பொதுவாக உப்பு என்பது கடல் நீரில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்துப்பு என்கிற ஹிமாலயன் உப்பு பாறைகளில் இருந்தே வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த பாறைகள் ஹிமாலய மலைத்தொடர்களில் பரவலாக இருக்கின்றன. முந்தைய பிரிவினை அற்ற இந்தியாவாக இருந்த போது இமாலய மலைத்தொடர்கள் பிரிக்கப்படவில்லை.
Table of Contents
ஆகவே இமாலய உப்பு என பெயர் வந்தது. இந்திய உப்பு என்பதுதான் இந்துப்பாக மாறியது. பிரிவினைக்கு பின்னர் சில உப்பு பாறைகள் பாகிஸ்தான் எல்லை பகுதியை சேர்ந்து விட்டன. உலகிலேயே மிகப்பெரிய உப்பு சுரங்கம் பாகிஸ்தானில் தான் இருக்கிறது.
அங்கிருந்தும் இந்தியாவின் மலை பகுதிகளில் இருந்தும் இந்த உப்பு பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதுதான் ஹிமாலயன் உப்பு எனப்படும் இந்துப்புவின் வரலாறு. (pink salt)
உப்பு ஏன் உடலுக்கு தேவை ?
உப்பு மனித உயிர்கள் உயிர் வாழ அவசியம் தேவையான ஒரு பொருள். உப்பு என்பது கண்டுபிடிக்கப்படாதது வரை மனித வரலாற்றில் ருசி என்பது இல்லாமல் இருந்தது. உப்பை உடலில் சேர்க்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். உப்பில் இருக்கும் சோடியம் மனித உயிருக்கு அவசியமானது. உடலில் உள்ள நீர்ச்சத்தை சரியாக பராமரிக்க உப்பென்பது அவசியமாகிறது. ஒரு ஆய்வில் உடலுக்கு தேவையான சோடியம் எடுத்துக் கொள்ளாவிட்டால் சிறுநீரக செயலிழத்தல் இதய நோய்கள் போன்ற கடுமையான பிரச்னைகளால் மனிதர்கள் சிரமப்படலாம் என்பது உறுதியானது.
உப்பின் கரிப்பு சுவை கார உணவுகளின் ருசியை அதிகரிக்கிறது. முன்னோர்கள் காலம் முதல் கடல் உப்பு மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. ஆனால் கடல் உப்பில் உள்ள அயோடின் குறைபாட்டால் உலக மக்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் தைராய்டு எனும் நோய்க்கு ஆளானார்கள். இதனை சரி செய்ய அயோடினை கடல் உப்பில் கலக்க பரிந்துரை செய்தனர். சாதாரண உப்பு தடை செய்யப்பட்டது.
உலக அளவில் தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் வெறும் 2 சதவிகிதம் பேர்தான். அந்த 2 சதவிகிதம் பேருக்கு நன்மை கிடைக்க 98 சதவிகித சாமான்யர்களும் அயோடின் உப்பை சாப்பிட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியிருக்கிறது. அயோடின் கலந்து உப்பை தயாரிக்கும் போது பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கிறது. இயற்கையான மினரல்களை அழித்துதான் அயோடினை நாம் சாப்பிடும் உப்பில் சேர்க்கிறார்கள்.
உப்பு தயாரிக்கும் உப்பளங்களில் அயோடின் அளவு குறைந்தால் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இதனை தவிர்க்க மக்கள் உடல்நலனில் அக்கறை இன்றி அதிக அளவில் அயோடின் சேர்க்கப்படுகிறது.
gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock
இதை தவிர்க்க நாம் என்ன செய்யலாம் ?
ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டபடி உப்பு பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இந்துப்பு இந்த ரசாயன முறைப்படி தயார் ஆவதில்லை. அதன் கனிமங்கள் (minerals) அப்படியே இருக்கிறது. எந்த வித ரசாயன கலவைகளை இல்லாமல் இயற்கையான சத்துக்களுடன் இந்துப்பு நமக்கு கிடைக்கிறது. மனிதர்களுக்கு அவசியமான 80 தாது உப்புக்கள் இந்துப்பில் நமக்கு கிடைக்கிறது. ஆகவே இந்த இந்துப்புவை நாம் சமையலில் பயன்படுத்துவதன் மூலம் இழந்த கனிம சத்துக்களை நாம் சுலபமாக பெற முடியும். நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
இந்துப்புவின் நன்மைகள்
இயற்கையான தாது உப்புக்கள் ஏராளமான எண்ணிக்கையில் உள்ள இந்துப்புவில் 85 சதவிகிதம் சோடியம் மற்றும் 15 சதவிகிதம் கனிமங்கள் நிறைந்தவை. இந்துப்பு மூலமாகவே ஒரு மிகப்பெரிய வரலாற்று நாகரிகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது ! நைல் நதி நாகரிகத்தை பின்பற்றிய எகிப்தியர்கள் அங்கே உள்ள உப்பு பாறைகளை வெட்டி எடுத்து உலகமெங்கும் விற்பனை செய்ததன் மூலம் வளமை நிறைந்தவர்களாக மாறி வரலாற்றில் நாகரிகத்தில் தனி இடம் பிடித்தனர். இதன் நன்மைகளாவன :
கனிமங்கள் அதிகம்
இந்துப்புவில் 84 விதமான உடலுக்கு நன்மை தரும் கனிமங்கள் அடங்கி இருக்கின்றன.சாதாரண உப்பு பதப்படுத்தப்பட்டு அயோடின் சேர்க்கப்படும் அதில் உள்ள எல்லா சத்துக்களும் அழிந்து சோடியம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆனால் இந்துப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு சோடியம் உடன் கனிமங்களும் கிடைக்கின்றன.
குறைந்த அளவு சோடியம்
பதப்படுத்தப்பட்ட கடல் உப்பில் சோடியம் அளவு அதிகம் இருப்பதற்கு காரணம் அதில் அயோடின் சேர்ப்பதால் சில ரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. ஆனால் இந்துப்புவில் சோடியம் அளவு சாதாரண உப்பை விட குறைவான அளவே இருக்கிறது.
இயற்கை உப்பு
கடலில் கிடைப்பதும் இயற்கையான உப்புதானே என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் கடல் உப்புக்களில் அயோடின் சேர்க்கப்படும் செயல்முறைகளால் தனது இயற்கை தன்மையை அது இழந்து விடுகிறது. ஆனால் இந்துப்பு இந்த இயற்கை தன்மையோடே கிடைக்கிறது.
நீர்ச்சத்தை பராமரிக்கிறது
உடலில் உள்ள நீர்த்தன்மையை சமப்படுத்தி பராமரிக்க இந்துப்பு மிக உதவி செய்கிறது. இதனால் dehydration எனப்படும் நீர்சத்து குறைபாடு நீங்குகிறது. இதற்கு அளவான சோடியம் கொண்ட இந்துப்பு அவசியம்.
gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock
ரத்த சர்க்கரையை சமன் செய்கிறது
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்ற உப்பு இந்துப்பு. இது ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை சமன் செய்து விடுகிறது. மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்து கொள்வது சிறப்பான பலனை தரும்.
எலும்புகளை வலுவாக்குகிறது
உடல் வடிவத்திற்கும் வலிமைக்கும் காரணமானவை எலும்புகள். எலும்புகளை வலிமைப்படுத்தி கொள்ள தனிப்பட்ட பொடிகளை தாங்கள் அருந்தும் பாலில் சேர்த்து கொள்ள தேவைகள் இல்லை. உங்கள் அன்றாட சமையலில் இந்துப்புவை இணைத்து கொள்ளுங்கள். அதுவே போதும்
ஆற்றலை அதிகரிக்கும்
உங்களுக்கு அடிக்கடி உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டால் இந்துப்புவை உணவில் சேர்த்து வாருங்கள். சில நாட்களிலேயே வித்யாசத்தை உணர்வீர்கள். சுறுசுறுப்பாக மாறி உங்கள் சோர்வை உடைத்து வெளியே வருவீர்கள்.
ஆஸ்துமா வியாதிக்கு அருமருந்து
இந்துப்பு நுரையீரல் சம்பந்தமான குறைபாடுகளை நீக்குகிறது. நுரையீரல்களில் உள்ள ம்யுகஸ்களின் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் ஆஸ்துமா ஒவ்வாமை போன்ற உடல் பிரச்னைகளை போக்குகிறது. தினமும் 2 அல்லது மூன்று டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை இந்துப்பு போட்டு தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடல் பாதுகாப்படையும்.
gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்
இந்துப்பு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பலவித நோய்கள் தொற்றுக்கள் கிருமிகள் உங்களை அண்டாது. செல்களில் உள்ள PH சமன் குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
உங்கள் தூக்க சுழற்சியை சரி செய்யும்
ஒரு சிட்டிகை உப்பு மூலம் உங்கள் வாழ்க்கை எவ்வளவு ஆரோக்கியமாக மாறுகிறது என்றால் தூக்கமே இல்லாமல் நீங்கள் தவிக்கிறீர்கள் அல்லது முறையான தூக்க நேரங்களை கடைபிடிக்க முடியவில்லை என்றால் தினமும் உங்கள் உணவில் இந்துப்புவை சேருங்கள். உங்கள் தூக்க சுழற்சி சரியாகும். அதன் மூலம் உளவியல் ரீதியான முக்கிய சிக்கல்கள் சரியாகும்.
அழகை பராமரிப்பதில் இந்துப்புவின் பங்கு மற்றும் பயன்பாடுகள்
பொதுவாக இந்துப்பு சமையலுக்கு பயன்படுகிறது என்றே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அதனை தாண்டியும் இந்துப்புவை கீழ்கண்ட முறைகளில் நாம் பயன்படுத்த முடியும்.
இயற்கையாக கிடைக்கும் இந்துப்பு என்பது நமது இளமையை தக்கவைக்கவும் உதவுகிறது. உடல் வயதடையும் தன்மையை மாற்றி பொலிவுடன் உங்களை திகழ செய்கிறது. மேலும் சில அழகு பயன்கள் உங்களுக்காக.
gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock
மாஸ்க் Balancing mask
சருமத்தை இதமாக உணர வைத்து குணமாக்குவதில் இந்துப்பு முதலிடம் வகிக்கிறது. அதை போலவே உடலில் உள்ள எண்ணெய் தன்மையை சரி செய்து நீரின் அளவு குறையாமலும் பார்த்துக் கொள்கிறது. நான்கு ஸ்பூன் தேன் உடன் இரண்டு ஸ்பூன் நன்கு பொடித்த இந்துப்புவை கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி உலரவைத்து பின்னர் கழுவி விடுங்கள்
gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock
உடலுக்கு ஸ்க்ரப்பர்
உடலில் உள்ள இறந்த செல்களை நீக்குவதில் இந்துப்பு பயன்படுகிறது. இதில் உள்ள கனிமங்கள் சருமத்தை இதமாக உணரவைக்கிறது. உடலில் உள்ள நீர்த்தன்மையை பாதுகாக்கிறது.
gifskey, pexels, pixabay, Shutter Stock
சால்ட் குளியல்
உப்பினை குளியலில் பயன்படுத்தும் போது உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் அழுக்குகள் போன்றவை மிருதுவான முறையில் நீக்கப்படுகின்றன. உங்கள் உடல் முழுமையாக சுத்தம் செய்யப்படுகிறது. குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணையை இந்துப்புவோடு கலந்து உடல் முழுக்க தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்து பாருங்கள். உடல் வலி நீங்கி புத்துணர்வோடு இருப்பீர்கள்.
பாத் சால்ட்
இந்துப்புவை குளிக்கும்போது நீரில் ஊற்றி அதனை பாத் சால்டாக பயன்படுத்தலாம். பாத்டப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். இது நம் தசைகளை தளர்த்தி நம்மை ரிலாக்ஸாக உணர வைக்கிறது.
சோப்
இந்துப்பு மூலம் இப்போது சோப் தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் உங்கள் உடலை வலிகள் இல்லாமல் புத்துணர்வோடு வைத்து கொள்ளலாம்.
gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock
பொடுகு நிவாரணி
நூற்றில் 98 சதவிகிதம் பேருக்கு பொடுகு தொல்லையால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன, முதுகில் பருக்கள் வருவது முடி கொட்டுவது அரிப்பு போன்ற பல சிரமங்களை சந்திக்க வேண்டி வருகிறது. இதனை தீர்க்க உங்கள் தலைமுடியை பகுதிகள் பகுதிகளாக பிரித்து அதில் கொஞ்சம் உப்பை தூவுங்கள். பின்னர் ஈரமான விரல்களால் மெல்ல மசாஜ் செய்யுங்கள். பொடுகு போய்விடும்.
அலங்கார விளக்கு
ஹிமாலயன் சால்ட் எனப்படும் இந்துப்புவை கொண்டு அலங்கார விளக்கு தயார் செய்யலாம். இதனை பயன்படுத்தும் போது நேர்மறை தன்மை வீட்டில் நிரந்தரமாகும்.
gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock
இந்துப்பு வாசனை திரவியம் & இந்துப்பு டைல்ஸ்
இரண்டே நிமிடங்களில் இந்துப்பை நம்மால் வாசனை திரவியமாக மாற்ற முடியும். மூன்று ஸ்பூன் இந்துப்பு, சில துளிகள் எசன்ஷியல் ஆயில், இரண்டு ஸ்பூன் வோட்கா இவற்றை கலந்து கொண்டு ஒரு சுத்தமான ஸ்பிரேயர் பாட்டிலில் ஊற்றி வைத்து உபயோகிக்கலாம்.
இந்துப்பு டைல்ஸ்
இந்துப்பு பாறை வடிவங்களில் கிடைக்கும் என்பதால் அதனை டைல்ஸ்களாக மாற்றி நாம் பதித்து கொள்ள முடியும். அதில் நடப்பதன் மூலம் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் இரண்டுமே அதிகரிக்கும். 350 டிகிரி சூட்டில் இந்துப்பு பெரிய கட்டிகளாக எடுத்து சுட வைத்து அதனை உங்கள் பாதங்கள் படும் இடங்களில் வைத்துக் கொள்ள கால்வலி என்பதெல்லாம் காணாமல் போகும்
gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock
இந்துப்பு பக்கவிளைவுகள்
இந்துப்பு பலவிதங்களில் உடலுக்கு நன்மை புரிகிறது ஆனாலும் சில சமயம் இதில் பக்கவிளைவுகள் இண்டாகின்றன. அது என்னென்ன அதற்கான தீர்வுகள் பற்றி பார்க்கலாம்.
அயோடின் அளவு
இந்துப்புவில் ஏற்கனவே சொன்னது போல அயோடின் அளவு குறைந்திருப்பதால் சில பக்கவிளைவுகள் தைராய்டு உள்ளவர்களுக்கு ஏற்படலாம். இதனை தவிர்க்க கடல் உப்பு இந்துப்பு இரண்டையும் சம அளவில் கலந்து பயன்படுத்தலாம்.
சோடியம் பயன்பாடு
அதிக அளவிலான சோடியம் உடலில் இருந்தால் பல்வேறு பக்க விளைவுகள் உண்டாகலாம். இது இரண்டு வகையான உப்பிற்கும் பொருத்தமான ஒன்றுதான். ஆகவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பை அதிகம் சேர்க்க கூடாது என்று சொல்லப்படுகிறது. அதிக அளவிலான உப்பு சிறுநீரக செயல் இழப்பு வரை கொண்டு செல்லும்.
gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock
அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள்
ஒரு நாளைக்கு எவ்வளவு இந்துப்பு எடுத்து கொள்ள வேண்டும்?
மனித உடல் ஒரு நாளைக்கு 500மில்லிகிராம் அளவில் உப்பை சாப்பிட வேண்டும். இந்துப்பு என்று சொல்லும்போது ஒரு நாளைக்கு 1/4 டீஸ்பூன் அளவில் சாப்பிட வேண்டும்.
இந்துப்பு நம் உடலுக்குள் சென்று என்ன செய்கிறது?
இந்துப்பு தண்ணீரில் கரைந்த உடன் உங்களுக்கு கிடைப்பது செறிவான அடர்த்தியான 84 கனிமங்களை தன்னுள்ளே கொண்ட அற்புத பானமாக அது மாறுகிறது. உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் வளர்ச்சிக்கும் இந்துப்பு உதவுகிறது. உடலின் நச்சுக்களை நீக்குகிறது.
இந்துப்பு சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்குமா!
அளவு தாண்டி எடுத்து கொள்ளும் எந்த ஒரு உணவும் உங்களுக்கு நஞ்சுதான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அளவாக உட்கொள்வது நல்லது.
இந்துப்பின் மூலம் விளக்கு விற்கப்படுவது பற்றி?
இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. இந்துப்பு மூலம் தயாரிக்கப்படும் விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் சுற்றுப்புறத்தை பரிசுத்தகம் ஆக்குகிறீர்கள். நச்சு காற்றை நீக்குகிறீர்கள். ரேடியேஷன் பயங்கரங்களை குறைக்கிறீர்கள். ஆஸ்துமா போன்ற நோய்களை தடை செய்கிறீர்கள். புத்துணர்வோடு எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் மகிழ்வான மனநிலையில் இருப்பீர்கள்.
gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
மினுமினுப்பான முகம் முதல்.. தழும்புகள் அற்ற தேகம் வரை.. பயோ ஆயிலின் பலவிதமான பலன்கள்!
Read More From Acne
பார்லருக்கு போகாமலே அழகைப் பாதுகாக்கலாம்! கரும்புள்ளிக்கு வைக்கலாமா ஒரு முற்றுப்புள்ளி!
Deepa Lakshmi