ரக்ஷா பந்தனுக்கு கொடுக்க சில சுவாரசியமான பரிசுகள்! (Raksha Bandhan Gift Ideas In Tamil)

ரக்ஷா பந்தனுக்கு கொடுக்க சில சுவாரசியமான பரிசுகள்! (Raksha Bandhan Gift Ideas In Tamil)

ஒவ்வொரு வருடமும் பல பண்டிகைகள் வந்தாலும், ஒரு சகோதரியும் சகோதரனும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கும் பண்டிகை, ரக்ஷா பந்தன்(Raksha Bandhan). இந்த பண்டிகை பொதுவாக வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. தீபாவளி, புது வருடப்பிறப்பு என்று பல எதிர்பார்புகளை கொண்ட பண்டிகைகளைப் போல இந்த ரக்ஷா பந்தனும் ஒரு சிறப்பு மிகுந்த பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் 2019ல், ரக்ஷா பந்தன் பண்டிகை, ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் வருகின்றது. இந்த திருநாளை எதிர் நோக்கி நீங்கள் காத்துக் கொண்டிருகின்றீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. ரக்ஷா பந்தன் பற்றியும், சில சுவாரசியமான பரிசு பொருட்களை தேர்ந்தெடுப்பதை பற்றியும் தெரிந்து கொள்ள, மேலும் படியுங்கள். 

Table of Contents

  ரக்ஷா பந்தனை பற்றி தெரிந்து கொள்ள

  ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) நெருங்கிக் கொண்டிருகின்றது. இந்த நாளில் சகோதரனும், சகோதிரியும், தங்களுக்குள் எத்தனை கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் நீண்ட ஆயுளோடு அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி பரிசுகளை (gifts) பகிர்ந்து கொள்வார்கள். 


  இந்த திருநாளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள உங்களுக்காக சில சுவாரசியமான தகவல்கள்: (Things To Know About Raksha Bandhan)
  • வட இந்திய நாள்காட்டி கணக்குப் படி, ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) சர்வன் மாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகின்றது
  • இந்த பண்டிகையை ராக்கி (Rakhi) பூர்ணிமா என்றும் அழைப்பார்கள் 
  • இந்த பண்டிகை சகோதரன் மற்றும் சகோதரிக்கிடையே இருக்கும் பந்தத்தை வெளிபடுத்தும் விதமாக கொண்டாடப் படுகின்றது 
  • இந்த ஆண்டும் 2019, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப் படுகின்றது
  • இந்த பண்டிகையின் முக்கிய குறிக்கோள், சகோதரன் தனது சகோதிரிக்கு செய்ய வேண்டிய கடமையையும், அதற்கு பிரதிபலனாக சகோதரி தனது சகோதரனுக்கு காட்டும் நன்றியையும் வெளிபடுத்துகின்றது 
  • இந்த பண்டிகை அன்று சகோதரி, தனது சகோதரன் நீண்ட ஆயுளோடும், சகல ஐஸ்வரியத்தோடும் வாழ வேண்டும் என்று வேண்டி கையில் ரக்ஷயை கட்டுவாள்  
  • இந்த பண்டிகை அன்று பூஜைகள் செய்து கடவுளை வழிபடுவதால், தங்களது பந்தம் பலம் பெறுகின்றது என்று நம்பப்படுகின்றது 
  • இந்தியாவில் மட்டுமல்லாமல், நேபால் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும், ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகின்றது.

  Also Read : ஆண்களுக்கான பணப்பையை

  Youtube

  ரக்ஷா பந்தன் எப்படி கொண்டாடப்படுகின்றது (How Is Raksha Bandhan Celebrated)

  • பெண்கள் ரக்ஷா பந்தன் நாள் நெருங்கும் போது, கடைகளுக்கு சென்று தனது சகோதரனுக்கு ஏற்ற ஒரு நல்ல மற்றும் அழகான ரக்ஷையை வாங்குவார்கள்
  • இன்றைய நவீன காலத்தில் அனைவரும் பரிசுகளையும், ரக்ஷையையும் இணையதளத்தில் வாங்கி நேராக அவரது முகவரிக்கு அனுப்பி வைக்கின்றனர்
  • ரக்ஷா பந்தன் (Rakhi) அன்று புது ஆடைகளை அணிந்து அனைவரும், அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள்
  • தங்களது இஷ்ட தெய்வத்தை வணங்கி பூஜை முடிந்ததும், சகோதரி தனது சகோதரனுக்கு ஆரத்தி காட்டி, நெற்றியில் திலகம் இட்டு, அக்ஷதையை தலையில் போட்டு வாழ்த்துவாள்.

