logo
ADVERTISEMENT
home / அழகு
வெப்ப பாதுகாப்பு சீரம்: கூந்தலின் அழகை மேம்படுத்த தரமான சீரம் தேர்வு செய்ய சில குறிப்புகள்

வெப்ப பாதுகாப்பு சீரம்: கூந்தலின் அழகை மேம்படுத்த தரமான சீரம் தேர்வு செய்ய சில குறிப்புகள்

பொதுவாக தலைமுடி அலங்காரம் செய்ய, குறிப்பாக, நேராக்க, ஹேர் ஸ்ட்ரெய்டனர் கருவி பயன்படுத்தப்படுகின்றது. இந்த கருவி அதிக வெப்பத்தை வெளிபடுத்துவதால், தலை முடி (hair) பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால், மிக விரைவாக தலைமுடி ஆரோக்கியத்தை இழப்பதோடு, வறண்டும் போகின்றது. இது மட்டுமல்லாது, முடி உதிரவும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கவும், நீங்கள் விரும்பிய படி அலங்காரம் செய்து கொள்ளவும், பாதுகாப்பான முறையில் ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த வகையில், வெப்ப பாதுகாப்பு சீரம் பெரிதும் உதவுகின்றது.

இந்த வெப்ப பாதுகாப்பு சீரம்(heat protectant serum), பல வகைகளில் கிடைகின்றது. ஆனால், அதில் சரியான ஒரு தேர்வை செய்து, பயன்படுத்துவது மிக முக்கியம்.

நீங்கள் பாதுகாப்பான முறையில் தலை முடி ஸ்ட்ரெய்டனிங் செய்ய விரும்பினால், உங்களுக்காக சில சுவாரசியமான தகவல்களும், குறிப்புகளும், இங்கே. தொடர்ந்து படியுங்கள்!

வெப்ப பாதுகாப்பு சீரத்தின் பலன்கள் (Benefits of heat protectant serum)

வெப்ப பாதுகாப்பு சீரும், தலை முடியை ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகின்றது. இது ஒரு பாதுகாப்பு படிவத்தை முடியின் மீது உண்டாக்கி, அதனால், ஸ்ட்ரெய்டனிங் செய்யும் போது உண்டாகும் வெப்பத்தில் இருந்து தலைமுடியை பாதுகாக்கின்றது. இந்த சீரம் இரண்டு வகையான சிலிகான்களை கொண்டுள்ளது. அவை, சைக்ளோமெதிகோன் மற்றும் டைமெதிகோன்.

ADVERTISEMENT

சைக்ளோமெதிகோன் தலைமுடியை ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ள உதவும், டைமெதிகோன் ஒரு பாதுகாப்பு படிவத்தை தலைமுடிக்கு உண்டாக்கி, மிருதுவான தன்மையை தருவதோடு, ஈரப்பதத்தை இழக்காமல் பாதுகாக்க உதவும். மேலும் இது ஒரு நல்ல பலபலப்பையும் தலைமுடிக்குத் தருகின்றது.

வெப்ப பாதுகாப்பு சீரத்தால் கிடைக்கும் சில பலன்களை இங்கே பார்க்கலாம்:

  1. இந்த பாதுகாப்பு சீரம் தலைமுடியில் இருக்கும் வெடிப்புகளை போக்கி, சிக்குகள் உண்டாவதையும் தடுக்கும். இதனால், தலைமுடி தேவை இல்லாமல் உதிருவது நின்று விடும்
  2. முடியில் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள உதவும். இதனால், தொடர்ச்சியாக தலைமுடிக்கு எப்போதும் ஈரத்தன்மை கிடைத்து வறண்டு போவதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். இது தலைமுடி எப்போதும் கண்டிஷனர் பயன்படுத்திய ஒரு பலனைப் பெறவும் உதவும்  
  3. ஒரு பாதுகாப்பு படிவம் தலைமுடியின் மீது உண்டாவதால், எந்த சூழலிலும், முடி ஈரத்தன்மையை தன்னுள் தக்க வைத்துக் கொள்ள உதவும்
  4. எப்போதும், தலைமுடியில் இயற்க்கையாக இருக்கும் எண்ணை மற்றும் ஈரத்தன்மை தக்கவைக்கப்படுவதால், பராமரிப்பதும் எளிதாகிவிடுகின்றது
  5. மேலும் தலைமுடி தொடுவதற்கும் மிருதுவாக இருக்கும்

சரியான வெப்ப பாதுகாப்பு சீரம் தேர்வு செய்வது எப்படி? ( Heat protectant serum)

Shutterstock

ADVERTISEMENT

பல வகை வெப்ப பாதுகாப்பு சீரம் கடைகளில் கிடைகின்றது. ஆனால், அவை அனைத்தும் உங்களுக்கு ஏற்றதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று கூற முடியாது. இந்த வகையில், நீங்கள் சில விடயங்களை, சீரம் வாகும் போது கருத்தில் கொள்ள வேண்டும். சரியான வெப்ப பாதுகாப்பு சீரத்தை தேர்வு செய்ய இங்கே சில குறிப்புகள்:

  1. முதலில் உங்கள் தலைமுடி எந்த வகையை சேர்ந்தது என்று தெரிந்து கொள்ள வேடும். குறிப்பாக, அதிக வறட்சி அல்லது மெல்லிய முடியாக இருந்தால், அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பான சீரத்தை தேர்வு செய்ய வேண்டும்
  2. நீங்கள் தேர்வு செய்யும் சீரத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அந்த பொருட்கள் தரமானதா, மற்றும் பாதுகாப்பானதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்குவதோடு, தலைமுடி உதிர்வையும் ஏற்படுத்தக் கூடும்
  3. நீங்கள் தேர்வு செய்யும் சீரத்தில் இயற்கை எண்ணை மற்றும் தேவையான எண்ணை மற்றும் தாது பொருட்கள் இருக்க வேண்டும். இது நல்ல ஆரோக்கியத்தை  தலைமுடிக்குத் தரும்
  4. மேலும், நீங்கள் தேர்வு செய்யும் சீரம் நல்ல பலபலப்பை தந்து, இயற்க்கை அழகை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உதவ வேண்டும். அது ஒரு நல்ல பாதுகாப்பான வெப்ப பாதுகாப்பானாக இருக்க வேண்டும்
  5. நீங்கள் வாங்கும் வெப்ப பாதுகாப்பு சீரம், சரியான விலையிலானதாகவும் இருக்க வேண்டும். அதிக விலை இருப்பதால் மட்டும், அது தரமானது என்று கூறி விட முடியாது. எனினும், நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் சீரத்தை முன்பு பயன்படுத்தியவர்களின் கருத்துக்களை பற்றி தெரிந்து கொண்டு அதன் பின் நீங்கள் ஒரு சரியான தேர்வை செய்யலாம்

வெப்ப பாதுகாப்பு சீரம் எப்படி வேலை செய்கின்றது? (How does heat protectant serum work?)

பலருக்கும், இந்த வெப்ப பாதுகாப்பு சீரம் ஒரு சரியான தேர்வாக இருக்குமா மற்றும் இதை நிச்சயம் பயன்படுத்த வேண்டுமா என்கின்ற கேள்விகள் உண்டாகும். இது இயல்பே. ஆனால், இது எப்படி செயல்படுகின்றது என்று நீங்கள் தெரிந்து கொண்டாலே போதும், உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடும். மேலும் இதனை நீங்கள் முழு நம்பிக்கையோடும் பயன்படுத்தத் தொடங்குவீர்கள். உங்களுக்காக, இங்கே சில தகவல்கள்:

  • ஸ்ட்ரெய்டனிங் செய்யும் போது உண்டாகும் வெப்பம் 95 முதல் 170 டிகிரி செல்சியஸ் அளவு வரை இருக்கும். இதனால், தலைமுடி சேதம் அடையும் வாய்புகள் அதிகம் ஏற்படுகின்றது
  • தலைமுடிக்கு நிறம் தரும் நிறமிகள் சேதம் அடைவதால், இயற்கையான நிறமும் மாறுகின்றது
  • உங்கள் தலைமுடிக்கு வலிமையும் நெகிழ்ச்சித்தன்மையும் தரும் கெராடின் புரதங்கள் உடைகின்றன
  • தலைமுடியில் விரிசல் ஏற்படுவதோடு, வெளிப்புற மேற்பரப்பில் சேதம் ஏற்படத் தொடங்குகின்றது
  • முடியின் உட்புறத்தில் இருந்து ஈரப்பதம் ஆவியாகிறது
  • இந்த அனைத்து பிரச்சனைகளையும், வெப்ப பாதுகாப்பு சீரம் போக்கி, முழுமையான பாதுகாப்பை ஒவ்வொரு தலைமுடிக்கும் தருகின்றது
  • பிவிபி / டிஎம்ஏபிஏ அக்ரிலேட்ஸ் கோபாலிமர், குவாட்டர்னியம் 70 மற்றும் ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட கோதுமை புரதம் ஸ்ட்ரெய்டனிங் செய்யும் போது ஏற்படும் வெப்பத்தால் உண்டாகும் சேதத்தை பெரும் அளவு குறைகின்றது. இவை மூன்றும் ஒத்து மெல்லிய பாதுகாப்பு படிவத்தை தலைமுடியின் மீது உண்டாக்குகின்றது. இதனால் ஸ்ட்ரெய்டனிங் செய்யும் போது அதிக வெப்பம் தாக்காமல் ஒரு பாதுகாப்பை பெற உதவுகின்றது. இதனால் சேதமும் குறைகின்றது  
  •  இது போன்றே சிலிகான் குவாட்டர்னியமும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது. சிலிகான் மேலும் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகின்றது

தலைமுடிக்கு பயன்படுத்த இயற்கை வெப்ப பாதுகாப்பு பொருட்கள்!(natural heat protectant for hair)

கடைகளில் பல நிறுவனத்தின் வெப்ப பாதுகாப்பு சீரம் கிடைகின்றன. இவை விலை உயர்வாக இருப்பதோடு, அனைவருக்கும் ஏற்றதாக இருக்குமா என்கின்ற கேள்விகளும் உண்டாகின்றது. எனினும், நீங்கள் எளிமையாக கிடைக்கும் இயற்க்கை பாதுகாப்பு பொருட்களை உங்கள் தலைமுடி ஸ்ட்ரெய்டனிங் செய்ய பயன்படுத்தலாம். இவை நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பாதுகாப்பை உங்களுக்குத் தரும். அவற்றில் சில, இங்கே:

1. தேங்காய் எண்ணை

ADVERTISEMENT

Pixabay

தேங்காய் எண்ணை அனைத்து வகை தலைமுடி (கூந்தல்) அலங்காரங்களுக்கும் ஏற்ற ஒரு நல்ல இயற்கை பொருளாக உள்ளது. இந்த எண்ணையில் இருக்கும் ஊடுருவும் பண்புகள், தலைமுடிக்குள் நன்கு எண்ணை ஊடுருவி, ஈரப்பதம் அதிகரிக்க உதவுகின்றது. இதனால் தலைமுடி எப்போதும் நல்ல பலபலப்போடும், ஈரப்பதத்தோடும் உள்ளது. மேலும் நல்ல குளிர்ச்சியையும் தருகின்றது.

2. திராட்சை கொட்டை எண்ணை

திராட்சை கொட்டை எண்ணை அதிக அளவு வெப்பம் தலைமுடியை தாக்காமல் பாதுகாக்க உதவும். மேலும் இது ஒரு பாதுகாப்பான் போன்று பாதுகாப்பு படிவத்தை தலைமுடியின் வெளிப்புறத்தில் உண்டாக்கி, விரைவாகவும், விரும்பியபடியும் ஸ்ட்ரெய்டனிங் செய்ய உதவுகின்றது.

3. அவகோடு எண்ணை

ADVERTISEMENT

Pixabay

இந்த எண்ணை, தலைமுடி எப்போதும் நல்ல ஊட்டச்சத்தோடும், ஈரப்பதத்தோடும் இருக்க உதவும். மேலும் சூரிய கதிர்களிடம் இருந்தும் தலைமுடிக்கு பாதுகாப்பைத் தருகின்றது. இதனால், தலைமுடி சேதம் அடையும் வாய்ப்புகள் வெகுவாக குறைகின்றது. இந்த எண்ணையை திராட்சை கொட்டை எண்ணை மற்றும் தேங்காய்

4. சூரியகாந்தி பூ எண்ணை

இந்த எண்ணை அதிக வெப்பத்தை தாங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. அதனால், வெப்பத்தில் இருந்து தலைமுடியை பாதுகாக்க பெரிதும் உதவும். மேலும் இது தலைமுடிக்கு மிருதுவான மற்றும் பலபலப்பான தோற்றத்தையும் தரும்.

5. ஆலிவ் எண்ணை

ADVERTISEMENT

Pixabay

இது தலைமுடியை மிக அழகாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்ள உதவும். இதில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றம் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவும். இது மேலும் வெப்பத்தின் தாக்கத்தை தடுக்கவும் உதவும்.

6. ஷீ பட்டர் எண்ணை

இந்த எண்ணை ஒரு நல்ல வெப்ப பாதுகாப்பானாக செயல்படுகின்றது. தொடர்ச்சியாக ஸ்ட்ரெய்டனிங் செய்தாலும், உங்கள் தலைமுடிக்குத் தேவையான பாதுகாப்பை இது தருகின்றது. இதனால், தலைமுடி சேதம் அடையும் வாய்ப்பும் வெகுவாக குறைகின்றது. இது ஒரு நல்ல இயற்கை வெப்ப பாதுகாப்பானாக செயல்படுகின்றது.

இந்த இயற்கை எண்ணைகள் மட்டுமல்லாது, சரியான பொருட்களின் தேர்வும் பாதுகாப்பான ஸ்ட்ரெய்டனிங் செய்ய அதிகம் உதவுகின்றது. மேலும், அதிக அளவு வெப்பம் இல்லாமல், பாதுகாப்பான அளவு வெப்பத்தை பயன்படுத்தி ஸ்ட்ரெய்டனிங் செய்வது நல்லது. இது அதிக நாட்கள் தலைமுடி நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கவும், எளிமையாக பாதுகாக்கவும் உதவும்.

ADVERTISEMENT

இந்தியாவில் வாங்க சிறந்த தலைமுடி சீரம் (Best hair serums India)

இந்தியாவில் பல சீரம் விற்பனைக்கு கிடைகின்றது. அதிலும், குறிப்பாக அமேசான், பிலிப் கார்ட் போன்ற இணையதள வர்த்தகத்திலும், பல வகை சீரம் கிடைகின்றது. எனினும், அதில் சரியான ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டியது முக்கியம். இந்த வகையில், உங்களுக்கு பரிந்துரைக்க, இங்கே சில தரமான மற்றும் பிரபலமான இந்தியாவில் கிடைக்கும் சீரம்கள்;

1. பாடி ஷாப் கிரேப் சீட் க்லோச்சிங் சீரம் (The Body Shop Grapeseed Glossing Serum)

இந்த சீரம் உங்கள் தலைமுடியை மிருதுவாக வைத்து கொள்ள உதவும். மேலும் இது பலபலப்பை அதிகரிக்க உதவும். சோர்ந்து, சிக்கு அதிகம் இருக்கும் தலைமுடியை பராமரிக்க இது உதவும். தலைமுடியின் தோற்றத்தை மேம்படுத்தும், மேலும் முடியின் நுனியில் இருக்கும் வெடிப்பை போக்க இது உதவும்.

2. மட்ரிக்ஸ் பயொலேஜ் ஸ்மூதிங் ஹேர் சீரம் (Matrix Biolage Smoothing Hair Serum)

இந்த சீரம் தலைமுடிக்கு நல்ல போஷாக்கைத் தரும். மேலும் உடனடி பொலிவையும் இது தரும். இது பிசுபிசுப்பை உண்டாக்காது. மேலும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். நல்ல நறுமணத்தை தரும். ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு முன் இதை பயன்படுத்தினால் வெப்பத்தால் உண்டாகும் சேதத்தை போக்க இது உதவும்.

3. ஸ்ட்ரீக்ஸ் ப்ரோ ஹேர் சீரம் (Streax Pro Hair Serum)

இந்த சீரம் தலைமுடியில் இருக்கும் சிக்குகளை முற்றிலும் போக்கி, மிருதுவான உணர்வை தரும். மேலும் தலைமுடியை எப்போதும் ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ள உதவும். இதில் வைட்டமின் E இருப்பதால், நல்ல போஷாக்கையும் தரும். மேலும் நல்ல தோற்றத்தை உண்டாக்கும். இது மலிவான விலையிலும் கிடைகின்றது. அனைத்து வகை தலைமுடிக்கும் ஏற்றதாக உள்ளது.

ADVERTISEMENT

4. காதி ஹெர்பல் ஹேர் சீரம் (Khadi herbal hair serum)

இந்த சீரம் தலைமுடிக்கு நல்ல போஷாக்கைத் தரும். மேலும் இலகுவாக சிக்குகளை எடுக்கவும் உதவும். நல்ல பலபலப்பை தரும். தலைமுடியின் அடர்த்தியை தக்க வைத்துக் கொள்ள உதவும். மேலும் வறண்ட முடியை போக்கி, ஈரத்தன்மையைத் தரும், சேதம் அடைவதில் இருந்து தலைமுடியை காக்கும். விரிசல் விட்ட முடியின் நுனிகளை போக்க உதவும். மேலும் வெப்பத்தினால் உண்டாகும் சேதத்தை போக்க இது பெரிதும் உதவும்.

5. டிகி பெட் ஹெட் கண்ட்ரோல் பிரிக் சீரம் (TIGI bed head control freak serum)

இந்த சீரம் குறிப்பாக சிக்குகள் அதிகம் இருக்கும் மற்றும் சுருளை முடிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு தலைமுடியில் சிக்குகள் ஏற்படாமல் வைத்திருக்க உதவும். மேலும் பிசுபிசுப்பு உண்டாகாமல் பாதுகாக்கும். தலைமுடியில் இருக்கும் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள உதவும். மேலும் வெப்பத்தில் இருந்து தலைமுடியை பாதுகாக்க உதவும். சிறிதளவு பயன்படுத்தினாலும், அதிக பலனைத் தரும்.

6. கார்னியர் பிருக்டிஸ் டமேஜ் எரேசர் (Garnier Fructis Damage Eraser)

இந்த சீரம் தலைமுடி நுனியில் இருக்கும் வெடிப்புகளை குணப்படுத்த உதவுகின்றது. இதில் பைடோ கேரட்டின் காம்ப்ளக்ஸ் இருப்பதாலும், தாவரங்கள் சார்ந்த புரதம் இருப்பதாலும், தலைமுடிக்கு நல்ல போஷாக்கு கிடைக்க உதவுகின்றது. இதில் தலைமுடியை பலப்படுத்தவும், சேதம் ஏற்படாமல் காக்கவும் பயன்படுகின்றது. சிறிதளவு பயன்படுத்தினாலே, வெகு நாட்களுக்கு நீங்கள் பலன் பெறலாம். தலைமுடியின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றது. மேலும் நல்ல பலபலப்பை முடிக்குத் தருகின்றது.

7. ஹபிப்ஸ் ஏஸ்தடிக் ஹேர் சீரம் (Habibs aesthetics hair serum)

இந்த சீரம் குறிப்பாக வறண்ட தலைமுடியை பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. மேலும் சிக்குகள் இருந்தால், அதனை போக்க உதவுகின்றது. தலைமுடி எப்போதும் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ளவும் இது உதவுகின்றது. மேலும் தலைமுடி கனமாக இருக்கவும் இது உதவுகின்றது. வெப்பத்தில் இருந்து முடியை பாதுகாப்பதோடு, எளிமையாக பராமரிக்கவும் உதவுகின்றது.

ADVERTISEMENT

8. ஸ்ட்ரீக்ஸ் பெர்பெக்ட் ஷைன் ஹேர் சீரம் (Streax perfect shine hair serum)

இந்த சீரம், ஒழுங்கற்ற தலைமுடியை சீராக பராமரிக்கவும், மிருதுவாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது. மேலும் சிக்குகள் எதுவும் இருந்தால், அதனை எளிமையாக போக்கி விடவும் உதவுகின்றது. தலைமுடியை ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ள உதவுகின்றது, சேதம் அடைவதில் இருந்து பாதுகாக்கின்றது. வெகு நாட்களுக்கு எளிமையாக பராமரிக்க உதவுகின்றது. இதன் விலை மலிவாக உள்ளது. அதனால் அனைவராலும் எளிதாக வாங்க முடியும்.

9. எல்லோரியல் ப்ரோபசனல் டெக்னி ஆர்ட் லிஸ் கண்ட்ரோல் ப்ளஸ் ஸ்மூதிங் சீரம் (L’Oreal professionel tecni art liss control plus smoothing serum)

இந்த சீரம் எளிமையாக தலைமுடியை கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள உதவும். எவ்வளவு சிக்குகள் இருந்தாலும் அதனை எளிதாக போக்கி, தலைமுடியை பராமரிக்க உதவும். அதிக மிருதுவான உணர்வை தரும். மேலும் சூளுரை முடியையும் எளிதாக பராமரிக்க இது உதவும். மேலும் நீண்ட நாட்களுக்கு தலைமுடியில் இருக்கும் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ளவும் இது உதவும். எளிதாக அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.

10. ஜான் பரீட பிரிஸ் எஸ் பெர்பெக்ட் பினிஷ் போளிஷிங் சீரம் (John frieda frizz perfect finish polishing serum)

இந்த சீரம் குறிப்பாக வறண்ட மற்றும் மிக கடுமையான தலைமுடியை பராமரிக்க பெரிதும் உதவுகின்றது. இது உங்கள் தலைமுடி நல்ல அழகாகவும், பொலிவோடும் நாள் முழுவதும் இருக்க உதவுகின்றது. இதனை நீங்கள் எளிதாக உங்கள் கை பையில் வைத்து எங்கு சென்றாலும் எடுத்து செல்லலாம். தலைமுடியில் இருக்கும் சிக்குகளை போக்க இது உதவும். மேலும் ஊதா கதிர்களிடம் இருந்தும் தலைமுடியை பாதுகாக்கும். நல்ல பலபலப்பைத் தரும். வெப்பத்தினால் தலைமுடி சேதம் அடைவதில் இருந்து பாதுகாக்கும். மேலும் பிசுபிசுப்பு ஏற்படாமல் இருக்க உதவும்.

தலைமுடி வளர்ச்சிக்கு சீரம் (Hair growth serum)

தலைமுடி பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது, நன்கு வளரவும் சில வகை சீரம்கள் பயன்படுகின்றது. இது சற்று ஆச்சரியமாக இருந்தாலும், நீங்கள் பயன் படுத்தும் முறையில் அந்த ரகசியம் அடங்கியுள்ளது. சீரத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி வந்தால், நீங்கள் எதிர் பார்த்த பலனை பெறலாம்.

ADVERTISEMENT

தலைமுடிக்கு நீங்கள் தேய்க்கும் எண்ணை, மயிர்கால்கள் மற்றும் வேர்களுக்கு போஷாகளிப்பது போல, சீரத்தில் இருக்கும் சிலிகான், தலைமுடிக்கு ஒரு பாதுகாப்பு படிவத்தை உண்டாக்கி, சேதம் அடைவதில் இருந்து பாதுகாகின்றது. இந்த படிவம் பாதுகாப்பை தருவது மட்டுமன்றி, தூசி மற்றும் மாசு ஆகியவற்றில் இருந்து, தலைமுடியை பாதுகாத்து, சிக்கு மற்றும் வறட்சி போன்றவற்றில் இருந்தும் பாதுகாப்பு தருகின்றது.

சீரத்தில் இருக்கும் அமினோ அமிலம் மேலும் பல அற்புதங்களை செய்கின்றது. இது தலைமுடி வெடிப்பு மற்றும் மயிர்கால்கள் சேதம் அடைவது போன்றவற்றில் இருந்து பாதுகாத்து, முடி வேர்கள் நல்ல போஷாக்குடன் வளர உதவுகின்றது. மேலும் இது தலைமுடிக்கு நல்ல ஈரத்தன்மையை தருகின்றது. அதனால், முடி மிருதுவாகவும், எளிமையாக பாதுகாக்க முடிவதாகவும் உள்ளது. இந்த பலன்கள், தலைமுடி நன்கு வளர உதவுகின்றது.

வெப்ப பாதுகாப்பு ஸ்ப்ரே பயன்படுத்தி தலைமுடி ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி (Guide to straighten hair using heat protection spray )

Shutterstock

ADVERTISEMENT

இன்று பெரும்பாலான பெண்கள் நேரான தலைமுடியையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் அவர்கள் விரும்பியபடி அலங்காரம் செய்து கொள்ள முடிகின்றது. மேலும் அது அதிக அழகையும் முகத்திற்கு தருகின்றது. இதனால், சுருளை முடி இருப்பவர்களும் கூட, ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நீங்களும், உங்கள் வீட்டிலேயே ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள விரும்பினால், இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்;

  • உங்கள் தலைமுடியை ட்ரையர் பயன்படுத்தி காய வைக்கும் முன்போ அல்லது, ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு முன்போ, வெப்ப பாதுகாப்பு ஸ்ப்ரே பயன்படுத்த வேண்டும்
  • முதலில் உங்கள் தலைமுடி சுத்தமாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். தரமான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி நன்கு அலச வேண்டும். குறிப்பாக குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசுவது முக்கியம். இதனால் முடி உதிர்வு குறைவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்  
  • பெரிய பற்கள் இருக்கும் சீப்பை பயன்படுத்தி, தலைமுடியில் இருக்கும் சிக்குகளை எடுக்க வேண்டும்
  • அதன் பின் வெப்ப பாதுகாப்பு ஸ்ப்ரே பயன்படுத்தி, தலைமுடி முழுவதும் ஈரமாக்க வேண்டும்
  • பின், பாதுகாப்பான சூட்டில், ஸ்ட்ரெய்டனிங் கருவியை பயன்படுத்தி, தலைமுடியை நேராக்க முயற்சி செய்ய வேண்டும்
  • அதிக வெப்பம் பயன்படுத்தும் முன், போதுமான அளவு ஸ்ப்ரே அடித்துள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
  • தலைமுடியை, சிறு சிறு பகுதிகளாக வகுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின், ஒவ்வொரு பகுதியாக அயர்ன் செய்ய வேண்டும்
  • மெதுவாக அயர்ன் செய்யும் கருவியை பயன்படுத்த வேண்டும். கடுமையாக கையாளுவதை தவிர்ப்பது நல்லது
  • முறையாக ஸ்ட்ரெய்டனிங் செய்தால், அதிக நாட்களுக்கு நீங்கள் அதன் பலனை காணலாம்
  • தேவைபட்டால், நிபுணர்களின் ஆலோசனையையும் பெற்று பாதுகாப்பாக ஸ்ட்ரெய்டனிங் செய்யலாம்
  • நல்ல பலன் பெற செராமிக் ஸ்ட்ரெய்டனர் பயன்படுத்தலாம்
  • அடிக்கடி செய்யாமல், மாதம் இரண்டு முறை, அல்லது தேவைப்படும் போது மட்டும் ஸ்ட்ரெய்டனிங் செய்வது நல்லது.

கேள்வி பதில்கள் (FAQs)

1. தலைமுடி சீரத்தை வெப்ப பாதுகாப்பானாக பயன்படுத்த முடியுமா?

ஆம், முடியும். தலைமுடி சீரம், வெப்ப பாதுகாப்பானாகவும், ஸ்ட்ரெய்டனிங் செய்யும் போது செயல்படுகின்றது. எனினும், அனைத்து சீரமும், தலைமுடிக்கு பாதுகாப்பு தரும் என்று கூற முடியாது.

2. தலைமுடி ஸ்ட்ரெய்டனிங் செய்ய எந்த சீரம் சிறந்தது?

உங்களுக்கு பரிந்துரைக்க, இங்கே சில சீரம்கள;

  • ஸ்ட்ரீக்ஸ் புரோ ஹேர் சீரம்
  • காதி மூலிகை முடி சீரம்
  • டிஜிஐ பெட் ஹெட் கன்ட்ரோல் ஃப்ரீக் சீரம்
  • கார்னியர் பிரக்டிஸ் சேதம் அழிப்பான்
  • ஹபீப்ஸ் அழகியல் முடி சீரம்
  • ஸ்ட்ரீக்ஸ் பெர்பெக்ட் ஷைன் ஹேர் சீரம்
  • ஜான் ஃப்ரீடா ஃப்ரிஸ் ஈஸி பெர்பெக்ட் பினிஷ் பாலிஷிங் சீரம்

3. வெப்ப பாதுகாப்பான் இல்லையென்றால், எதை பயன்படுத்துவது?

நீங்கள் எதிர் பார்க்கும் வெப்ப பாதுகாப்பான் இல்லையென்றால், உடனடியாக வேறு ஒரு நிறுவனத்தின் பொருளை வாங்க முயற்சி செய்ய வேண்டாம். மாறாக, இயற்கை பொருட்கள் சேர்ந்த வெப்ப பாதுகாப்பு ஸ்ப்ரே வாங்கலாம். குறிப்பாக ஆர்கன் எண்ணை, வைட்டமின் B5 மற்றும் ஆமணக்கு எண்ணை உள்ள வெப்ப பாதுகாப்பானை வாங்கலாம். இது பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

ADVERTISEMENT

4. தலைமுடி சீரத்தை தினமும் பயன்படுத்தலாமா?

தலைமுடி சீரம் எந்த விதத்திலும் வேர்களுக்கு பயன்படாது. மேலும் அது தலைமுடியின் மேற்பரப்பிற்கு பாதுகாப்பு தர மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில பாதுகாப்பான இயற்கை பொருட்கள் இதில் இருந்தாலும், ரசாயனங்களும் அதிகம் கலக்கப்பட்டுள்ளது. அதனால், சீரத்தை தினமும் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல.

5. ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு முன் தலைமுடி சீரம் பயன்படுத்தலாமா?

ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு முன் சீரம் பயன்படுத்துவது, முடியில் இருக்கும் சிக்குகளை போக்க உதவும். மேலும் ஸ்ட்ரெய்டனிங் செய்யும் போது, தலைமுடிக்கு நல்ல பலபலப்பை தருவதோடு, மிருதுவாகவும் வைத்துக் கொள்ள உதவும். தரமான மற்றும் நம்பிக்கையான நிறுவனத்தின் சீரம் பயன்படுத்துவது நல்லது.

6. தேங்காய் எண்ணை வெப்ப பாதுகாப்பானாக பயன்படுமா?

தேங்காய் எண்ணை ஒரு பாதுகாப்பான இயற்கை வெப்ப பாதுகாப்பான். இது பல வழிகளில் உங்கள் தலைமுடியை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க உதவும். எனினும், இது எண்ணை பிசுக்கை நடக்கும் என்பதால், குறைந்த அளவு பயன்படுத்துவது நல்லது. 

 

ADVERTISEMENT
மேலும் படிக்க – முடி கொட்டுவதால் வருத்தமா? அடர்த்தியான கூந்தலைப் பெற 10 சிறந்த ஷாம்பு வகைகள்!! மேலும் படிக்க – வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு முடி உதிர்வை தடுக்கும் எளிய வழிகள்

பட ஆதாரம்  – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

24 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT