ஒளிரும் சருமத்தை பெற சில அழகு குறிப்புகள் (வீட்டு வைத்தியம்) ! (Tips For Glowing Skin In Tamil)

ஒளிரும் சருமத்தை பெற சில  அழகு குறிப்புகள் (வீட்டு  வைத்தியம்) ! (Tips For Glowing Skin In Tamil)

ஒளிரும் முகம் ! இங்கு யாருக்குதான் ஒரு ப்ரகாசமான முகம் தேவை இல்லை கூறுங்கள் பார்ப்போம்?! தனது தோற்றமே ஒருத்தரின் நம்பிக்கையை அதிகரித்து அன்றாட வேளைகளில் பங்களிக்கிறது. ஒரு மந்தமான முகம் (face) நிச்சயமாக உங்களை டிமோட்டிவேட் (demotivate) செய்யும். எனவே நாம் தொடர்ந்து அந்த பிரகாசமான தோற்றத்திற்காக அணைத்து முயற்சிகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.இங்கு நாம் சில எளிய முறைகளை பார்ப்போம். இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் சருமத்தை பாதுகாத்து ஒரு ஜொலிக்கும் தோற்றத்தை சுலபமாக பெறலாம்.ஆம் ! அந்த பியூட்டி பார்லரில் நீங்கள் செலவழிக்கும் அனைத்தையும் சேமிக்கலாம்!


சருமத்தின் வகையை கண்டறிய


உங்கள் முகத்தை பிரகாசிக்க வைக்க (வீட்டிலிருந்தே !)சில எளிய பெஸ் பேக்


ஒளிரும் முகத்தை பெற சில மசாஜ் முறைகள்


பிற பயனுள்ள தீர்வுகள் & குறிப்புகள்


தவிர்க்க வேண்டிய விஷயங்கள்


தோல் வகை (அடிப்படைகளை) கொண்டு உங்கள் முகத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் (Know Your Skin Type)


முதலில் நீங்கள் உங்கள் சருமத்தின் (skin) வகையை கண்டறிய வேண்டும். ஏதேனும் ஒரு சருமத்திற்கு நேர்மாறான பராமரிப்பு முறைகளை (tips) பின்பற்றினால் உங்களுக்கு தேவையான தீர்வுகளை பெறுவது மிக கடினம். ஆகையால் கீழ்கூறி இருப்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். இதை தெரிந்துகொண்டால் உங்கள் நேரத்தையும் மீதமாகி சருமத்தையும் பாதுகாக்கலாம்.


tips for glowing skin in tamil


வறண்ட சருமத்தில் (Dry Skin) 


உங்கள் சருமம் நன்றாக தெரிந்தாலும், அதில் வறண்ட அமைப்பு மற்றும் அதிலிருந்து வரக்கூடிய செதில்கள் உங்கள் முகத்தை சுத்தமில்லாதது போல் தெரிவிக்கலாம்.


வறண்ட தோல் பராமரிப்புக்கான உதவிக்குறிப்புகள் பற்றியும் படிக்கவும்


தீர்வு (Solution):
இதை தவிர்க்க ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் அவைசியம். மேலும் குளிர் நீரால் முகத்தை கழுவவேண்டும்.


எண்ணெய் கொண்ட சருமம் (Oily Skin) 


இதில் எண்ணெய் பசை அதிகம் உட்பதி ஆகுவதினால் உங்கள் முகம் மந்தமாகவும் துளைகள் பெரிதாகவும் தெரிய வாப்புள்ளது. இதிலிருந்து ப்ளாக்ஹெட்  மற்றும் அக்னே வரக்கூடும்.


தீர்வு (Solution):
இதை தவிர்க்க நீங்கள் உங்கள் டயட் பிளானை மாற்றுங்கள். நொறுக்கு தீனி மற்றும் பாஸ்ட் புட்டை குறைக்கவும்(நிறுத்தமுடியாவிட்டால் !).அதிகம் தண்ணீர் குடுயுங்கள்.இதுவே உங்கள் சருமத்தின் தோற்றத்தை இயற்கையாகவே மாற்றிவிடும்.


காம்பினேஷன் ஸ்கின் (Combination Skin) 


இதில் எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்தின் இரண்டு அம்சங்களையும் நீங்கள் பார்க்கலாம். உங்கள் T zone அதாவது மூக்கு மற்றும் நெற்றி பகுதிகளில் என்னை கொண்டதாக இருக்கும்.


தீர்வு (Solution):
இதற்கு நீங்கள் உங்கள் உணவு பழக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும்.  இதில் உருவாகும் எண்ணெய் தன்மை கட்டுக்குள் வரும். மேலும் முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.


உங்கள் முகத்தை பிரகாசிக்க வைக்க (வீட்டிலிருந்தே !)சில எளிய பேஸ் பேக்ஸ் (Homemade Face Packs For Glowing Skin)


மேல் கூறியிருக்கும் அனைத்தும் உங்கள் சருமத்தின் விதத்தை பொறுத்து, வரும் பிரெச்சனைகளை  நீங்கள் பராமரிக்க சில தீர்வுகள். இதை பின்பற்றிக்கொண்டே வாரத்திற்கு ஒரு முறையாவது கீழ் கூறியிருக்கும் பேஸ் பேக்கை பூசுங்கள். உங்கள் முகம் ஜொலிக்க (bright) ஆரம்பித்துவிடும்.


Also Read: சருமத்திற்கு ஏற்படும் சில முக்கிய சிக்கல்கள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் (Skin Problems Solution In Tamil)


பப்பாளி மற்றும் தேன் (வறண்ட சருமத்திற்கு) (Papaya and Honey Face Mask For Dry Skin)


tips for glowing skin in tamil


பப்பாளியை சிறு துண்டுகளாக நான்கு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் பால் மற்றும் தேனை கலந்து ஒரு பேஸ்டை போல செய்த்துக்கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் 15நிமிடம் வைத்து விட்டு கழுவிடலாம்.


பப்பாளி உங்கள் சருமத்தில் இருக்கும் டெட் செல்சை தளரவிடுகிறது. மேலும் தேன் -பால் கலவை  உங்கள் சருமத்தை மென்மையாகி புதுப்பொலிவை தருகிறது. இந்த கலவை உங்கள் வறண்ட சருமத்திற்கு சிறந்தது.


முல்தானி மிட்டி (எண்ணெய் கொண்ட சருமத்திற்கு) (Multani Mitti For Oily Skin)


முல்தான் என்ற பெயர் கொண்ட நகரத்தின் களிமண்ணால் பெற்ற பயன்களை கொண்டு வந்த இந்த முல்தானி மிட்டி,  எண்ணெய் கொண்ட சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இதில் சருமத்தின் உள்ளிருக்கும் தூசி, எண்ணெய், பாக்டீரியாக்களை அளித்து புது பொலிவை தருகிறது.


முல்தானி மிட்டியை ஒரு சிறிய கப்பில் எடுத்துக்கொண்டு அதில் தேன் மற்றும் எலுமிச்சையை (தேவைப்பட்டால் ) சேர்த்து பூசவும்.அதன் பிறகு, இந்த  அற்புதத்தை நீங்களே பார்க்கலாம் !!


மேலும் படிக்க -  நீங்கள் உணர்திறன் தோல் உடையவரா? இந்த பொருட்களிடம் இருந்து விலகியே இருங்கள்!


வெள்ளரி & பால் பேஸ் பேக் (காம்பினேஷன் சருமத்திற்கு )(Cucumber & Milk Face Pack For Combination Skin)


என்னைப்போல் உங்களுக்கும் காம்பினேஷன் சருமம் என்றால், ஒரே குழப்பமாகத்தான் இருக்கும். ஏனெனில் நாம் வறண்ட + எண்ணெய் கொண்ட சருமத்தின் கலவையை கையாளவேண்டும். இதுபோல் இருக்கும் சருமத்தை எளிதில் ஜொலிக்கவைக்க,  வேறு எந்த விபரீதமான முயற்சிகளையும் எடுக்காமல், சருமத்திற்கு பாதுகாப்பான ஒன்றை தேர்தெடுங்கள். நான் பரிந்துரைப்பது வெள்ளரிக்காய் மற்றும் பால். வெள்ளரி எந்த சருமத்திற்கும் ஏற்ற ஒன்று. அலோ வேறவைபோல் இதிலும் நீர் சக்தி அதிகம் இருக்கிறது.


இதோடு பாலை கலந்து உங்கள் சருமத்தில் ஒரு 20நிமிடம் வைக்கவும். பால் உங்கள் சருமத்தை மென்மையாகும். வெள்ளரி உங்கள் முகத்தில் பருக்களை அகற்றி ஜொலிக்க வைக்கும்.


வெள்ளரிக்காயை நீங்கள் பல உணவு வகை சமைப்பதற்கு பயன் படுத்தலாம்


கற்றாழை (பருக்கள் கொண்ட சருமத்திற்கு) (Aloe-Vera For Skin With Pimples)


tips for glowing skin in tamil


என் சருமத்தில் அவ்வளவு பருக்கள் மற்றும் நிறம் மாற்றம் இருந்தன. இதை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் தயங்கியபோது எனக்கு கிடைத்த ஒரே தீர்வு அலோ வேறா !


ஒரு துண்டு கற்றாழை எடுத்து அதன் ஜெல்லை நன்றாக எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறு மஞ்சள் தூள் எடுத்து கலந்துகொள்ளுங்கள். இதில் ரோஸ் வாட்டர் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இதை உங்கள் முகத்தில் 15நிமிடம் ஊற வைத்து கழுவிடுங்கள். இதை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பூசலாம்.


காற்றாலை உங்கள் முகத்தை பருக்கள் இடமிருந்து காபாத்த்துகிறது ஏனெனில் இதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இருக்கிறது. மேலும் இது உங்கள் சருமத்தை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும்.இதோடு மஞ்சளை சேர்பதினால் முகம் ஜொலிக்கும் தோற்றத்தை எளிதில் பேரும். முயற்சித்து பாருங்கள் !


எண்ணெய் சரும பராமரிப்பு படிக்கவும்


அரிசி மாவு & பால் (நார்மலான சருமத்திற்கு) (Rice Flour & Milk For Scaly Skin)


இந்த கலவை உங்கள் சருமத்தை பிரகாசிக்க வைக்க ஒரு எளிய வழி. அரிசி மாவை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கிண்டு அதோடு ஒரு ஸ்பூன் தேன் மற்றும் பாலை கலந்து இனொரு ஸ்பூன் ஓட்ஸை சேர்க்கவும். இந்த பேஸ்டை முகத்தில் பூசிக்கொண்டு மிதமாக மசாஜ் செய்யவும். 10-15நிமிடம் கழித்து கழுவிவிடுங்கள்.


வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தி பாருங்கள், வேறு எந்த பியூட்டி பொருட்களையும் இனி வாங்குவதை விட்டுவிடுவீர்கள் ! இது ஒரு நார்மலான சருமத்திற்கு பொருந்தும் பேஸ் பேக்.


ஒளிரும் முகத்தை பெற சில மசாஜ் முறைகள் (Best Face Massage Methods To Get Glowing Skin) 


சரி! பேஸ் மஸ்கஸ் செய்ய நேரமில்லை என்று நினைத்தால் கீழ் கூறி இருக்கும் ஒரே ஒரு பொருளை வைத்து மசாஜ் செயுங்கள். உங்கள் முகம் நிமிடங்களில் ஜொலிக்கும்!


தேங்காய் என்னை (Coconut Oil) 


மிதமாக சூடு செய்து தேங்காய் எண்ணையை உங்கள் கழுத்து மாற்றும் முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். பிறகு மிதமாக வட்ட அசைவில் , மசாஜ் செயுங்கள். இரவு படுக்கும் முன் இதை செயது, காலையில் முகத்தை கழுவ வேண்டும். தேங்காய் என்னை மசாஜ் தினம் செய்தல் உங்கள் முகம் பிரகாசிக்க ஆரம்பிக்கும் ஏனெனில் இதில் இருக்கும் ஃபாட்டி ஆசிட் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்தை அளிக்கிறது.


தேன் (Honey) 


தேனில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்து உள்ளது. அதாவது, தேனை சிறிது எடுத்துக்கொண்டு உங்கள் முகத்தை கழுவிவிட்டு பூசுங்கள். அதை மிதமாக மசாஜ் செய்யவும். சிறிது நேரம் களைத்து முகத்தை கழுவிடுங்கள். இதை இரண்டு நாளிற்கு ஒரு முறை பின்பற்றுங்கள். முகத்தில் இருக்கும் பருக்கள் குறைந்து, மென்மையான முகத்தை பெறலாம்.


ஒலிவ் ஆயில் (Olive Oil) 


 tips for glowing skin in tamil


ஆலிவ் எண்ணெய் பழுது தோலை சேதப்படுத்தி, ஒரு ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தை குடுக்க, அனைத்து முக்கிய குணங்களையும் கொண்டது.உங்கள் முகத்தை கழுவிக்கொண்டு, சிறு சொட்டு ஒலிவ் எண்ணையை எடுத்து உங்கள் முகத்தில் மசாஜ் செய்யவும்( 5 நிமிடம்). அதற்கு பின் 45 நிமிடம் / ஒரு மணி நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவி விடுங்கள். 


பிற பயனுள்ள தீர்வுகள் & குறிப்புக்கள் (Other Useful Tips For Glowing Skin In Tamil)


மேல் கூறியிருக்கும் பேஸ் பேக்குகள் மட்டுமில்லாமல் வேறு சிறு சிறு விதயங்களிலும் கவனம் தேவை.


tips for glowing skin in tamil


  1.  தண்ணீர் எப்பொழுதுமே அதிகமாக குடிக்க வேண்டும். இதுவே உங்கள் முகத்தை இன்னும் ஜொலிக்கவைக்க உதவும். பகலில் அதிகமாக குடித்து இரவில் குறைவாக குடித்து பழகவும். இது உங்கள் உடம்பில் இருக்கும் டாக்ஸின்ஸ் களை அகற்றிவிடும்.

  2. சரியான டயட் அதாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சேர்த்து, ஜங்க் புட்டை தவிர்க்கவும். பப்பாளி, வெள்ளரி, ஆப்பிள் இவையெல்லாம் முகத்தில் மட்டும் ஒரு பேஸ் பேக்காக பூசிக்கொல்லாமல், இவைகளின் ஊட்டச்சத்தை போதுமான அளவிற்கு பெறுவது அவசியம்.

  3. தொடர்ந்து உடல் பயிற்சியில் ஈடுபடும்போது உங்கள் உடம்பில் ரத்த ஓட்டம் அதிகரித்து அதுவே உங்களை இன்னும் புத்துணர்ச்சியுடன் காட்டும். ஆகையால் தினம் குறைந்தது ஒரு அரை மணி நேரம் ஆவது உடல் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

  4. ஒப்பனையை இரவில் கழுவவோ துடைக்கவோ மறக்காதீர். இது மிக முக்கியமான ஒன்று. இல்லையென்றால் இதில் இருக்கும் இரசாயன பொருட்கள் உங்கள் முகத்தில் தங்கி மேற்கொண்டு பருக்கள், அழுக்கு மற்றும் நிற மாற்றத்தை உருவாக்கும்.

  5. உங்கள் சரும பராமரிப்பு அட்டவினையை மறக்காமல் தினம் பின்பற்றுங்கள். இரவில் முகத்தை கழுவி விட்டு ஒரு மொய்ச்சுரைசரை மற்றும் பகலில் சான்ஸகிரீன் லோஷனையும் தடவ மறந்துவிடாதீர்கள்.


சில தவிர்க்க வேண்டிய விஷயங்கள் (Things To Avoid)


tips for glowing skin in tamil


  1. இரசாயன பொருட்களை கொண்ட ஒப்பனைகளை விலை குறைவாக கிடைக்கிறது என்று வாங்குவதை தவிர்க்கவும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஏதேனும் ஒரு பிராண்டட் பொருளை உபயோகித்தாலே போதும் !

  2. அதிகம் வெயிலில் சுற்றுவதை தவிர்க்கவும். சூரிய ஒளியின் வெளிப்பாடு சுருக்கங்கள், தோல் பதனிடுதல், கறைகள் போன்ற தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். உங்கள் பணியில் இதுவே அவசியம் என்றால், அதற்கேற்ற ஒரு சன்ஸ்க்க்ரீன் லோஷன் Spf 50+ ஆக இருப்பதை பார்த்து பயன்படுத்துங்கள். ஸ்கார்ப்(scraf), க்ளோவ்ஸ் மற்றும் தொப்பியை பயன்படுத்தவும்.


முகத்தை வீட்டிலிருந்தே பொலிவுடன் மாற்ற இனி நீங்கள் பெரிய வேலை எதுவும் செய்யவேண்டியதில்லை. இதுபோல் சிறு விஷயங்களில் கவனித்து உங்கள் தினசரி பழக்கங்களில் தேவையான மாற்றங்களை கொண்டுவந்தால் போதும்.


இனி நீங்களும் ஜொலிக்கலாம் !


பட ஆதாரம்  - pexels, shutterstock,pixabay


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.