Bath & Body

கலரிங் பண்ண தலைமுடியை பராமரிப்பது & சரியான ஷாம்பூவை தேர்வு செய்வது எப்படி?

Meena Madhunivas  |  Dec 19, 2019
கலரிங் பண்ண தலைமுடியை பராமரிப்பது & சரியான ஷாம்பூவை தேர்வு செய்வது எப்படி?

இன்று ஆண், பெண் என்று இருபாலாரும் தலைமுடிக்கு பல வண்ணங்களில் சாயங்கள் பூசுகின்றனர். இதனால் பலருக்கும் தலைமுடிக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்கின்ற ஐயமும் உள்ளது. எனினும், சரியான பராமரிப்பு, உங்கள் தலைமுடியை நன்கு பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

உங்கள் தலைமுடிக்கு நீங்கள் சாயம் பூசி இருந்தால், கட்டாயம் அதற்கான பராமரிப்புகளை செய்ய வேண்டியது அவசியம். மேலும் குறிப்பாக சரியான ஷாம்பூவை தேர்வு செய்வதும் மிக முக்கியமான ஒன்றாகும். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு, தரமற்றதாக இருந்தால், விரைவாக முடி ஆரோக்கியம் இழந்து, வறண்டு, மேலும் சாயமும் மங்கி போகக் கூடும்.

எப்படி உங்கள் சாயம் பூசிய தலைமுடியை பராமரிப்பது என்றும், சரியான ஷாம்பூவை (colored hair shampoo) தேர்வு செய்வது எப்படி என்றும், இங்கே இந்த சுவாரசியமான தொகுப்பில் காணலாம்!தொடர்ந்து படியுங்கள்!

கலரிங் பண்ண தலைமுடியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை(need to know about colored hair)

அழகு நிலையத்திற்கு சென்றோ, ஒரு நிபுணரின் உதவியோடோ அல்லது வேத்திலேயோ, தலைமுடிக்கு சாயம் பூசி விட்டால், அதோடு உங்கள் வேலை முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதன் பின்னரே உங்களது உண்மையான வேலை தொடங்குகின்றது. உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசும் முன், நீங்கள் சில முக்கியமான விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே உங்களுக்காக அவை;

கலரிங் பண்ண தலைமுடியை பராமரிப்பது எப்படி(Tips to take care of colored hair)

தலைமுடிக்கு சாயம் பூசிய பின்னரே உங்களுக்கான உணமையான வேலை தொடங்குகின்றது. அதனால், சாயம் பூசிய (கலரிங்) பின்னர், எப்படி உங்கள் தலைமுடியை பராமரிக்க வேண்டும் என்று இங்கே உங்களுக்காக ஒரு தொகுப்பு;

1. தலைக்கு குளிக்கவில்லை என்றால், தலைமுடி நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

Pexels

நீங்கள் குளிக்க செல்லும் போது, தலைக்கு குளிக்கவில்லை என்றால், உங்கள் தலைமுடி தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறையாக தலைமுடியை அலசவில்லை என்றால், சாயம் விரைவாக மறைந்து விடும்.

2. க்ளரிபாயிங் ஷாம்பூ

இந்த வகை ஷாம்பூ சாயத்தை விரைவாக போக்கிவிடக் கூடும் என்பதால், இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இதில் அதிகம் ரசாயனம் கலந்த டிடர்ஜென்ட் இருப்பதால், இதனை தலைமுடிக்கு சாயம் பூசிய பின் பயன்படுத்துவது நல்லது அல்ல.

3. ஆரோக்கியமான உணவு முறை

உங்கள் தலைமுடி நல்ல ஆரோக்கியத்தோடும், அழகாகவும் இருக்க வேண்டும் என்றால், உங்கள் உணவிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். முடிந்த வரை உங்கள் உணவில் சில நல்ல மாற்றங்களை செய்து, தலைமுடி நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி செய்வதால், உங்கள் தலைமுடிக்கு பூசிய சாயமும் நல்ல நிலையில் பல நாட்கள் இருக்கும்.

4. சத்துக்கள்

குறிப்பாக வைட்டமின் சி சத்து தலைமுடியின் வேர் பகுதியில் இருக்கும் இரத்த குலைகளை ஆரோக்கியமாக வைத்து, அதனால் நுண்குமிழில் நல்ல எண்ணிக்கையில் இருக்க உதவுகின்றது. மேலும் வைட்டமின் சி, இரும்பு மற்றும் புரதம் போன்ற சத்துக்களை தலைமுடி பெற உதவுகின்றது. இது நீங்கள் சத்துக்கள் நிறைந்த உணவு, குறிப்பாக முட்டை, கேரட், போன்ற உணவை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்துகின்றத். இது தலைமுடி அடர்த்தியாகவும், பலமாகவும் இருக்க உதவும்.

5. ஊதா கதிர் பாதுகாப்பு உடைய பொருட்களை பயன்படுத்த வேண்டும்

Pexels

நீங்கள் உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசி இருந்தால், குறிப்பாக நீங்கள் அதிகம் வெளியில் செல்பவராக இருந்தால், ஊதா கதிர் பாதுகாப்பு உடைய பொருட்களை தலைமுடியின் பராமரிப்பு உபயோகிக்க வேண்டும். இது உங்கள் தலைமுடியில் இருக்கும் சாயம் வெளுக்காமலும், பாதுகாப்பாக அதே பசுமை தோற்றத்தை பெறவும் உதவும்.

6. ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் தலைமுடியில் பூசிய சாயம் நல்ல நிலையில் பல நாட்கள் இருக்க வேண்டும் என்றால், முதலில் உங்கள் தலைமுடி எப்போதும் நல்ல ஈரத்தன்மையோடு இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். தலைமுடி வறண்டு போனால், விரைவாக சாயமும் வெளுக்கத் தொடங்கும்,. இதனால் ஒரு ஆரோக்கியமற்ற தோற்றம் உங்கள் தலைமுடிக்கு ஏற்படும்.

7. சரியான ஷாம்பூவை தேர்வு செய்ய வேண்டும்

பல ஷாம்பூக்கள் இன்று கடைகளில் கிடைகின்றன. குறிப்பாக அது குறித்த விளம்பரங்கள் உங்களை நிச்சயம் குழப்பம் அடைய செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால், விளம்பரங்களை நம்பி தவறான ஒரு தேர்வை செய்வதை விட, நன்கு சிந்தித்து, ஷாம்பூக்களை ஒப்பிட்டு பார்த்து, உங்கள் சாயம் பூசிய தலைமுடிக்கு ஏற்றது எதுவாக இருக்கும் என்று தீர்மானித்து பின்னர் வாங்குவது நல்லது.

8. வினீகர்

உங்கள் தலைமுடிக்கு பூசிய சாயம் நீடித்து இருக்க வேண்டும் என்றால், நீங்கள் வினீகரை பயன்படுத்தலாம். தலைமுடியை அலசிய பின்னர், சிறிது விநீகரை தண்ணீரில் கலந்து, அதனை கடைசியாக தலைமுடி அலச பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால், தலைமுடிக்குத் தேவையான pH கிடைப்பதோடு, நிறமும் மங்காமல் நன்றாக இருக்கும்.

9. ஊட்டச்சத்து நிறைந்த கண்டிஷனர்

Pexels

சாயம் பூசிய தலைமுடியின் பராமரிப்பிற்காக நீங்கள் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும். இது உங்கள் தலைமுடி நல்ல போஷாக்குடனும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும். மேலும் தலைமுடிக்கு பூசிய சாயமும் பல நாட்கள் மங்காமல் இருக்கும்.

10. தலைமுடியை சூடு படுத்தும் உபகரணங்களை விளக்கி வையுங்கள்

ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். சாயம் பூசிய தலைமுடிக்கு இருக்கும் முதல் எதிரியே, சூடு செய்யும் உபகரணங்கள் தான். குறிப்பாக ஐயர்ன் செய்யும் கருவி, தலைமுடியை காய வைக்க பயன்படுத்தும் ஹீட்டர் என்று பல. இவற்றை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

11. சரியான சாயத்தை தேர்வு செய்ய வேண்டும்

தலைமுடிக்குத் தேவையான சாயங்கள் பல பிராண்டுகளில் கிடைகின்றனர். மேலும் பல விலைகளிலும், வெவ்வேறு பொருட்கள் உள்ளடங்கிய பல வகைகளிலும் கிடைகின்றன. இதில், நீங்கள் தரத்திற்கு முக்கிய பங்கு தர வேண்டும். மேலும் நீங்கள் தேர்வு செய்யும் சாயம், உங்கள் தலைமுடிக்கு பாதுகாப்பானதாகவும், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையிலும் இருகின்றதா என்று பார்க்க வேண்டும்.

12. குறிப்புகளை பின்பற்றவும்

நீங்கள் பயன்படுத்தப் போகும் சாயத்திற்கு சில குறிப்புகள் கொடுத்து இருப்பார்கள். அவற்றை, தலைமுடிக்கு சாயம் பூசும் முன் நன்கு படித்து புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னாரே நீங்கள் சாயம் பூசத் தொடங்க வேண்டும். இப்படி முறையாக குறிப்புகளை புரிந்து கொண்டு பின்னர் சாயம் பூசுவதால், நீங்கள் எதிர் பார்த்த பலனைப் பெறலாம்.

13. உடனடியாக ஷாம்பூ போடக் கூடாது

Pexels

 உங்கள் தலைமுடிக்கு நீங்கள் சாயம் பூசிய சில மணி நேரங்களிலேயே ஷாம்பூ போட்டு முடியை அலசக் கூடாது. உங்கள் நிபுணரின் அறிவுரைப் படியோ, அல்லது குறிப்பில் கொடுக்கப்பட்டிருப்பது போலவோ, ஓரிரு நாட்கள் காத்திருந்து பின்னர் முடிக்கு ஷாம்பூ போட வேண்டும். இதனால் தலைமுடியும் ஆரோக்கியமாக இருப்பது, சாயமும் நீண்ட காலத்திற்கு நல்ல நிலையில் இருக்கும்.

14. சேதமடைந்த முடிகளை அகற்றுங்கள்

நீங்கள் சாயம் பூசும் போதோ, அல்லது சாயம் பூசிய பின்னர் சில நாட்களிலேயோ சேதம் அடைந்த முடிகளை பார்த்தால், அவற்றை அகற்றி விடுங்கள். இது நல்ல தோற்றத்தை பெற உதவுவதோடு, பிற முடிகளும் பாதிக்காமல் பாதுகாக்க உதவும்.

15. அடிக்கடி தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும்

 உங்கள் தலிமுடிக்கு நீங்கள் சாயம் பூசி விட்டால், பின்னர் தொடர்ந்து தினமும் அல்லது அவ்வப்போதும் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால், விரைவாக சாயம் மங்கி விடும். இதனால் உங்கள் கூந்தலும் ஆரோக்கியம் இல்லாத தோற்றத்தை பெறக் கூடும். அதனால் நிபுணரின் அறிவுரைப்படி வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தலைக்கு குளிக்க திட்டமிட வேண்டும்.

16. குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்

 எந்த காரணம் கொண்டும் சூடான தண்ணீரில் தலைமுடியை அலசக் கூடாது. இது இயற்கையான முடியின் அழகையும், ஆரோகியத்தையும் பாதிப்பதோடு, சாயம் விரைவாக மங்கி விடவும் காரணமாகிவிடக் கூடும். அதனால், எப்போதும், சாயம் பூசிய தலைமுடியை குளிர்ந்த நீரில் மட்டுமே அலச வேண்டும்.

17. சரியான பொருட்களை தேர்வு செய்யுங்கள்

Pexels

சாயம் பூசிய தலைமுடியை பராமரிக்க நீங்கள் அது சார்ந்த பொருட்களை தேர்வு செய்யும் போது, தரமான மற்றும் உங்களுக்கு தேவை என்று படுகின்ற பொருட்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அனைத்து பொருட்களையும் விளம்பரங்களை பார்த்து வாங்கி பயன்படுத்தக் கூடாது. இது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு, விரைவாக சாயமும் மங்கி விட செய்து விடும்.

18. ட்ரை ஷாம்பூ பயன்படுத்தவும்

இந்த வகை ஷாம்பூ குறிப்பாக சாயம் பூசிய தலைமுடிக்கு ஏற்றதாக இருக்கும். பிரத்யேகமாக சாயம் பூசிய தலைமுடிக்கென்றே இதனை உற்பத்தி செய்துள்ளனர் என்று கூறலாம். இந்த வகை ஷாம்பூ உங்கள் கூந்தலை பாதுகாக்கவும், சாயம் பல நாட்கள் பசுமையாக இருக்கவும் உதவும்.

19. சரியான இடைவெளியில் தலைமுடியை ட்ரிம் செய்ய வேண்டும்

இது தலைமுடியை, குறிப்பாக நுனிப்பகுதியை கொஞ்சமாக வெட்டி விடுவதை குறிக்கும். இப்படி போதிய இடைவேளைக்கு ஒரு முறை ட்ரிம் செய்வதால், தலைமுடி பார்க்க அழகாகவும், நல்ல வளர்ச்சி பெறுவதாகவும் இருக்கும்.

20. லீவ் இன் கண்டிஷனர்

இது முடியில் இருக்கும் சிக்கு, மற்றும் பிற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவும். இந்த லீவ் இன் கண்டிஷனர் சாயம் பூசிய தலைமுடிக்கென்றே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. இது உங்கள் தலைமுடியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக சூரிய கதிர் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவும்.

21. தலைக்கு குளிக்க செல்லும் முன் கவனியுங்கள்

Pexels

நீங்கள் பயன்படுத்தும் நீரில் க்லோரின் உள்ளதா என்று கவனிக்க வேண்டும். குறிப்பாக நீச்சல் குலத்தில் நீங்கள் குளிக்க போகின்றீர்கள் என்றால், நிச்சயம் அதில் க்லோரின் கலக்கப்பட்டிருக்கலாம். அது சாயம் பூசிய தலைமுடிக்கு பாதுகாப்பற்றது. அதனால், நீச்சல் குலத்திற்கு செல்லும் முன் தலை முடி தண்ணீரில் நனையாமல் இருக்க போதிய பாதுகாப்புகளை செய்ய வேண்டும்.

கலரிங் பண்ண தலைமுடிக்கு நீங்கள் செய்யக்கூடாதவை(should not do on colored hair)

தலைமுடிக்கு சாயம் பூசிய பின் அதனை பாதுக்காக்க, பல விடயங்களை தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால், உங்கள் தலைமுடி மேலும் ஆரோக்கியமாகவும், பூசிய சாயம் பல நாட்களுக்கு நல்ல நிலையிலும் இருக்கும். உங்கள் சாயம் பூசிய தலைமுடிக்கு நீங்கள் செய்யக்கூடாத சில விடயங்கள் இங்கே;

1. அதிக சாயம் பூசக் கூடாது

தலைமுடி நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக, பலர் அதிக அளவிலான சாயத்தை பூசக் கூடும். அப்படி செய்வதால் அது எதிர்மறை பலன்களை தந்துவிடக் கூடும். அதனால், தேவைக்கேர்ப்பவே சாயம் பூச வேண்டு.

2. சல்பேட் இருக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்

சல்பேட்டில் உப்பு உள்ளது. இது முடியை பாதிக்கக் கூடும். மேலும் தலைமுடியில் இருக்கும் ஈரத்தன்மையை போக்கி, முடி ஆரோக்கியத்தை இழக்க செய்து விடும். அதனால், சல்பேட் இருக்கும் ஷாம்பூ, கண்டிஷினர் போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது.

3. இருமுறை தலைமுடிக்கு சாயம் பூசும் முறைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடாது

Pexels

தலைமுடிக்கு பயன்படுத்தும் சாயம் மற்றும் பிற பொருட்கல் ரசாயனங்கள் இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. அது உங்கள் கூந்தலை பாதித்து விடக் கூடும். அதனால் ஒரு முறை நீங்கள் சாயம் பூசினால், பின்னர் போதிய இடைவேளைக்கு பின்னரே உங்கள் தலைமுடிக்கு தேவையான மற்ற பராமரிப்பு விடயங்களை செய்ய வேண்டும்.

4. தொடர்ச்சியாக அடிக்கடி சாயம் பூசக் கூடாது

ஒரு முறை நீங்கள் தலைமுடிக்கு சாயம் பூசினால், பின்னர் சில மாதங்கள் கழித்தே, அதுவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மறுபடியும் சாயம் பூச வேண்டும். அப்படி இல்லாமல், தொடர்ச்சியாக அடிக்கடி சாயம் பூசிக் கொண்டே இருந்தால், அது உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுத்து, தலைமுடியின் வளர்ச்சியையும் பாதித்து விடக் கூடும்.

5. தலைமுடிக்கு சாயம் பூசிய மறுநாளே ஷாம்பூ போடக் கூடாது

உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசி சில நாட்கள் கழித்தே ஷாம்பூ போட்டு அலச வேண்டும். அவ்வாறு இல்லாமல், அன்றே அல்லது மறுநாளே ஷாம்பூ போட்டால், சாயம் மங்கி விடும். இதனால் உங்கள் முயற்சிகள் நீனாகவும் போகக் கூடும்.

6. அடிக்கடி தலைமுடியை அலசக் கூடாது

Pexels

உங்கள் தலைமுடியை தினமும் அல்லது வாரம் 3 அல்லது 4 முறை என்றும் அலசக் கூடாது. அப்படி செய்தால், தலைமுடியின் நிறம், அதாவது சாயம் மங்கக் கூடும். மேலும் இது தலைமுடியை வறட்சி அடையவும் செய்து விடும்.

7. கண்டிஷனர் பயன்படுத்தாமல் இருப்பது

உங்கள் தலைமுடிக்கு நீங்கள் சாயம் பூசினால், பின் நிச்சயம் ஒவ்வொரு முறையும் தலைமுடியை அலசும் போது தரமான கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிப்பதோடு, சாயமும் விரைவாக மங்கி விடும்.

8. தலைமுடியை காய வைக்க கடுமையான முறைகளை பின்பற்றுவது

உங்கள் தலைமுடியை குளித்த பிறகு காய வைக்க துண்டை கொண்டு கடுமையாக துடைக்கக் கூடாது. அப்படி கடுமையாக செய்தால், முடிகள் உடையக் கூடும். மேலும் சாயமும் விரைவாக மறைந்து விடும்.

9. சூட்டை உண்டாக்கும் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

Pexels

குறிப்பாக ஐயர்ன், தலைமுடியை காய வைக்க வெப்ப காற்றை தரும் ட்ரையர், சூரளை உண்டாக்க பயன்படுத்தும் கருவி என்று எந்த ஒரு சூட்டை உண்டாக்கும் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. இது உங்கள் தலைமுடியை சேதம் அடைய செய்து விடும்.

10. அதிகம் வெயிலில் இருக்கக் கூடாது

குறிப்பாக நீங்கள் அதிகம் வெளியில் நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்றால், போதிய பாதுகாப்புகளை எடுக்க வேண்டும். சூரிய கதிர் மற்றும் ஊதா கதிர்கள் உங்கள் தலைமுடியை பாதித்து விடக் கூடும். அதனால், போதிய பாதுகாப்புகளை செய்த பின்னரே வெயிலில் செல்லலாம்.

மேலும் படிக்க – தூசி மற்றும் சூரிய ஒளியில் இருந்து தலைமுடியை பாதுகாப்பது எப்படி!

11. சீரற்ற சாயம் பூசுவது

நீங்கள் முதல் முறை சாயம் பூசிய பின்னர், சில நாட்கள் கழித்து, புதிதாக தோன்றிய முடிகளுக்கு சாயம் பூச முயற்சி செய்யும் போது, சில முடிகளை மட்டுமே தேர்வு செய்து பூசக் கூடாது. அப்படி செய்தால், ஒரு சீரான தோற்றத்தை பெற முடியாது. மேலும் அது உங்கள் கூந்தலின் அழகையும் பாதித்து விடக் கூடும்.

12. சூடான தண்ணீரில் குளிக்க கூடாது

Pexels

எந்த காரணம் கொண்டும், சாயம் பூசிய தலைமுடியை சூடான தண்ணீரில் அலசக் கூடாது. அப்படி செய்தால், சாயம் விரைவாக மறைந்து, நிறம் மங்கி விடக் கூடும்.

13. ரசாயனங்களை தள்ளி வையுங்கள்

எந்த காரணம் கொண்டும் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது. அது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை கெடுத்து, போதிய போஷாக்கு கிடைக்காமல் செய்து விடக் கூடும். இதனால் நீங்கள் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் வீணாகக் கூடும்.

14. க்லோரினை தவிர்க்க வேண்டும்

நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரில் க்லோரின் கலந்து இருந்தால், அதனை தவிர்ப்பது நல்லது. அது நீச்சல் குலமாக இருந்தாலும், சரி, அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீராக இருந்தாலும் சரி. க்லோரின் தலைமுடியை கடுமையாட்டி, மிருதுவான தோற்றத்தை பாதித்து விடும். மேலும் சாயம் விரைவாக சேதம் அடையவும் காரணமாகி விடக் கூடும்.

15. தலைமுடி மாஸ்க் மற்றும் ஷாம்பூவை தவிர்க்க வேண்டும்

Pexels

உங்கள் தலைமுடிக்கு நீங்கள் அவ்வப்போது மாஸ்க் போட்டு பராமரிக்கும் வழக்கம் இருந்தால், அதனை தவிர்ப்பது நல்லது. அத்தகைய மாஸ்க் மற்றும் ஷாம்பூ உங்கள் தலைமுடியின் சாயத்தை பாதித்து, மங்க செய்து விடும். இதனால் உங்கள் முயற்சிகளும் வீணாகப் போகக் கூடும்.

கலரிங் பண்ணும் முன் எடுக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்(Before coloring hair care)

  1. நீங்கள் சாயம் பூச தேர்வு செய்யும் சாயம் காலவதியாகாமல், நல்ல நிலையில் இருகின்றதா என்று பார்க்க வேண்டும்
  2. நீங்கள் தேர்வு செய்யும் சாயம் நல்ல தரமானதா என்று பார்க்க வேண்டும்
  3. ஒரு அனுபவம் வாய்ந்த நிபுணரை அணுகி தாளிமுடிக்கு சாயம் பூச முயற்சி செய்ய வேண்டும்
  4. சாயம் பூசிய தலைமுடிக்கு மாதம் ஒரு முறையாவது பாதுகாப்பு சிகிச்சை எடுக்க தயாராக இருக்க வேண்டும். இதனால் உங்களுக்கு சில செலவுகளும் ஏற்படலாம்
  5. தலைமுடிக்கு சாயம் பூசும் முன் சூடான எண்ணை சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இது சாயம் நன்றாக தலைமுடியில் இருக்க / தக்க வைத்துக் கொள்ள உதவும். மேலும் நல்ல நிறத்தை பெறவும் உதவும்
  6. தலைமுடிக்கு சாயம் பூசும் முன், அதாவது அன்றோ அல்லது ஒரு நாளைக்கு முன்னதாகவோ தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும்
  7. நிதானமாக ஒரு சரியான நிறத்தை தேர்வு செய்ய வேண்டும். அவசரப்பட்டோ அல்லது ஆர்வக் கோலாரிலோ தவறான ஒரு நிறத்தை தேர்வு செய்து விடாதீர்கள். அது உங்கள் அழகை பாதித்து விடக் கூடும்
  8. ஒன்று அல்லது இரண்டு நிறத்தை சேர்த்து உங்கள் முகத்திற்கு அது அழகாக இருக்கும் என்றால், தலைமுடிக்கு பூசலாம். அப்படி இல்லையென்றால் ஒரே நிறத்தை சரியாக தேர்வு செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்
  9. வீட்டிலேயே நீங்கள் உங்கள் தலைமுடிக்கு சாயம் பூச எண்ணினால், அதற்கு தேவையான முன் நடவடிக்கைகளை செய்ய வேண்டும். மேலும் குறிப்புகளை சரியாக படித்து புரிந்து கொண்ட பின்னரே சாயம் பூசத் தொடங்க வேண்டும்

கலரிங் பண்ண முடிக்கேற்ற ஷாம்புவை தேர்வு செய்வது(Guide to choose best shampoo for colored hair)

சாயம் பூசிய தலைமுடிக்கு இந்தியாவில் கிடைக்கும் 1௦ சிறந்த ஷாம்பூக்கள்(10 Best shampoo for Colored hair)

பல ஷாம்பூக்கள் கிடைத்தாலும், சாயம் பூசிய தலைமுடிக்கென்றே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ஷாம்பூகளை பயன்படுத்துவதே சிறந்தது. இது உங்கள் தலைமுடியை பாதுகாக்க உதவுவதோடு, நல்ல ஆரோகியத்தையும் தரும்.இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 1௦ ஷம்பூக்களை பற்றி இங்கே பார்க்கலாம்;

1. எலோரியல் ப்ரோபெசனால் வைட்டமின் ஒ கலர் ப்ரோடேக்டிங் ஷாம்பூ: (L’Oreal Professionnel Vitamino Color Protecting Shampoo)

இந்த ஷாம்பூ சாயம் பூசிய தலைமுடிக்கு நல்ல போஷாக்கையும், பாதுகாப்பையும் தரும். இது தலைமுடியை இரத்தன்மையோடு வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், உங்கள் தலைமுடியில் இருக்கும் சாயத்தை மங்க விடாது. நல்ல போஷாக்கை தரும். தலைமுடியை மிருதுவாகவும், பலபலப்பாகவும் வைத்திருக்க உதவும்.

2. எலோரியல் விவே ப்ரோ கலர் விவே ஷாம்பூ: (L’Oreal Vive Pro Color Vive Shampoo)

இந்த ஷாம்பூ ஊதா கதிர்களிடம் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாக்க உதவும். மேலும் இதில் கடுமையாக ரசாயனங்கள் இல்லாததால், உங்கள் தலைமுடிக்கு எந்த சேதமும் ஆகாமல் பார்த்துக் கொள்ள உதவும். முடி உதிர்தலை தடுக்கும். தலைமுடி பட்டுபோல இருக்க உதவும்.

3. கார்னியர் ப்ருக்டிஸ் கலர் ஷீல்ட் போர்டிபையிங் ஷாம்பூ (Garnier Fructis Color Shield Fortifying Shampoo)

இந்த ஷாம்பூ உங்கள் தலைமுடியின் சாயத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதில் ஆக்சிஜனேற்றம் நிறைந்து இருப்பதால், உங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டசத்து கிடைக்கவும் இது உதவியாக இருக்கும். ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாத்து, நீண்ட காலம் நல்ல பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் தலைமுடியை வைத்துக் கொள்ள உதவும். இயற்கையான பலபலப்பையும், மிருதுவான உணர்வையும் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

4. கிளைரோல் ஹெர்பல் எஸ்சென்ஸ் கலர் மீ ஹாப்பி ஷாம்பூ (Clairol Herbal Essence Color Me Happy Shampoo)

இந்த ஷம்பூவில் மொரோச்க்கன் ரோஸ் மற்றும் பலச் சாறுகள் நிறைந்து இருப்பதால் உங்கள் தலைமுடியை மிருதுவாக பட்டு போல வைத்துக் கொள்ள உதவும். மேலும் சாயம் மங்கி போகாமல் இருக்கவும் உதவும். நீண்ட காலம் உங்கள் தலைமுடிக்கு பூசிய சாயம் புதித்து போல இருக்க உதவும். மேலும் இதனை தினமும் பயன்படுத்தலாம். இதில் சிலிகான் மற்றும் பரபேன்கள் கிடையாது.

5. டோவ் ஹேர் தெரபி கலர் ரெஸ்க்யு ஷாம்பூ: (Dove Hair Therapy Color Rescue Shampoo)

இந்த ஷம்பூவில் நார் சத்து நிறைந்த பொருட்கள் உள்ளன. இது உங்கள் கூந்தலுக்கு நல்ல போஷாக்கை தந்து உங்கள் கூந்தளின் நிறம் மங்காமல் இருக்க உதவும். மேலும் இதில் இருக்கும் நுண்ணிய ஈரப்பதம் தரும் சீரம் தலைமுடியை மிருதுவாக்க உதவும். உங்கள் கூந்தலுக்கு ஒரு சரியான பலபலப்பை இது தரும். இந்த ஷாம்பூவை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம்.

6. டிரேசெம்மே அட்வான்ஸ்ட் டேச்னோலோஜி கலர் ப்ரோடேக்சன் ஷாம்பூ: (Tresemme Advanced Technology Color Protection Shampoo)

இந்த ஷாம்பூ சாயம் பூசிய தலைமுடிக்கு ஒரு சரியான தேர்வாக இருக்கும். மேலும் இதில் இருக்கும் கிரீன் டீ, ரோஸ்மேரி, சூரியகாந்தி பூக்களின் சாறு உங்கள் தலைமுடிக்குத் தேவையான போஷாக்கைத் தரும். மேலும் தலைமுடியில் இருக்கும் சாயத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும். தலைமுடி சேதம் அடைவதை குறைத்து நல்ல பாதுகாப்பைத் தரும். உங்கள் முடி மிருதுவாக இருக்கவும், பட்டு போன்ற பலபலப்பை பெறவும் உதவும்.

7. ரெட்கேன் கலர் எக்ஸ்டேன்ட் ஷாம்பூ: (Redken Color Extend Shampoo)

இந்த ஷாம்பூ ஊதா கதிர்களிடம் இருந்து முடியை பாதுகாக்க உதவும். இது ஒரு பாதுகாப்பு படிவமாக தலைமுடியின் மீது செயல்பட்டு சூரிய கதிர்கள் மற்றும் ஊதா கதிர்கள் தாக்காமல் பாதுகாக்கும். இதனால் தலைமுடியில் இருக்கும் சாயம் மங்காமல் பல நாட்கள் புதிது போல நல்ல பொலிவோடு இருக்க உதவும். மேலும் உங்கள் தலைமுடிக்கு நல்ல போஷாக்கையும் தரும். இதனை நீங்கள் தினமும் பயனபடுத்தலாம். ஒரு அழகான தோற்றத்தை உங்கள் கூந்தலுக்கு தரும்.

8. பால் மிட்செல் கலர் கேர் ஷாம்பூ –(Paul Mitchell Color Care Shampoo)

இந்த ஷம்பூவில் ஜோஜோப, மருதாணி, கமொமாயில், ரோஸ்மேரி போன்ற மூளிகிகளின் சாறுகள் சேர்ந்துள்ளது. இது மிகவும் ஒரு பாதுகாப்பான ஷாம்பூ என்றும் கூறலாம். மேலும் இது தலைமுடியின் நிறத்தை பல நாட்களுக்கு புதிது போல தக்க வைத்துக் கொள்ள உதவும். இந்த ஷம்பூவில் நல்ல நுரை வரும். இது தலைமுடியில் இருக்கும் அழுக்கை போக்க உதுவும். நல்ல நறுமணமும் தரும்.

9. அவீனோ லிவிங் கலர் ப்ரேசெர்விங் ஷாம்பூ (Aveeno Living Color Preserving Shampoo)

இதில் பல இயற்க்கை மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இது உங்கள் கூந்தலுக்கு நல்ல போஷக்கையும், ஆரோகியத்தையும் தரும். மேலும் சேதம் அடைந்த கூந்தலை சரி செய்யவும் உதவும். உங்கள் கூந்தல் நல்ல போஷாக்குடன் பல நாட்கள் இருக்க உதவும். மேலும் தலைமுடிக்கு நீங்கள் போட்ட சாயமும் பல நாட்கள் மங்காமல் இருக்கவும் உதவும். இயற்கையான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும்.

10. 10. லோரியால் கலர் ப்ரோடேக்ட் ஷாம்பூ (Loreal Colour Protect Shampoo)

சாயம் பூசிய தலைமுடியை பாதுகாக்க இந்தியாவில் கிடைக்கும் ஒரு சிறந்த ஷாம்பூ இதுவென்று கோரலாம். இதனை எத்தனை முறை பயன்படுத்தினாலும், தலைமுடியில் போசிய சாயம் மங்காமல் பாதுகாக்க உதவும். மேலும் செதமண்டைந்த தலைமுடியை குணப்படுத்தவும் உதவும். உங்கள் தலைமுடிக்கு பட்டு போன்ற உணர்வை தரும்.  நல்ல நுரை வருவதால், எளிதாக அழுக்குகளை போக்க உதவும். மேலும் இது சூரிய கதிர்களிடம் இருந்து உங்கள் கூந்தலை பாதுகாக்க உதவும்.  

கேள்வி பதில்கள் (FAQs)

1. சாயம் பூசிய தலைமுடிக்கென்று இருக்கும் ஷாம்பூவை மற்ற தலைமுடிகளுக்கும் பயன்படுத்தலாமா?

பயன்படுத்தலாம். இவை சாயம் பூசிய தலைமுடிகளுக்கு என்றே பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருந்தாலும், மற்ற முடிகளுக்கும் தாராளமாக பயன்படுத்தலாம். நல்ல பலனையே தரும்.

2. எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சாயம் பூசிய தலைமுடிக்கு ஷாம்பூ பயன்படுத்தலாம்?

அடிக்கடி பயன்படுத்தக் கூடாது என்றாலும், வாரம் இரண்டு முறை பயன்படுத்தலாம். குறிப்பாக அந்த ஷம்பூவில் சல்பேட் இல்லாமல் இருப்பது நல்லது. அதிக அளவு ஷாம்பூவை அடிக்கடி பயன்படுத்தினால், அது கூந்தல் ஈரத்தன்மையை இழந்து, பொலிவை இழக்க வைத்து விடும். குறிப்பாக இயற்க்கை பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

3. எனது சாயம் பூசிய கூந்தலுக்கு எது சரியான ஷாம்பூ என்று எப்படி தெரிந்து கொள்வது?

நீங்கள் ஷம்ப்பூவை வாங்கும் முன், அது குறித்த விடயங்களி இணையதளத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பின்னர், உங்கள் தலைமுடியின் வகை மற்றும் நீங்கள் பூசி இருக்கும் சாயத்திற்கு அது ஏற்றதா என்றும் தெரிந்து கொள்ளுங்கள். அப்படி சில ஆய்வுகளை செய்து பின்னர் தேர்வு செய்யும் ஷாம்பூ உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

4. சாயம் பூசியவுடன் தலைக்கு ஷாம்பூ போடுவது நல்லதா?

இல்லை. இது சாயம் முடியில் நன்றாக ஒட்டாமல், உடனே போய் விட செய்து விடும். இதனால் உங்களுக்கு எதிர்பார்த்த பலனும் கிடைக்காமல் போகலாம். அதனால இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்தே நீங்கள் ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். குறைந்தது ஒரு நாள் கழித்தாவது தலைக்கு குளிக்க முயற்சி செய்ய வேண்டும். சாயம் பூசிய அதே நாளில் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கக் கூடாது.

 

5. சாயம் பூசிய பின் தலைமுடியை எப்படி அலச வேண்டும்?

பொதுவாக குளிர்ந்த நீரையே தலைக்கு பயன்படுத்த வேண்டும். சாயம் பூசிய பின்னர், உங்களுக்கு கொடுக்கப்பட்ட குறிப்புகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள்ளுங்கள். அதிக தண்ணீர் பயன்படுத்தாமல், விரைவாக தலைமுடியை அலசி விட வேண்டும். இதனால் சாயம் பாதிக்கப்படாமல் வெகு நாட்கள் நல்ல நிலையில் இருக்கும்.

6. சாயம் பூசிய தலைமுடிக்கு ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் மிக அவசியமா?

ஆம். ஒரு பாதுகாப்பான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் உங்கள் தலைமுடி சேதமாகாமல் பாதுகாக்க உதவும். மேலும் அது தலைமுடிக்குத் தேவையான pH அளவை தக்க வைத்துக் கொள்ளவும் உதவும். உங்கள் தலைமுடியின் பலபலப்பை தக்க வைத்துக் கொள்ள உதவும். தலைமுடியில் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவும்.

7. பொதுவாக பயன்படுத்தும் ஷாம்பூவை சாயம் பூசிய தலைமுடிக்கு பயன்படுத்தலாமா?

பயன்படுத்தலாம். எனினும், அது பாதுகாப்பானதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக தலைமுடியை வறண்டு போக செய்து விடக் கூடாது. மேலும் அதனை நீங்கள் தினமும் பயன்படுத்தக் கூடாது.

8. தலைமுடிக்கு சாயம் பூசிய பின் எண்ணைத் தடவலாமா?

நிச்சயம் தடவலாம். பாதுகாப்பான தேங்காய் எண்ணையை நீங்கள் பயன்படுத்தலாம். எனினும், அதிக அளவில் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. 

 மேலும் படிக்க –வெப்ப பாதுகாப்பு சீரம்: கூந்தலின் அழகை மேம்படுத்த தரமான சீரம் தேர்வு செய்ய சில குறிப்புகள்

பட ஆதாரம்  – Shutterstock 

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Bath & Body