logo
ADVERTISEMENT
home / Home & Garden
எந்த செலவையும் ‘கம்மி’ பண்ணாமலே.. உங்க பணத்த ‘மிச்சம்’ பிடிக்கலாம்!

எந்த செலவையும் ‘கம்மி’ பண்ணாமலே.. உங்க பணத்த ‘மிச்சம்’ பிடிக்கலாம்!

‘எவ்வளவு சம்பாதிச்சாலும் பத்த மாட்டேங்குது’ என புலம்பாத நபர்கள் இந்த பூமியில் குறைவுதான்(ஒருசிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்).
சம்பளம் வாங்கியதும் வீட்டு வாடகை, கரண்ட் பில், மளிகை சாமான், ஸ்கூல் பீஸ், பால்,பெட்ரோல், தண்ணீர், காய்கறி,மருத்துவ செலவு என
அத்தியாவசியமான செலவுகள் போக சேமிப்பு என பார்த்தால் கையில் சில்லறை(Money) காசு கூட மிஞ்சாது. மறுபடியும் எப்படா அடுத்த 1-ம் தேதி வரும் என பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருப்போம். அதுவும் பெருநகரங்களில் வாழ்பவர்களின் வாழ்வை கேட்கவே வேண்டாம்.
கறிவேப்பிலை,கொத்தமல்லி கூட காசு கொடுத்து தான் வாங்க வேண்டியிருக்கும்.

மாசம் புல்லா தூக்கம் முழிச்சி வேலை பார்த்தாலும் கையில ஒண்ணும் மிஞ்ச மாட்டுது, வீட்ல ரெண்டு பேரும் வேலைக்கு போறோம் ஆனா மிச்சம்
எதுவும் புடிக்க முடில. புள்ளைங்க வளர்ந்துட்டாங்க இனி காலேஜ் சேக்கறதுக்கு பணம் என்ன பண்றது தெரில? இதுபோன்ற வார்த்தைகளை கேட்காமல் யாரும் கடந்து வந்திருக்க முடியாது. கேட்பது என்ன நானே அப்படித்தானே இருக்கேன் என நொந்து கொள்கிறீர்களா? அப்போ இது உங்களுக்குதான்.எந்த செலவையும் கம்மி பண்ணாம முடிஞ்சவரைக்கும் பணத்தை எப்படி சேக்கறது? எந்தெந்த வழில பணத்தை மிச்சப்படுத்தலாம்னு? இங்கே பார்க்கலாம்.

இதையெல்லாம் படிச்சிட்டு ஆமா இதெல்லாம் நடக்குற விஷயமா? என அப்படியே வடிவேலு போல ‘ஜஸ்ட் லைக் தட்’ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது. நம்மளால கண்டிப்பா முடியும் என உறுதி எடுத்துக்கொண்டு (ஒரு உத்வேகத்துக்கு) முயன்று பார்க்கவும்.இதனை அப்படியே பின்பற்றாவிட்டாலும் தேவைப்படும் சமயங்களில் அப்படியே சாரல் மாதிரி ஒவ்வொண்ணா செஞ்சு பாத்தீங்கண்ணா என்ன ஒரு சிக்கனம்? என ஊரே சேர்ந்து உங்களைப் பாராட்டவும் கூடும். ஊர்லாம் பாராட்ட வேணாமா? உங்க வீட்லயே உங்களை பாராட்டுவாங்க சரியா? ஓகே. இப்போ டைம் வேஸ்ட் பண்ணாம எல்லாத்தையும் படிங்க பிரெண்ட்ஸ்.

ADVERTISEMENT

சமையல்-சாப்பாடு(Food)

நீங்க நல்லா சமைக்கிறவரா இருக்கலாம்.அதுக்காக எப்போ பார்த்தாலும் சமையல் அறையே கதின்னு கெடக்காதீங்க. இதுல ரெண்டு விஷயம் இருக்கு. ஒண்ணு திட்டம் போட்டு சமைச்சா நேரம் மிச்சமாகும். அதோட கேஸ் செலவு, எண்ணெய், காய்கறின்னு எல்லாமே மிச்சம் தான். ஒருநாளைக்கு ரெண்டு டைமுக்கு மேல சமைக்காதீங்க. காலை+மதிய உணவு(Food) காலைலயே சேர்த்து சமைச்சிடுங்க. இரவு உணவு(Food) மாலை இல்லேனா நைட்ல செய்யுங்க.

உணவு வாங்காதீங்க

ADVERTISEMENT

வேலைக்கு போறவரா இருந்தா மதிய உணவு காசு(Money) கொடுத்து வெளில வாங்காதீங்க. இதுலயும் ரெண்டு நல்ல விஷயம் இருக்கு. வீட்ல இருந்து நீங்க எடுத்துட்டு போற சாப்பாடு உங்க உடல்நலத்துக்கு நல்லது. அதே நேரம் காசு(Money) குடுத்து நீங்க வெளில வாங்கி சாப்புடுற சாப்பாடு சுகாதாரமா இருக்குமா? அப்படிங்கிறது கேள்விக்குறிதான்.

ஆர்டர் பண்ணாதீங்க

ADVERTISEMENT

ஸ்விக்கி, உபேர் ஈட்ஸ், சொமாட்டோ என எக்கசக்கமான புட்(Food) ஆர்டர் ஆப்கள் இருக்கின்றன. இருந்த இடத்தில் இருந்தே ஆர்டர் செய்து
சாப்பிடலாம். அவ்வப்போது ஆபரும் கிடைக்கும். ஆனால் அந்த உணவு சுகாதாரமாக இருக்குமா? என்பது கேள்விக்குறி தான். பிரியாணியில் சேர்க்கும் ஆட்டுக்கறி ட்ரெயினில் அவ்வப்போது பிடிபடுகிறது. சுகாதாரத்துறை அதனை சீல் வைத்து விடுகிறது. ஆனால் அதுகுறித்த முழு உண்மைகளும் வெளியில் வருவதில்லை. இதில் பெரிய ஹோட்டல்களின் பெயர்களும் அடிபட்டன. எனவே தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஹோட்டல் சென்றோ அல்லது ஆர்டர் செய்தோ சாப்பிடுங்கள். ஆனால் அடிக்கடி அதனை பயன்படுத்த ஆரம்பித்தால் அதற்கு ‘அடிக்ட்’ ஆகிவிடுவீர்கள். என்னதான் ஆபர் கிடைத்தாலும் உங்கள் பணம்(Money) கணிசமாக செலவாகக் கூடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மொபைல்(Mobile) மாற்றுவது

இந்த மொபைல்(Mobile) மாற்றும் வியாதி அனைவரிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. மத்தவங்க வச்சு இருக்காங்க, புது மொபைல் (Mobile) வந்துருக்கு, ஆபர் போட்டு இருக்காங்கனு மொபைல் (Mobile) அடிக்கடி மாத்தாதீங்க. ஒரு மொபைலை குறைந்தது மூன்று,நான்கு வருடமாவது பயன்படுத்துங்கள். புதிது புதிதாக மொபைல் (Mobile) மாற்றுவது உங்களுக்கு உற்சாகமாக இருக்கலாம் ஆனால் உங்கள் பர்ஸுக்கு அது ஆரோக்கியமானது அல்ல என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

கேன் தண்ணீர்

நீங்கள் கேன் தண்ணீர் பயன்படுத்துபவராக இருந்தால் ஒரு வாரத்துக்கு 3 கேன் என வைத்துக்கொண்டால் கூட மாசத்துக்கு 12 கேன்கள் ஆகின்றன.
ஒரு கேன் 30 ரூபாய் என வைத்துக்கொண்டாலும், வருடத்துக்கு 4320 ரூபாய் நீங்கள் தண்ணீருக்காகவே செலவு செய்யக்கூடும். இதற்கு பதில்
ஒருமுறை அக்வாகார்டு வாங்கி விட்டால் உங்களுக்கு பணமும்(Money) மிச்சமாகும். 2-வது கேன் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்ற கவலையும்
வேண்டாம்.

சினிமா

ADVERTISEMENT

தற்போதைய சூழ்நிலையில் தியேட்டர் சென்று ஒரு படத்தை பார்ப்பதற்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது பணம்(Money)செலவாகும். பார்க்கிங்
கட்டணம், பாப்கார்ன், டிக்கெட் செலவு என அதுவே ஒரு தொகை ஆகிவிடும். நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால் அது இரண்டாயிரம் வரையில் நீளக்கூடும். அதற்கு பதிலாக ஒரு ஹோம் தியேட்டர் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிலேயே பார்க்கலாம். இல்லை என்றால் அப்படத்தின் டிவிடி வரும்வரை காத்திருந்து குடும்பத்துடன் சேர்ந்து வீட்டிலேயே அப்படத்தை பார்க்கலாம்.(இப்போதெல்லாம் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே டிவியில் அப்படத்தை ஒளிபரப்பி விடுகின்றனர்) இதனால் நேரம், பெட்ரோல் செலவு, டிக்கெட் செலவு, பார்க்கிங் கட்டணம் என அனைத்தும் உங்களுக்கு மிச்சமாகும்.

போக்குவரத்து

ADVERTISEMENT

கார்,பைக் என உங்கள் சொந்த வண்டிகளை விட்டுவிட்டு பஸ்,ட்ரெயின் என பொது போக்குவரத்தில் பயணம் செய்யுங்கள். பெட்ரோல் செலவுடன்
ஏராளமான பணமும்(Money) உங்களுக்கு மிச்சமாகும். குடும்பத்துடன் எங்காவது பக்கத்தில் செல்ல வேண்டும் என்றால் ஓலா, உபேர் போன்ற
வாகனங்களை பயன்படுத்துங்கள் இதனால் பார்க்கிங் செலவு உங்களுக்கு மிச்சமாகும்.(பெரு நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கு 30 ரூபாய் என
வைத்துக்கொண்டால் பார்க்கிங்கில் எவ்வளவு செலவாகும் என மனதில் கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்)

சிறிய நகரத்தில்

நீங்கள் பெருநகரங்களில் வேலை செய்பவராக இருந்தால் உங்கள் வசிப்பிடத்தை அருகில் இருக்கும் சிறு நகரங்களுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
ஏனெனில் அங்கே காய்கறி தொடங்கி அனைத்தும் விலை கம்மியாக இருக்கும். இதனால் வாடகையிலும் பெரும்பாலான பணம் உங்களுக்கு
மிச்சப்படும்.

ADVERTISEMENT

மேலே சொன்ன டிப்ஸ் பாலோ பண்ணீங்கனா எந்த செலவையும் ‘கம்மி’ பண்ணாமலே.. உங்க பணத்த ‘மிச்சம்’ பிடிக்கலாம்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

31 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT