logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
நறுமண பொருளான இஞ்சியின் மருத்துவ குணங்கள் மற்றும் அழகு பலன்கள்-Benefits Of Ginger In Tamil

நறுமண பொருளான இஞ்சியின் மருத்துவ குணங்கள் மற்றும் அழகு பலன்கள்-Benefits Of Ginger In Tamil

இஞ்சி (ginger) உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணபொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகை ஆகும். இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றியது. சமையலில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

 

இஞ்சியின் மருத்துவ பலன்கள் (Benefits Of Ginger)

இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இஞ்சியில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. எ, பி, சி போன்ற வைட்டமின்களும் காணப்படுகின்றன. உலர்ந்த இஞ்சி சுக்கு என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களை கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழி விளக்குகிறது.

ADVERTISEMENT

செரிமானம் (Digestion)

நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள் செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில் (Saliva), செரிமான அமிலம் (Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல் (Bile). இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும். கடினமான உணவுகளை கூட எளிதில் ஜீரணமாக்கும் தன்மை கொண்டது. இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு  கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி அதன் செயல்பாடு அதிகரிக்கும். 

மேலும் படிக்க – மழைக்கால வரண்ட சருமத்தை மாற்றும் பல்வேறு பேஷியல் முறைகள்!

pixabay

ADVERTISEMENT

குமட்டல் (Nausea)

இஞ்சி (ginger) குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும். இஞ்சி பித்தத்தை தடுக்கக் கூடியது. எனவே இது வாந்தியை கட்டுப்படுத்தி வயிறு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஒரு சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி தண்ணீரில் சேர்க்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். இஞ்சி வயிற்றின் எரிச்சலை போக்கி உடனடி நிவாரணத்தை கொடுக்கும். 

குளிர் கால பராமரிப்பு (Cold Weather Relief)

குளிர்காலம் வந்தாலே நம்மை பல தொற்றுநோய்கள் தாக்க தொடங்கி விடும். அதனால், நாம் இந்த குளிர் காலங்களில் நாம் உட் கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்து இஞ்சி. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால் அது உங்கள் உடல் நலத்தை சீராக வைத்திருக்கும்.

வலி நிவாரணி (Pain Reliever)

வலிகளை பட படவென போக்கும் ஒர் அற்புதமான இயற்கை நிவாரணி இஞ்சி. இயற்கை வழங்கிய கொடையான இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை உடையது. இஞ்சியில் அழற்சி கலவைகள் உற்பத்தியை தடுக்கும் என்சைம்கள் அதிக அளவில் உள்ளன. இஞ்சி ஒரு வலுவான இயற்கை வலி நிவாரணி ஆகும். ஒவ்வொரு நாளும் காய வைக்கப்பட்ட இஞ்சியை (சுக்கு) சுமார் 2 கிராம் எடுத்துக் கொள்வது நாள் பட்ட மற்றும் அதி தீவிர வலியை குறைக்க உதவும்.

ADVERTISEMENT

pixabay

இருதய ஆரோக்கியம் (Cardiovascular Health)

இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு (ginger) உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும். இதனை  சரிசெய்ய கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.

இரத்த சர்க்கரையை குறைக்கிறது (Reduces Blood Sugar)

இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து வர இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது . மதிய உணவுக்கு முன் இஞ்சி ஜூஸ் உடன் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இஞ்சியானது இன்சுலின் சென்ஸ்டிவிட்டி போன்ற வேலைகளை செய்கிறது. இஞ்சியை பச்சையாக மென்று திண்ணலாம், உணவு, இஞ்சி டீ, இஞ்சி பொடி, எண்ணெய், ஜூஸ் போன்ற வடிவில் சேர்த்து கொள்ளலாம். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயமும் குறையும்.  

பாக்டீரியா எதிர்ப்பு (Antibacterial Properties)

சமையலில் சேர்க்கப்படும் இஞ்சி அதீத மருத்துவ குணங்கள் நிறைந்தது. கெட்ட பாக்டீரியா, வைரஸ்களை எதிர்த்து போராடக் கூடியது. அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்றது. பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படுகிறது. இஞ்சிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இருப்பதால் இது பாக்டீரியா போன்ற தொற்றுக்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது. 

ADVERTISEMENT

மேலும் படிக்க – எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் பராமரிக்கும் வழிமுறைகள்!

நிவாரணி (Pain Relief)

நிவாரணியாக செயல்படுகிறது. நம் உடலில் காக்ஸ்-2 என்ற என்ஸைம் தான் வலியைத் தருகிறது. அதன் செயலை தடுக்க இஞ்சி உதவி புரிந்து வலியை குறைக்க செய்கிறது. தொடர்ந்து இஞ்சி டீயை எடுத்துக் கொள்ளும் போது, எலும்பு சம்பந்தமான வியாதிகளான, ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், முடக்கு வாதம், கீல்வாதம் ஆகியவற்றால் ஏற்படும் வலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 

கல்லீரல் பாதுகாப்பு (Protects The Liver)

இஞ்சி, உணவின் சுவையைக் கூட்டுவது மட்டுமின்றி கல்லீரல் பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. மதுசாரா  கல்லீரல் நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளவர்கள், கண்டிப்பாக இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இதனால் கல்லீரல் சுத்தம் செய்யப்பட்டு, ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படும்.

ADVERTISEMENT

pixabay

புற்றுநோயுக்கு எதிர்ப்பு (Fights With Cancer)

நவீன மருத்துவ ஆராய்ச்சியில் இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இஞ்சியானது உடலைத் தாக்கிய புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதைத் தடுக்கும். எனவே தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.மார்பகப் புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றின் செல்களை ஒடுக்கும் தன்மை இஞ்சிக்கு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இஞ்சியின் அழகு பயன்கள் (Beauty Benefits Of Ginger)

நாம் தினசரி உணவிலும் சேர்த்துக்கொண்டிருக்கும் இஞ்சி, நம் முக அழகுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. முகப்பரு, அம்மை ஆகியவற்றால் ஏற்பட்ட தழும்புகள் கூட இஞ்சி போக்கிவிடும். மற்ற ஆன்டி செப்டிக் கிரீம்களை நம்புவதை விட்டுவிட்டு இஞ்சியை பயன்படுத்துங்கள். இஞ்சியில் உள்ள கிருமி நாசினி தன்மை, முகப்பரு வருவதற்கு காரணமான பாக்டீரியாவை உடனடியாக அழிக்கும். முக அழகிற்கு இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என நாம் காணலாம்.

வயதான தோற்றத்தை போக்கும் (Anti Aging)

முதுமையை குறைக்கக் கூடிய 40 வகையான ஆன்டி ஆக்சிடண்டுகள் இஞ்சியில் உள்ளன. முக சுருக்கங்களை மட்டும் போக்காமல், முகத்தில் உள்ள அனைத்து இரத்த நாளங்களிலும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இரத்த ஓட்டம் சீரடைவதால் முகத்தில் உள்ள அனைத்து செல்களுக்கும் போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. இஞ்சியில் உள்ள கிருமி நாசினி தன்மை, முகப்பரு வருவதற்கு காரணமான பாக்டீரியாவை உடனடியாக அழிக்கும். இதனால் முகம் பொலிவடைகிறது.

ADVERTISEMENT

pixabay

சரும டோனர் (Skin Toner)

இஞ்சி டோனர் மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் வீட்டில் தயாரிக்கும் டோனராகும். வெறும் இரண்டு பொருட்களை மட்டுமே வைத்து இந்த டோனரை தயார் செய்யலாம். இது எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை ஒரு சுத்தமான பாட்டில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். உங்கள் முகத்தை மெதுவாக சுத்தம் செய்து புதுப்பிக்க தினமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்த டோனரைப் பயன்படுத்துங்கள்.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது (Promotes Hair Growth)

இஞ்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இஞ்சியின் வேரில் முடியின் வலிமை, ஆரோக்கியம் மற்றும் மென்மையை அதிகரிக்கும் சத்துக்களான மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இஞ்சியில் உள்ள பொருட்கள் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

ADVERTISEMENT

    மேலும் படிக்க – பொன்னிற மேனி வேண்டுமா ! மலிவான விலையில் பார்லரின் பளபளப்பைத் தரும் கொத்தமல்லி பேக் !

சரும அமைப்பை மேம்படுத்த (Improves Skin Texture)

சரும அமைப்பை மேம்படுத்த இஞ்சி முக்கிய பங்கு முக்கிய பங்காற்றுகிறது. முதுமையை குறைக்கக் கூடிய 40 வகையான ஆன்டி ஆக்சிடண்டுகள் இஞ்சியில் உள்ளன. முக சுருக்கங்களை மட்டும் போக்காமல், முகத்தில் உள்ள அனைத்து இரத்த நாளங்களிலும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இஞ்சியை தொடர்ந்து பயன்படுத்தினால் சரும அமைப்பு மேம்பட்டு பொலிவாகும்.

 

ADVERTISEMENT

pixabay

பொடுகுடன் போராடுகிறது (Fights With Dandruff)

பொடுகுத் தொல்லையால் பெரும்பாலானோர் கஷ்டப்படுகின்றனர். பொடுகு தொல்லையில் இருந்து விடுபட 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாற்றினை 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் பொடுகுத் தொல்லை அகலும். இஞ்சி சாற்றினை ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலசினாலும் பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

முடி வறட்சியை போக்குகிறது (To Cure Dry Scalp)

இஞ்சி சாற்றில் அர்கன் எண்ணெய் கலந்து, தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு கழுவி வந்தால் முடியின் வறட்சி நீங்கி தலைமுடி மென்மையாகும். வாரம் ஒரு முறை இஞ்சியை அரைத்து தலையில் ஹேர் பேக்காக போட்டு ஒரு மணி நேரம் கழித்து தலைக்குளித்துவிடுங்கள். அல்லது இஞ்சி சாறுடன், தயிர் அல்லது கற்றாழை சேர்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்தால் முடி வறட்சி நீங்கி செழித்து வளரும். 

பொடுகை கட்டுப்படுத்துகிறது (Dandruff Control)

இஞ்சி சாற்றில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஸ்கால்ப்பில் சுரக்கும் எண்ணெயின் அளவைக் குறைக்கும் மற்றும் ஸ்கால்ப்பில் தொற்றுகளால் பொடுகு வருவதைப் போக்கும். அதற்கு இஞ்சி சாற்றால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து அலச வேண்டும். தலையில் பொடுகு இருக்கும் போது ஏற்படும் அரிப்பால், சிலருக்கு தலையில் காயங்களே ஏற்பட்டுவிடும். இன்னும் சிலருக்கு ஸ்கால்ப்பில் பருக்கள் வரும். இப்பிரச்சனைகளைப் போக்க இஞ்சி சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து அலசுங்கள்.

ADVERTISEMENT

pixabay

முடிக்கு ஊட்டச்சத்து வழங்குகிறது (Hair Nourishment)

வீட்டில் எளிதாக கிடைத்திடும் இஞ்சியில் ஏராளமான ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்ல அழகுக்காகவும் பயன்படுத்தலாம் குறிப்பாக தலைமுடிக்கு மிகவும் நல்லது. தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும். மேலும் இஞ்சியை தலைக்கு தேய்த்து குளிப்பதால் முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. இஞ்சியை தலைமுடிக்கு தடவியவுடன் ஒரே நாளில் உங்களுக்கு முடிவு தெரியாது என்பதால் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். 

முடி வளர்ச்சிக்கு (Hair Growth)

இஞ்சி முடியின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிப்பதோடு முடி உதிரும் பிரச்சனை இருந்தாலும் அதனை சரிசெய்து மயிர்கால்களை வலிமையாக்கும். இஞ்சியை லேசாக நெருப்பில் சுட்டுக்கொள்ளுங்கள். பின்னர் தோலை நீக்கி அரைத்து அதனை தலைமுடியின் வேர்கால்களில் படும்படி நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்குளிக்கலாம். இஞ்சியில் இருக்கும் ஃபேட்டி ஆசிட்டுகள்  முடி உதிர்வதைக் குறைத்து, தலைமுடி மெலிவதை தடுக்கும்.

ADVERTISEMENT

அழகான கூந்தலுக்கு இஞ்சியை எப்படி பயன்படுத்துவது (How To Use Ginger For Haircare)

இஞ்சி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களும் விரும்புவார்கள். இஞ்சி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது என்று மேலே மேலே பார்த்தோம். இதனை எந்த பொருட்களுடன் கலந்து பயன்படுத்தினால் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

எலுமிச்சை சாறுடன் (With Lemon Juice)

இரண்டு டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு, மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து கொள்ளுங்கள். இத்துடன் அரை டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் கலந்து தலையில் மாஸ்க் போல போட்டுக் கொள்ளுங்கள். வாரம் மூன்று முறை இதனை செய்யலாம். எலுமிச்சை ஆண்டி பாக்டீரியல் க்ளன்சராக பயன்படுத்திடும். இந்த கூந்தல் பொழிவை பெறும். 

ADVERTISEMENT

pixabay

தேங்காய் எண்ணெய்யுடன் (With Coconut Oil)

ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு பாதியளவு இஞ்சியை எடுத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒன்றாக கலந்து இந்த கலவையை தலையில் தேய்த்து மைல்ட் ஷாம்பு போட்டுத் தலைக்குளிக்கலாம். இதனால் முடி வறட்சி அடையாமல் தடுக்கப்படும். மேலும் தேங்காய் எண்ணெய் முடிக்கு தேவையான போஷாக்கை தரும்.

இஞ்சி பேஸ்ட் (Ginger Paste)

இஞ்சி பேஸ்டை தலைக்கு தேய்த்து குளிப்பதால் நரை முடி பிரச்னை தீர்க்கப்படும். இஞ்சியை துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை நரை முடியின் மீது தடவி (தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்) 10 நிமிடங்கள் ஊற வைத்து குளித்தால் நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். இஞ்சி துபேஸ்டை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து தினமும் உட்கொண்டு வந்தால் உங்கள் முடி நரைப்பது தடுக்கப்படும். 

வெங்காய சாறுடன் (With Onion Juice)

சின்ன வெங்காயத்தை லேசாக வறுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக் கொண்ட வெங்காயத்தின் பாதியளவு இஞ்சியை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனை அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்திடுங்கள். அதனை ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்திருந்தால் தெளிந்த எண்ணெய் மேலே வந்துவிடும்.இந்த எண்ணெய்யை தனியாக எடுத்து தலைக்கு தேய்த்து குளிக்கும் போது அதனை பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

pixabay

ஆலிவ் எண்ணெய்யுடன் (With Olive Oil)

ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுதை மூன்று டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் ஊற வைத்திடுங்கள். பின்னர் அதனை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்திடுங்கள். இளஞ்சூடான நீரில் இதனை கழுவிடலாம்.ஏதேனும் எரிச்சல் இருந்தால் உடனடியாக கழுவி விடங்கள் சிலருக்கு இஞ்சி இரிட்டேஷன் கொடுக்கும்.

இஞ்சியால் ஏற்படும் பக்கவிளைவுகள் (Side Effects Of Ginger)

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதேபோல் தான் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும் அதனை அதிகம் சாப்பிட்டால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். இஞ்சியை அதிகம் எடுத்து கொள்வதால் வரும் தீமைகள் குறித்து கீழே காணலாம்.

ADVERTISEMENT

வயிற்று கோளாறுகள் (Stomach Disorder)

செரிமானப் பிரச்சனை, சளி பிரச்சனைகளுக்கு இஞ்சி தீர்வு தந்தாலும், இதனை அதிகம் உட்கொண்டால் வயிறு வீக்கம், வயிற்று பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு மேல் இஞ்சி சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதற்கு மேலே சாப்பிடும் போது வயிறுக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முழுதாக இஞ்சியை இடிக்காமல் சேர்த்துக்கொள்வது குடலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் அல்சர் இருப்பவர்கள் இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.

வயிற்றுப்போக்கு (Diarrhea)

இஞ்சியில் இருக்கும் நார்ச்சத்துகள், வயிற்றில் PH நிலையை அதிகரிக்கும். மேலும் செரிமானத்துக்குத் தேவையான என்சைம்களை தூண்டியபடி இருக்கும். இது விரைவாக உணவை செரித்துவிடும். எனவே எடை குறைவாக இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. இஞ்சியை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு தயாராக இப்பவர்கள் இஞ்சியை தவிர்ப்பது நல்லது. 

pixabay

ADVERTISEMENT

படை நோய் (Hives)

இஞ்சியில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இஞ்சியை அதிகம் சாப்பிட்டால் படை நோய்க்கு வழி வகுக்கும். உங்கள் முகம், உதடுகள், நாக்கு அல்லது தொண்டை பகுதியில் வீக்கம் ஏற்பட்டு நாளடைவில் படை நோய் ஏற்படும். முதலில் இளம்சிவப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும். இந்த அறிகுறி தென்பட்டாலே இஞ்சியை உணவில் குறைத்து கொள்ள வேண்டும்.

மூச்சு திணறல் (Breathing Issue)

இஞ்சியை அதிகம் சாப்பிடும் போது மூச்சு திணறல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். குறிப்பாக ஆஸ்துமா பிரச்சினை உடையவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். ஆஸ்துமா பிரச்சினை உடையவர்கள் இஞ்சியை அதிகளவு எடுத்து கொள்ளும் போது தீவிரம் அதிகரிக்கும். மூச்சின் மூலம் ஆக்ஸிஜன் பெற உடல் போராடும் என்பதால் அவசர சிகிச்சையும் அதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் இதற்கு அவசியம்.

இரத்தப்போக்கு கோளாறுகள் (Bleeding Disorder)

அறுவை சிகிச்சை மூலமாக குழந்தைகளை பெற்ற பெண்கள் மற்றும் பலவீனமான கர்ப்பிணி பெண்கள் அதிகளவு இஞ்சி தேநீரை உட்கொள்ளும் போது இரத்தப்போக்கு அதிகமாகிவிடும். ஆங்கில மருந்துகள் மூலமாக காய்ச்சல் மற்றும் சில இதர பிரச்சனைகளுக்கு மருந்துகளை உட்கொள்ளும் போது, இஞ்சி தேநீரை உட்கொள்வது மிகப்பெரிய பக்கவிளைவுகளை கூட ஏற்படுத்தலாம். இஞ்சி அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தும் என்பதால் ஏதேனும் நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது.

இஞ்சியை எவ்வாறு பயன்படுத்தலாம் (How To Use Ginger)

நாம் அன்றாடம் இஞ்சியை பயன்படுத்தினாலும் அதன் முழு பலனும் கிடைக்க அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இஞ்சியை ஜூஸ், டீ மற்றும் இஞ்சி மாத்திரை என பல்வேறு முறையில் பயன்படுத்தலாம். இஞ்சியை கொண்டு டீ, ஜூஸ் எப்படி செய்வது என இங்கு காண்போம்.

ADVERTISEMENT

ஜூஸ் உடன் பருகலாம் (Drink With Juice)

இஞ்சியை அனைத்து விதமான பழ ஜூஸ்களிலும் சேர்த்து அருந்தலாம். பழ ஜூஸ்கள் செய்யும் போது அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அல்லது இஞ்சியை மட்டும் தனியாக ஜூஸ் செய்தும் குடிக்கலாம். இஞ்சியை சுத்தமாக நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தேன் கலந்தால் இஞ்சி ஜூஸ் தயார்.

pixabay

இஞ்சி டீ (Ginger Tea)

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் நசுக்கிய இஞ்சி, பட்டை, புதினா போன்றவற்றை போட்டு  நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு, நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் மட்டுமே குடிக்க வேண்டும். இது மிகவும் ருசியாக இருக்கும். பசியை நன்கு தூண்டும். உங்களுக்கு சில்லென ஐஸ் டீ குடிக்க வேண்டுமென்றால், இந்த டீ யை 30 நிமிடங்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

ADVERTISEMENT

இஞ்சி எண்ணெய் (DIY Ginger Essential Oil)

இஞ்சியில் இருந்தும் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் மங்கிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். உள் உறுப்பில் ஏற்பட கூடிய பாதிப்புகள் மற்றும் வெளி உறுப்பில் ஏற்பட கூடிய வலிகள் முதலிய அனைத்திற்கும் இது தீர்வாக இருக்கும். தொப்பை இருப்பவர்கள், இந்த எண்ணெயைத் தடவி மசாஜ் செய்துவர கொழுப்பைக் கரைக்க உதவும்.வெந்நீரில் இரண்டு சொட்டுகள் விட்டு வாய் கொப்பளித்தால், தொண்டைவலி, வறட்டு இருமல் குணமாகும். வெது வெதுப்பான நீரில் சிறு துளி இஞ்சி எண்ணெய்யை கலந்து குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் பறந்து விடும். மேலும், வயிற்றில் உள்ள அழுக்குகளும் வெளியேறி விடும்.

FAQ’s

இஞ்சி டீ தினமும் குடிப்பதால் உடல் நலத்திற்கு நல்லதா? (Is it good to drink ginger tea everyday?)

ஆம். இஞ்சி டீயை தினமும் குடிப்பதால் செரிமானத்தை மேம்படுத்தும். இது தசை மற்றும் மூட்டு பிரச்சினைகளுக்கு சிறந்த வீட்டு மருந்தாக அமைகிறது. வயிறு உப்புசமாகவும், உணவு செரிமானமாகாலும் இருந்தால் அப்போது ஒரு கப் இஞ்சி டீ குடித்தால் அதில் உள்ள மருத்துவ குணங்களால் செரிமானம் சீராக நடைபெற்று, உப்புசம், வயிற்று வலி, செரிமான பிரச்சனைகள் எல்லாம் நீங்கும்.

ADVERTISEMENT

pixabay

இஞ்சி கொழுப்பை எரிக்கிறதா? (Does ginger burn fat?)

இஞ்சியை உட்கொள்வது கலோரி எரிக்கப்படுவதை அதிகரிக்கும். இஞ்சி உணவை விரைவாக செரிப்பதனால் உடலில் சேரும் பயன்படுத்தாத கலோரிகளின் அளவு குறைக்கப்படுகிறது. கொழுப்பின்றி மெல்லிய உடலைப் பெற விரும்புபவர்கள் இஞ்சி சாறு செய்து பருகலாம். இது கொழுப்பில் நேர்மறையான மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை கொழுப்பை எரித்து உடலை பாதுகாக்கிறது.

தினமும் எவ்வளவு இஞ்சி எடுத்து கொள்ள வேண்டும்? (How much ginger should I take daily?)

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3–4 கிராம் இஞ்சி சாற்றை உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு நான்கு கிராம் மேல் இஞ்சி சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 1 கிராமுக்கு மேல் இஞ்சி சாற்றை உட்கொள்ள வேண்டாம். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இஞ்சி பரிந்துரைக்கப்படவில்லை. இஞ்சியை அதிகம் உட்கொண்டால் வீக்கம், வயிற்றுப் பிரச்னைகள், இதயப் பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.


আরও পড়ুন – 
Benefits of Ginger for Hair in Hindi

14 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT