Lifestyle

நண்பர்கள் தினத்தை கொண்டாட சில பரிசு யோசனைகள், வாழ்த்து அட்டைகளும்! (Friendship Day Gifts)

Swathi Subramanian  |  Jul 11, 2019
நண்பர்கள் தினத்தை கொண்டாட சில பரிசு யோசனைகள், வாழ்த்து அட்டைகளும்! (Friendship Day Gifts)

நண்பர்கள் தினம் என்று சொல்லிவிட்டாலே, வயது வரம்பின்றி, ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைத்து நண்பர்களுக்கும் உற்சாகம் வந்துவிடும்! இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் நாள் அன்று நண்பர்கள் தினம் வருகின்றது. தினமும் நண்பர்களை (friendship) பார்கின்றோம் அல்லது அலைபேசியில் அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கின்றோம், ஆனால் நண்பர்கள் தினம் என்று வந்து விட்டாலே ஏன் அனைவருக்குள்ளும் அத்துணை உற்சாகம்?

Table of Contents

  1. நண்பர்கள் தினத்தின் முக்கியத்துவம் (Importance Of Friendship Day)
  2. வாழ்த்து அட்டைகள் தேர்வு செய்வது எப்படி! (Tips To Choose Right Gift For Your Friend)
  3. நண்பர் தினத்திற்கான வாழ்த்து அட்டைகள் (Greeting Card Selection Tips)
  4. நண்பர்கள் தினத்தன்று செய்ய வேண்டியவைகள் (Activities To Do On Your Friendship Day With Friends)
  5. பெண் தோழிகளுக்கான பரிசு யோசனைகள் (Friendship Day Gift Ideas For Her)
  6. ஆண் தோழர்களுக்கான பரிசு யோசனைகள் (Friendship Day Gift Ideas For Him)
  7. பெற்றோர்களுக்கு நண்பர்கள் தின பரிசுகள் (Friendship Day Gift Ideas For Parents)
  8. விருப்பமானவர்களுக்கு பரிசளிக்க யோசனைகள் (Friendship Day Gifts For Best Friend)
  9. வீட்டில் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் (DIY Friendship Day Gifts)
  10. ரூ.500க்கு குறைவான பரிசு பொருட்கள் (Friendship Day Gifts Under 500 INR)
  11. வாழ்த்து அட்டைகள் வாங்க ஏற்ற இணையதளம் (Friendship Day Greeting Cards)

இதற்கு நிச்சயம் ஒரு காரணம் உண்டு! உங்கள் மனதில் பல நாட்களாக உங்கள் நண்பருக்காக (friendship) ஏதாவது ஒரு மகிழ்ச்சியூட்டும் பரிசை தர விரும்பினாலோ, அல்லது அவருக்கு இன்ப அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஏதாவது சொல்ல விரும்பினாலோ, இந்த நாளை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இந்த நாளை நீங்கள் ஏன் உங்கள் நண்பர்களுடன் கொண்டாட வேண்டும் என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? மேலும் படியுங்கள்!

Also Read About காதலனுக்கான பிறந்தநாள் பரிசு யோசனைகள்

நண்பர்கள் தினத்தின் முக்கியத்துவம் (Importance Of Friendship Day)

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நண்பர்கள் (friendship) ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும் உங்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் உங்களுக்கு புரிய வைக்கின்றனர். ஏதோ வேலை முடிந்தவுடன் பிரிந்து விடுவது நட்பு அல்ல. அது உங்கள் முதல் அறிமுகம் முதல் ஆயுள் வரை தொடரும் ஒரு உறவாக இருக்க வேண்டும். நம்பிக்கை மற்றும் எந்த சூழலிலும் எதிர்பார்பில்லா உதவும் குணம். இவ்விரண்டுமே நட்பு ஆயுள் வரை தொடர காரணமாக உள்ளது.

மேலும் படிக்க – ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள்

pixabay

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே, நட்பின் முக்கியத்துவத்தை பற்றின புரிதலை ஏற்படுத்த வேண்டும். உங்கள் நட்பு எந்த வயதில் தொடங்கினாலும், அது எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல், கடைசி வரை தொடரும் என்றால், நீங்கள் நிச்சயம் இந்த பூமியில் அதிர்ஷ்ட்டசாலி தான்!

வாழ்த்து அட்டைகள் தேர்வு செய்வது எப்படி! (Tips To Choose Right Gift For Your Friend)

Pixabay

நண்பர் தினத்திற்கான வாழ்த்து அட்டைகள் (Greeting Card Selection Tips)

பரிசுகள் மட்டுமன்றி, நண்பர்கள் தின கொண்டாட்டத்திற்கு வாழ்த்து அட்டைகளும் அதிகம் பகிரப்படுகின்றது. இதனை தனியாகவோ அல்லது வேறு பரிசுடனோ சேர்த்து கொடுக்கலாம். வாழ்த்து அட்டைகள் பல வகைகளிலும், அளவுகளிலும், வண்ணங்களிலும், விலைகளிலும் கிடைகின்றன. இதனால், உங்களுக்கு பிடித்த ஒன்றஈ நீங்கள் எளிதாக தேர்வு செய்யலாம். உங்கள் நண்பருக்கு வாழ்த்து அட்டையை எப்படி தேர்வு செய்வது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே, சில குறிப்புகள்,

மேலும் படிக்க – அசத்தலான செல்ஃபி க்கான சில கேப்ஷன்கள் மற்றும் மேற்கோள்கள்!

1. சிறந்த வாழ்த்து அட்டையை தேர்வு செய்வது எப்படி? (Tips To Choose Greeting Cards)

Pixabay

2. நண்பர்கள் தின வாழ்த்தின் சில வரிகள் (Quotes For Greeting Cards)

1. அமைதி அறிவு அன்பு ஆனந்தம் அன்னை கற்றுகொடுத்தார்
ஆனால், சாதிக்கும் எண்ணத்தையும், முயற்சியின் மூலத்தையும் காட்டியது நின் நட்பு!

2. நட்பு அன்பில் நிறைந்து வழிவது,
நட்பில் கரைகள் கிடையாது!

3. நட்பு நம்பிக்கையிலானது,
நட்பு நீடித்து வருவது,
நட்பு மறக்கக்கூடியது அல்ல,
நட்பு எளிதில் முரியாதது! 

4. மலர்களின் எண்ணிக்கை கொண்டு
தோட்டத்தின் அழகை அறியலாம்,
நட்பின் எண்ணிக்கை கொண்டு
வாழ்க்கையின் அழகை அறியலாம்!

5. முகத்தில் தெரியும் அழுகையையும் சிரிப்பையும்
காண்பது உறவு.
அழுகைக்கும், சிரிபிற்கும் பின் இருக்கும் காரணத்தை
கண்டறிவது நட்பு!

6. பின்னோக்கி பார்ப்பதில் உறவுகள் வேதனைகளை கொடுக்கலாம்,
ஆனால் நட்பில் பின்னோக்கி பார்த்தால்
சந்தோசத்தையே கொடுக்கும்!

3. வாழ்த்து அட்டைகளின் வகைகள் (Types Of Greeting Card)

வாழ்த்து அட்டைகள் பல வகைகளில் உள்ளன. நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு தேர்வு செய்வதற்கு முன் அவற்றை பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வதால், சரியான ஒன்றை தேர்வு செய்யலாம். உங்களுக்காக, இங்கே சில குறிப்புகள்;

Pixabay

மடக்கும் வாழ்த்து அட்டைகள்: இந்த வகை பொதுவாக அதிகம் தேர்வு செய்யப் படுகின்றது. இதில் அதிகம் இடம் இருப்பதால், உங்கள் வாழ்த்து கவிதைகளை விரும்பியபடி எழுதலாம். மேலும் சில படங்களையும் வரையலாம்.

ஒரே அட்டை: இதனை மடக்க முடியாது. ஒரு அட்டைப் போல இருக்கும். இதில் நீங்கள் எளிமையாக ஏதாவது கூற விரும்பினால், எழுதி உங்கள் நண்பருக்கு ஒரு அழகான உரையில் வைத்து கொடுக்கலாம்

அனைத்து கொண்டாட்டங்களுக்கும் கொடுக்கும் வாழ்த்து அட்டை: இத்தகைய அட்டைகள் நீங்கள் எந்த கொண்டாட்டத்திற்கும் தேர்வு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும், அதனால், குறிப்பிடத்தக்க தேர்வு என்று இல்லாமல், உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து உங்கள் நண்பருக்கு தரலாம்.

இணையதள அட்டைகள்: இவை இப்போது மிகவும் பிரபலமாகி வருகின்றது. மேலும் இதற்கு செலவுகளும் ஆவதில்லை. இலவசமாகவே பல இணையதளங்களில் கிடைகின்றது. சில விநாடிகளுக்குள்ளேயே தேர்வு செய்து உங்கள் நண்பருக்கு அனுப்பி விடலாம்.

நண்பர்கள் தினத்தன்று செய்ய வேண்டியவைகள் (Activities To Do On Your Friendship Day With Friends)

நண்பர்கள் தினம் எப்போதும் வரும் என்று காத்திருக்க சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றது. அன்று நிச்சயம் சில விசேடமான கொண்டாட்டம் இருக்கும். அதிலும், குறிப்பாக அனைத்து நண்பர்களும் ஒன்று கூடி மகிழ்ச்சியோடு அந்த தினத்தை கொண்டாடுவதென்பது என்றும் உங்கள் நினைவில் இனிமையாக இருக்கும் ஒரு நினைவாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம். நீங்கள் அப்படி ஒரு கொண்டாட்டத்தை திட்டமிட்டுக் கொண்டிருகின்றீர்கள் என்றால், உங்களுக்காக சில யோசனைகள் இங்கே;

1. ஒன்றிணைந்து விருந்து: இது மிகவும் சுவாரசியமான ஒன்று. அனைத்து நண்பர்களும் ஓர் இடத்தில் ஒன்று கூடி விருந்து ஏற்பட்டுகள் செய்யலாம். அனைவருக்கும் பிடித்தமான உணவுகளை உணவு விடுதியில் வாங்கியோ அல்லது நீங்களாகவே ஒன்று சேர்ந்து சமைத்தோ சாப்பிடலாம். இது நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல நினைவுகளை தரக் கூடிய அனுபவமாக இருக்கும். மேலும் இந்த விருந்தில் நீங்கள் சில விறுவிறுப்பான மற்றும் சுவாரசியமான போட்டிகள் மற்றும் விளையாட்டுகளை நிகழ்த்தலாம். இது மேலும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

2. திரைப்படத்திற்கு செல்லலாம். நண்பர்கள் தினத்தன்று ஏதாவது ஒரு சுவாரசியமான புது திரைப்படங்கள் வெளியிடப் பட்டிருந்தால், நீங்கள் அனைவரும் ஒரு குழுவாக சேர்ந்து திரைப்படத்திற்கு செல்லலாம். இதுவும் உங்களது நேரத்தை நண்பர்கள் தினத்தன்று சிறப்பாக செலவிட உதவும். மேலும் உங்கள் மகிழ்ச்சியையும் அதிகப் படுத்தும்.

3. நண்பர்களுடன் சுற்றுலா செல்லுங்கள்: மற்றுமொரு சுவாரசியமான நிகழ்ச்சி, உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நல்ல சுற்றுலா தளத்தை தேர்வு செய்து அனைவரும் சென்று வருவது. இது மேலும் உங்களுக்கு நல்ல நேரத்தை செலவிடுவது போக, மகிழ்ச்சியையும் அதிகரிக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். வழக்கம் போல வீட்டிற்குள்ளேயே உங்கள் நேரத்தை செலவிடாமல், இப்படி வெளிப்புற இடங்களுக்கு சென்று நேரத்தை செலவிடுவது சற்று சுவாரசியமான ஒன்று.

Pixabay

4. உணவு விடுதிக்கு செல்லலாம். எப்போதும் செல்லும் வழக்கமான உணவு விடுதி இல்லாமல், ஏதாவது ஒரு புது மற்றும் சுவாரசியமான உணவுகள் இருக்கும் விடுத்திக்கு உங்கள் நண்பர்களுடன் செல்லலாம். இது புது வகையான உணவை சுவைக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, உங்களுக்கு நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிட ஒரு சந்தர்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் இது ஒரு நல்ல நினைவாக உங்கள் மனதில் என்றும் நிற்கும்.

மேலும் படிக்க – முகத்தை பளபளப்பாக்கும் அதிசய நன்மைகள் தரும் அவகேடோ!

5. நண்பர்களுடன் சேர்ந்து உங்கள் பழைய நினைவுகளை அசைப் போடுங்கள்: பெரும்பாலான நண்பர்கள், நண்பர்கள் தினத்தன்று ஒன்று கூடி சிறிது நேரமாவது பழைய நினைவுகளை அசைப் போடா எண்ணுவார்கள். அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் அதை பயன் படுத்திக் கொண்டு, உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சிறு வயது முதல், நீங்கள் அறிமுகமான நிகழ்வுகள் மற்றும் கடந்து வந்த சுவாரசியமான நிகழ்வுகளை சற்று அசைப் போடலாம்.

6. வெளிப்புறத்தில் ஒன்று கூடி சமைத்து உண்ணலாம்: வழக்கம் போல வீட்டில் சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து, உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் ஏதாவது ஒரு நல்ல இயற்க்கை சூழ்ந்த இடத்தை தேர்ந்தெடுத்து, சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் உங்களுடன் எடுத்து சென்று ஒன்றாக சமைத்து சாப்பிடலாம். இது நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சித் தரும் ஒரு நிகழ்வாக நண்பர்கள் தினத்தன்று இருக்கும்.

பெண் தோழிகளுக்கான பரிசு யோசனைகள் (Friendship Day Gift Ideas For Her)

பெண் தொளிகளுக்கென்றே சில பிரத்யேகமான பரிசு பொருட்கள் உள்ளன. அவை நிச்சயம் உங்கள் தோழியை மகிழ்ச்சி அடைய செய்யும். அப்படி சில பொருட்களில், நீங்கள் எளிதாக தேர்வு செய்ய இங்கே சில;

சகோதரனுக்கு ரக்ஷா பந்தன் பரிசுகள் (Rakhi Gift Ideas For Brother)

1. அழகு சாதன பொருட்கள்:

இன்று இருக்கும் இளம் பெண்களில் பலர் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள். அப்படி உங்கள் தோழியும் இருந்தால், அவருக்கு விருப்பமான அல்லது அதிகம் பயன்படுத்தக் கூடிய அழகு சாதன பொருட்களை பரிசளிக்கலாம்.

2. ஆடைகள்:

பெண்களுக்கு பொதுவாக விதவிதமான ஆடைகள் அணியப் படிக்கும். அந்த வகையில், நீங்கள் உங்கள் தோழிக்கு பிடித்த புடவை அல்லது வேறு வகையான ஆடைகள் ஏதாவது ஒன்றை பரிசளிக்கலாம். இது அவரை மகிழ வைக்கும்.

3. ஆபரணங்கள்:

ஆபரணங்களை விரும்பாத பெண்கள் உண்டா? உங்கள் தோழிக்கு நீங்கள் அவர் முகத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் காதணிகள், மூக்குத்தி, சங்கிலி, வளையல் மற்றும் மேலும் பல ஆபரணங்களை பரிசளிக்கலாம். மேலும் இந்த ஆபரணங்கள் பல வகை உலோகங்களில் கிடைகின்றது. குறிப்பாக ஐம்பொன் நகைகள் குறைந்த விலையிலும், விதவிதமான வகைகளிலும் எளிதாக கிடைக்கும்.

4. மின்பொருள் பொருட்கள்:

உங்கள் தோழிக்கு அவரது ஸ்மார்ட் போன் பயன் பாட்டை அதிகரிக்கும் அல்லது எளிதாக்கும் வகையில் சில உபகரணங்களை தேர்வு செய்து பரிசளிக்கலாம். இது அவருக்கு உதவியாக இருக்கும்.

5. செடிகள்:

உங்கள் தோழிக்கு தோட்டக் கலையில் அதிக ஆர்வம் இருந்தால், அவருக்கு சில அறிய வகை செடிகளை நீங்கள் பரிசளிக்கலாம். குறிப்பாக போன்சாய் மரங்கள் இன்று அதிகம் பிரபலமாகி வருகின்றது. அப்படி ஒன்றரை நீங்கள் தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

6. சமையல் பொருட்கள்:

உங்கள் தோழிக்கு சமையல் செய்வது அதிகம் பிடிக்கும் என்றால், அது குறித்த பொருட்களை பரிசளிக்கலாம். குறிப்பாக புது வகை சமையல் புத்தகம், பழச்சாறு செய்யும் கருவி, சமையல் செய்யும் புது ரக பாத்திரங்கள் என்று சுவாரசியமான ஏதாவது ஒன்றை தேர்வு செய்து உங்கள் தோழிக்கு பரிசளிக்கலாம்.

7. நாட்குறிப்பு புத்தகம்:

உங்கள் தோழிக்கு தினசரி நிகழ்வுகளை குறித்து வைத்துக் கொள்ளும் பழக்கும் இருந்தால், இது போன்ற நாட்குறிப்பு புத்தகத்தை பரிசளிக்கலாம். இது அவருக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

8. வாசனை திரவியங்கள்:

மல்லிகை, ரோஜா போன்ற பல வகை வாசனை திரவியங்கள் கடைகளில் கிடைகின்றன. மேலும் பல புது வகைகளும் இணையதள கடைகளில் கிடைகின்றது. அவற்றில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து உங்கள் தோழிக்கு பரிசளிக்கலாம்.

ஆண் தோழர்களுக்கான பரிசு யோசனைகள் (Friendship Day Gift Ideas For Him)

பெண்களுக்கு மட்டுமல்லாது, ஆண்களுக்கு பல வகையான பரிசு பொருட்கள் கடைகளில் கிடைகின்றது. மேலும் குறிப்பாக, நண்பர்கள் தினம் வந்து விட்டாலே பல புது வகையான பரிசு பொருட்கள் கடைகளில் அறிமுகப் படுத்தப்படுகின்றது. அவை நிச்சயம் புதுமையாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். நீங்கள் உங்கள் நண்பருக்கு நல்ல பரிசு பொருளை வழங்க எண்ணினால், உங்களுக்கு சில யோசனைகள் இங்கே;

1. பயண வரைபடம்:

உங்கள் நண்பருக்கு அதிகம் பயணம் செய்ய பிடிக்கும் என்றால், நீங்கள் பயண வரைபடம் ஒன்றை பரிசளிக்கலாம். ஈன்று கூகிளை தட்டினால் அனைத்தும் கிடைத்து விடும். அதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும், சில பிரத்யேகமான பயணிகளுகென்று வரைபடங்கள், பல அறிய தகவல்களுடன் கிடைகின்றது. அப்படி ஒரு பரிசை நீங்கள் உங்கள் நண்பருக்கு கொடுக்க என்னலாம்.

2. தண்ணீர் குடுவை:

உங்கள் நண்பர் பள்ளிக்கூடம், அல்லது கல்லூரி அல்லது அலுவலகம் செல்பவராக இருந்தால், அவருக்கு நீங்கள் புது வடிவிலான மற்றும் சில சிறப்புகள் இருக்கும் தண்ணீர் குடுவையை பரிசளிக்கலாம். இது அவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

3. சாவி கொத்து:

உங்கள் நண்பருக்கு சாவி கொத்து பரிசளிக்கலாம். குறிப்பாக அவர் பெயர் பொதிக்கப்பட்ட அல்லது முகம் பொதிக்கப்பட்ட தனிப்பயன் சாவி கொத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து பரிசளிக்கலாம். இது அவருக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, ஒரு நல்ல நினைவாகவும் இருக்கும்.

4. டி சட்டை:

அனைத்து ஆண்களுக்கு பிடித்த ஒன்று, டி சட்டைகள். அனைத்து ஆண்களிடமும் நிச்சயம் சில டி சட்டைகள் இருக்கும். உங்கள் நண்பருக்கு நண்பர்கள் தின பரிசாக புது ரக அல்லது சிறந்த வாசகங்கள் எழுதப்பட்ட டி சட்டையை பரிசளிக்கலாம்.

5. ஸ்மார்ட் போன் மென்பொருள்:

உங்கள் நண்பர் ஸ்மார்ட் போன் பயன் படுத்துபவராக இருந்தால், இன்று பல மென்பொருள் உங்கள் பயன் பாட்டை அதிகப்படுத்த கிடைகின்றது. உங்கள் நண்பருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மென்பொருள் ஒன்றை தேர்வு செய்து நீங்கள் பரிசளிக்கலாம்.

6. வெளிப்புற விளையாட்டு பொருட்கள்:

உங்கள் நண்பருக்கு கால் பந்து, கிரிகெட், ஹாக்கி போன்ற வெளிப்புற விளையாட்டு பிடிக்கும் என்றால், அது சார்ந்த பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம். இது அவருக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.

7. காலணிகள்:

மேலும் உங்கள் நண்பருக்கு விளையாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும் காலணிகள் அல்லது காலை நடை பயணம் செய்ய பயனுள்ளதாக இருக்கும் காலணிகள் போன்ற ஒன்றை தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

8. மடி கணிணி உபரி/துணை பாகம்:

உங்கள் நண்பர் மடி கணிணி பயன் படுத்துபவராக இருந்தால், அவரது பயன்பாட்டை அதிகரிக்கும் வகையல் சில புது வகை உபரி அல்லது துணை பாகங்களை பரிசளிக்கலாம். இது நிச்சயம் அவருக்கு தேவைப்படும் மற்றும் பிடித்த பரிசு பொருளாக இருக்கும்.

 

பெற்றோர்களுக்கு நண்பர்கள் தின பரிசுகள் (Friendship Day Gift Ideas For Parents)

நண்பர்கள் தின பரிசு என்றால் அது நண்பர்களுக்கு மட்டும் அல்ல. நண்பராகவும், தோழியாகவும் இருக்கும் உங்கள் தாய் தந்தைக்கும் தரலாம். அந்த வகையில், நீங்கள் நண்பராக அல்லது தோழியாக கருதும் உங்கள் பெற்றோருக்கு பரிசளிக்க சில யோசனைகள் இங்கே:

1. அடுப்பங்கரை தோட்டம்;

உங்கள் அம்மாவிற்கு தோட்டம் அமைப்பது மிகவும் பிடிக்கும் என்றால், அதனோடு சேர்ந்து சமையலும் பிடிக்கும் என்றால், அவருக்கு நீங்கள் ஒரு சிறிய அடுப்பங்கரை தோட்டம் அமைத்துக் கொடுக்கலாம். இது இன்று பிரபலம் அடைந்து வரும் வகையில், பல அளவிலும், வகையிலும் தோட்டங்களில் கிடைகின்றன. இது உங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ஒரு பரிசு பொருளாக இருக்கும்.

2. சுவட்டர் மற்றும் கம்பிளி:

குளிர் காலங்களில் பயன் தரும் வகையிலும், மேலும் நீங்கள் குளிர் பிரதேசத்தில் வசிப்பவராக இருந்தால், உங்கள் பெற்றோர்களுக்கு சுவட்டர் மற்றும் கம்பிளி வாங்கி பரிசளிக்கலாம். இது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

3. டார்ச் லைட்:

இது மற்றுமொரு பயன் தரக் கூடிய பரிசு பொருளாக இருக்கும். என்ன தான் இன்று நாம் பயன் படுத்தும் கைபேசியில் டார்ச் லைட்டு இருந்தாலும், வழக்கமாக பயன் படுத்தும் டார்ச் லைட்டு போல வராது. அதனால் அவர்கள் எளிதாக பயன் படுத்தும் வகையில் டார்ச் லைட்டு வாங்கி பரிசளிக்கலாம்.

4. டீ மேகர்:

உங்கள் அம்மா மற்றும் அப்பா, இருவரும் ஓய்வு நீரத்தில் இளைப்பாற, எளிதாக தேநீர் செய்து கொள்ள டீ மேக்கரை பரிசளிக்கலாம். இது அவர்கள் எளிதாக தேநீர் செய்து அருந்த பயனுள்ளதாக இருக்கும். மேலும் அவர்களது வேலையையும் குறைக்கும்.

5. காபி மக்:

உங்கள் அம்மா அப்பா இருவரது புகைப்படம் பொதிக்கப் அட்ட தனிப்பயன் காப் மக்குகளை நீங்கள் பரிசளிக்கலாம். இது மிகவும் சுவாரசியமான ஒரு பரிசாகவும் இருக்கும். மேலும் அவர்களுக்கு அது பிடிக்கவும் செய்யும்.

விருப்பமானவர்களுக்கு பரிசளிக்க யோசனைகள் (Friendship Day Gifts For Best Friend)

எத்தனை நண்பர்கள் இருந்தாலும், ஏதாவது ஒரு நண்பர் உங்களுக்கு மிகவும் பிடித்தவரும், அதிகம் நேசிப்பவரூமாக இருப்பார். அப்படி ஒருவர் உங்களுக்கு இருந்தால், நண்பர்கள் தினத்தன்று அவருகென்றே கொடுக்க சில பரிசுப் பொருட்கள் யோசனைகள்:

1. சாக்லேட் கூடை:

நீங்கள் அதிகம் நேசிக்கும் உங்கள் நண்பருக்கு, விசேடமாக ஏதாவது பரிசு பொருள் கொடுக்க எண்ணினால், சாக்லேட் கூடையை பற்றி சிந்திக்கலாம். இது பல வகைகளில் கிடைகின்றது. குறிப்பகா இறக்குமதி செய்யப் பட்ட சாக்லேட் கூடைகள், வீட்டில் தயாரித்த சாக்லேட் கூடைகள் என்று மேலும் பல. அவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

2. தனிப்பயன்படுத்தப்பட்ட பரிசு கூடை:

உங்கள் நண்பருக்கென்று பிரத்தியேகமாக நீங்கள் பரிசு வழங்க எண்ணினால், இந்த தனிப்பயன்படுத்தபட்ட பரிசு கூடையை வழங்கலாம். இந்த கூடையில் உங்கள் நண்பருக்குத் தேவைப்படும் என்று நீங்கள் கருதும் சில பொருட்களை வைத்து பரிசாகத் தரலாம்.

3. இருவரது முகம் அச்சிடப்பட்ட டி சட்டைகள்:

இன்று ஆணோ, பெண்ணோ, அனைவரும் டி சட்டைகளை அதிகம் அணிய விரும்புகின்றனர். அந்த வகையில், உங்கள் இருவரின் முகம் அச்சிடப்பட்ட டீ சட்டையை நீங்கள் உங்கள் நண்பருக்கு பரிசளிக்கலாம். இது சற்று சுவாரசியமாகவும் இருக்கும்.

4. நண்பரின் பெயர் பொதிக்கப்பட்ட கீ செயின்:

உங்கள் நண்பருக்கு அவரது பெயர் பொதிக்கப்பட்ட கீ செயினை பரிசளிக்க என்னலாம். இது அவருக்கு ஒரு பயனுள்ள பரிசாகவும் இருக்கும்.

5. நினைவுகளை அசைப்போடும் வகையில் வாழ்த்து அட்டை

நீங்களாகவே இப்படி ஒரு வாழ்த்து அட்டையை தயார் செய்யலாம். உங்கள் நண்பருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சேகரித்து, வாழ்த்து அட்டையில் ஒட்டி, உங்கள் நண்பருக்கு பரிசளிக்கலாம். இதை அவர் பார்க்கும் போது, நிச்சயம் முகத்தில் புண்னகை வரும்.

6. இரவு நேர மின் விளக்கு

இரவு நேரத்தில் வீட்டில் அல்லது படுக்கை அறையில் இரவு நேரத்தில் பயன் படுத்தும் மின் விளக்கு ஒன்றை பரிசளிக்கலாம். இது பல வண்ணங்களிலும், வகைகளிலும் கிடைகின்றது.

7. அதிக பயன்பாட்டுள்ள அலுவலக அல்லது பயண பைகள்:

உங்கள் நண்பர் அதிகம் பயணம் செய்பவராக இருந்தால், அல்லது அலுவலகம் செல்பவராக இருந்தால், அவருக்கு நீங்கள் அவர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பை ஒன்றை பரிசளிக்கலாம்.

8. ஆண் / பெண் அலங்கார பொருட்கள்

உங்கள் நண்பருக்கு நீங்கள் அலங்கார பொருட்களை பரிசளிக்கலாம். குறிப்பாக பெண்களுக்கு பல அலங்கார பொருட்கள் உள்ளன. அது போன்றே, ஆண்களுக்கும் இன்று அவர்களது அழகை மெருகூட்டம் வகையில் பல அலங்காரப் பொருட்கள் கிடைகின்றது. உங்கள் நண்பருக்கு அதிகம் அலங்காரம் செய்து கொள்வது பிடிக்கும் என்றால், அது போன்ற ஒரு பரிசை தரலாம்.

9. பவர் பேங்க்

இன்று அனைவரிடமும் கை பேசி உள்ளது. ஆனால் பல சமயங்களில் அதில் இருக்கும் மின் சக்தி குறைந்து விடுவதால், வெளியில் இருக்கும் போது அதை பயன் படுத்த முடியாமல் போகின்றது. இந்த சிக்கலை போக்க, பவர் பேங்க் உள்ளது. இதை நீங்கள் உங்கள் நண்பருக்கு பரிசளிக்க என்னலாம்.

10. இனிமையான வாசகங்கள் உள்ள தலையணை உரைகள்

உங்கள் நண்பருக்கு தினமும் ஒரு நல்ல இனிமையான நினைவுகளை ஏற்படுத்தும் வகையில், இனிமையான வாசகங்கள் உள்ள தலையணை உரைகள் அலல்து தலையணைகளை பரிசளிக்கலாம். இந்த பரிசு அவருக்கு பயனுள்ளதாகவும் இருக்க

வீட்டில் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் (DIY Friendship Day Gifts)

பரிசு பொருள் என்றாலே நீங்கள் கடைகளுக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலேயே கூட நீங்கள் செய்து உங்கள் நண்பருக்கு பரிசளிக்கலாம். அந்த வகையில், இங்கே உங்களுக்காக சில பரிசு பொருட்கள்:

1. வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்:

உங்களுக்கு வீட்டில் சாகலேட் செய்யத் தெரியும் என்றால், உங்கள் வேலை இன்னும் சுலபமாகி விடும். ஆனால், அப்படி செய்யத் தெரியாது என்றாலும் பறவையில்லை. வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் இன்று பிரபலமாகி வருகின்றது. அவற்றை நீங்கள் தேர்வு செய்து உங்கள் நண்பருக்கு பரிசளிக்கலாம்.   

2. வீட்டில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப்:

கடைகளில் வழக்கமாக கிடைக்கும் பிரபலமான நிறுவனங்களின் குளியல் சோப்புகள் மட்டும் அல்லாமல், பல வீட்டில் தயாரிக்கும் சோப்புகளும் இன்று பிரபலமாகிக் கொண்டே வருகின்றது. இவை பாதுகாப்பானதாகவும். மலிவான விலையிலும் கிடைகின்றது. மேலும் நீங்களாகவே வீட்டில் வித விதமான சோப்புகளை வீட்டில் தயார் செய்து உங்கள் நண்பருக்கு பரிசளிக்கலாம்.   

3. வீட்டில் தயாரிக்கப்பட்ட வைன்:

வைனை நீங்கள் எளிதாக வீட்டில் தயார் செய்யலாம். இதில் எந்த விதமான அல்ககாலும் சேர்க்காமல், நற்பலன்கள் கொண்டதாக வீட்டில் தயார்கலாம். இப்படி நீங்களே தயாரித்த வைனை இங்க நண்பருக்கு பரிசளித்து அவரை ஆச்சரியப் படுத்துங்கள்.

4. களிமண் கொண்டு செய்யப்பட்ட சிறு கைவினை அலங்கார பொருட்கள்

உங்கள் வீட்டின் அருகே ஏதாவது குளம் அல்லது ஏறி இருந்தால், அதனைக் கொண்டு சிறு சிறு கைவினைப் பொருட்களை செய்து உங்கள் நண்பருக்கு பரிசளிக்கலாம். அப்படி இல்லை என்றாலும், கடைகளில் இன்று களிமண் பல நிறங்களில் விற்கப் படுகின்றது. அவற்றைக் கொண்டு நீங்கள் கைவினைப் பொருட்கள் செய்து உங்கள் நண்பருக்குக் கொடுக்கலாம்.

5. சுவற்றில் மாட்டும் அலங்கார பொருட்கள் மற்றும் படங்கள்:

சில எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நீங்கள் சுவற்றில் மாட்டும் அலங்காரப் பொருட்களை செய்து உங்கள் நண்பருக்கு பரிசளிக்கலாம். இவை நிச்சயம் அவருக்கு ஒரு நல்ல பரிசாக மட்டும் இல்லாமல், உங்கள் அன்பை பிரதிபலிக்கும் நல்ல பரிசாகவும் இருக்கும்.  

6. எம்ப்ரைடு செய்யப்பட்ட சட்டைகள் மற்றும் கைக்குட்டைகள்:

உங்கள் நண்பருக்கு சட்டை அல்லது கைகுட்டையில் அவரது பெயர், அல்லது வேறு ஏதாவது சுவாரசியமான படங்களை எம்ப்ரைடு செய்து பரிசளிக்கலாம். இது அவருக்கு மிகவும் பிடித்த ஒரு பரிசாக இருக்கும்.

7. வீட்டில் செய்த பஞ்சு பொம்மைகள்:

உங்கள் நண்பருக்கு சுவாரசியமான ஒரு பரிசை தர விரும்பினால், வீட்டில் நீங்களே ஒரு அழகான பஞ்சு பொம்மையை செய்து பரிசளிக்கலாம்.

8. வீட்டில் செய்த கை சனல் பைகள்:

சனல் பைகளை நீங்கள் வீட்டில் செய்யலாம். சனல் கயிறுகள் இதற்கென்றே பல நிறங்களிலும், தடிமானங்களிலும் கிடைக்கும். அவற்றைக் கொண்டு நீங்கள் எளிதாக உங்களுக்கு பிடித்த மாதிரி பைகளை வீட்டில் செய்து, உங்கள் நண்பருக்கு பரிசளிக்கலாம்.

ரூ.500க்கு குறைவான பரிசு பொருட்கள் (Friendship Day Gifts Under 500 INR)

நண்பருக்கு நீங்கள் பரிசளிக்க விரும்பினால், ஒரு முக்கிய விடயம் உங்களுக்கு தடையாக எப்போதும் இருக்கும். அது தான் விலை!

உங்கள் நண்பருக்கு நீங்கள் பரிசளிக்க எண்ணுகின்றீர்கள், ஆனால், அதன் விலை மிக அதிகமாக இருக்குமோ என்று ஐயம் கொள்ள வேண்டாம். இணையதளங்களிலும். கடைகளிலும், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பரிசு பொருட்கள் எளிதாக, நீங்கள் விரும்பும் வகையில் கிடைகின்றது. அந்த வகையில், உங்களுக்காக 5௦௦ ரூபாய்க்குள் வாங்க சில பரிசு யோசனைகள்:

1. சன் க்ளாஸ்:

1௦௦ ரூபாய் முதல் சன் கிளாஸ்கள் கிடைகின்றன. அவற்றில் நல்ல தரம் வாய்ந்த ஒன்றை நீங்கள் தேர்வு செய்து உங்கள் நண்பருக்குக் கொடுக்கலாம். மேலும் இந்த சன் கிளாஸ்கள் பல வகைகளிலும், அளவுகளிலும் கிடைகின்றன.

2. பயணப் பெட்டி (suitcase):

உங்கள் நண்பர் அதிகம் பயணம் செய்பவராக இருந்தால், பைகளை தேர்வு செய்வதற்கு மாறாக, சிறிய பயணப் பெட்டிகளை பரிசளிக்கலாம். இவை மிகக் குறைந்த விலைகளில் 5௦௦ ரூபாய்க்கும் குறைவாக கடைகளிலும், இணையதளங்களிலும் கிடைகின்றன.

3. ஊதப்பட்ட கால் ஓய்வு (inflatable foot rest):

உங்கள் நண்பர் அதிக நேரம் கணினியில் வேலை பார்ப்பவராக இருந்தால், அவரது கால்களை அதிக நேரம் தொங்கப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் அவருக்கு சில பிரச்சனைகள் உடலில் ஏற்படலாம். அதனை தடுக்கும் விதத்தில், உங்கள் நண்பருக்கு ஊதப்பட்ட கால் ஓய்வு ஒன்றை பரிசளிக்கலாம். இது 2௦௦ அல்லது 3௦௦ ரூபாய்க்கும் கடைகளில் கிடைகின்றன. இது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

4. சுவாரசியமான கதை புத்தகங்கள்:

உங்கள் நண்பருக்கு நீங்கள் சில சுவாரசியமான கதை புத்தகங்களை பரிசளிக்கலாம். குறிப்பாக உங்கள் நண்பர் அதிகம் புத்தகங்கள் படிக்கும் பழக்கும் உள்ளவராக இருந்தால், இது அவருக்கு மிகவும் பிடித்த ஒரு பரிசாக இருக்கும்.  

5. லாண்டர்ன் விளக்கு:

இந்த வகை விளக்குகள் இன்று நடைமுறையில் காணாமல் போய்க் கொண்டு இருகின்றது. ஆனால், நீங்கள் அப்படி ஒன்றைத் தேடி உங்கள் நண்பருக்கு பரிசளித்தால், அவர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார். இந்த லாண்டர்ன் விளக்குகள் 5௦௦ ரூபாய்க்கும் குறைவான விலைகளில் கிடைகின்றன. இவை பல அளவுகளிலும் கிடைகின்றன. நிச்சயம் ஒரு சுவாரசியமான பரிசாக இது இருக்கும்.

வாழ்த்து அட்டைகள் வாங்க ஏற்ற இணையதளம் (Friendship Day Greeting Cards)

நீங்கள் வாழ்த்து அட்டைகள் வாங்க எண்ணினால், அல்லது மின் அட்டைகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப எண்ணினால், அதற்கு பல இணையதளங்கள் உள்ளன. இதில், நீங்கள் வாழ்த்து அட்டைகளை உங்களுக்கு பிடித்தவாறு தேர்வு செய்து உங்கள் நண்பர்களுக்கு, அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பல வண்ண நிறங்களிலும், இசையோடும் மற்றும் சில கண்ணைக் கவரும் மின்அட்டைகள், இலவசமாகவும் கிடைகின்றன.

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Lifestyle