Lifestyle

பீச்ல ஜாலியா ‘பிரண்ட்ஸோட’ பேசிக்கிட்டே..சுடச்சுட ‘நண்டு-மீனு’ சாப்பிட ஆசையா?

Manjula Sadaiyan  |  Feb 1, 2019
பீச்ல ஜாலியா ‘பிரண்ட்ஸோட’ பேசிக்கிட்டே..சுடச்சுட ‘நண்டு-மீனு’ சாப்பிட ஆசையா?

என்னதான் சிக்கன்,மட்டன் என சாப்பிட்டாலும் மீன்,நண்டு, இறால் என கடல் உணவுகள் சாப்பிடுவதில் உள்ள சுகமே அலாதி தான். குறிப்பாக வறுத்த மீனை சுடச்சுட பாக்கெட்டுக்கு பங்கம் விளைவிக்காமல் சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் யார்தான் விரும்ப மாட்டார்கள். சிறு நகரங்களில் இதுபோன்ற வசதிகள் எட்டாக்கனி கிடையாது. ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோல சாப்பாடு என்பது காஸ்ட்லி பட்ஜெட் ஆகவே உள்ளது.

ஒரு குடும்பம் நார்மலாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் மினிமம் 1000 ரூபாயாவது வேண்டும். அதுவும் நண்டு,மீன் என சாப்பிட்டால் அதற்கு வரும் பில்லைப் பார்த்து உங்களுக்கு லேசான மயக்கமே வரக்கூடும். இதனாலேயே பெரும்பாலானவர்கள் சிக்கன் அல்லது பிரியாணியுடன் நிறுத்திக்கொள்வார்கள்.

அதே நேரம் உங்கள் பாக்கெட்டுக்கு பங்கம் வராமல் குறைந்த விலையில் சுடச்சுட மீன்,நண்டு,இறால் என சூடாக கிடைத்தால் எப்படி இருக்கும்? சொல்லும்போதே நாக்கு சப்புக்கொட்டுகிறதா? அப்படினா நீங்க போக வேண்டிய இடம் பெசண்ட் நகர் கடற்கரை(Besant Nagar Beach). எலியட்ஸ் பீச் என அழைக்கப்படும் இந்த பெசண்ட் நகர்(Besant Nagar Beach) கடற்கரையானது அடையாரிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மாலை மங்கும் நேரம்

மாலைப்பொழுதில் உங்கள் நண்பர்களுடனோ அல்லது குடும்ப உறுப்பினர்களுடனோ இந்த பெசண்ட் நகர்(Besant Nagar Beach)பீச்சுக்கு சென்றால் கடற்கரை காற்றின் குளிர்ச்சியை அனுபவித்தபடி காலாற நடை பழகலாம். அல்லது கடற்கரையில் அமர்ந்து உங்கள் மனம் கவர்ந்தவருடன் பேசிக் கொண்டிருக்கலாம். பொன்னிற மணற்பரப்பில் அமர்ந்து கடல் காற்றை அனுபவித்துக்கொண்டு உரையாடினீர்கள் என்றால் அதுதரும் மகிழ்ச்சி உங்கள் மனதுக்கு இதமாக அமையக்கூடும்.

மக்கள் வெள்ளம்

மெரினா கடற்கரை போல பெசண்ட் நகர் பீச்சில்(Besant Nagar Beach)அதிக கூட்டம் அதிக பரபரப்பு இருக்காது. நீங்கள் அமைதி விரும்பி என்றால் தாராளமாக இங்கே சென்று உங்கள் மாலைப்பொழுதை செலவு செய்யலாம். எங்க ஆபிஸ் முடியவே நைட் ஆகிடுது என அலுத்துக்கொண்டால் இரவிலும் கூட நீங்கள் செல்லலாம். இரவு 11 மணிவரை இந்த பீச்சில் மக்கள் நடமாட்டம் இருக்கும். அதற்கு மேல் உலாவினால் உங்கள் பாதுகாப்பை முன்னிட்டு போலீஸ் வந்து உங்களை திரும்பி போக சொல்லுவார்கள்.

மீன்-நண்டு(Fish-Crab)

இந்த கடற்கரையை ஒட்டி ஏராளமான மீன்(Fish),நண்டு(Crab) கடைகள் உள்ளன. எந்த கடைக்கு சென்றாலும் அங்கு சுடச்சுட மீனை உங்களுக்கு தேவையான பதத்தில் வறுத்துக் கொடுப்பார்கள். ஒரு பிளேட் இறால்(Prawn) 60 ரூபாய் இதேபோல ஒவ்வொரு வகைக்கும் ஒரு விலை உள்ளது. ஆங்காங்கே சேர் போட்டு மக்கள் அமர்ந்து கொண்டு நண்டு(Crab) , மீன்(Fish),இறாலை(Prawn) ஒரு பிடி பிடித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சின்ன பிளேட்டில் வறுத்த மீன்(Fish) அல்லது இறால்(Prawn) என நீங்கள் கேட்பதை கொண்டு வந்து தருவார்கள்.

வெங்காயம் 

வெங்காயம்,எலுமிச்சை என சுவையூட்டிகளும் தரப்படும். உங்களுக்கு விருப்பம் என்றால் அதனைப் பிழிந்து கொண்டு சாப்பிடலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். இதேபோல பெரிய மீன்களை நீங்கள் கேட்டாலும் வறுத்துக் கொடுப்பார்கள். கடற்கரை பக்கத்தில் இருப்பதால் பழைய மீனோ என்ற கவலை தேவையில்லை. அன்றாடம் பிரெஷ்ஷாக வாங்கி சமைத்துக் கொடுக்கின்றனர்.

பஜ்ஜி வகைகள்

இதேபோல பஜ்ஜி கடைகளும் உண்டு. வெங்காயம், உருளை, மிளகாய்,வாழைக்காய் என உங்களுக்கு விருப்பமான பஜ்ஜிகளை நீங்கள் சூடாக சாப்பிடலாம். பஜ்ஜி+சட்னி காம்பினேஷன் பிடிக்காதவர்களையும் சாப்பிடத் தூண்டும். பஜ்ஜி பிடிக்கவில்லை எனில் காஃலிபிளவர் வறுவல் சூடாக வாங்கி சாப்பிடலாம்.

புட்டு

இயற்கையான முறையில் நாட்டு சர்க்கரை கலந்த புட்டு இங்கே கிடைக்கும். ஒரு பிளேட் 50 ரூபாய், தாராளமாக இரண்டு பேர் சாப்பிடலாம் கேழ்வரகு புட்டு, அரிசி புட்டு என விதவிதமான புட்டுகள் கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான புட்டினை வாங்கி சுவைத்து சாப்பிடலாம்.

ஐஸ்கிரீம்

இதுதவிர ஐஸ்கிரீம் தொடங்கி சுண்டல்,மாங்காய்,குல்பி, ஐஸ்கோலா என கம்மி விலையில் ஏராளமான உணவு அயிட்டங்கள் கடற்கரையை சுற்றிலும் இருக்கும். உங்களுக்கு எது விருப்பமோ அதனை வாங்கி சுவைத்து மகிழலாம். நண்பர்களுடன் செல்லும் போது இன்னும் அந்த அனுபவம் உங்களுக்கு சிறப்பாக இருக்கக்கூடும். இதற்கு தேவையெல்லாம் பாக்கெட்டில் கொஞ்சம் பணமும் சென்று வரலாம் என நினைக்கக்கூடிய மனதும் தான்.

இத்தனை நாள் சென்னையில தான் இருக்கேன் இது தெரியாம போச்சேன்னு சொல்றீங்களா? ஒரு தடவ போய்ட்டு வாங்க. அப்புறம் அது கண்டிப்பா தொடர்கதையாகும். நோ முற்றுப்புள்ளி…

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle