தூசி மற்றும் சூரிய ஒளியில் இருந்து தலைமுடியை பாதுகாப்பது எப்படி!

தூசி மற்றும் சூரிய ஒளியில் இருந்து தலைமுடியை பாதுகாப்பது எப்படி!

அனைத்து பெண்களுக்கும் ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தல் (hair) இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். முடி உதிர்வை தடுக்கவும், நமது கூந்தலை ஆரோக்கியமாக  வளர்க்க வைட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்பு சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட சத்துகள் தேவைப்படுகின்றன. முடியை வளர்ப்பதை விட இருக்கும் முடியை ஒழுங்காக பராமரிப்பது நல்லது. கோடை காலத்தில் கூந்தலை கவனிக்காவிட்டால் முடி உதிர்வது, முடி உடைவது, பொடுகு பிரச்னை போற்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Youtube

 • கோடை காலத்தில் வெளியே செல்லும் முன்னர் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம். இல்லையென்றால் நாம் வெயிலில் செல்லும் போது சூரிய ஒளி பட்டு முடி வறட்சியாக வாய்ப்புள்ளது. முடியின் வேர்களில் எப்போதும் ஒரு வித எண்ணெய் சுரப்பு இருந்து கொண்டே இருக்கும். முடி வளர்ச்சிக்கு இது போதுமானது. எனினும் முடியின் நுனி மற்றும் நடுப்பகுதியில் நாம் எண்ணெய் தேய்ப்பது அவசியம்.
 • வெப்பம் காரணமாக கூந்தலின்(hair) அடிப்பகுதியில் இருக்கும் முடியில் பிளவு ஏற்படும். இதன் தாக்கம் அதிகரிப்பதை தவிர்க்க அடியில் இருக்கும் முடியை கத்தரிப்பது நல்லது.
 • கோடையில் அதிக தண்ணீர் குடிப்பது நல்லது. உடல் வறட்சியடைந்தாலும் முடி உதிர்வு அதிகரிக்கும். தண்ணீர், பழச்சாறு ஆகிவற்றை சாப்பிட வேண்டும்.
 • கோடை காலத்தில் வெளியில் செல்லும் போது சூரிய ஒளி நேரடியாக முடியில் படுவதை தவிர்க்க வேண்டும். குடையை பயன்படுத்துவது நல்லது. அல்லது ஸ்டோல் போன்ற துணியால் முடி சூரிய ஒளி படாதவாறு செல்ல வேண்டும்.
Shutter Stock

 • சிலருக்கு முடியில் கலரிங் செய்யும் பழக்கம் இருக்கும். இவர்கள் கோடையில் கலரிங்(hair coloring) செய்வதை தவிர்க்கலாம். ஏனெனில் சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கூந்தலில் இருக்கும்  ரசாயனம் முடிக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
 • தற்போதைய சூழலில் தூசி பிரச்சனை அதிகம் உள்ளது. எங்கு சென்றாலும் தூசி, மாசுக்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. தலையில் அதிகமான தூசுக்கள் சேர்ந்தால் முடி உதிர்வு பிரச்சனையை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிப்பது நல்லது. ஈரமான முடியுடன் வெளியில் செல்வதை தவிர்கலாம். ஏனென்றால் ஈரமான முடியில் தூசி தங்கிவிட அதிக வாய்ப்புள்ளது.  

கிவி பழத்தால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்களும் - சரும ஆரோக்கியமும்

முடி வளர்ச்சிக்கு கீழ்கண்ட முறைகளை பின்பற்றுங்கள்!

 • தினசரி குளிக்கும் தண்ணீரில் 3 சொட்டு லேவண்டர் ஆயில், 3 சொட்டு லெமன் கிராஸ் ஆயில்  கலந்து தலைக்கு குளித்தால் கூந்தலில் (hair) இயற்கையான பளபளப்பு வரும்.
 • 100 மி.லி. ஆலிவ் ஆயில், 100 மி.லி. விளக்கெண்ணெய், 100 மி.லி. பாதாம் எண்ணெய் மூன்றையும் கலந்து கொள்ளவும். இதில் 50 சொட்டு ரோஸ்மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவண்டர் ஆயில், 25 சொட்டு பே ஆயில், 50 சொட்டு சிடர்வுட் ஆயில் ஆகியவற்றைக் கலக்கவும். 1 வாரம் இந்தக் கலவையை வைத்து விடவும். பின்னர் இரவில் தடவிக் கொண்டு மறுநாள் காலையில் தலைக்கு குளிக்கவும். இப்படி செய்தால் முடி உதிர்வது உடனடியாக நிற்கும்.
 • போதுமான இரும்புச்சத்து,  இல்லையென்றால் முடி உதிர்வு அதிகரிக்கும். தேவையான அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். பேரீச்சம்பழம், அசைவ உணவுகள், வெல்லம், முருங்கைக்கீரை ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது குறிப்பித்தக்கது.
Twitter

 • வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணையை வெதுவெதுப்பாக சூடேற்றி அதனை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு குளித்து வர முடியின் மென்மை அதிகரிப்பதோடு, வேர்களும் வலு பெறும்.
 • முடி ஈரமாக இருக்கும் போது சீவுவதை தவிர்க்க வேண்டும். இதனால் முடி உதிர்வது அதிகரிப்பது மட்டுமின்றி, முடி (split hair) வெடிப்பும் அதிகரிக்கும். எப்போதும் முடி நன்கு உலர்ந்த பின்னர் தான் சீப்பை பயன்படுத்த வேண்டும்.
Youtube

 • கற்றாழை, வெந்தயம் ஆகியவற்றை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். வெந்தயத்தை ஊற வைத்து அடுத்த நாள் அதை அரைத்து குளிக்க வேண்டும். கற்றாழையின் சோற்று பகுதியை அரைத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு செய்து குளித்து வர முடி மென்மையாகும்.

வேப்பை இலையின் மருத்துவ மற்றும் அழகு குறிப்புகள்

கோடையால் பொலிவற்ற முகத்தை புத்துயிர் பெற செய்யும் சூப்பர் மேஜிக் டிப்ஸ்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo