தன்னுடைய நீண்டகால பேச்சுலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கிறார் நடிகர் ஆர்யா(Arya). இன்று காலை (10.3.2018) ஆர்யா(Arya)-சாயிஷா(Sayyeshaa) இருவரும் இரண்டு குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதுகுறித்த முழுவிவரங்களை இங்கே பார்க்கலாம்.
அறிந்தும் அறியாமலும்
தமிழ்த்திரையுலகில் அறிந்தும் அறியாமலும் படம் வழியாக எண்ட்ரி கொடுத்த ஆர்யா(Arya) கோலிவுட்டின் மோஸ்ட் பேச்சுலர் ஹீரோ என்ற பட்டத்தை தொடர்ந்து பல வருடங்களாக தக்க வைத்துக் கொண்டிருந்தார். இவரைப் போலவே இவரது நண்பன் விஷாலும் பேச்சுலர் ஹீரோ அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருந்தார்.
விஷால்
இந்த வருட தொடக்கத்தில் நடிகர் விஷால் அனிஷாவை மணந்து கொள்ளப்போவதாக அறிவித்து தனது பேச்சுலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் அனைவரின் கவனமும் ஆர்யாவின் பக்கம் திரும்பியது. இந்தநிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆர்யா(Arya)-சாயிஷா(Sayyeshaa) இருவரும் காதலிக்கிறார்கள் இருவீட்டார் சம்மதத்துடன் மார்ச் 10-ம் தேதி திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. இது உண்மையிலேயே நடக்குமா? இல்லை வெறும் வதந்தி தானா? என ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வழக்கம் போல பதட்டத்துடன் காத்திருந்தனர்.
காதலர் தினம்
ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக இந்த வருட காதலர் தினத்தன்று நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என நடிகர் ஆர்யா(Arya)-சாயிஷா(Sayyeshaa) இருவரும் கூட்டாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தனர். அதில், ”எங்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் வரும் மார்ச்சில் நாங்கள் திருமணம் செய்துகொள்ளவுள்ளோம். இதை அறிவிக்க மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. எங்கள் புது வாழ்வைத் தொடங்க உங்களின் ஆசீர்வாதங்களும் தேவை,” என இருவரும் தெரிவித்து இருந்தனர்.
பாராட்டு மழை
இருவரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏராளமான திரையுலக பிரபலங்கள் இவர்களைப் பாராட்டி மகிழ்ந்தனர். ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு இந்த ஜோடியை வாழ்த்தி மகிழ்ந்தனர். எனினும் ஒருசிலர் இவர்களின் அதிக வயது வித்தியாசத்தை சுட்டிக்காட்டிடவும் தவறவில்லை( ஆர்யாவை விட சாயிஷா 17 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது) எனினும் காதலுக்கு கண்கள் மட்டுமல்ல வயதும் முக்கியமில்லை என்பதை இந்த ஜோடி தற்போது திருமண பந்தத்தில் நுழைந்து நிரூபித்துள்ளது.
வரவேற்பு
நேற்று மாலை ஹைதராபாத்தில் ஆர்யா(Arya)-சாயிஷா(Sayyeshaa) இருவரின் திருமண வரவேற்பு மற்றும் சங்கீத் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆர்யா, சாயிஷா இருவரும் சேர்ந்தாற்போல வெளிர்வண்ண உடையணிந்து ஜொலித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர். பாட்டு, டான்ஸ் என அந்த இடமே களைகட்டியது.
திருமணம்
வரவேற்பைத் தொடர்ந்து இன்று காலை ஆர்யா-சாயிஷா இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொண்டு தங்களது இல்வாழ்க்கையில் நுழைந்துள்ளனர். ஆர்யா கருநீல கலரில் உடையணிந்து கழுத்தில் மாலையுடன் நிற்க அவருக்குப் பக்கத்தில் சாயிஷா சிவப்பு நிற சேலை அணிந்து நிற்பது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கல்யாணம் என்றாலும் கூலிங்கிளாஸ் அணிய ஆர்யா மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குதிரைவண்டி
இருவரும் இன்னும் தங்கள் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடவில்லை. எனினும் ஆர்யா குதிரை வண்டியில் தங்கநிற உடையணிந்து இறங்கி வருவது போல ஒரு புகைப்படம் மற்றும் ஆர்யா-சாயிஷா இருவரும் அருகருகே அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம், முன்னதாக திருமண வரவேற்பை ஒட்டி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவை இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சாயிஷா
இதேபோல தனது திருமணத்தில் சாயிஷா உற்சாகமாக நடனம் ஆடுவது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ஹிட்டடித்து வருகிறது. சாயிஷா ஒரு மிகச்சிறந்த நடனக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்குப் பின் சாயிஷா தொடர்ந்து நடிப்பாரா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் ஆர்யாவின் திருமணப்பரிசாக அவர் நடிப்பில் உருவாகவிருக்கும் டெடி படம் குறித்த அறிவிப்பினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆர்யா-சாயிஷா இருவரும் இன்றுபோல என்றும் மகிழ்ச்சியுடன் வாழ POPxo மனதார வாழ்த்துகிறது!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Celebrity Weddings
தாலி இல்லை நகைகள் இல்லை.. பாட்டியின் புடவையில் வைஷ்ணவி நடத்திய வாவ் திருமணம் !
Deepa Lakshmi