உங்கள் நண்பனுக்கு எப்படி பிறந்த நாள் பரிசு தருவது? சில யோசனைகள்!

உங்கள் நண்பனுக்கு எப்படி பிறந்த நாள் பரிசு தருவது? சில யோசனைகள்!

உங்கள் பெண் தோழிகளுக்கு பரிசு தருவதற்கும், ஆண் நண்பனுக்கு, அதாவது உங்கள் சினேகிதனுக்கு பரிசு தருவதற்கும் பல வேறுபாடுகள் உள்ளது. உங்கள் சினேகிதனுக்கு பிறந்தால் வருகின்றது என்றால், நீங்கள் மற்ற நண்பர்களை விட சற்று மாறுபட்ட பரிசு பொருளை தர எண்ணுவது இயல்பே. மேலும் அது நீங்கள் அவர் மீது வைத்திரக்கும் அன்பையும் வெளிபடுத்தும். 

உங்கள் சினேகிதனுக்கு தரும் பரிசு என்றும் நினைவில் இருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும் அது உங்கள் நினைவை அந்த பரிசை அவர் பார்க்கும் போதெல்லாம் ஏற்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். அப்படி ஒரு பரிசைத தேடிக் கொண்டிருகின்றீர்கள் என்றால், மேலும், படியுங்கள், இங்கே சில யோசனைகள் உங்களுக்காக! 

Table of Contents

  உங்கள் சினேகிதனுக்கு சிறந்த பரிசை தேர்ந்தெடுக்க சில குறிப்புகள்(Tips To Choose The Best Gift For Boy Friend)

  உங்கள் சினேகிதனுக்கு பிறந்த நாள் பரிசு தர வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்களா? அப்படி என்றால், அதற்கு முன் நீங்கள் ஒரு சில விடயங்களை நினைவில் கொள்ள வேண்டும். அந்த விடயங்கள் நீங்கள் சரியான பரிசை தேர்வு செய்ய உங்களுக்கு உதவியாக இருக்கும். சரியான பரிசை நீங்கள் தேர்வு செய்ய, உங்களுக்காக, இங்கே சில குறிப்புகள்

  1. அவரிடம் கேளுங்கள்:

  நீங்கள் நிச்சயம் உங்கள் சினேகிதனுக்கு(boy friend) உபயோகமுள்ள ஒரு பரிசை தர எண்ணினால், அவருக்கு எது ஏற்றதாக இருக்கும் என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், நீங்கள் அவரிடம் நேரடியாக அவருக்கு விருப்பமான பொருள் எதுவென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால், அப்படி நீங்கள் கேட்டு பின் வாங்கினால், அதில் சில சமயங்களில் சுவாரசியம் இல்லாமலும் போகலாம். அதனால், உங்கள் சிநேகிதனின் பிறந்த நாள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னரே எப்படியாவது அவருக்குத் தேவைப்படும், அல்லது அதிகம் விரும்பும் ஒரு பொருளை பற்றி மறைமுகமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை சரியான நேரம் வரும் போது, அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் பிறந்த நாள் அன்று பரிசளிக்கலாம். 

  2. எதார்த்தமான தேர்வு செய்யுங்கள்:

  எப்போதும் அதிக விலை உயர்ந்த பரிசு பொருளைத் தான் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் மிக ஆரியப் பொருளைத் தான் பரிசளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மாறாக, நீங்கள் ஓர் எதார்த்தமான மற்றும் உங்கள் சினேகிதனுக்கு உபயோகம் உள்ள ஒரு பொருளை தேர்வு செய்யலாம். இது அவருக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, ஒவ்வொரு முறையும் அதனை பயன் படுத்தும் போது உங்கள் நினைவும் அவருக்கு வரும். 

  3. ஒரு ஆணைப் போல சிந்தியுங்கள்:

  உங்கள் சினேகிதனுக்கு பரிசுப் பொருளைத் தேர்வு செய்யும் போதும் பெண்ணை போல சிந்திக்காமல், ஒரு ஆணைப் போல சிந்தித்து, ஒரு ஆணுக்கு எந்த எந்த பொருட்கள் பயனுள்ளதாக இருக்கும், அல்லது அவர்களுக்கு அதிகம் தேவைப் படும் ஒரு பொருள் எதுவாக இருக்கும் என்று சிந்தித்து பின் தேர்வு செய்வது நல்லது. இது நீங்கள் உங்கள் சினேகிதனுக்கு ஒரு சரியான பரிசு பொருளை தேர்வு செய்ய உதவும்

  4. சற்று புதுமையான ஒரு பொருளை தேர்வு செய்யுங்கள்:

  எப்போதும் ஒரே மாதிரியான பரிசு பொருளை தேர்வு செய்யாமல், சற்று புதுமையாக யோசித்து, முற்றிலும் வேறுபட்ட ஒரு பரிசு பொருளை தேர்வு செய்யுங்கள். இது நிச்சயம் அவர் மனதை கவரும் வகையில் இருக்கும். மேலும் உங்கள் மீதான அன்பை அதிகப்படுத்தும்.

  5. ஏதாவது தடயம் தேடுங்கள்:

  உங்கள் சினேகிதனிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வதற்கு பதிலாக, அவருடன் பழகும் நாட்களில் ஏதாவது ஒரு விதத்தில் உங்களிடம் அவருக்கு தேவைப்படும் ஒரு பொருளை பற்றி நீங்கள் பேசி இருக்கலாம். எப்படி ஏதாவது நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டிருந்தாள், அதில் இருந்து சில தடயங்களை தேடி, உங்கள் நண்பனுக்கு ஒரு நல்ல பரிசை அவர் ஆச்சரியப் படும் வகையில் தரலாம். 

  6. எதிர்கால நோக்கத்தோடு பரிசளிக்க வேண்டும்

   எப்போதும் நீங்கள் வாங்கும் பரிசு பொருள் ஒரு சில நாட்கள் மட்டுமே பயன் படும் வகையில் இல்லாமல், பல நாட்களுக்கு பயன் படும் வகையிலும், எதிர்கால நோக்கத்தோடும் வாங்க வேண்டும். குறிப்பாக நீங்கள் மின்னனுசார் பொருட்களை வாங்கினால், அது எதிர்கால பயன்பாட்டோடு இருப்பது முக்கியம். எடுத்துகாட்டாக ஸ்மார்ட் போன் மற்றும் அதில் இருக்கும் செயலி, எதிர்காலத்திற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். 

  7. அவருக்கு ஏற்ற ஒரு பரிசை தேர்வு செய்யவும்

  உங்கள் சினேகிதனுக்கு ஏற்றவாறு ஒரு பரிசை நீங்கள் தேர்வு செய்வது மிக முக்கியம். குறிப்பாக, உங்கள் சினேகிதன் விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்தால், அது சார்ந்த பரிசு பொருளை தேர்வு செய்து கொடுக்கலாம். மாறாக, அவருக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லாத போது, அவருக்கு எதில் ஆர்வம் இருகின்றதோ, அல்லது எதை அவர் அதிகம் விரும்புகின்றாரோ அதை தேர்வு செய்து கொடுக்கலாம். இது அவரை மகிழ்ச்சி அடைய செய்யும். 

  Pixabay

  பரிசை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்(Things To Keep In Mind When Choosing A Gift Your Boy Friend)

  உங்கள் சினேகிதனுக்கு பிறந்த நாள் பரிசு தர எண்ணினால், ஏதோ ஒன்று கிடைத்ததை வாங்கித் தருவதில் எந்த அர்த்தமோ அல்லது சுவாரசியமோ இருக்காது. மாறாக, நீங்கள் ஒரு சில விடயங்களை மனதில் கொண்டு, அவருக்கு சிறந்த ஒரு பரிசு பொருளை தேர்வு செய்ய வேண்டும். அவரது பிறந்த நாள் அன்று பலரும் அவருக்கு பரிசு தருவார்கள். எனினும், நீங்கள் தருவது தனித்தன்மை வாய்ந்ததாகவும், சிறந்ததாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு பரிசை நீங்கள் தேர்வு செய்யப் போகின்றீர்கள் என்றால், உங்களுக்காக இங்கே சில குறிப்புகள். மேலும் படியுங்கள்; 


  1. உங்கள் சினேகிதனுக்கு எது பிடிக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு சரியான தேர்வை செய்ய உதவியாக இருக்கும் 

  2. அவர் எந்த மாதிரியான பொருளை தன்னுடன் அதிகம் வைத்துக் கொள்ள அல்லது பயன் படுத்த விரும்புகின்றார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 

  3. நீங்கள் பிறந்த நாள் பரிசாகத் தரப் போகும் பொருள், உங்கள் எண்ணங்களையும், வாழ்த்தையும் சரியாக பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் 

  4. பொருளின் விலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, அந்த பொருளின் தரம் மற்றும் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது 

  5. நீங்கள் தேர்வு செய்யும் பொருள் நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் 

  6. அந்த பொருளின் முழு பயனையும் பயன் படுத்துபவர் பெற வேண்டும் 

  7. இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு, நீங்கள் கொடுக்கும் பரிசு, என்றும் உங்கள் நினைவை அவருக்கு ஏற்படுத்தக்கூடிய ஒரு இனிமையான பரிசாக இருக்க வேண்டும்

  சரியான பரிசை தேர்வு செய்ய யோசனைகள் (Ideas For Best Gift Selection For Your Boy Friend)

  உங்கள் சினேகிதனுக்கு நீங்கள் பிறந்த நாள் பரிசு தர முடிவு செய்து விட்டால், பின் அந்த நிகழ்வை சிறப்பானதாக ஆக்க வேண்டும் அல்லவா. அப்படி நீங்கள் எண்ணினால், ஒரு சில விடயங்களையும் நீங்கள் மனதில் கொண்டு செயல் படுத்த வேண்டும். உங்களது பிறந்த நாள் பரிசு என்றும் நினைவில் பசுமையாய் உங்கள் நண்பனின் மனதில் நிற்க, உங்களுக்காக இங்கே சில யோசனைகள். இது நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்

  1. விலையை ஒப்பிட்டு பாருங்கள்:

  ஒரு பரிசை நீங்கள் தேர்வு செய்வதற்கு முன், அதன் விலையை வேறு சில கடைகளிடமோ அல்லது வேறு நிறுவனத்திடமோ ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இன்று பல இணையதளங்கள் பரிசு பொருட்களை இணையதளத்திலேயே விற்கின்றார்கள். இதனால், நீங்கள் எளிதாக பரிசு பொருளின் விலையை ஒப்பிட்டு பார்த்து விடலாம். ஒப்பிட்டு, சரியான விலை மற்றும் தரமான ஒரு பொருளை தேர்வு செய்ய வேண்டும்.

  2. இணையதளத்தில் வாங்கும் போது சரியான பெரும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்

  நீங்கள் உங்கள் சினேகிதனுக்கு இணையதளத்தில் பரிசு பொருளை வாங்குகின்றீர்கள் என்றால், பின் அவர் அந்த பொருளை என்று எப்போது பெற வேண்டும் என்கின்ற சரியான நேரத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இப்படி சரியான நேரத்தை தேர்வு செய்து, அந்த நேரத்தில் அவரிடம் அந்த பொருள் போய் சேர திட்டமிட்டால், அது நிச்சயம் அவரை ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 

  3. ஒரு இரகசியமான இடத்தில் வைக்கவும்

  நீங்கள் உங்கள் சினேகிதனுக்கு தரும் பரிசு பொருளை, அவருக்குத் தெரியாமல் ஒரு இரகசியமான இடத்தில் மறைத்து வைக்கவும். பின் அவரையே அதை கண்டி பிடிக்கச் சொல்லி, அவர் ஆர்வத்தை அதிகப் படுத்தவும். இப்படி செய்வது சுவாரசியமாக இருப்பதோடு, ஒரு நல்ல நினைவாகவும் உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் மாறும். 

  4. பரிசு பொருளை ஆச்சரியமூட்டும் வகையில் நன்கு மறைத்து கட்டவும்

  இன்று பல வகை பரிசு பொருள் கட்டும் காகிதங்கள் மற்றும் துணிகளும் கிடைகின்றன. இவை பல நிறங்களிலும் கிடைகின்றன. அப்படி ஒன்றை நீங்கள் தேர்வு செய்து பரிசு பொருளை நன்கு மறைத்து கட்டி வைக்கவும். அதனை அவர் பிரிக்கும் போது அவரிடத்தில் ஆச்சரியமும், சந்தோசமும் அதிகரிக்கும். இது நிச்சயம் உங்களையும் மகிழ்விக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

  5. நீங்கள் ஏதாவது செய்யலாம்

  வழக்கம் போல கடைகளுக்கு சென்று பரிசு பொருளை வாங்குவதை விட, நீங்களாகவே உங்கள் சினேகிதனுக்கு பிடிக்கும் ஒரு பொருளை செய்து பரிசளிக்கலாம். இது மிகவும் சுவாரசியமாகவும், ஒரு சிறந்த பரிசாகவும் இருக்கும். மேலும் உங்கள் சினேகிதனுக்கும் இந்த தனித்துவம் வாய்ந்த பரிசு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். 

  6. விலையை பார்க்காமல், தரமான ஒரு பரிசை வாங்க வேண்டும்

  எப்போதும் மக்களிடையே விலை உயர்ந்த பொருள் மட்டுமே தரமான பொருளாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அது உண்மை இல்லை. விலை மலிவான பொருளும் நல்ல தரத்தோடு இருக்கத்தான் செய்கின்றது. இந்த வகையில், நீங்கள் விலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஒரு நல்ல தரமான பரிசு பொருளை தேர்வு செய்து உங்கள் சினேகிதனுக்கு பரிசளிக்க வேண்டும்.

  7. யூகிக்க முடியாத ஒரு பரிசை தேர்வு செய்யவும்

  முடிந்த வரை உங்கள் சினேகிதன் யூகிக்க முடியாக ஒரு பரிசை தேர்வு செய்து அவருக்கு தருவது மேலும் சுவாரசியத்தை அதிகப் படுத்தும். நீங்கள் அவரை யூகிக்கச் சொல்லும் போது அவருக்குள் ஆர்வம் அதிகரிப்பதோடு உங்கள் மீதான நேசமும் அதிகரிக்கும். அதிலும் அந்த பரிசு பொருள் அவர் அதிகம் விரும்பிய ஒன்றாக இருந்தால், அது மேலும் அவரை மகிழ்ச்சி அடையச் செய்யும்

  8. அவரின் நண்பர்களிடம் இருந்து ஆலோசனை பெறுங்கள்

  உங்களுக்கு சரியான பரிசு பொருளை தேர்வு செய்ய முடியாமல் போனால், அவரது நண்பர்களிடம் இரகசியமாக அவருக்கு பிடத்த பொருளை பற்றி சில ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். அப்படி பெற்ற ஆலோசனைகளில் இருந்து ஒரு சரியான பரிசு பொருளை தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

  9. அவருக்கு பிடித்த ஒரு பரிசை தேர்வு செய்யுங்கள்

  எப்போதும், உங்களுக்கு சரி என்று தோன்றும் ஒரு பரிசை தேர்வு செய்வதை விட, உங்கள் சினேகிதனுக்கு பிடித்த ஒரு பரிசை தேர்வு செய்வது முக்கியம். அப்படி செய்யும் போது அது அவருக்கு பிடித்த ஒரு பரிசாக மாறுவதோடு, அவரது பயன்பாட்டையும் அது அதிகரிக்கும். 

  10. பிறந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து பரிசை தேர்வு செய்யவும்

  நீங்கள் இந்த பரிசை ஒரு சிறப்பான நாளன்று தரப் போகின்றீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். மேலும் அது சார்ந்தே உங்கள் பரிசின் தேர்வும் இருக்க வேண்டும். இப்படி சிந்தித்து ஒரு நல்ல பரிசு பொருளை தேர்வு செய்தால், அது நிச்சயம் ஒரு நல்ல நினைவாகவும் மாறும். 

  Shutterstock

  உங்கள் சினேகிதனுக்கு அழகான பிறந்த நாள் பரிசு(Lovely Unique Gift Ideas For Your Boy Friend)

  1. பல பயனுள்ள பொருட்கள் அடங்கிய கூடை

  Lifestyle

  Park avenue Grooming Kit For Men - Luxury Collection, With Free Travel Pouch, 940 g

  INR 685 AT Park Avenue

  இது குறிப்பாக மின்னணு பொருட்களை குறிக்கலாம். அதாவது, உங்கள் சினேகிதனுக்கு முக சவரம் செய்ய மின்னணு சவரக் கருவி, முடி திருத்தும் மின்னணு கருவி, முகத்திற்கு மசாஜ் செய்ய சில தரமான கிரீம்கள் என்று சில தனித்துவமான பொருட்களை ஒரு கூடையில் பரிசாக வைத்து தரலாம். இது குறிப்பாக மின்னணு பொருட்களை குறிக்கலாம். அதாவது, உங்கள் சினேகிதனுக்கு முக சவரம் செய்ய மின்னணு சவரக் கருவி, முடி திருத்தும் மின்னணு கருவி, முகத்திற்கு மசாஜ் செய்ய சில தரமான கிரீம்கள் என்று சில தனித்துவமான பொருட்களை ஒரு கூடையில் பரிசாக வைத்து தரலாம். 

  2. பெல்ட் பக்கிள்

  Brown Lesle Belt

  INR 499

  அனைத்து ஆண்களும் பெல்ட்டை கட்டாயம் அணிவார்கள். அதிலும், குறிப்பாக பெல்ட்டின் பக்கிளுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். இந்த பரிசை பொதுவாக யாரும் தருவதில்லை. நெருக்கமான நட்பில் இருப்பவர்கள் மட்டுமே தருவார்கள். அந்த வகையில், தனித்துவமான பெல்ட் பக்கிளை நீங்கள் உங்கள் சினேகிதனுக்கு பரிசளிக்க என்னலாம். 

  3. ஆண்களுக்கான ஆபரணங்கள்

  Lifestyle

  Streetsoul Drive Safe Message Engraved Keychain Stainless Steel Silver Keyring

  INR 599 AT Streetsoul

  பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கென்றே சில ஆபரணங்கள் வடிவமைக்கப் படுகின்றது. அப்படி ஒன்றை நீங்கள் தேர்வு செய்து உங்கள் சினேகிதனுக்குத் தரலாம். குறிப்பாக, கைக்கு போடும் செம்பு அல்லது வெள்ளி காப்பு, காதில் அணிய ஆண்களுகென்றே இருக்கும் காதணிகள், கழுத்தில் போடா சங்கிலி என்று ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.

  4. சன் க்ளாஸ்

  Fashion

  UV Protection Aviator Sunglass

  INR 130 AT PekuNiary

  பல ரக சன் கிளாசுகள் கடைகளிலும், இணையதள கடைகளிலும் கிடைகின்றன. அவை பல நிறங்களிலும், அமைப்புகளிலும் கிடைகின்றன. அவற்றில் சிறந்த ஒன்றை நீங்கள் தேர்வு செய்து உங்கள் சினேகிதனுக்கு பரிசளிக்கலாம்.

  5. மின்னணு பொருட்கள்:

  iPhone X Ultra Thin Protective Shell Case

  INR 1,999 AT Million Cases

  இது குறிப்பாக ஸ்மார்ட் போன், டப்ளேட், ஜி பி எஸ், ஐ பேடு போன்ற பொருட்களை குறிக்கும். உங்கள் நண்பனுக்கு நீங்கள் பிரத்தியேகமாக ஒரு பரிசை தர விரும்பினால், இது போன்ற ஒன்றை தேர்வு செய்து தரலாம்.

  6. பலகை விளையாட்டுகள்

  Entertainment

  Carrom Board

  INR 3,674 AT Bronx Classic

  உங்கள் சினேகிதனுக்கு கேரம் போர்டு, சதுரங்க ஆட்டம், போன்ற பலகை விளையாட்டுகளில் விருப்பம் இருந்தால், அது போன்ற ஒன்றை தேர்வு செய்து பரிசளிக்கலாம். இது சுவாரசியமானதாகவும், அவருக்கு நல்ல பொழுது போக்கு விளையாட்டு பொருளாகவும் இருக்கும்.

  7. விளையாட்டு பொருட்கள்

  Entertainment

  BADMINTON RACQUET

  INR 1,190 AT CARLTON AERO 2100A

  உங்கள் சினேகிதனுக்கு வெளிப்புற விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தால், அது குறித்த பொருட்கள், அதாவது விளையாட்டு காலணிகள், பந்துகள், பேட் போன்ற பொருட்களை பரிசளிக்கலாம். மேலும் இதனுடன் விளையாட்டு ஆடைகளையும் தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

  8. ஆண்களுக்கான பணப்பை

  Accessories

  Jane Austen Leather Pride and Prejudice Leather Book Purse

  INR 6,316 AT KrukruStudioBooks

  அனைத்து ஆண்களும் தங்கள் பேன்ட் அல்லது சட்டை பைக்குள் அடக்கமாக வைத்துக் கொள்ள பணப்பை ஒன்றை வைத்திருப்பார்கள். நீங்கள் ஒரு தரமான மற்றும் அதிகம் பயன்பாட்டுள்ள ஒரு பணப்பையை உங்கள் சினேகிதனுக்கு பரிசளிக்கலாம்.

  9. அழகு சாதனா பொருட்கள்

  Kiehl’s Ultra Facial Cream

  INR 2,750 AT Kiehl’s

  உங்கள் சினேகிதனுக்கு தன்னை அழகு படுத்திக் கொள்ள அதிகம் பிடிக்கும் என்றால், அது சார்ந்த பொருட்களை பரிசளிக்கலாம். குறிப்பாக, முகத்திற்கு பேசியல் செய்து கொள்ள கிரீம்கள், தலை முடியை அழகு படுத்த ஜெல், சருமத்தை பொலிவாக்க மாயச்ச்சரைசர் என்று சில தரமான பொருட்களை தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

  10. தகவலுடன் ஒரு குடுவை

  Lifestyle

  Blue Printed bag

  INR 1,247 AT Skybags

  பல பரிசு பொருட்கள் விற்கும் கடைகளிலும், இணையதள கடைகளிலும், தகவலை உள்ளடக்கிய குடுவைகள் கிடைகின்றன. அதில் உங்களுக்கு ஏற்றதும் மற்றும் பிடித்ததுமான ஒரு குடுவையை தேர்வு செய்து உங்கள் சினேகிதனுக்கு பரிசளிக்கலாம்.

  11. தனிப்பயனாக்கப்பட்ட மக்

  Lifestyle

  Personalized Color Changing Mug

  INR 349 AT Ferns N Petals

  கடைகளில் மிளுரும் பல தனிப்பயனாக்கப்பட்ட மக் கிடைகின்றன, இவற்றஈ அழகாரப் பொருளாகவும் வைத்துக் கொள்ளலாம், அல்லது தினசரி பயன் பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளாம். இதில் நீங்கள் சில வாசகங்களையும் எழுதிக் கொள்ளலாம்.

  12. டை பார்

  Entertainment

  Printed Tie

  INR 449 AT COCO CHANEL

  உங்கள் சினேகிதன் அலுவலகம் செல்லும் போது அதிகம் டை அணிபவராக இருந்தால், இது அவருக்கு ஒரு நல்ல பயனுள்ள பரிசாக இருக்கும். மேலும், ஒவ்வொரு முறையும் அவர் அதனை அணியும் போதும், அது அவருக்கு உங்கள் நினைவை வரவழைக்கும். இது நிச்சயம் ஒரு நல்ல பரிசாகவும் இருக்கும்.

  13. பயண வரைபடம்

  Lifestyle

  World Map Wall Poster

  INR 529 AT dakos

  இந்த வரைபடம் உங்கள் சினேகிதன் அதிகம் பயணம் செல்பவராக இருந்தால் பெரிதும் உதவியாக இருக்கும். என்னதான் இன்று ஜி பி எல் மற்றும் கூகிள் மேப் இருந்தாலும், இத்தகைய வரைபடங்கள் சற்று போயனுள்ள ஒன்றாகத் தான் இருகின்றது.

  14. ஓய்வெடுக்க சில பொருட்கள்

  Wellness

  Anti-Snoring Pillow

  INR 7,999 AT Thomsen

  உங்கள் சினேகிதன் ஓய்வு நேரத்தில், மேலும் வசதியாக ஓய்வெடுக்க உதவியாக ஒரு சில பொருட்களை தேர்வு செய்து அவருக்கு பரிசளிக்கலாம். அந்த வகையில், சௌகரியத்தை அதிகப் படுத்த பிரத்தியேகமாக செய்யப்பட்ட தலைகாணி, சாய்ந்து கொள்ள வசதியாக பஞ்சாலான சிறிய மெத்தை, என்று ஒரு சில பொருட்களை தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

  15. டி சட்டைகள்

  Lifestyle

  Looka33 Men T Shirts Casual Fashion Sleeves Short Summer 3D Printed Comfort Blouse Top

  INR 378 AT Looka33

  இது நிச்சயம் அனைத்து ஆண்களுக்கும் பிடித்த ஒரு பரிசு பொருளாக இருக்கும். டி சட்டைகளை பிடிக்காத ஆண்கள் இருக்கவே முடியாது. அந்த வகையில் நீங்கள் சில சுவாரசியமான வரிகள் பொறிக்கப் பட்ட டி சட்டைகள் அல்லது பிரத்தியேகமாக, கடைகாரரிடம் கேட்டு, உங்கள் சினேகிதன் மற்றும் உங்கள் புகைப்படம் பொறிக்கப்பட்ட டி சட்டைகளை தயார் செய்து வாங்கி பரிசளிக்கலாம்.

  16. எல் இ டி விளக்குகள் / இசை

  Lifestyle

  Rechargeable Torch Flashlight

  INR 1,150 AT iBELL

  Flashlight பல வண்ண வண்ண நிறங்களிலும் மிளுரும் எல் இ டி விளக்குகள் இணையதள கடைகளில் எளிதாக கிடைகின்றன. மேலும் இதனுடன் இசையும் சேர்ந்து ஒலிக்கும் விளக்குகளும் கிடைகின்றன. இவை மாலை அல்லது இரவு நேரங்களில் அறைகளுக்கு மேலும் நல்ல அழகை உண்டாக்கும் ஒளியை தருகின்றன. இத்தகைய ஒரு பரிசை உங்கள் சினேகிதனுக்கு நீங்கள் பரிசளிக்கலாம். அது நிச்சயம் அவருக்கு பிடிக்கும்.

  17. வோச்சர் புத்தகம்

  A Spa Voucher

  INR 3,000 AT Four Fountains

  பல இணையதள நிறுவனங்கள் பரிசு வோச்சர்களை விற்கின்றன. அதில் நல்ல சலுகைகள் உள்ள பரிசு வோச்சர்களை தேர்வு செய்து உங்கள் சினேகிதனுக்கு நீங்கள் பரிசளிக்கலாம்.

  18. சாவி உள்ள நெக்லஸ்

  Lifestyle

  Red Butterfly Keychain

  INR 299 AT Archies

  இது ஆண்களுக்கென்றே வடிவமைக்ப்பட்ட நெக்லஸ். இதில் வீட்டு சாவி அல்லது வேறு சாவியை இணைத்து கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம். சற்று மாடர்னாக இருப்பதோடு, பயனுள்ளதாகவும் இருக்கும்.

  தனிப்பயனாக்கப்பட்ட பரிசுகள் (Customized Gift)

  தனிப்பயனாக்கப்பட்ட பரிசுகள் எப்போதும் சற்று மாறுபட்டு வழங்குபவரின் நினைவை உண்டாக்கும். அந்த வகையில், நீங்கள் உங்கள் சினேகிதனுக்கு, தனிப்பயனாக்கப்பட்ட பரிசுகளை சரியாக தேர்வு செய்து பரிசளிக்க முயற்சி செய்யலாம். இத்தகைய பரிசுகள் நிச்சயம் அவருக்கு பிடிக்கும். 

  1. ஜோடி சட்டைகள்:

  Fashion

  Men & Women T-Shirt

  INR 474 AT DUO

  இவ்வகை சட்டைகள் பொதுவாக ஆண் மற்றும் பெண்ணுக்கு ஒரே மாதிரி இருவரும் அணிந்து கொள்ளும் வகையில் இருக்கும். மேலும் இதில் ஏதாவது படங்கள் அல்லது வாசகங்கள் இருந்தால் அதில் ஒரு பாதி ஆணின் சட்டையிலும், மறு பாதி பெண்ணின் சட்டையிலும் அச்சிடப் பட்டிருக்கும். இது ஒரு சிறந்த பரிசாக இருக்கும்.

  2. தனித்துவமான காதல் புத்தகம்

  Lifestyle

  Her Rang Spiral Bound Friendship Day Notebook

  INR 249 AT Her Rang

  உங்கள் சினேகிதனுக்கு நீங்கள் சில சுவாரசியமான காதல் கவிதைகள் அல்லது கதைகள் அடங்கிய புத்தகத்தை பரிசளிக்கலாம். இது நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் காதலை வெளிபடுத்தவும் உதவியாக இருக்கும்.

  3. பொறிக்கப்பட்ட திசைகாட்டி:

  Lifestyle

  Magnetic Compass

  INR 80 AT Divine Miracles

  உங்கள் இருவரின் முகம் பொறிக்கப்பட்ட திசைகாட்டியை உங்கள் சினேகிதனுக்கு பரிசாகத் தரலாம். குறிப்பாக அவர், அதிகம் சுற்றுலா பயணம் அல்லது சாகச பயணம் செய்பவராக இருந்தால், இந்த திசைகாட்டி ஒரு நல்ல பரிசாக இருக்கும்.

  4. காதல் குறிப்புகளுக்கான புத்தகம்

  Lifestyle

  Self Love Poster

  INR 150 AT POPxo

  உங்கள் சினேகிதனுக்கு, நீங்கள் சில காதல் குறிப்புகள் எழுத ஏதுவாகவும் மற்றும் சில காதல் குறிப்புகள் கொண்டதாகவும் இருக்கும் காதல் புத்தகத்தை பரிசளிக்கலாம்.

  5. தனிப்பட்ட செய்தி கொண்ட வளையல்

  Lifestyle

  Leather Bracelet

  INR 300 AT Leather Bracelet

  ஆண்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட வளையல் அல்லது ப்ரசிலேட் போன்றவற்றில் நீங்கள் விரும்பினால் அதில் ஓரிரு வார்த்தையில் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தியை பொறித்து பரிசளிக்கலாம். இது அவருக்கு பிடித்த ஒரு பரிசாகவும், உங்கள் என்னத்தை வெளிபடுத்தும் ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.

  6. உங்கள் காதல் புகைப்படத்துடன் புகைப்பட சட்டம்

  Lifestyle

  If You Forgot The Wine Doormat

  INR 5,685 AT Burning Love

  உங்கள் சினேகிதனுக்கு நீங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை வைத்து புகைப்பட சட்டம் ஒன்றை பரிசளிக்கலாம். இதை அவர் தனது அறையில் வைத்துக் கொள்ளும் வகையிலோ, அல்லது சுவற்றில் மாட்டிக் கொள்ளும் வகையிலோ அல்லது மேஜை மீது வைத்துக் கொள்ளும் வகையிலே தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

  7. உங்கள் புகைப்படம் அச்சிடப்பட்ட கை கடிகாரம்

  Lifestyle

  Personalized Watch

  INR 923 AT LAGNIAPPE

  உங்கள் சினேகிதனுக்கு நீங்கள் உங்களது புகைப்படம் அச்சிடப்பட்ட கை கடிகாரத்தை பரிசளிக்கலாம். இது மிகவும் தனித்துவமான பரிசாகவும் அவருக்கு இருக்கும். மேலும் உங்களுடைய இனிமையான நினைவுகளை அவருக்கு ஞாபகப்படுத்தும் வகையிலும் இந்த கை கடிகாரம் இருக்கும்.

  8. பெயர் பொறிக்கப்பட்ட மோதிரம்

  Accessories

  CLASSIC RING DESERT SAND

  INR 2,999 AT danielwellington

  உங்கள் பெயர் அல்லது உங்கள் சினேகிதனின் பெயர் அல்லது இருவரது பெயரின் முதல் எழுத்துகள் என்று உங்களுக்கு பிடித்த ஒன்றஈ தேர்வு செய்து, அதை மோதிரத்தில் பொறித்து உங்கள் சினேகிதனுக்கு பரிசளிக்கலாம்.

  9. புகைப்படம் பொறிக்கப்பட்ட சங்கிலி லாகட்

  Lifestyle

  Name Key Chain

  INR 199 AT My.Shop

  இது மற்றுமொரு சுவாரசியமான ஒரு பரிசு பொருளாக இருக்கும். உங்கள் சினேகிதனுக்கு, உங்கள் இருவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சங்கிலி லாக்ட் ஒன்றை தேர்வு செய்து பரிசளிக்கலாம். இது அவருக்கு பிடித்த ஒரு பரிசு பொருளாக இருக்கும்.

  10. இனிமையான அலாரம் ஓசை கொண்ட கடிகாரம்

  Lifestyle

  M&C Dream Gifts Love Couple Gift Wall Clock

  INR 450 AT M & C Dream Gifts

  உங்கள் சினேகிதனுக்கு தினமும் காலை எழ கடிகாரத்தில் அலாரம் வைக்கும் வைக்கும் வழக்கும் இருந்தால், அவருக்கு இது ஏற்ற பரிசாக இருக்கும். எனினும், நீங்கள் சரியான இசையுடைய அலாரத்தை தேர்வு செய்ய வேண்டும்.

  11. தனிப்பயனாக்கப்பட்ட எல் இ டி தலையணை

  Lifestyle

  Pillow, Mug and Keychain

  INR 499 AT Divo

  இது மிகவும் சுவாரசியமான ஒரு பரிசாகும். இத்தகைய பரிசு பொருட்கள் இணையதள கடைகளில் எளிதாக கிடைகின்றன. மேலும் இதில் நீங்கள் உங்கள் இருவரின் புகைப்படத்தையும் அச்சிட்டுக் கொள்ளலாம்.

  12. காதல் ஒப்பந்தம்

  Lifestyle

  Love Contract

  INR 199 AT Personalized Love Contract for Him

  இது மற்றுமொரு சுவாரசியமான பரிசு பொருளாகும். இந்த காதல் ஒப்பந்தம் சற்று புதுமையானதாக இருந்தாலும், நிச்சயம் உங்கள் சினேகிதனுக்கு மிகவும் பிடித்த ஒரு பரிசு பொருளாக இருக்கும்.

  சினேகிதனுக்கு எப்போது / எப்படி பரிசளிக்க வேண்டும்? சில குறிப்புகள்(Tips to present the gift for your boyfriend)

  அதிக நேரம் செலவிட்டு, மிக ஆவலுடன் நீங்கள் ஒரு பரிசை உங்கள் சினேகிதனுக்கு தேர்வு செய்த பின், அதனை எப்போது எப்படி தர வேண்டும் என்பதில் தான் முக்கியமான சுவாரசியம் அடங்கி உள்ளது. அதனை தெரிந்து கொண்டால், நிச்சயம் உங்கள் பரிசு அவருக்கு தனித்துவமான ஒன்றாகும். உங்களுக்காக, இங்கே சில குறிப்புகள்

  1. இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்

   நீங்கள் தர விரும்பும் பரிசை கடைசி நிமிடம் வரை இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு நீங்கள் பரிசு தரப் போவதை பற்றி எந்த ஒரு தடையமும் அவருக்குத் தெரியக் கூடாது. சரியான நேரம் வரும் போது அவருக்கு நீங்கள் அந்த பரிசைத் தரும் போது, அது அவருக்கு ஆச்சரியத்தை அதிகப் படுத்தும். 

  2. பரிசுடன் சில காதல் கவிதைகளை வைத்துக் கொடுங்கள்

  வெறும் பரிசு பொருளை மட்டும் கொடுக்காமல், அந்த பரிசுடன் ஒரு சிறிய துண்டு சீட்டில் சில காதல் கவிதை அல்லது உங்கள் அழகான நட்பு நிறைந்த உறவை விவரிக்கும் வகையில் ஓரிரு வார்த்தைகளை எழுதி தரலாம். இது மேலும் அவரை மகிழ்ச்சி அடைய செய்யும். 

  3. சரியான நேரத்திற்கு காத்திருக்கவும்

   நீங்கள் அவருக்கு முக்கியமனாவர் என்றால், அவரு உங்களுக்கு தனித்துவமான ஒரு நண்பன் என்றால், பிறர் பரிசளிக்கும் போது அவர்களுடன் சேர்ந்து நீங்களும் பரிசை தருவதை தவிர்க்க வேண்டும். மாறாக, உங்களுக்கு அவரை தனியாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது உங்கள் பரிசை அழகான புன்னகையோடு தர வேண்டும். இது உங்கள் அழகான உறவை வளர்ப்பதோடு, ஒரு நல்ல நினைவூட்டும் பரிசாகவும் இருக்கும். 

  4. சஸ்பென்ஸ்சை அதிகப் படுத்துங்கள்

  நீங்கள் தரும் பரிசு அவர் எளிதாக யூகிக்கும் வகையில் இருக்கக் கூடாது. மாறாக அவருக்கும் சஸ்பென்ஸ்சை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

  5. அவரிடம் பரிசைக் கொடுங்கள்

  எந்த காரணத்தைக் கொண்டும் பிறரிடம் கொடுத்து பரிசை உங்கள் சினேகிதனிடம் கொடுத்து விடச் சொல்லியோ, அல்லது எங்காவது பரிசை வைத்து விட்டு, அவரையே எடுத்துக் கொள்ள சொல்லவோ கூடாது. நீங்களாகவே நேராக அவர் முன் சென்று அவருக்கு அந்த பரிசைத் தர வேண்டும். 

  pixabay

  உங்கள் சினேகிதனுக்கு நீங்கள் கொடுக்கக்கூடாத சில பரிசுகள்(Gifts you shouldn’t choose for your boy friend)

  இது வரை எப்படிப்பட்ட பரிசை தேர்வு செய்ய வேண்டும், எப்படி பரிசை தர வேண்டும் என்றெல்லாம் பார்த்தோம். ஆனால் இப்போது எந்த மாதிரியான பரிசு பொருட்களைத் தரக் கூடாது என்று பார்க்கலாம். இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால், ஒரு தவறான தேர்வு, உங்கள் நட்பையும், உறவையும் பாதிக்கவும் செய்யலாம். அதனால் பரிசை தேர்வு செய்யும் போது அதிக கவனம் தேவை

  1. ஷவர் ஜெல் பாக்

  இத்தகைய பரிசை நீங்கள் நிச்சயம் தவிர்த்து விட வேண்டும். இது சில சமயங்களில் உங்களிடம் இருந்து பரிசை வாங்கும் போது உங்கள் சினேகிதனுக்கு சற்று அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும்.  

  2. கடையில் சென்று பொருட்கள் வாங்க பரிசு கார்டுகள்

  உங்கள் சினேகிதனுக்கு கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் இல்லை என்றால், அவருக்கு நீங்கள் அத்தகைய கட்டாயத்தை ஏற்படுத்தக் கூடியி கிபிட் கார்டுகளை பரிசாகத் தருவதை தவிர்ப்பது நல்லது. மேலும் அத்தகைய பரிசு வீணாகப் போகும் வாய்ப்பும் உள்ளது. 

  3. உங்களுக்குத் தெரியாத தொழில்நுட்ப பொருட்கள்

   உங்களுக்கு இன்று இருக்கும் நவீன தொழில்நுட்பம் சம்பந்தமான ஒரு பொருளை பற்றி தெரியவில்லை என்றால், அத்தகைய பொருளை பரிசாகத் தருவதை தவிர்ப்பது நல்லது. ஒரு பொருளை பற்றித் தெரியாமல் பரிசளிப்பதால், அதில் எந்த பயனும் இல்லை. 

  4. நீங்கள் விரும்பும் சட்டை

  உங்கள் சினேகிதனின் விருப்பம் என்னவென்று சரியாகத் தெரியாமல், அவருக்கு நீங்கள் விரும்பும் நிறம் மற்றும் டிசைன்களில் சட்டைகளை பரிசாகத் தரும் போது, அது அவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்காது. அதனால், உங்களுக்கு பிடித்த ஒரு பரிசை தருவதோடு, அவருக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்வதே முக்கியம்.

  5. கூப்பன்கள்

  சில சமயங்களில் நீங்கள் தரும் பரிசு கூப்பன்கள் அவருக்கு சுவாரசியமானதாக இல்லாமல் இருக்கலாம். மேலும் அவர் நீங்கள் பரிசாக தந்த ஒரே காரணத்திற்க்காக கடைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்படலாம். அதனால், அவரை கட்டாயப்படுத்தும் வகையில் பரிசு பொருளை தருவதை தவிர்ப்பது நல்லது. 

  6. குளியல் துண்டு/ஆடைகள் அல்லது குளியலறை சாதனங்கள்

  இத்தகைய பொருட்கள் சற்று முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் இருக்கலாம். அதனால், இத்தகைய பரிசு பொருளை நீங்கள் தருவதை தவிர்ப்பது நல்லது. 

  7. ஒரு முறை மட்டுமே பயன் படுத்தும் பொருள்

  முடிந்த வரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு தூக்கி போட்டுவிடும் பொருட்களை பரிசாகத் தருவதை தவிர்பப்து நல்லது. அவை ஒரு சரியான தேர்வாக இருக்காது. 

  8. மாதாந்திர சந்தா

  மாதாந்திர சந்தா புத்தகங்கள் அல்லது வேறு விதமான நூல்கள் போன்றவற்றை பரிசாகத் தருவதை தவிர்ப்பது நல்லது. அவருக்கு அதில் விருப்பம் இல்லை என்றால், நீங்கள் தரும் பரிசு வீணாகி விடக்கூடும். 

  9. உடற்பயிற்சி சாதனங்கள்

  உங்கள் சினேகிதனுக்கு உடற் பயிற்சி செய்வதில் ஆர்வம் உள்ளதா மற்றும் அவருக்கு எந்த வகையிலான உடற்பயிற்சி பொருட்கள் தேவைப்படும் என்பதைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாமல், அத்தகைய பரிசு பொருளை தேர்வு செய்வதை தவிர்ப்பது நல்லது. 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! 
  ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.