வாவ் தினமும் அசத்தும் மேக்கப் எப்படி போடலாம்! சூப்பர் டிப்ஸ் இதோ!

வாவ் தினமும் அசத்தும் மேக்கப் எப்படி போடலாம்! சூப்பர் டிப்ஸ் இதோ!

பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் மேக்கப்(makeup) மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. மேக்கப்பை விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மேக்கப் எல்லா காலகட்டத்திற்கும் அடிப்படை அத்தியாவிசயமாகி விட்டது. மேக்கப்(makeup) என்பது நமது முகத்தை மாற்றும் மாஸ்க் கிடையாது. நமக்கு இருக்கும் கண் காது மூக்கு ஆகியவற்றை எடுத்து கூடுதல் அழகு படுத்தும் ஒப்பணையே மேக்கப்.


அன்றாடம் தினசரி வேலைக்கு செல்பவர்கள் வெளியில் செல்பவர்கள் என அனைவருக்கும் மேக்கப்(makeup) தேவைப்படுகின்றது. சரி சிம்பிள் மேக்கப் எப்படி போடுவது என்று பார்ப்போம்.


முகம் எப்போதும் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருந்தால் மட்டும் தான் மேக்கப்(makeup) போட்டதும் அழகாகவும் மேக்கப்(makeup) செட் ஆகவும் செய்யும். அதற்கு சரும பராமரிப்பு மிகவும் முக்கியம். சருமத்தை தினமும் கிளன்சிங் மற்றும் தூய்மையான உணர்வுடன் வைத்திருக்க வேண்டும். சருமம் பொலிவுடன் இருக்கும் போது தான் மேக்கப் முகத்திற்குள் செட் ஆகி நல்ல மாய்சுரயிசரை தந்து பிரைட் லுக்கை தரும். மேக்கப்(makeup) எப்படி போட்டால் நன்றாக இருக்கும் என ஒப்பனை கலைஞர் ஃபாத்திமா சில டிப்ஸ்களை கொடுக்கிறார்.


simple tips beauty005


கை நகங்களை பாதுகாப்பது எப்படி


கிளன்சிங்


மேக்கப்(makeup) போடுவதற்கு முன் செய்யப்படும் கிளன்சிங் என்பது தேவையான ஒன்று. இது மேக்கப்(makeup) போடுவதற்கு என்றில்லை, நமது சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கிளன்சிங் செய்தல் வேண்டும். கிளன்சிங் லோஷன் மற்றும் மில்க் வடிவிலும் வருகிறது. கிளன்சிகை பஞ்சில் நனைத்து தினமும் இரவு முகத்திற்குத் தடவவேண்டும். இதன் மூலம் முகத்தில் உள்ள தோல் சுத்தமாகும். இதனால் முகப்பரு, பரு வந்த தழும்பு, முகத்தில் குழி, பள்ளம் வராமல் முகம் பாதுகாக்கப்படும். தோல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.


மேலும் படிக்க தமிழில் சென்னையில் திருமண ஒப்பனை கலைஞர்


மாய்ச்சரைஸர்


நமது தோல் எண்ணெய்ப்பசையுள்ள சருமமா அல்லது வறண்ட சருமமா என எந்த வகை சருமமாக இருந்தாலும் மேக்கப்பிற்கு முன்பாக நல்ல மாய்ச்சரைஸராக பயன்படுத்துதல் தோலிற்கு எப்போதும் நல்லது. வறண்ட சருமம் உள்ளவர்கள் மேக்கப்பிற்கு முன்பாக கட்டாயம் முகத்தை மாய்ச்சரைஸ் செய்தல் வேண்டும்.இனி நமக்கான மேக்கப்(makeup) சாதனங்களை தேர்வு செய்வதையும் பயன்படுத்துவதையும் பார்ப்போம். மேக்கப்(makeup) போடுவதற்கு ப்ரைமர், ஃபவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர், காஜல், ஐ லைனர், ஐ ஷேடோ, லிப் லைனர், லிப் ஃபாம், லிப்ஸ்டிக் போன்ற காஸ்மெட்டிக் பொருட்கள் தேவை. இனி எந்த வகை சருமத்துக்கு எந்தமாதிரியான புராடெக்டுகளை தேர்வு செய்து, எப்படி பயன்படுத்தி மேக்கப்(makeup) போட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.


simple tips beauty003


வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதற்கான சூப்பர் டிப்ஸ்!


மேக்கப்(makeup) போடுவதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்தல் வேண்டும். முதலில் ப்ரைமரை முகத்தில் தடவவேண்டும். ப்ரைமர் போட்டு மேக்கப்(makeup) செய்வதால் நாம் போடும் மேக்கப் தோலின் உள்ளே நுழையாமல் தோல் பாதுகாக்கப்படுவதுடன், நீண்ட நேரம் மேக்கப்(makeup) முகத்தில் இருக்கவும் உதவும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் என்றால் மேட் பினிசிங் ப்ரைமராக பார்த்து வாங்க வேண்டும். வறண்ட சருமம் என்றால் ஜெல் ப்ரைமர் அல்லது வாட்டர் ஃபேஸ்டு ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். சாதாரண சருமம் உள்ளவர்கள், நார்மல் ஸ்கின் ப்ரைமரையே பயன்படுத்தலாம். ப்ரைமரை பயன்படுத்தும்போது எப்போதும் முகத்தில் எல்லா இடங்களிலும் சமமாக தடவவேண்டும்.ப்ரைமரை அப்ளை செய்ததும், அடுத்ததாக ஃபவுண்டேஷனை முகத்தில் போட வேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஸ்டிக் ஃபவுண்டேஷனையும், வறண்ட சருமம் உள்ளவர்கள் லிக்யூட் ஃபவுண்டேஷனையும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.


ஃபவுண்டேஷன் தேர்வு எப்போதும் நம் ஸ்கின் டோனோடு ஒத்துப்போக வேண்டும். அதாவது நம் தோலின் நிறத்திலேயே ஃபவுண்டேஷன் இருத்தல் வேண்டும். ஃபவுண்டேசனை நெற்றி, கன்னம் அல்லது தாடை இவற்றில் லேசாகத் தடவிப் பார்த்து வாங்க வேண்டும். கை அல்லது கை மணிக்கட்டில் போட்டுப் பார்த்து வாங்குதல் தவறான அணுகுமுறை. அதேபோல் டார்க் மற்றும் டஸ்கி ஸ்கின் உள்ளவர்கள் அதிகம் ஃபேராகத் தெரிய வேண்டும் என நினைத்து பேர் ஃபவுண்டேஷனை வாங்கினால் கூடுதல் டார்க்காக அல்லது ஓவர் ப்ரைட்டாகத் தோற்றம் கிடைக்கும். ஃபவுண்டேஷனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சமமாக அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்ததும் கொஞ்ச நேரம் நமது தோலில் செட்டாவதற்கு இடைவெளி கொடுக்க வேண்டும்.


simple tips beauty006


குளிக்கும் போது இந்த தவறு நடக்கிறது! கட்டாயம் கூந்தல் உதிரும்?


ஃபவுண்டேஷனைத் தொடர்ந்து காம்பேக்ட் பவுடரை மேல் பூச்சாகப் போடுதல் வேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஃபவுண்டேஷனுக்கு பின் கட்டாயம் காம்பேக்ட் பவுடர் பயன்படுத்த வேண்டும். காம்பேக்ட் பவுடர் வாங்கும்போது ஸ்கின் நிறத்திற்கு ஏற்ற அதே ஷேட் அல்லது ஒரு ஷேட் லைட்டராகப் பார்த்து வாங்கி பயன்படுத்தலாம். ட்ரை ஸ்கின் என்றால் சாதாரண டிரான்ஸ்பரன்ட் பவுடரை பயன்படுத்தினாலே போதும். அன்றாடம் பயன்படுத்தும் டிரான்ஸ்பரன்ட் பவுடரை ஃபவுண்டேஷனுக்கு பின் அப்ளை செய்யும்போது மேக்கப்போடு செட்டாகிவிடும்.


ஐப்ரோ பவுடர், ஐப்ரோ ஜெல், ஐப்ரோ ப்ரிமேட் போன்றவை ஐப்ரோவை கூடுதல் வடிவில் அழகாக எடுத்துக்காட்ட விற்பனையில் உள்ளன. பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரியான புராடெக்டை வாங்கி பயன்படுத்தி, ஐப்ரோக்களை திருத்தி வரையும்போது எடுத்த உடனே அடர்த்தியாக வரைதல் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கேற்ப அடர்த்தியாக்க வேண்டும்.காஜல் மற்றும் ஐ லைனரைப் பயன்படுத்த நினைப்பவர்களும், இவற்றைப் பயன்படுத்திய பின் வெளியில் செல்ல நினைப்பவர்களும் அவர்களது கண் வடிவிற்கு ஏற்ப, அதாவது கண்கள் சிறிதாக இருக்கிறது என்றால் வாட்டர் லைனுக்கு கீழே போட வேண்டும்.


அப்போது ஐ லைனர் அவர்களின் கண்களைப் பெரிதாக எடுத்துக் காட்டும். கண் பெரிதாக இருப்பவர்கள் வாட்டர் லைன் மேலே லைனரைப் போட்டு, கண்களின் இறுதியில் உள்ள ‘வி’ வடிவ ஷேப்பில் டார்க்காக கொடுத்து ஓப்பனிங்கில் லைட்டாக கோடு வடிவில் மெலிதாகப் போட்டால் கண் பார்க்க மிகவும் அழகாகப் ப்ரைட்டாகத் தெரியும். ஐ ஷேடுகளை பகல் நேரங்களில் பயன்படுத்தத் தேவையில்லை. பயன்படுத்த விரும்புபவர்கள் நியூட் ப்ரௌன் கலர் ஐ ஷேடுகளாக வாங்கிப் பயன் படுத்தலாம்.லிப் லைனர் மற்றும் லிப்ஸ்டிக் இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு நமது உதடுகளை ஸாப்ட் அண்ட் ஸ்மூத்தாக வெடிப்பு எதுவும் இன்றி வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு லிப் ஃபார்ம் பயன்படுத்தலாம். லிப் ஃபார்ம் போட்டதும், அதை டிஸ்யூ பேப்பரால் ஒத்தி எடுத்துவிட்டு, லைனர் போட்டு பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும். இல்லை என்றால் லிப் ஸ்க்ரப் செய்துவிட்டு லிப்ஸ்டிக் போடலாம்.


லிப் ஸ்க்ரப்பை நம் வீட்டிலே செய்யலாம். சர்க்கரை, லெமன், தேன் மூன்றையும் கலந்து உதடுகளில் தடவி ஸ்க்ரப் செய்தால் உதட்டில் உள்ள டெட் ஸ்கின் நீங்கிவிடும். அத்துடன் உதடுகள் மிகவும் மென்மையாக மாறும். முதலில் லிப் லைனரால் ஒரு அவுட் லைன் கொடுத்து அதன் பிறகே லிப்ஸ்டிக் போடவேண்டும். மேட் லிப்ஸ்டிக் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும். இந்தவகை லிப்ஸ்டிக்கை ஈவினிங் பார்ட்டி மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு வெளியில் செல்லும்போது டார்க் ஷேடாகப் போடலாம். அலுவலகம் செல்வோர், லிப்ஸ்டிக் இன்றி வெளியில் போக விரும்பாதவர்கள் நியூட்ரலாக ஒரு லைட் ஷேடாகப் பயன்படுத்தலாம்.


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo