Health

ஜிம்மிற்கு சென்றும் எடை குறையவில்லையா? சப்ஜா விதைகளை தினமும் சாப்பிடுங்கள்!

Swathi Subramanian  |  Jun 10, 2019
ஜிம்மிற்கு சென்றும் எடை குறையவில்லையா? சப்ஜா விதைகளை தினமும் சாப்பிடுங்கள்!

தற்போதைய நவீன காலத்தில் உடல் எடை அதிகரிப்பால் பலர் அவதியுறுகின்றனர். கடைகளில் விற்கும் புட்டிகளில் அடைத்த உணவுகள், குளிர் பானங்கள், பீட்ஸா, பர்கர் ஆகியவை உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணிகளாக உள்ளது. இதனால் சின்ன வயதிலேயே உடல் எடை பிரச்சனை ஏற்படுகிறது.  உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பல்வேறு முறைகளை பின்பற்றியும் எடை குறையவில்லை என வருத்தப்படுகிறீர்களா? இதோ இயற்கையாக கிடைக்கும் சப்ஜா விதைகளை(sabja seeds) பயன்படுத்தி உடல் எடையை (weight loss)விரைவில் குறைக்கலாம்.

Also Read: Amazing Health Benefits Of Sesame Seeds In Tamil

சப்ஜா விதைகள்  என்றால் என்ன? (About sabja seeds)
சப்ஜா விதைகள்(sabja seeds) கருப்பு நிறத்தில் எள் போன்று காணப்படும். திருநீற்றுப்பச்சிலை என்கிற மூலிகையின் விதையே(seeds) சப்ஜா விதை என்றழைக்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தற்போது பரவலாக சப்ஜா விதை பயன்படுத்தப்படுகிறது. இது சூப்பர் புட் என்று அங்கு அழைக்கப்படுகிறது. இந்த விதைகள் (seeds) பலூடாக்களில் பயன்படுத்தபடுவதால் இதனை பலூடா விதைகள் (falooda seeds)என்றும் அழைக்கப்படுவதுண்டு. சியா விதைகளும், சப்ஜா விதைகளும் ஓன்று என்ற கருத்து நிலவுகிறது ஆனால் இரண்டும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. சப்ஜா விதைகள் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். சியா விதைகள் கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. ஆனால் இரண்டு விதைகளுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

எள் விதையின் நன்மைகள்

Also Read : அஸ்பாரகஸ் ஊட்டச்சத்து உண்மைகள்

உடல் எடையை குறைக்க (for weight loss)
ஊற வைத்த சப்ஜா விதையை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிடுவது கட்டுக்குள் வைக்கப்படும். மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலை இந்த விதை கொடுக்கும். ஒமேகா 3 அமிலம் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைக்க சப்ஜா விதைகள் பயன்படுத்தப்படுக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி இந்த விதைகளுக்கு உண்டு. சப்ஜா விதையில் குறைந்த அளவு எரிசக்திகளே (calories) உள்ளது. ஒரு ஸ்பூன் சப்ஜா விதையில் இரண்டில் இருந்து நான்கு சதவிகித எரிசக்திகள் மட்டுமே உள்ளது. இதனால் தினமும் காலை வெறும் வயிற்றில் சப்ஜா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை weight loss) கட்டுக்குள் வைப்பதோடு தொப்பையும் குறையும்.

Also Read : அத்தி வகைகள்

பயன்படுத்தும் முறை (how to use)
சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும் முதல் நாள் இரவில் ஊற வைத்து பின்னர் அடுத்த நாள் பயன்படுத்தலாம். சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்தால் நல்லது. அல்லது வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் போதுமானது. இதில் அதிகளவு பைபர் காணப்படுகிறது. இந்த பைபர் தண்ணீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்று காணப்படும். வழவழப்பாக காணப்படுவதை வெறுதாக விதையை மட்டும் சாப்பிட சிலருக்கு பிடிக்காது அதனால் ஊறிய விதையை லெமன் ஜூஸ், பலூடா மற்றும் நன்னாரி சர்பத்தில் கலந்து குடிக்கலாம்.

வாவ் தினமும் அசத்தும் மேக்கப் எப்படி போடலாம்! சூப்பர் டிப்ஸ் இதோ!

சப்ஜா விதையின் பயன்கள்(benifits of sabja seeds)
சப்ஜா விதையில் ஒமேகா 3 அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து உள்ளது. மேலும் நார் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு இந்த விதை சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் நெஞ்செரிச்சல் மற்றும் உணவு பாதையில் ஏற்படும் புண்களை இந்த விதை போக்குகிறது. தொடர்ந்து சப்ஜா விதையை சாப்பிட்டு வர உடலில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கப்படும். வைட்டமின் ஏ, பி காம்ப்லெக்ஸ், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதால் பித்தம் மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மை வாய்ந்தது.

அவகேடோவின் நன்மைகள்

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது (who do not eat?)
குழந்தைகளுக்கு சப்ஜா விதையை (sabja seeds) கொடுப்பதை தவிர்க்கலாம்.  கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் வாய்ப்புகள் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க கூடாது. மேலும் பெண்களின் ஈத்திரோசன் அளவை குறைக்கும் தன்மை கொண்டது. எனவே இளம்பெண்கள் குறைந்த அளவில் எடுத்து கொள்ள வேண்டும். அதே போல் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் செய்ய இருப்பவர்கள் சப்ஜா விதையை தவிர்ப்பது நல்லது. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் சப்ஜா விதையை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.  

ம்ம்ம்… சுவையான மனமனக்கும் சிக்கன் கிரேவி ரெசிபி!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Health