  ரக்ஷா பந்தனின் முக்கியத்துவம் (Importance Of Raksha Bandhan)

  • இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது
  • ஜெயினர்கள் இந்த நாளில் மங்கள கயிற்றை தங்களது தெய்வங்களுக்கு அணிவதை ஒரு சம்பிரதாயமாக கருதுகின்றனர்
  • சீக்கியர்கள் “ரக்ஹர்தி” அல்லது “ரக்ஹாரி” என்ற பெயரில் இந்த பண்டிகையை சகோதரன் மற்றும் சகோதரியின் பந்தத்தை பிரதிபலிக்கும் ஒரு திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

  ரக்ஷா பந்தன் எப்படி கொண்டாடப்படுகின்றது (Reason Why Raksha Bandhan Is Celebrated)

  பல நூறு ஆண்டுகளாக இந்த பண்டிகை கொண்டாடப் பட்டு வந்தாலும், இன்று உலகம் பல வகையில் மாறி உள்ளது. மக்களின் வாழ்க்கை முறையும், வாழ்வாதாரமும் மாறி உள்ளது. இதனால் பல பாரம்பரியமான பழக்கங்கள் மற்றும் திருவிழா கொண்டாடும் முறைகளும் சற்று வழக்கத்தை விட்டு மாறி உள்ளது.

  • ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) உடன் பிறந்த இரத்த பந்தத்தில் வரும் சகோதரன் சகோதரி மட்டும் கொண்டாடப் படும் ஒரு விழாவாக இல்லாமல் இன்று உலகளவில் அனைவரும் தங்கள் மனதிற்கு பிடித்த ஒரு பெண் அல்லது ஆணை சகோதரியாகவும், சகோதரனாகவும் பாவித்து வாழ்த்துக்களையும், பரிசுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
  • பாரம்பரியத்தின் வெளிப்பாடாக மட்டுமல்லாமல், ஆன்மிகம், கலாசாரம் மற்றும் தர்மம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

  நவீன காலத்தில் எப்படி கொண்டாடலாம்? சில யோசனைகள் (Modern Raksha Bandhan Celebration Ideas)

  இன்று அனைவரும் இந்த விரைவாக நகரும் உலகத்தில் ஓடிக் கொண்டே இருகின்றனர். அதனால் பல பொது விழாக்கள், மற்றும் குடும்ப நிகழ்சிகளையும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால், எந்த சூழலிலும் ரக்ஷா பந்தன் என்று வந்து விட்டால், யாரும் அதனை கொண்டாடுவதை விட்டுக் கொடுப்பதில்லை. அருகிலோ, தொலைவிலோ, எங்கு இருந்தாலும், ஏதாவது ஒரு விதத்தில் தங்கள் ஆசியையும், பரிசுகளையும் பகிர்ந்து கொள்வார்கள்.

  1. இ- ரக்ஷை (E-Cart)

  இப்போது இணையளதத்தில் உங்கள் சகோதரனுக்கு நீங்கள் விரும்பிய ரக்ஷையை வாங்கி அனுப்பலாம். இந்த உலகத்தில் எந்த மூலையில் உங்கள் சகோதரன் இருந்தாலும், இந்த இணையதள ரக்ஷை அவரை சென்றடையும்.

  2. விடியோ அரட்டை (Video Chat)

  நீங்கள் எங்கு இருந்தாலும், அதை பற்றி இனி கவலைப் பட வேண்டாம். இணையதளம் சென்று விடியோ அரட்டையை தொடங்கி விடுங்கள். நேருக்கு நேராக இருந்து நீங்கள் பேசிக்கொள்வது போலவும், அன்பையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வது போலவும் போன்ற ஒரு உண்மையான உணர்வை நீங்கள் பெறுவீர்கள்.

  3. சமூக பதிவுகள் (Social Posts)

  இன்று முக நூல், யு டியுப், இன்ஸ்டா கிராம், டிவிட்டர் என்று பல சமூக தளங்கள் வந்து விட்டது. இதில் நீங்கள் உங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் ரக்ஷா பந்தன் (Rakhi) பண்டிகையை எப்படி ஒவ்வொருவரும் கொண்டாடி வருகின்றனர் என்பதையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

  4. திடீர் விஜயம் (Sudden Visits)

  உங்களுக்கு நெருக்கமான மற்றும் பிடித்தமான ஒருவரது வீட்டிற்கு திடீர் என்று வருகை தந்து அவர்களை ஆச்சரியப் படுத்துங்கள். இது அவர்களுக்கு ஆச்சரியம் மட்டும் அல்ல, மகிழ்ச்சியையும் தரும். மேலும் இது ஒரு சுவாரசியமான நாளாகவும் உங்களுக்கு மாறும்.

  5. எதிர்பாராத பரிசுகள் (Unexpected Gift)

  அன்று போல் இல்லாமல், இன்று பல வகை பரிசு பொருட்கள் இணையதள கடைகளில் எளிதாக கிடைத்து விடுகின்றது. அதில் உங்கள் வசதிக்கேற்ப மற்றும் பிடித்தமான பரிசு பொருளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்தவருக்கு பரிசளியுங்கள். இது அவரை ஆச்சரியப் படுத்துவதோடு, என்றும் மறக்க முடியாத ஒரு பரிசாகவும், நாளாகவும் அவரது வாழ்க்கையில் இருக்கும்.

  சகோதரிக்கு ரக்ஷா பந்தன் பரிசுகள் – சில யோசனைகள் (Raksha Bandhan Gift Ideas For Sister In Tamil)

  உங்கள் வசதிக்கேற்ப மற்றும் பிடித்தமான பரிசு பொருளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்தவருக்கு பரிசளியுங்கள்

  1. சாக்லேட் (Chocolate)

  Relationships

  Chochalate

  INR 375 AT Only Chochalate

  இது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இன்று வித விதமாக பல வகை சாக்லேட்டுகள் கடைகளில் கிடைகின்றன. மேலும் இணையதள கடைகளிலும் பல வகை வெளிநாட்டு சாக்லேட்டுகள் கிடைகின்றனர். அதில் உங்கள் சகோதரிக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

  2. ஸ்மார்ட் கைகடிகாரம் (Smart Wristwatch)

  Lifestyle

  CASVO A1 Smart Watch

  INR 1,109 AT Xiaomi Mi

  வழக்கமாக இருக்கும் கடிகாரங்களை தவிர்த்து இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பல வகை செயல்பாடுகளுடன் கைகடிகாரங்கள் கிடைகின்றன. குறிப்பாக இணையதளங்களில் பல நவீன கைகடிகாரங்கள் கிடைகின்றன. அவை இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்றவார உதவியாகவும் இருக்கும். இத்தகைய ஸ்மார்ட் கைகடிகாரங்களை உங்கள் சகோதரிக்கு நீங்கள் பரிசாக தரலாம். மேலும் இந்த கைகடிகாரங்கள் பல வண்ணங்களிலும் கிடைகின்றன.

  3. தனிபயனாக்கப்பட்ட பரிசு ( Customized Chain And Pendant)

  Accessories

  Silver 925 Gold Plated Personalized Name Chain Pendant Necklace

  INR 1,799 AT Jewelsmart

  இத்தகைய பரிசுகள் உங்கள் சகோதரிக்கு மட்டும் பிடித்தமான விதத்தில் நீங்களே வடிவமைத்து வாங்கலாம். இத்தகைய பரிசுகள் நிச்சயம் உங்கள் சகோதரியை மகிழவைப்பதோடு, தான் உங்களுக்கு ஒரு முக்கியமானவள் என்கின்ற உணர்வையும் அவளுக்குள் ஏற்படுத்தும்.

  4. பரிசு பைகள் (Funky Beach Bags)

  Funky beach bags

  INR 1,099 AT South Beach

  இன்று பரிசளிப்பதர்காகவே இத்தகைய பரிசு பைகள் கடைகளில் கிடைகின்றன. அவை மேலும் பல வகை பொருட்கள் உள்ளடங்கியதாகவும் கிடைகின்றன. அதனால், உங்கள் சகோதரிக்கு என்ன பிடிக்கும் என்பதை புரிந்து கொண்டு, அந்த வகை பொருட்கள் இருக்கும் பைகளை நீங்கள் பரிசாக வழங்கலாம். குறிப்பாக, சிறு பொம்மைகள் கொண்ட பரிசு பைகள், புத்தகங்கள் கொண்ட பரிசு பைகள், அழகு சாதனங்கள் கொண்ட பரிசு பைகள் என்று பல உள்ளன.

  5. அனுபவங்களும், ஞாபகங்களும் (Selfie Stick)

  And, a selfie stick to help taking photos easier!

  INR 299 AT Amazon

  பரிசு பொருட்கள் மட்டுமே உங்கள் சகோதரிக்கு ரக்ஷா பந்தன் அன்று கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. மாறாக உங்கள் சகோதரிக்கு ஒரு நல்ல நினைவை கொடுக்கக் கூடிய இனிமையான அனுபவங்களையும் பரிசாகத் தரலாம். இதற்கு நீங்கள் அவர் பல நாட்கள் செல்ல வேண்டும் என்று ஆசைப் பட்ட ஒரு இடத்திற்கு சென்று வர தேவையான பயண சீட்டு, தாங்கும் விடுதி என்று அனைத்தையும் உள்ளடக்கிய கூப்பனை பரிசாகத் தரலாம். அல்லது நீங்களாகவே அவரை விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்லலாம். இது நிச்சயம் ஒரு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி தரக்கூடிய பரிசாக அவருக்கு இருக்கும்.

  6. அழகு சாதன பொருட்கள் (Beauty Products)

  Make Up

  Huda Beauty Rose Gold Palette - Remastered

  INR 5,375 AT Huda Beauty

  இன்று பெரும்பாலான பெண்கள் அழகு சாதனா பொருட்கள் பயன் படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுகின்றனர். அந்த வகையில் நீங்கள் உங்கள் சகோதரிக்கு நல்ல தரமான அழகு சாதன பொருட்களை பரிசாகத் தரலாம்.

  7. நகை ஆபரணங்கள் (Jewellery)

  Entertainment

  #StyleSteal

  INR 2,999 AT Jewels Galaxy Luxuria

  அனைத்து பெண்களுக்கும் நகை அணிவது என்பது மிகவும் பிடித்த ஒன்றாகும். அந்த வகையில் நீங்கள் உங்கள் சகோதரிக்கு அவருக்கு பிடித்த மற்றும் அவர் அழகை அதிகப் படுத்தும் வகையில் நகை ஆபரணங்களை பரிசளிக்கலாம். தங்கம், வெள்ளி, பிளாட்டினம், ஐம்பொன் என்று பல உலோக வகைகளில் பெண்களுக்கான ஆபரண நகைகள் பல வடிவங்களில் கிடைகின்றன.

  8. எலக்ட்ரானிக் பொருட்கள் (Electronic Products)

  Minion earphones

  INR 250 AT Hop To Shop

  உங்கள் சகோதரிக்கு பயனுள்ளதாக இருக்கும் எலெக்ட்ரானிக் பொருட்களை நீங்கள் பரிசளிக்கலாம். குறிப்பாக, ஹெட் போன், ப்ளூ டூத், டாப்லட் என்று ஏதாவது ஒன்றை அவருக்கு பயன் தரும் வகையில் தேர்ந்தெடுத்து பரிசளிக்கலாம்.

  9. மோதிரம் (Ring)

  Accessories

  Sansar India Oxidized Silver Metal Big Ring for Girls and Women

  INR 199 AT Sansar India

  அனைத்து பெண்களுக்கு பிடித்த ஒன்று தங்கம் அல்லது வைர மோதிரம். உங்கள் வசதிகேற்ப உங்கள் சகோதரிக்கு நீங்கள் தங்க மோதிரம் அல்லது வைர மோதிரத்தை பரிசளிக்கலாம். இது அவரை நிச்சயம் ஆச்சரியப் பட வைக்கும்.

  10. ஆடைகள் (Clothes)

  Latest Trends: Western

  Printed Strappy Dress

  INR 790 AT Zara

  பெண்களுக்கு வித விதமாக ஆடைகள் அணிவது என்பது ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாகும். அந்த வகையில், இன்று சந்தையில் புதிதாக வந்திருக்கும் புது வரவு புடவைகள் மற்றும் பிற ஆடை வகைகளை தேர்ந்தெடுத்து உங்கள் சகோதரிக்கு நீங்கள் கொடுக்கலாம்.

  11. சமையல் பொருட்கள் (Cooking Equipment)

  #FoodForThought

  INR 450 AT Octavius

  உங்கள் சகோதரிக்கு சமையல் செய்வது அதிகம் பிடிக்கும் என்றால், அது சார்ந்த பொருட்களை நீங்கள் பரிசளிக்கலாம். குறிப்பாக ஏலேக்ட்ரோனிக் சமையல் உபகரணங்கள், காய் வெட்டும் உபகரணங்கள், மிக்ஸ்சர் ஜூசர், என்று பயனுள்ள ஒரு பொருளை பரிசளிக்கலாம்.

  12. செடி வகைகள் (Plants)

  Lifestyle

  Cute Succulent Arrangement Plants

  INR 599 AT HILLMART

  உங்கள் சகோதரிக்கு தோட்டம் அமைப்பதில் அதிகம் ஆர்வும் உள்ளது என்றால், சில அறிய வகை செடிகளை பரிசளிக்கலாம். அது நிச்சயம் அவருக்கு பிடிக்கும். மேலும் இது ஒரு நல்ல நினைவாகவும் இருக்கும்.

  13. பொம்மைகள் (Soft Toys)

  A Cutie Ute!

  INR 2,240 AT Attatoy

  பல வகை பொம்மைகள் இன்று கடைகளில் கிடைகின்றன. இது சிறுமிகளுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்த பெண்களுக்கும் கடைகளில் கிடைகின்றன. அந்த வகையில், உங்கள் சகோதரி உங்களிடம் கேட்ட அல்லது அவருக்கு பிடித்த ஒரு பொம்மையை நீங்கள் பரிசளிக்கலாம். அது நிச்சயம் அவரை மகிழ்ச்சி அடைய செய்யும்.

  14. கைபேசி (Handset)

  Mobile holder

  INR 249 AT TechLife Solutions

  இன்று பல நவீன செயல்பாடுகளுடன் கைபேசிகள், குறிப்பாக ஆன்ட்ரைடு கைபேசிகள், ஸ்மார்ட் கைபேசிகள் பல விலைகளில் கிடைகின்றன. உங்கள் சகோதரிக்கு அப்படி பயன் தரும் வகையில் ஒரு கைபேசியை தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

  15. தனிபயன்பாட்டு காபி கப் (Magic Mug)

  Relationships

  Personalised Magic Mug

  INR 329 AT Magic Mug

  இன்று பல கடைகளிலும், இணையதள கடைகளிலும், தனிபயன்பாட்டு காப் கப்புகள் கிடைகின்றன. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், அந்த கப்புகளில் நீங்கள் விரும்பும் புகைப் படங்களை அச்சிடலாம். இதனால் மேலும் அது தனிபயன்பாட்டு பொருளாகவும் மாறிவிடும். இத்தகைய கப்புகள் நிச்சயம் உங்கள் சகோதரிக்கு பிடிக்கும்.

  16. வீட்டு அலங்கார பொருட்கள் (Home Decor)

  Lifestyle

  Perfect Home Decor

  INR 1,699 AT meditating resin monks

  உங்கள் சகோதரிக்கு வீட்டை அலங்கரிப்பது அதிகம் பிடிக்கும் என்றால், அது சார்ந்த அலங்கார பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம். இதனால் அவர் மகிழ்ச்சி அடைவதோடு வீட்டையும் அலங்கரிக்க முயற்சி செய்வார்.

  17. கைப்பைகள் (Handbags)

  Accessories

  Nivia Sports Space Gym Bag Travel Duffel Bag (Multicolor, Kit Bag)

  INR 495 AT Nivia

  பெண்களுக்கு பல அளவிலும், வகையிலும், நிறங்களிலும் கைப்பைகள் கிடைகின்றன, அப்படி அவருக்கு பயன் தரும் வகையில் நீங்கள் ஏதாவது ஒரு நல்ல கைபையை தேர்வு செய்து அவருக்கு பரிசளிக்கலாம். இது அவருக்கு பயனுள்ளதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும்.

  18. சாமி சிலைகள் / படங்கள் (Statues And Images)

  Relationships

  Bhagwan Ganesha Murti Mini

  INR 288 AT Art N Hub

  உங்கள் சகோதரி அதிகம் பூஜை செய்வது கோவில்களுக்கு செல்வது என்று இருந்தால், அவருக்கு பிடித்த கடவுளின் படங்கள் அல்லது சிலைகளை பரிசளிக்கலாம். மேலும் வீட்டிலும், கோவிலிலும் பூஜை செய்ய உதவும் வகையில் கூடைகள், தட்டுகள் என்று சில குறிப்பிடத்தக்க பரிசுகளையும் தரலாம்.

  19. பாதுகாப்பு உபகரணங்கள் (Security Equipment)

  Lifestyle

  Sahibuy Army knife Multi-utility Knife

  INR 153 AT Gifts Planet

  இன்று பெண்களுக்கு அதிகம் பாதுகாப்பு தேவைப்படுகின்றது. இந்த வகையில் உங்கள் சகோதரிக்கு நீங்கள் பாதுகாப்பு உபரணங்கள் ஏதாவது ஒன்றை அல்லது சில பொருட்கள் அடங்கிய கிட்டை பரிசளிக்கலாம். குறிப்பாக, சிறு கத்தி, பெப்பர் ஸ்ப்ரே, எலெக்ட்ரிக் கன் (துப்பாக்கி) என்று தேர்வு செய்து பரிசளிக்கலாம். இது நிச்சயம் அவருக்கு பயனுள்ளதாகவும், பாதுகாப்பு உணர்வை தரக்கூடியதாகவும் இருக்கும்.

  20. வாசனை திரவியங்கள் (Perfumes)

  Lifestyle

  Springtime Solace Perfume

  INR 395 AT Springtime

  பெண்களுக்கு பல வகை மலர்களின் மனம் சார்ந்த வாசனை திரவியங்கள் பிடிக்கும். அப்படி ஏதாவது ஒன்று உங்கள் சகோதரிக்கு பிடித்திருந்தால், நீங்கள் அதை கண்டறிந்து, சரியாக தேர்வு செய்து உங்கள் சகோதிரிக்கு கொடுக்கலாம்.

  சகோதரனுக்கு ரக்ஷா பந்தன் பரிசுகள் (Rakhi Gift Ideas For Brother)

  சகோதரன் சகோதரிக்கு பரிசுகள் கொடுப்பது போன்று சகோதரியும் சகோதரனுக்கு என்னமாதிரியான பரிசுகள் கொடுக்கலாம் என்பதனை இங்கு பார்க்கலாம்

  1. எலெக்ட்ரானிக் பொருட்கள் (Electronic Products)

  Lifestyle

  Azacus HBS-730 Neckband Bluetooth Headphones Wireless Sport Stereo Headsets Handsfree with Microphone for Android, Apple Devices MP3 Player

  INR 549 AT Azacus

  இன்று ஆண்கள் பல வகை ஏலேக்ட்ரோனிக் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுகின்றனர். குறிப்பாக ப்ளூ டூத், ஹெட் செட், விடியோ கேம்ஸ், என்று மேலும் பல. அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து உங்கள் சகோதரனுக்கு பரிசளிக்கலாம்.

  2. ஆண்களுக்கான வாசனை திரவியங்கள் (Perfume)

  Relationships

  https://www.myntra.com/perfume-and-body-mist/guess/guess-women-dare-eau-de-toilette-100-ml/1677387/buy

  INR 1,403 AT Guess

  பல மனங்களில் ஆண்களுக்கான வாசனை திரவியங்கள் கிடைகின்றன. அவற்றில் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டுள்ள வாசனை திரவியங்கள் பிரத்யேகமானதாக இருக்கும். அப்படி ஒன்றை தேர்வு செய்து உங்கள் சகோதரனுக்கு தரலாம்.

  3. கைகடிகாரங்கள் (Wrist Watch)

  Lifestyle

  Men's Stainless Steel Wrist Watch

  INR 799 AT Archies

  ஆண்களுக்கு பல விலைகளில், பல செயல்பாடுகள் உள்ளது போல பல கைகடிகாரங்கள் கிடைகின்றன. அந்த கடிகாரங்களில், பல தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். அது நிச்சயம் உங்கள் சகோதரனுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  4. T-சட்டைகள் (T-Shirt)

  Fashion

  Motivational Quote T-Shirt

  INR 254 AT Vintage Clubwear

  T- சட்டைகளை பிடிக்காத ஆண்கள் இருக்க முடியுமா? உங்கள் சகோதரனுக்கும் நீங்கள் ஒரு நல்ல T- சட்டையை தேர்வு செய்து பரிசளிக்கலாம். இது நிச்சயம் அவருக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும்.. மேலும் இன்று இணையதள கடைகள் மற்றும் பிரபலமான கடைகளில் பல நவீன T- சட்டைகள் கிடைகின்றன. அவற்றில் ஒரு நல மற்றும் ஸ்டைலாக தோற்றம் தரும் ஒரு சட்டையை தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

  5. வெளிப்புற விளையாட்டு பொருட்கள் (Outdoor Sports Equipment)

  Entertainment

  BADMINTON RACQUET

  INR 1,190 AT CARLTON AERO 2100A

  ஆண்களுக்கு எத்தனை வயதானாலும், ஒரு சில விளையாட்டின் மீது எப்போதும் மோகம் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக கிரிகெட், புட்பால், வாலிபால், என்று பல உள்ளன. அவரை ஊக்கப் படுத்தும் வகையில் நீங்கள் ஏதாவது ஒரு வெளிப்புற விளையாட்டு பொருளை அவருக்கு பரிசளிக்கலாம்.

  6. காலணிகள் (Shoes)

  BUT FIRST, #SHOEFIE

  INR 6,297 AT Myntra

  ஸ்போர்ட்ஸ் ஷூ: மேலும் அவர் விளையாட தோதாகவும், பயனுள்ளதாகவும், நீங்கள் ஸ்போர்ட்ஸ் ஷூக்களை தேர்வு செய்து பரிசளிக்கலாம். இது மேலும் அவருக்கு பயன் தரும் ஒரு பொருளாக இருக்கும். அவரை மேலும் ஊக்கவிக்கவும் செய்யும்.

  7. சினிமா டிக்கட்டுகள் (Movie Tickets)

  A Movie Card

  INR 200 AT Book My Show

  உங்கள் சகோதரன் அவரது நண்பர்கள் அல்லது மனைவி, குழந்தைகளுடன் சினிமா செல்ல டிக்கட்டுகள் முன்பதிவு செய்து கொடுக்கலாம். இது அவருக்கு உற்சாகம் தரக்கூடிய ஒரு பரிசாகவும் இருக்கும். மேலும் அவர் எப்போதும் மும்மரமாக வேலை, வேலை என்று ஓடிக்கொன்றிருப்பவராக இருந்தால், தன் குடும்பத்தினருடன் தரமான நேரம் செலவு செய்யும் வகையிலும் மற்றும் நல்ல நினைவுகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஒரு பரிசாகாவும் இருக்கும்.

  8. சுற்றுலா செல்ல டிக்கட்டுகள் (Travel Tickets)

  Lifestyle

  Tour Package

  INR 9,999 AT yatra

  உங்கள் சகோதரன் பல நாட்கள் செல்ல விரும்பிய ஒரு சுற்றுலா தளத்திற்கு செல்ல டிக்கட்டுகள் முன்பதிவு செய்து தரலாம். குறிப்பாக அவர் குடும்பத்தினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ செல்ல நீங்கள் இப்படி ஒரு ஏற்பட்டுகளை செய்து, அதை பரிசாகத் தரலாம்.

  9. உணவு விடுதிக்கு செல்ல கூப்பன்கள் (Coupons For Restaurant)

  SkinFood Black Sugar Mask

  INR 1,699 AT Skin Food

  இன்று பல உயர்தர மற்றும் ஆடம்பர உணவு விடுதிகள் நகரம் முழுவதும் உள்ளன. அப்படி ஒன்றில் உங்கள் சகோதரன் தன் குடும்பத்தினர்களுடன் அல்லது நண்பர்களுடன் சென்று உணவு அருந்தும் வகையில் கூப்பன்களை பரிசளிக்கலாம். இது அவரை நிச்சயம் மகிழ்ச்சி அடைய செய்யும்.

  10. பிளாட்டினம் / தங்க மோதிரம் (Platinum/Gold Ring)

  Accessories

  Ring

  INR 15,549 AT DIAMOND BAND

  ஆண்களுக்கென்றே பல சிறய அளவு முதல் பெரிய அளவிலான பிளாட்டினம் மற்றும் தங்க மோதிரங்கள் உள்ளன. மேலும் பெயர் பதிக்கப் பட்ட மோதிரங்களையும் நீங்கள் பார்க்கலாம். அத்தகைய மோதிரம் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து உங்கள் சகோதரனுக்கு பரிசளிக்கலாம்.

  11. தனிபயன்பாட்டு பொருட்கள் (Customised Gift Ideas)

  Personalized Apron

  INR 368 AT Ferns N Petals

  உங்கள் சகோதரனுக்கென்றே பயன் தரும் வகையில் தனிபயன்பாட்டு பொருட்களை பரிசளிக்கலாம். குறிப்பாக அவரது புகைப் படம் பதிக்கப் பட்ட காப் கப், T-சட்டைகள், முதுகில் அணியும் பைகள் என்று தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

  12. வாகனத்திற்கான உபகரணங்கள் (Car Accessories)

  A travel pillow with eye mask  

  INR 1,495 AT Chumbak

  இது அவரது வாகனத்தை மேலும் சௌகரியமாக பயன் படுத்தவும், பயன் பாட்டை அதிகரிக்கும் வகையிலும், அலங்கரிக்கும் வகையிலும் இருக்கும். உங்கள் சகோதரனுக்கு வாகனத்தின் மீது அதிக மோகம் உள்ளது என்றால், இத்தகைய பரிசுகள் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

  13. பேனா (Pen)

  Make Up

  Coloressence Rollon Lip Liner Pencil

  INR 145 AT Coloressence

  பேனா என்றால் சாதாரணமாக எழுதும் பேனா மட்டுமல்ல, இன்று நவீன ஏலேக்ட்ரோனிக் பேனாக்களும் கிடைகின்றன. அந்த வகையில், பெண் டிரைவ் அடங்கி உள்ள பேனா, வாய்ஸ் ரெகார்ட் செய்யும் பேனாக்கள், என்று சிறந்த ஒன்றை தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

  14. பணம் வைக்க பர்சுகள் (Purse)

  Accessories

  Jane Austen Leather Pride and Prejudice Leather Book Purse

  INR 6,316 AT KrukruStudioBooks

  ஆண்களுக்கென்ற பல வகை பர்சுகள் பணம் வைத்துக் கொள்ள கிடைகின்றன. அவற்றில் பிரத்தேயகமாக, மேலும் சில முக்கிய பொருட்கள், அதாவது ஓட்டுனர் உரிமம், கடன் அட்டை, என்று பலவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வகையில் இருக்கும் பர்சுகளை நீங்கள் தேர்வு செய்து பரிசளிக்கலாம். இது அவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  15. ஸ்மார்ட் காலண்டர் (Smart Calender)

  2018 Black & Gold Desk Calendar

  INR 4,980 AT Sugar Paper

  இது ஏலேக்ட்ரோனிக் நாள்காட்டி என்றும் கூறலாம். உங்களது முக்கிய குறிப்புகள், மற்றும் நிகழ்வுகளை பதிவு செய்து, தக்க சமயத்தில் உங்களுக்கு நினைவூட்டி, உங்கள் வேலையை எளிமையாக்கும். இத்தகைய ஸ்மார்ட் காலண்டர்களை நீங்கள் தேர்வு செய்து உங்கள் சகோதரனுக்கு பரிசளிக்கலாம.

  16. துறை சார்ந்த புத்தகங்கள் (Books)

  #POPxoBookShop

  INR 999 AT Flipkart

  உங்கள் சகோதரன் படிக்கும் துறை அல்லது வேலை பார்க்கும் துறை, குறிப்பாக அவருக்கு தனது திறனையும், அறிவையும் துறை சார்ந்து அதிகப் படுத்திக் கொள்ளும் வகையில் தகவல்களை தரக்கூடிய புத்தகங்களை பரிசளிக்கலாம்.

  17. பயணம் செய்ய உதவும் பைகள் (Travel Bags)

  Accessories

  Tooba Handicraft Party Wear Beautiful Flower Box Clutch Bag

  INR 799 AT Tooba

  உங்கள் சகோதரன் அதிகம் பயணம் செய்பவராக இருந்தால், அவருக்கு நீங்கள் பயணம் செய்ய எளிமையான பைகளை பரிசளிக்கலாம். இந்த பைகள் பல வகைகளிலும், விலைகளிலும், நிறங்களிலும் கிடைகின்றன.

  18. டிஜிட்டல் கேமரா (Digital Camera)

  Lights. Camera. Coffee!

  INR 699 AT Flipkart  

  உங்கள் சகோதரனுக்கு புகைப் படம் எடுப்பது மிகவும் பிடிக்கும் என்றால், அவர் ஆர்வத்தை ஊக்கவிக்கும் வகையிலும், அவர் திறமையை அதிகரிக்க உதவும் வகையிலும் ஒரு நல்ல டிஜிட்டல் கேமராவை பரிசளிக்கலாம். இன்று இணையதளங்களில் பல விலைகளில் டிஜிட்டல் கேமராக்கள் கிடைகின்றன.

  19. ஆண்களுக்கான அழகு சாதனா பொருட்கள் (Beauty Accessories For Men)

  Lifestyle

  Park avenue Grooming Kit For Men - Luxury Collection, With Free Travel Pouch, 940 g

  INR 685 AT Park Avenue

  பெண்கள் மட்டுமல்ல, இன்று ஆண்களுக்கான அழகு சாதனா பொருட்கள் வந்து விட்டது. இந்த வகையில், குறிப்பாக அவர் வீட்டில் பயன் படுத்தக் கூடிய ஏலேக்ட்ரோனிக் முக சவரம் செய்யும் கருவி, தலை முடி ட்ரிம் செய்யும் கருவி என்று அவருக்கு பயனுள்ள ஒரு பொருளை பரிசளிக்கலாம். இது அவருக்கு உதவியாகவும் இருக்கும்.

  20. பாடல்களின் தொகுப்பு (A Collection Of Songs)

  Lifestyle

  Ipad

  INR 26,880 AT Apple

  உங்கள் சகோதரனுக்கு இசை அதிகம் பிடிக்கும் என்றால், அவருக்கு பிடித்த பாடல்களின் தொகுப்புகளை நீங்கள் பரிசளிக்கலாம். இது அவரை மேலும் உற்சாகப் படுத்தும் வகையில் இருக்கும். இதை நீங்கள் ஐ-பாட் போன்ற கருவிகளில் சேகரித்தும் பரிசளிக்கலாம். மேலும் அவரை மகிழ்விக்கும் விதமாக இந்த பரிசுகள் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! 
  ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.