உங்க முகம் சும்மா 'கண்ணாடி' மாதிரி பளபளக்கணுமா?.. இத 'மட்டும்' செய்ங்க!

உங்க முகம் சும்மா  'கண்ணாடி' மாதிரி பளபளக்கணுமா?.. இத 'மட்டும்' செய்ங்க!

'அகத்தின் அழகு முகத்தில்(Face) தெரியும்' என்பார்கள். ஆம் அது உண்மைதான். நமது உள்ளுறுப்புகளில் ஏதும் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது நமது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அதனை நமது முகமே காட்டிக் கொடுத்து விடும். இதனால் முகத்தின்(Face) அழகும் நமக்கு மிகவும் முக்கியமாகிறது. சில சமயங்களில் நமது சருமத்திற்கு சற்றும் பொருந்தாத பவுண்டேஷன் அல்லது கிரீம்கள் போன்றவற்றை அழகுக்காக பயன்படுத்தி அதனால் அவஸ்தைப்பட்ட தருணம் கண்டிப்பாக எல்லாருடைய வாழ்விலும் நடந்திருக்கும்.குறிப்பாக ஏதாவது விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தயாராகும் போதுதான் அடம்பிடித்து பியூட்டி பார்லர்
செல்வோம். அங்கு சென்று கணிசமான தொகையை செலவழித்து விட்டு வந்தாலும் கூட நமக்கு ஒரு மனத்திருப்தி ஏற்பட்டு விடாது. இவ்வளவு பணம் செலவு செஞ்சும் இப்படி ஆகிடுச்சே என அடுத்த விழாக்களுக்கு செல்லும் வரை புலம்பித் தள்ளிவிடுவோம்.


இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது நமது முகத்தை(Face) ஆரோக்கியமான முறையில் எப்படி அழகுபடுத்திக் கொள்வது? அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன? போன்றவற்றை மிகவும் எளிமையான முறையில் இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி யார் இந்த தேவதை? என பிறர் கண்படும்படி வலம்வர வாழ்த்துகள்.


கேரட்கண்களின் நண்பன் என புகழப்படும் கேரட்டை(Carrot) நீங்கள் நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு என பச்சையாக காலையில் சாப்பிடலாம். அல்லது ஜூஸாக செய்து குடிக்கலாம். ஒருவேளை நீங்கள் சாலட் பிரியராக இருந்தால் சாலடில் கேரட்டை(Carrot) துண்டுகளாக நறுக்கிப் போட்டு உண்ணலாம்.இது உங்கள் தோலை பளபளக்க(Glowing Skin) செய்யும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் தாராளமாக அடங்கியுள்ளன. நமது இளமையைத் தக்க வைப்பதில் கொலாஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட்(Carrot) சாப்பிடுவதால் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் நமது முகத்தில் கோடுகள், முகப்பரு மற்றும் கரும் புள்ளிகள் ஆகியவைகளை வராமல் தடுப்பதிலும் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது.


பீட்ரூட்ரத்தக்காய் என அழைக்கப்படும் பீட்ரூட்டில் ஏராளமான விட்டமின்களும், மினரல்களும் அடங்கியுள்ளன. இதனை ஜூஸாக தினசரி குடிக்கும்போது
உங்கள் ரத்தம் சுத்திகரிக்கப்படும் முகத்தில் பரு ஏற்படாமல் தடுக்கலாம். மூன்று முதல் ஐந்து வாரங்களுக்குள் உங்களுக்கு ரிசல்ட் தெரிய ஆரம்பிக்கும்.

மாதுளைஉங்களது முகம் குழந்தையின் முகம் போல ரொம்ப சாப்டாக இருக்க வேண்டுமா? அப்படியென்றால் உங்களுக்கு ஏற்ற சாய்ஸ் மாதுளை தான்
மாதுளையின் ஒவ்வொரு பாகத்திலும் ஏராளமான நியூட்ரியண்ட்ஸ் உள்ளன.இதில் ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் ஏராளமாக நிரம்பியுள்ளதால் உங்கள் முகத்தை தூய்மையாகவும் என்றும் இளமையாகவும் காட்டும். தினசரி மாதுளையை பழமாக உதிர்த்தோ அல்லது ஜூஸாகப் பிழிந்தோ சாப்பிட்டு வாருங்கள். அது உங்கள் இளமைக்கு(Glowing Skin) என்றென்றும் உறுதுணையாக விளங்கும்.


அவோகடாஅவோகடா பழத்தில் விட்டமின் ஈ மற்றும் பயோடின்கள் தாராளமாக அடங்கியுள்ளன. இது உங்கள் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவதுடன் உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பையும்(Glowing Skin) அளிக்கும். பழத்தை பாதியாக வெட்டி அதன் சதைப்பகுதியை ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டு வாருங்கள். உங்கள் முகம் விரைவிலேயே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயற்கையாக பளபளக்கும்.


தக்காளிநாம் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளியில் விட்டமின்களும் லைகொபீன் எனப்படும் ஆண்டி ஆக்சிடெண்ட்டும் தாராளமாக உள்ளது. இதனை தினசரி பச்சையாக உண்ணும்போது வயதாவதில் இருந்து நமது முகத்தை பாதுகாத்து உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பை அளிக்கிறது.முகத்தில் உள்ள துளைகளுக்கு இறுக்கத்தை அளிக்கிறது. இயற்கையிலேயே தக்காளியில் அமிலம் நிறைந்திருப்பதால் கரும்புள்ளி, முகப்பரு ஆகியவை வராமல் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.


ஸ்ட்ராபெர்ரிசிவப்பு நிறத்தில் குட்டி,குட்டியாக பெட்டிக்குள் இருக்கும் ஸ்ட்ராபெர்ரி குட்டியாக இருந்தாலும் பல விஷயத்தில் கெட்டியாக விளங்குகிறது. இதை
அவ்வப்போது உண்டு வந்தால் உங்கள் தோலின் நிறம் அதிகரிப்பதோடு (Glowing Skin) முகத்தில் ஏற்படும் வரிகள் மற்றும் முகச்சுருக்கங்களுக்கும் 'தடா' விதித்து விடும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதில் அதிகமாக இருப்பதால் டல்லாக இருக்கும் சருமத்தையும் மிளிரச்செய்திடும்.

பாதாம் பருப்புபாதாம் பருப்பில் ஏராளமான விட்டமின் ஈ உள்ளது. இது உங்கள் தோல் மற்றும் முடிக்கு ஏராளமான சத்துக்களை அளிக்க வல்லது. உருவத்தில்
சிறிதாக இருந்தாலும் இதில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. பாதாம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, ரோஸ்ட் செய்து
இல்லை சாலடில் சேர்த்து என எப்படி உண்டாலும் பாதாம் உங்களுக்கு பயன்களை அளித்திடும். பாதாமில் விட்டமின் ஈ உள்ளதால் வறண்ட நாட்களில் உங்கள் சருமத்தை ஈர்ப்பதத்துடனும், இளமையுடனும் வைத்திருக்கும்.


உங்க முகம் சும்மா 'கண்ணாடி' மாதிரி பளபளக்கணுமா?.. மேலே சொன்ன டிப்ஸ் எல்லாத்தையும் தொடர்ந்து பாலோ பண்ணுங்க.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.