வந்துவிடும். இதனால், தினசரி வேலைகள் பெரிதும் பாதிப்பதோடு, அதிக அசௌகரியத்தை சந்திக்கவும் நேரிடும். இந்த சளி மற்றும் சுரத்தை போக்க, சில எளிய மற்றும் உடனடி நிவாரணம் தரக்கூடிய வீட்டு வைத்தியங்கள்(cold fever home remedies) பல உள்ளன. அவற்றிற்கு, உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களே போதுமானது.

உங்களுக்கு இந்த குளிர் காலத்தில் உதவியாக இருக்க, இங்கே சில எளிய வீட்டு வைத்தியங்கள்.

1. சளியை போக்க பால்

இதற்கு தேவையான பொருட்கள்:

பால்
மஞ்சள் தூள்
பனங்கற்கண்டு
மிளகு தூள்
சீரகத் தூள்

பாலை நன்கு சூடு செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள், பனங்கற்கண்டு, சீரகம் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்து அருந்த வேண்டும். குறிப்பாக இரவு தூங்க செல்லும் முன் இதனை செய்தால், நல்ல பலன் தரும். இதனை அனைத்து வயதினரும் அருந்தலாம். இது சளி மற்றும் இருமல் உடனடியாக குணமடைய உதவும்.

2. துளசி கசாயம்

Pixabay

தேவையான பொருட்கள்:

சிறிது துளசி இல்லை
சீரகம்
மிளகு
நாட்டு சர்க்கரை

தேவையான அளவு துளசி இலைகளை சிறிது எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரில் இதனை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இதனுடன், சிறிது சீரகம் மற்றும் மிளகை நுணுக்கி போட வேண்டும். இந்த தண்ணீர், பாதி ஆளவு வற்றும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர், இறக்கி, சிறிது நாட்டு சர்க்கரை, அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, கலக்கி, வாடி கட்டி அருந்த வேண்டும். இப்படி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அருந்தி வந்தால், சுரம் மற்றும் சளி குணமாகும்.

3. கற்பூரவள்ளி கசாயம்

தேவையான பொருட்கள்:

கற்பூரவள்ளி இலைகள் தேவையான அளவு
சீரகம்
மிளகு
மஞ்சள் தூள்
பனங்கற்கண்டு

ஒரு கப் தண்ணீரில், கற்பூரவள்ளி இலைகள்,, நுணுக்கிய சீரகம் மற்றும் மிளகு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, தேவையான ஆளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து அருந்த வேண்டும். இது சளி மற்றும் இருமலை போக்க பெரிதும் உதவும்.

4. தேன், மஞ்சள் மற்றும் மிளகு

Pixabay

தேவையான பொருட்கள்:

தேன்
மஞ்சள் தூள்
மிளகு பொடி

சிறிது தேனை எடுத்துக் கொண்டு, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகுப் போடு சிறிது சேர்த்து நன்கு கலக்கி அப்படியே சாப்பிட வேண்டும். இது இருமலை போக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

5. பப்பாளி இலை

இளம் பப்பாளி இலையை சிறிது எடுத்துக் கொண்டு, நன்கு அரைத்து சாறு பிழிந்து அருந்த வேண்டும். இப்படி செய்து வந்தால், சுரம் குறையும், நல்ல நிவாரணமும் கிடைக்கும். அல்லது பப்பாளி இலையை தண்ணீரில் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டியும் அருந்தலாம்.

மேலும் படிக்க – பப்பாளி விதையின் பயன்கள் மற்றும் அதைப் பயன்படுத்தும் முறைகள்

6. நிலவேம்பு கசாயம்

Pixabay

தேவையான அளவு நிலவேம்பு இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். தேவைப்பட்டால், இதனோடு சிறிது மஞ்சள் தூள், மிளகுப் பொடி மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க விடலாம். இந்த நீர் நன்கு கொதித்ததும், வடிகட்டி அருந்த வேண்டும். இது, சளி, சுரம் மற்றும் இருமல் போன்ற உபாதைகளை போக்க உதவும்.

7. ஆவி பிடித்தல்

இதனை பலரும் இன்று மறந்து வருகின்றனர். எனினும், சுரம், சளி, இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகளை போக்கி, உடனடி நிவாரணம் தர இது நல்ல வீட்டு வைத்தியமாக உள்ளது.

ஒரு பெரிய பாத்திரத்தில் போதுமான தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். இதனை இறக்கி, இந்த தண்ணீரில் சிறிது நீலகிரி தைலம் அல்லது வேறு ஏதாவது தைலம் அல்லது வெப்பம் இலை போன்றவற்றை சேர்த்து நன்கு ஆவி பிடிக்க வேண்டும்,. இப்படி ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால், உடனடி நிவாரணம் பெறலாம்.

8. உப்பு தண்ணீர்

Pixabay

ஏதாவது நோய் தோற்றால் உங்களுக்கு சளி மற்றும் சுரம் ஏற்பட்டிருந்தால், அதனை போக்க, உப்பு தண்ணீர் வைத்தியம் ஒரு சிறந்த முறையாக இருக்கும். இது சளி, கடுமையான இருமல் மற்றும் சுரத்தை போக்க உதவியாக இருக்கும். உங்களால் வாயில் வைத்துக் கொள்ளும் அளவு தண்ணீரை சூடு செய்து, அதில் சிறிது கல் உப்பை போட்டு, கலக்கி, தண்ணீர் சூடாக இருக்கும் போதே அடித் தொண்டையில் வைத்து வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை, குறிப்பாக இரவு தூங்க செல்லும் முன் மற்றும் காலையில் எழுந்த உடன் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.  

மேலும் படிக்க – நறுமண பொருளான இஞ்சியின் மருத்துவ குணங்கள் 

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !

Read More From Health