logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
பப்பாளி விதையின் பயன்கள் மற்றும் அதைப் பயன்படுத்தும் முறைகள் (Health Benefits Of Papaya Seeds In Tamil)

பப்பாளி விதையின் பயன்கள் மற்றும் அதைப் பயன்படுத்தும் முறைகள் (Health Benefits Of Papaya Seeds In Tamil)

பப்பாளி பழம் மிக சுவையானது. பழத்தின் பயன்கள் அனைவரும் அறிந்தவை தான். ஆனால் நம்மில் பலருக்கு பப்பாளி பழத்தின் கொட்டையின் பயன்கள் தெரியாமல் கொட்டையினை வீசி விடுகிறோம். இங்கு நாம் கொட்டையின் பயன்கள், பயன் படுத்தும் விதம் அனைத்தையும் காண்போம்.

பப்பாளி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு (Health Benefits Of Papaya Seeds In Tamil) 

கல்லீரல் பலமாகும் (Keeps Liver Healthy) :

பப்பாளி விதையை (papaya seeds) நன்கு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். அதை சிறிது அளவு எலும்பிச்சை சாறுடன் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் சிரோசிஸ் என்னும் நோய் வராமல் தடுக்கலாம். அல்லது பப்பாளி விதையின் பொடியை உணவில் கலந்தும் சாப்பிடலாம். தினமும் சாப்பிட்டால்  கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

Also Read : கிராம்புகளின் நன்மைகள்

Health Benefits Of Papaya Seeds

ADVERTISEMENT

Also Read Benefits Of Cinnamon Powder In Tamil

சிறு நீரக பிரச்சனையின் தீர்வு (Papaya for Kidney Stones) :

இந்த காலத்தில் பலருக்கு சிறு நீரகத்தில் கல்லு பிரச்சனை உள்ளது.  அதனால் சிறுநீர் கழிக்க கஷ்ட படுகிறார்கள். தினமும் 8-10 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பப்பாளி விதையினை நன்கு தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு அதை ஆற வைத்து குடித்தால்  கல் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது. விதை கிடைக்காதவர்கள் பொடியினை சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.

டைபாய்டு மற்றும் டெங்கு குணமாகும் (For Dengue and Typhoid) :

பகலில் கடிக்கும் கொசுவினால் டெங்கு நோய் பரவுகிறது. பல வகை மருந்து உண்டும் பயனில்லாமல் பலர்  இறந்துவிட்டார்கள். இதற்கு சிறந்த இயற்கை மருந்து பப்பாளி விதை என்று கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் கூறியுள்ளது.

பயன்படுத்தும் முறை:

ADVERTISEMENT

250 மில்லி பால் எடுத்து கொள்ள வேண்டும். அதை 100 மில்லி பால் ஆக சுண்டும் வரை காட்சி ஆற வைக்க வேண்டும். அதில் ஒரு கரண்டி பப்பாளி விதை பொடியை கலக்க வேண்டும்.  அந்த பாலை தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் டைபாய்டு டெங்கு குணமாகிவிடும். உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.

Also Read: எள் விதையின் நன்மைகள் (Benefits of Sesame Seeds)

வயிற்று புழு நீங்க (Kill Abdominal Worm) :

அதிக இனிப்பு தின்பண்டங்களை உண்பதால் வயிற்றில் புழு வளரும். இதனால் வயிற்று வலி வரும். பப்பாளி விதையினை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட வேண்டும். விதை இல்லாதவர்கள் பொடியை நீரில் கலந்து குடித்தால் புழு இறந்து விடும். அல்லது இனிப்பு சாப்பிட்டவுடன் 4-5 விதையை நன்கு மென்று முழுங்க வேண்டும்.

சருமத்திற்கு நன்மை தரும் அவகேடோ

ADVERTISEMENT

கர்ப்பத்தடை மருந்து (Natural Birth Control) :

Health Benefits Of Papaya Seeds

நம் நாட்டில் கர்ப்பத்தடை மருந்தாக பல ஆண்டுகளாக பயன்படுத்தும் மருந்து பப்பாளி விதை தான். இது இயற்கை மருந்தாகும். ஆனால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாது.

பயன்படுத்தும் முறைகள்:

ஒரு பப்பாளி பழத்தின் விதைகள் அனைத்தையும் எடுத்து கொள்ள வேண்டும்.  அதை காலையில் எழுந்தவுடன் நன்கு மென்று விழுங்கவும். அதன் சுவை பிடிக்காதவர்கள் சிறிது நாட்டுச்சக்கரை கலந்து சாப்பிடலாம்.  அல்லது விதையை நீரில் 20 நிமிடம் கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி சிறிது சக்கரை கலந்து குடிக்கலாம்.

ADVERTISEMENT

மேலும் படிக்க – சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் செய்ய வேண்டியது!

செரிமானம் அதிகரிக்க (Helps in Proper Digestion) :

நம் அன்றாட உணவில் பப்பாளி விதையினை கலந்து சாப்பிட்டால் செரிமானம் நன்றாகும். சிறிது அளவு சுக்கு எடுத்து கொள்ள வேண்டும் அதன் தோலை நன்கு சீவி விட வேண்டும். அதை நீரில் கொதிக்க வைத்து 5 நிமிடம் ஆனதும் பப்பாளி விதையை அதில் போட்டு கொதிக்க வைக்கவும்.  அந்த நீரை உணவுக்கு பின்பு குடித்தால் நன்கு செரிக்கும். ஆடு கோழி இறைச்சி உண்பவர்கள் அதை சமைக்கும் போது 5-8 பப்பாளி விதை கலந்து சமைத்தால் வயிற்று வலி வராது.

ஒட்டுண்ணிகள் குணமாக (Naturally Kill Parasites) :

பப்பாளி விதை 4-5 பொடி செய்து சிறிது அளவு தேன் கலந்து ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் parasites குணமாகும்.

Also Read About அஞ்சீரின் ஆரோக்கிய நன்மைகள்

ADVERTISEMENT

புற்றுநோய் குணமாக (Prevent Cancer) :

இந்தியாவில் புற்றுநோயால் உயிர் இறப்பவர்கள் அதிகம்.  அதற்கு சிறந்த மருந்து சரியாக தெரியவில்லை. இயற்கை மருந்து உண்டால் விரைவில் குணமாகும். பப்பாளி விதையில் உள்ள ஒலீயிக் ஆசிட் மற்றும் பால்மிடிக் ஆசிட் புற்றுநோய் குணமாக உதவும்.  

பயன்படுத்தும் முறை :

ஒரு படி அரிசியை நன்கு கழுவி அதில் அரிசி கஞ்சி வைக்க வேண்டும். சாதம் நன்கு குலைந்த பின்பு பப்பாளி விதை பொடி ஒரு கரண்டியை அதில் கலக்கவும்.  கஞ்சி ஆரிய பின்பு ஒரு நாளைக்கு 3 முறை இதை குடிக்கவும். ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால் புற்றுநோய் குறையும்.

Also Read Benefits Of Asparagus

ADVERTISEMENT

முடி அடர்த்தியாக (Dense Hair Naturally) :

Health Benefits Of Papaya Seeds

பப்பாளி விதை பொடியினை  தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில்  30 நிமிடம் ஊற வைத்து நன்கு அலசி குளிக்க வேண்டும்.  முடி அடர்த்தியாக வளரும். மேலும் விதையில் உள்ள ஒலீயிக் ஆசிட்  பொடுகு வராமல் தடுக்கும்.

Also Read About ப்ரோக்கோலி நன்மைகள்
 

ஆர்த்ரைடிஸ் குணமாகும் (Papaya for Arthritis):

நீண்ட நேரம் நிற்பதாலும் ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து இருப்பதால் மூட்டு வலி ஏற்படுகிறது.  மூட்டு வீக்கம் வராமல் பப்பாளி விதை தடுக்கும். ஆர்தரைடிஸ்க்கு சிறந்த மருந்து ஆகும்.

ADVERTISEMENT

பப்பாளி விதையை பொதுவாக சாப்பிடும் முறை (How To Eat Papaya)

பப்பாளி விதையை வெயிலில் நன்கு காய வைத்து கொள்ள வேண்டும். அதை நன்கு பொடி ஆக்க வேண்டும். பொடியை சல்லடையில் சலித்து எடுத்து வைத்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை இந்த பொடி கெடாமல் இருக்கும்.  தினமும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். இந்த பொடியை பிரிட்ஜ்ல் வைத்தும் பயன்படுத்தலாம். பப்பாளி விதை தினமும் கிடைப்பவர்கள் அதை பச்சையாகவே சாப்பிடலாம்.

இவ்வளவு அறிய வகை மருத்துவ குணம் கொண்டது பப்பாளி பழத்தின் விதை ஆகும். இதை இனி வேண்டாம் என்று விசிறிவிடாமல் நம் அன்றாட உணவுடன் கலந்து உண்டால் பல நோய்களில் இருந்து விடுபட்டும் (ஆரோக்கியம்) நோய் வராமலும் நம் உடலினை (health) பார்த்து கொள்ள முடியும்.இதை உண்ணும் முன்பதாக உங்கள் மருத்துவரிடமும் ஆலோசித்து, உண்ணுவது நல்லது.

மேலும் படிக்க – கோடைகாலத்திற்கு ஏற்ற பாதுகாப்பான உணவுகள்! கட்டுக்கதைகளும் உண்மைகளும்

பட ஆதாரம்  – பிக்ஸாபெ, அன்ஸ்பிளாஷ் , ,பேக்செல்ஸ் 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

15 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT