சரும ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த பல அழகு சாதன கிரீம், பௌடர், லோசன் என்று வந்துவிட்டது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தருகின்றது. எனினும், லோசன்கள், சருமத்தை ஈரத்தன்மையோடும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக இருகின்றது.
Table of Contents
- சரியான லோசனை தேர்வு செய்ய குறிப்புகள்(Guide to choose best body lotions)
- லோசனை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை(Things to consider choosing body lotions)
- இந்தியாவில் வாங்க சிறந்த லோசன்கள் (Best lotions to buy in India)
- லோசனை தேர்வு செய்யும் போது செய்யும் தவறுகள்(Mistakes you make when selecting body lotion)
- லோசனை பயன்படுத்தும் முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்(Precautions to take before using body lotion)
- கேள்வி பதில்கள்(FAQ)
இந்தியாவில் பல பிராண்ட் லோசன்கள் கிடைகின்றன. ஆனால், அவை அனைத்தும் தரமானவை மற்றும் எந்த கேடும் விளைவிக்காதவை என்று கூற முடியாது. இந்த வகையில், ஒரு சரியான பாடி லோசனை (body lotion) தேர்வு செய்ய நீங்கள் சில முயற்சிகளை எடுக்கத்தான் வேண்டும்.
உங்களுக்கு உதவ, பின்வரும் இந்த தொகுப்பு, எப்படி ஒரு சரியான லோசனை தேர்வு செய்வது என்பதற்கான தகவல்களை உங்களுக்குத் தரும்.
சரியான லோசனை தேர்வு செய்ய குறிப்புகள்(Guide to choose best body lotions)
நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒரு சரியான லோசனை வாங்க எண்ணினால், இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
1. தனித்துவமான பொருட்களின் சேர்க்கை
நீங்கள் வாங்கும் லோசனில் பெட்ரோலட்டம் உள்ளதா என்று பாருங்கள். மேலும் அதில் லானோலின், தாது எண்ணைகள், மற்றும் மெழுகுகள் போன்றவை இருகின்றதா என்று பாருங்கள். இவை ஈரப்பதத்தை சருமத்தினுள் தக்க வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
2. எரிச்சல் நீக்கிகள்
இதில் சிலிகான்கள் (டைமெதிகோன் மற்றும் சைக்ளோமெதிகோன்), ஜோஜோபா எண்ணெய் மற்றும் கிளிசரில் ஸ்டீரேட் போன்றவை. அடங்கும். இவை உயிரணுக்கள் கொத்துகளுக்கிடையேயான இடைவெளிகளை நிரப்பு உதவும். இதனால் தோல் மென்மையாகவும், மிருதுவாகவும், நெகிழ்வாகவும் இருக்கும்.
3. சருமத்தை குணப்படுத்தும் பொருட்கள்
Shutterstock
இதில் செராமமைடுகள் மற்றும் கொழுப்பு போன்றவை அடங்கும். இந்த பொருட்கள் ஆரோக்கியமான சருமம் இயற்கையாகவே உற்பத்தியாக உதவும். மேலும் இது சருமத்தின் மீது எரிச்சல் உண்டாகாமல் பாதுகாக்கவும் உதவும்.
4. வாசனை பொருட்கள் மற்றும் சாயம் இல்லாமல் இருக்க வேண்டும்
நீங்கள் வாங்கும் லோசனில் எந்த விதமான வாசனை பொருட்களும், குறிப்பாக ரசாயனம் கலந்த வாசனை பொருளும், மற்றும் சாயங்களும் இல்லாமல் பார்க்க வேண்டும். அவை ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடக் கூடும்.
5. மலிவான விலை
நீங்கள் வாங்கும் லோசன் உங்களால் வாங்க முடிந்த விலையில் இருக்க வேண்டும். எனினும், பலருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே தரமானவை என்கின்ற எண்ணம் மனதில் ஆழமாக உள்ளது. ஆனால், அப்படி இல்லாமல், விலை மலிவாக இருந்தாலும், தரம் நிறைந்த ஒரு பொருளை நீங்கள் தேர்வு செய்து வாங்க வேண்டும்.
6. நல்ல உணர்வு
நீங்கள் பயன்படுத்தும் லோசன் உங்களுக்கு நல்ல உணர்வை சருமத்தின் மீது தர வேண்டும். மேலும் உங்கள் சருமம் பிசுபிசுப்பு இல்லாமல், மற்றும் வறண்டு போகாமலும் இருக்க உதவ வேண்டும்.
7. பம்ப் அல்லது ட்யுபில் வரும் லோசன்
Shutterstock
முடிந்த வரை ஒரு டப்பாவில் வரும் லோசனை விட, ட்யுபில் அல்லது பம்பில் வரும் லோசனை வாங்குவது நல்லது. இது காற்று உள்ளே புகாமலும், உங்கள் கைகளால் எடுத்து பயன்படுதத்துவத்தை தவிர்க்கும் வகையில் இருக்க வேண்டும். இதனால் பக்டீரியா மற்றும் தூசி உள்ளே போகாமல், நலல் நிலையில் பல நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.
8. சரியான pH அளவு
சருமம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்றால், அதற்கு pH அளவு முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக நீங்கள் வாங்கும் லோசனில் குறைந்தது 5.5 pH அளவு இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அது உங்கள் சருமத்திற்கு நல்ல ஆரோகியத்தையும், எதிர் பார்த்த பலனையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
9. சருமத்தின் வகை
நீங்கள் லோசன் வாங்க செல்லும் முன், உங்கள் சருமத்தின் வகையை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு சரும வகிக்கும், வெவ்வேறு லோசன்கள் கடைகளில் கிடைகின்றன. அதனால் உங்கள் சரும வகைக்கு ஏற்றவாறு ஒரு சரியான லோசனை தேர்வு செய்து பயன்படுத்தினால் அது உங்களுக்கு எதிர்பார்த்த பலனை நிச்சயம் தரும்.
10. அட்டையில் இருக்கும் தகவலை படிக்கவும்
நீங்கள் லோசனை வாங்கும் முன் அதில் இருக்கும் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை படித்து, புரிந்து பின்னர் அந்த லோசனை வாங்குவதை பற்றி முடிவு செய்ய வேண்டும். அப்படி படிப்பதால், அது உங்களுக்கு ஏற்ற லோசனா இல்லையா என்று உங்களுக்கு தெரிந்து விடும்.
11. சோதனை செய்து பார்க்கவும்
Shutterstock
எப்போதும் சருமத்திற்கு லோசன் வாங்கும் முன் ஒரு பெரிய அளவு கண்டைனரை வாங்குவதை விட, முதலில் ஒரு சிறய அளவிலான ட்யுப் வாங்கி ஓரிரு நாட்கள் பயன்படுத்தி பாருங்கள். அப்படி செய்யும் போது, உங்களுக்கு அதனால் உங்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்படுகின்றதா அல்லது ஒவ்வாமை ஏற்படுகின்றதா என்று தெரியும்., அதன் பின்னர் ஒரு பெரிய கண்டைனர் வாங்கி தொடர்ந்து பயன்படுத்தலாம்.
12. வெளிப்புற மாசுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும்
நீங்கள் தேர்வு செய்யும் லோசன் உங்கள் சருமத்தை குறிப்பாக வெளிப்புற மாசு, தூசி மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பக்டீரியா போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். நீங்கள் அதிகம் வெளியில் சுற்றி வேலை பார்ப்பவர்காக இருந்தால், நீங்கள் அவசியம் கவனிக்க வேண்டிய ஒரு விடயமாக இது இருக்கும்.
13. வயதான தோற்றத்தை குறைக்க வேண்டும்
நீங்கள் தேர்வு செய்யும் லோசன் உங்கள் சருமம் நல்ல பொலிவோடும், இளமையான தோற்றத்தோடும் இருக்க உதவ வேண்டும். குறிப்பாக வயதான தோற்றத்தை உண்டாகும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை போக்கி, நல்ல ஆரோக்கியமான சருமத்தை பெற உதவ வேண்டும்.
14. சிரங்கு மற்றும் தோல் அரிப்பு / புண்ணில் இருந்து பாதுகாக்க வேண்டும்
நீங்கள் தேர்வு செய்யும் லோசன் உங்கள் சருமத்தில் ஏற்படும் சிரங்கு, புண், அரிப்பு, சிவந்தால், தடிப்பு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். எந்த சரும பிரச்சனைகளையும் ஏற்பட விடாமல் காக்க உதவ வேண்டும்.
15. சூரிய கதிர்களிடம் இருந்து பாதுகாப்பு
Shutterstock
நீங்கள் தேர்வு செய்யும் லோஷன், உங்கள் சருமத்தை சூரிய கதிர்களிடம் இருந்தும், ஊதா கதிர்களிடம் இருந்தும் பாதுகாக்க உதவ வேண்டும். இதனால் உங்கள் சருமம் நீங்கள் வெயிலில் அதிக நேரம் இருந்தாலும், கருக்காமலும், பொலிவை இழக்காமலும், நல்ல ஆரோகியத்தோடு இருக்க உதவும்.
மேலும் படிக்க – உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீன் லோஷனை தேர்ந்தெடுப்பதற்கான முழுமையான வழிகாட்டி !
லோசனை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை(Things to consider choosing body lotions)
- உங்கள் சருமம் எவ்வளவு வறட்சி தன்மையோடு இருகின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்
- உங்கள் சருமம் அதிக உணர்ச்சியோடு இருக்கின்றதா, அதனால் நீங்கள் வாங்கும் லோசன் பாதிப்புகளை உண்டாக்கி விடுமா என்று கவனியுங்கள்
- குளிர் காலத்தில் உங்கள் சருமம் அதிகம் வறண்டு போனால், அதற்கு தகுந்த லோசனை தேர்வு செய்யுங்கள்
- உங்கள் சருமத்தில் அதிக இறந்த அணுக்கள் இருகின்றதா அல்லது தோல் உரிதல் அதிகம் இருக்கின்றதா என்று கவனியுங்கள்
- குழந்தைகளுக்கு பயன்படுத்தும் லோசனை நீங்கள் பயன்படுத்த எண்ணினால், ஒரு நிபுணரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்
- ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து, நீங்கள் வாங்க விரும்பிய லோசனை பற்றி சில தகவல்களை சேகரித்து, அது உங்களுக்கு ஏற்றது தான் என்று உறுதி செய்த பின்னர் அதை வாங்க முடிவெடுங்கள்
- உங்களுக்கு அடிக்கடி வெடிப்பு மற்றும் புண் சருமத்தில் ஏற்பட்டால், அதற்கு தகுந்த லோசனை நீங்கள் தேர்வு செய்து வாங்க வேண்டும்
- உங்கள் சருமத்திற்கு அரிப்பு, எரிச்சல் போன்ற ஒவ்வாமையை உண்டாக்கக் கூடிய பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தாள், அந்த லோசனை தவிர்த்து விடுவது நல்லது
இந்தியாவில் வாங்க சிறந்த லோசன்கள் (Best lotions to buy in India)
உங்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் எளிதாகவும், தரமாகவும் கிடைக்கும் சில லோசங்களின் தொகுப்பு இங்கே. இது நீங்கள் சரியான லோசனை தேர்வு செய்ய உதவும் என்று நம்புகின்றோம்;
1. பாரசூட் அட்வான்ஸ்ட் டீப் நரிஷ் பாடி லோசன் )Parachute Advansed Deep Nourish Body Lotion)
இதில் தேங்காய் பால் நிறைந்துள்ளது. இது சருமத்தை இயற்கையாகவே ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதவும். மேலும் சருமத்தை மிருதுவாகவும், பொலிவோடும் வைத்திருக்க உதவும். இந்த லோசன் அனைத்து வகையான வறண்ட சருமங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
2. ஹிமாலய நரிஷிங் பாடி லோசன் (Himalaya Nourishing Body Lotion)
இதில் பல மூளிகைகளின் நற்குணங்கள் நிறைந்துள்ளது. இதை ஆண் மற்றும் பெண் இருவரும் பயன்படுத்தலாம், இதில் ஆக்சிஜநேற்றன் நிறைந்துள்ளாய். அனைத்து வகை சருமங்களுக்கு இது ஏற்ற லோசனாக இருக்கும். மேலும் இது சருமத்தை நல்ல ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதுவும். இதில் வைட்டமின் இ, வைட்டமின் டி, புரதம், போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
3. வாடி மாயிஸ்சரைசிங் லோசன் வித் பிங்க் ரோஸ் எக்ஸ்ட்ராக்ட் (Vaadi Moisturising Lotion with Pink Rose Extract)
இந்த லோசன் சருமத்தை நீண்ட நேரத்திற்கு ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதவும், மேலும் இது அனைத்து வகை சருமங்களுக்கு ஏற்றது. சருமதிற்குள் நன்கு ஊடுருவி நல்ல பலனைத் தரும். இதில் பல வகை வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
4. வி எல் சி சி கோகோஅ பட்டர் ஹைடரேடிங் பாடி லோசன் எஸ் பி எப் 15 (VLCC Cocoa Butter Hydrating Body Lotion SPF 15)
இது நாள் முழுவதும் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும். மேலும் இதில் எஸ் பி எப் 15 இருப்பதால், சருமத்தை சூரிய கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும், மேலும் இளமை தோற்றத்தை அதிகப்படுத்தி, சருமம் கருமையாகாமல் காக்க உதவும். இது அனைத்து வகை சருமங்களுக்கும் ஏற்றது.
5. யார்ட்லி இங்கிலீஷ் ரோஸ் மாயிஸ்சரைசிங் பாடி லோசன் (Yardley English Rose Moisturising Body Lotion)
இது சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தரும். மேலும் சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். இதில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. மேலும் சருமம கருமையாவதை தடுத்து இளமையான தோற்றத்தை தரும். அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். இதில் வைட்டமின் பி3 மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
6. நிவிய எக்ஸ்ப்ரஸ் ஹைட்ரேசன் பாடி லோசன் (Nivea Express Hydration Body Lotion)
இது சருமத்தை ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும், மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த உதவும், சிறிதளவு பயன்படுத்தினாலே போதுமானது, தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
7. வாசலின் டோடல் மாயிஸ்சர் நரிஷிங் பாடி லோசன் (Vaseline Total Moisture Nourishing Body Lotion)
இது உங்கள் சருமத்தை நல்ல ஈரத்தன்மையோடும், போஷாக்குடனும் வைத்திருக்க உதவும். மேலும் சருமத்தை மிருதுவாக்க உதவும், நல்ல பலபலப்பை சருமத்திற்கு தரும், இது ஸ்ருமதிற்குள் நன்கு ஊடுருவி நல்ல பலனைத் தரும். இதில் வைட்டமின் இ, புரதம் மற்றும் எண்ணைகள் நிறைந்துள்ளது. அனைத்து வகை சருமங்களுக்கு ஏற்றது. 24 மணி நேரமும் சருமத்தை ஈரத்தன்மையோடு வைத்திருக்க உதவும்.
8. ஜாய் ஹனி அண்ட் அல்மொண்ட்ஸ் நரிஷிங் பாடி லோசன் (Joy Honey & Almonds Nourishing Body Lotion)
இது சருமத்தை மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். இது சருமத்தில் இருக்கும் கருப்பு தழும்புகள் மற்றும் புண்களை குணப்படுத்த உதவும். இது சூரிய கதிர்களிடம் இருந்து சருமத்தை காக்க உதவும். மேலும் இதில் பல மூலிகைகள் அடங்கியுள்ளது. இது அனைத்து வகை சருமத்திற்கு ஏற்றது. இதில் வைட்டமின் இ, தேன், அல்மொன்ட் எண்ணை நிறைந்துள்ளது.
9. கார்னியர் ஸ்கின் நச்சுரல்ஸ் பாடி குகூன் லோசன் (Garnier Skin Naturals Body Cocoon Lotion)
இதில் பல இயற்க்கை மூலிகைகள் உள்ளது. இது சருமத்தை மிருதுவாகவும், பொலிவுடனும் வைத்திருக்க உதவும். மேலும் இது சருமத்தை எப்போதும் ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதவும். வறண்ட சருமத்திற்கு இது ஏற்றது. இதில் அவோகாடோ எண்ணை, அப்ரிகாட் எண்ணை, ஆலிவ் எண்ணை உள்ளது.
10. அரோமமாஜிக் ஹனி அண்ட் ஷீ பட்டர் பாடி லோசன் (Aromamagic Honey & Shea Butter Body Lotion)
இதில் பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் டாக்சிக் பொருட்கள் எதுவும் இல்லை. இது சருமத்திற்கு நல்ல சத்துக்களைத் தரும், மேலும் சருமம் நல்ல மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க உதவும். இது சூரிய கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும். இது வறண்ட மற்றும் அதிகம் உணர்சியுடைய சருமத்திற்கு ஏற்றது.
11. விவேல் செல் ரெண்யு டீப் ஸ்மூத்தனிங் பாடி லோசன் (Vivel Cell Renew Deep Smoothing Body Lotion)
இது சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும், மேலும் சேதமடைந்த சருமத்திற்கு ஊட்டச்சத்து பெற உதவி செய்து, விரைவாக குணமடைய உதவும். இது அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது. இது சருமத்திற்கு நல்ல போஷாக்கைத் தரும். இதில் வைட்டமின் இ நிறைந்துள்ளது.
12. லோட்டஸ் ஹெர்பல்ஸ் கொகொஅ கேர்ஸ் டெய்லி ஹன்ட் அண்ட் பாடி லோசன் (Lotus Herbals Cocoa Caress Daily Hand & Body Lotion)
இது சருமத்தில் சுருக்கன்களால் ஏற்பட்ட தழும்புகளை போக்க உதவும். மேலும் மெல்லிய கோடுகளையும் போக்க உதவும். இது சூரிய கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சருமத்தை எப்போதும் ஈரப்பதத்தோடும், போஷாக்குடனும் வைத்திருக்க உதவும். இது வறண்ட சருமத்திற்கு ஏற்றது. இதில் தேன், அல்மன்ட் எண்ணை, கிளிசரின், கோகோஅ பட்டர் மற்றும் பன்னீர் உள்ளத்.
13. ஜெர்கேன்ஸ் அல்ட்ர ஹீலிங் எக்ஸ்ட்ரா ட்ரை ஸ்கின் மாயிஸ்சரிசர் (Jergens Ultra Healing Extra Dry Skin Moisturizer)
இது சருமத்தின் ஐந்து படிவங்களுக்குள்ளும் நன்கு ஊடுருவி சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளை போக்க உதவும். இதில் வைட்டமின் சி, இ மற்றும் பி5 நிறைந்துள்ளது. இது சருமத்தை மிருதுவாகவும், பொலிவோடும், பலபலப்போடும் வைத்திருக்க உதவும். இது அதிக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
14. டவ் இண்டல்ஜென்ட் நரிஷிங் பாடி லோசன் (Dove Indulgent Nourishment Body Lotion)
இது வறண்ட மற்றும் கடுமையான சருமத்திற்கு ஒரு ஏற்ற லோசனாக இருக்கு. இதில் அதிக மூலிகைகள் நிறைந்துள்ளது. மேலும் மிக மிருதுவான சருமத்தை தரும். அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்ற லோசன் இது. இது சருமத்திற்கு நல்ல போஷாக்கைத் தரும்.
15. நியுற்றோஜென நற்வேஜியான் பார்முலா பாடி மாயிஸ்சரிசர் (Neutrogena Norwegian Formula Body Moisturizer)
இது சருமத்தில் இருக்கும் எந்த விதமான பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும். எப்படி பட்ட கடுமையான சருமத்தையும் மிருதுவாக்க உதவும், வறண்ட சருமத்திற்கு ஏற்ற லோசனாக இது உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், நல்ல ஈரப்பதத்தோடும் வைத்துக் கொள்ள உதவும்.
16. தி மொம்ஸ் கோ. நச்சுரல் காலமிங் பாடி லோசன் (The Moms Co. Natural Calming Body Lotion – (200ml)
இதில் ஷீ பட்டர், தேன் மற்றும் தேங்காய் எண்ணை, ஜோஜோப எண்ணை, கமொமாயில் எண்ணை, போன்ற தேவையான எண்ணைகள் நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்சனையை போக்கி, சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். வறண்ட மற்றும் தோல் உரிந்த சருமத்திற்கு இது ஏற்ற லோசன். தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது இது இளமையான தோற்றத்தை உங்களுக்குத் தரும். இதில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
17. பாண்ட்ஸ் ட்ரிப்பில் வைட்டமின் மாயிஸ்சரைசின் பாடி லோசன் (Pond’s Triple Vitamin Moisturising Body Lotion, 300ml)
இதில் விடமின் பி3, இ மற்று சி நிறைந்துள்ளது. இது சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, நல்ல பலபலப்பையும் தரும். வறண்ட மற்றும் கடுமையான சருமத்திற்கு ஏற்ற லோசனாக இது உள்ளது. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, எதிர் பார்த்ததை விட அதிக பலனைத் தரும். குளித்த பின்னரும், இரவு தூங்க செல்லும் முன்னரும் இதனை சருமத்தில் தடவிக் கொள்ளலாம்.
18. கய ஸ்கின் கிளினிக் டெய்லி யூஸ் பாடி லோசன் (Kaya Skin Clinic Daily Use Body Lotion)
ஷீ பட்டர் மற்றும் பிற மூளிகைகள் நிறைந்துள்ள இந்த லோசன், சருமத்தை 24 மணி நேரமும் நல்ல ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதவும். குளிர் காலத்தில் பயன்படுத்த இது ஏற்ற லோசன். மேலும் இதனை உடல் முழுவதும் தடவிக் கொள்ள பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு நல்ல உணர்வை தருவதோடு, ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
19. ஒரிப்லம் ஹாப்பி ஸ்கின் நரிஷிங் பாடி க்ரீம் எக்ஸ்ட்ரா ட்ரை ஸ்கின் (Oriflame Happy Skin Nourishing Body Cream Extra Dry Skin)
இது சருமத்தை நல்ல ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதவும். இது குறிப்பாக குளிர் காலத்தில் ஏற்படும் வறண்ட சருமத்திற்கு ஒரு நல்ல தீர்வு என்று கூறலாம். சருமத்தில் வறட்சியால் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்த இது உதவும். இதில் வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. உங்கள் சருமம் மிருதுவாக இருக்க இது உதவும்.
20. தி பாடி ஷாப் ஸ்ட்ரவ்பெர்ரி சாப்ட்டேனிங் ஜெல் லோசன் (The Body Shop Strawberry Softening Gel Lotion)
இது சருமத்திற்கு நல்ல பலபலப்பைத் தரும். மேலும் இதில் ஸ்ட்ரவ்பெர்ரி விதையின் எண்ணை, தேன், போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இது சருமத்திற்கு நல்ல போஷாக்கைத் தரும். மேலும் பல மணி நேரங்களுக்கு சருமத்தை ஈரப்ப்தத்தோடு வைத்திருக்க உதவும். சருமத்தில் இருக்கும் எண்ணை பிசுக்கை போக்க உதவும். வறண்ட சருமத்திற்கு இது ஒரு நல்ல தீர்வு.
21. காதி ஹெர்பல்ஸ் ரோஸ் அண்ட் ஹனி வித் ஷீ பட்டர் பாடி லோசன் (Khadi Herbals Rose and Honey With Shea Butter Body Lotion)
இதில் தேன், ரோஸ் மற்றும் ஷீ பட்டர் உள்ளது. மேலூம் இதில் கோதுமை எண்ணை, ஜோஜோப எண்ணை, கற்றாழை மற்றும் அல்மான்ட் எண்ணை உள்ளது/ இந்த லோசன் சருமத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். இது குளிர் காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்க உதவும். ஆண் மற்றும் பெண், இருவரும் இதனை பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு மிருதுவான உணர்வைத் தரும்.
22. பாபிந்திய வையில்ட் ரோஸ் பாடி லோசன் (Fabindia Wild Rose Body Lotion )
இதில் ரோஸ், ஷீ பட்டர் மற்றும் வைட்டமின் இ உள்ளது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். மேலும் சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தரும். இறந்த அணுக்களை அகற்றி புதிய அணுக்கள் உற்பத்தியாக உதவும். வயதாகும் தோற்றத்தை தாமதப்படுத்தி, இளமையாக சருமத்தை வைத்திருக்க உதவும். சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக போக்க உதவும். பல மணி நேரத்திற்கு நல்ல பலனைத் தரும்.
23. பயோடிக் பயோ வின்ட்டர் செர்ரி ரேசுவநேடிங் பாடி லோசன் (Biotique Bio Winter Cherry Rejuvenating Body Lotion)
இதில் சூரியகாந்தி மலர்கள், மஸ்க் வேர்கள், அல்மான்ட் எண்ணை மற்றும் செர்ரி உள்ளது. இது சருமத்திற்கு போதுமான போஷக்கைத் தந்து, சருமம் ஈரப்பதத்தோடு இருக்க உதவும். இது மேலும் குளிர் காலத்தில் சருமத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் காப்பாற்றும். சருமத்திற்கு ஊட்டச்சத்து தந்து, புத்துணர்ச்சியாக இருக்க உதவும். மேலும் எப்போதும் இளமையாக இருக்க உதவும்.
24. ஜோவீஸ் ஆலோ வேற மாயிஸ்சரைசிங் லோசன் (Jovees Aloe Vera Moisturizing Lotion)
இது எண்ணை பிசுக்கு அதிகம் இருக்கும் மற்றும் அதிக உணர்ச்சியாக இருக்கும் சருமத்திற்கு ஏற்ற லோசனாகும். இது சருமத்தை எப்போதும் ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதவும். இதில் பல மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஈரப்பதத்தை நாள் முழுவதும் தக்க வைத்துக் கொள்ள உதவும்.
25. பாரஸ்ட் ஈஸ்சென்சியல் லைட் டே லோசன் லாவெண்டர் அண்ட் நேரொளி எஸ் பி (Forest Essentials Light Day Lotion Lavender & Neroli SPF25)
இந்த லோசன் லாவெண்டர் நீரால் செய்யப்பட்டது, இது நல்ல மருத்துவ குணம் நிறைந்தது. சருமத்திற்கு நல்ல போஷாக்கை தந்து இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவும். இது சருமத்தை சுத்திகரித்து, நல்ல பலபலப்போடு வைத்துக் கொள்ள உதவும். சூரிய கைதிகளிடம் இருந்து பாதுக்காக்கும். நீண்ட நேர பலனை தரும். மேலும் சருமம் எப்போதும் ஈரப்பதத்தோடு இருக்க உதவும்.
லோசனை தேர்வு செய்யும் போது செய்யும் தவறுகள்(Mistakes you make when selecting body lotion)
- விளம்பரங்களை பார்த்து தவறான முடிவுக்கு அவசரப்பட்டு வந்து தவறான லோசனை வாங்கி விடாதீர்கள்
- பிறரின் கருத்துக்களை கேட்டு, அது உங்களுக்கும் ஏற்றதாக இருக்குமா என்று சோதித்து பார்க்கும் முன் அவர் பயன்படுத்தும் அதே லோசனை நீங்கள் பயன்படுத்த நினைக்காதீர்கள்
- விலை மலிவான லோசனை வாங்க எண்ணி, தரம் குறைவான ஒன்றை வாங்கி விடாதீர்கள்
- உங்களால் ஒரு சரியான லோசனை தேர்வு செய்ய முடியவில்லை என்றால், ஒரு நிபுணரை அணுகி ஆலோசனை பெற தயங்காதீர்கள்
- ஏதோ ஒரு லோசனை பயன்படுத்தாமல், உங்களுக்கு எது சரியானதாக இருக்கும் என்பதை காணித்து அதன் பின் வாங்க முயற்சி செய்யுங்கள்
- பொருட்களின் உள்ளடக்கத்தை பார்த்து அதன் பின்னர் அது உங்களுக்கான லோசனா என்று பார்த்து வாங்க தவறாதீர்கள்
லோசனை பயன்படுத்தும் முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்(Precautions to take before using body lotion)
Shutterstock
- லோசனை பயன்படுத்தும் முன் உங்கள் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும்
- குறிப்பாக தினமும் குளித்த பின்னர் இந்த லோசனை பயன்படுத்துவது நல்லது
- சருமத்தில் அழுக்கு மற்றும் தூசி இருக்கும் போது இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
- புண் இருக்கும் இடத்தில் இந்த லோசனை நிபுணரின் ஆலோசனை இல்லாமல் தடவுவதை தவிர்ப்பது நல்லது
- புதிதாக நீங்கள் ஒரு லோசனை பயன்படுத்தும் போது, ஏதாவது உபாதைகள் ஏற்பட்டு விட்டால், முதலில் அதனை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பின்னர், அதன் உபாதைகள் தொடர்ந்தால், அல்லது அதிகரித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்
- சில லோசன்கள் உங்களுக்கு இருக்கும் சரும பிரச்சனைகளை அதிகரித்து விடக் கூடும். அதனால் பயன்படுத்தும் முன் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும்
கேள்வி பதில்கள்(FAQ)
1. பாடி லோசன் எதற்கு பயன்படுத்தப் படுகின்றது?
இது குறிப்பாக சருமம் வறண்டு போகாமலும், நல்ல ஆரோக்கியத்தோடு வைத்திருக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் அரிப்பு, வெடிப்பு, தோல் உரிதல், புண், எரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து சருமத்தை காக்கவும் உதவுகின்றது.
2. லோசன் அல்லது மாய்ச்சரைசர், எது சிறந்தது?
இரண்டுமே வெவ்வேறு பலனைத் தந்தாலும், லோசன் சருமத்தில் இருக்கும் பிற பிரச்சனைகளை போக்குவதோடு, சருமத்திற்கு ஈரப்பதத்தையும் தரும்.
3. தினமும் சருமத்திற்கு லோசனை பயன்படுத்த வேண்டுமா?
அப்படி அவசியம் இல்லையென்றாலும், உங்களுக்கு தொடர்ச்சியாக நல்ல பலனைப் பெற வேண்டும் என்றால், தினமும் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் சருமம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.
4. கைகளுக்கு தடவும் லோசனை உடலுக்குத் தடவலாமா?
கைகளில் இருக்கும் சருமம் உடலில் இருக்கும் மற்ற பகுதியில் இருக்கும் சருமத்தை விட மாறுபட்டு இருக்கும். அதனால் இதன் உற்பத்தியிலும் சில மாற்றங்கள் இருக்கும். எனினும், உங்களுக்கு உடல் முழுவதும் சருமத்தில் தடவ லோசன் வேண்டும் என்றால், நீங்கள் முழு உடலுக்கான லோசனை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
5. இதை சருமத்தில் தடவிய பின்பு தண்ணீரில் கழுவ வேண்டுமா?
இந்த லோசன் சருமத்தில் நன்கு உறிஞ்சப்படுவதால், நீங்கள் தண்ணீரில் கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்போதும் போல குளிக்கும் போது அது தானாகவே போய் விடும்.
6. அதிக அளவிலான லோசனை பயன்படுத்தலாமா?
அப்படி பயன்படுத்தத் தேவை இல்லை. தேவையான அளவையே பயன்படுத்தினால் போதுமானது. இதுவே உங்களுக்கு எதிர்பார்த்த பலனைத் தரும்.
7. இரவு தூங்க செல்லும் முன் லோசனை தடவ வேண்டுமா?
இப்படி செய்வது நல்லது. இது உங்கள் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தரும். மேலும் எதிர் பார்த்ததை விட நல்ல பலனை விரைவாகவே பெறலாம்.
8. எப்போது ,லோசனை பயன்படுத்த வேண்டும்?
இதனை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம். எனினும், குறிப்பாக வெளியில் செல்லும் போது, முக்கியமாக வெயிலில் செல்லும் போது பயன்படுத்துவதால் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
மேலும் படிக்க – ஒளிரும் சருமத்தை பெற சில அழகு குறிப்புகள் (வீட்டு வைத்தியம்) !
பட ஆதாரம் – Shutterstock
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!