ஆமாம். நாங்கள் காதலிப்பது உண்மைதான்.. ஆர்யா-சாயிஷா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆமாம். நாங்கள் காதலிப்பது உண்மைதான்..  ஆர்யா-சாயிஷா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோலிவுட்டின் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் ஆக சுற்றிக்கொண்டு இருந்த ஆர்யா(Arya) தன்னைவிட 17 வயது சிறியவரான சாயிஷாவை காதலிக்கிறார் என கடந்த சில வாரங்களாக பரபரப்பு நிலவி வந்தது. வழக்கம்போல இது உண்மையாக இருக்காது என ஒரு குரூப் பெட் கட்டிக்கொண்டு திரிய மற்றொரு குரூப்போ ஆர்யாவும்(Arya) காதலில் விழுந்து விட்டார் என சூடம் ஏத்தி சத்தியம் செய்யாத குறையாக சொல்லித்திரிந்தனர்.இருவரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், மார்ச் 10-ம் தேதி ஹைதராபாத்தில் ஆர்யா(Arya)-சாயிஷா(Sayyeshaa) திருமணம் நடைபெறும் எனவும் தொடர்ந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தாங்கள் காதலிப்பது உண்மைதான் என நடிகை சாயிஷா(Sayyeshaa) தனது ட்விட்டர் பக்கத்தில் காதலர் தினமான (Valentines Day) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.


ஆர்யா(Arya)கடந்த 2005-ம் ஆண்டு 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் வழியாக கோலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் ஆர்யா(Arya). அறிமுகப்படம் உள்ளம் கேட்குமே என்றாலும் அப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் அறிந்தும் அறியாமலும் ஆர்யாவின் அறிமுகப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து ஒரு கல்லூரியின் கதை, பட்டியல், கலாபக்காதலன், நான் கடவுள், மதராசப்பட்டணம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.


பூஜா-அனுஷ்காஆரம்பத்தில் பூஜா-ஆர்யா இருவருக்கும் காதல் என கிசுகிசு எழுந்தது. அதனை உறுதி செய்வதுபோல உள்ளம் கேட்குமே, ஓரம்போ, நான்
கடவுள்,பட்டியல் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். எனினும் இந்த காதல் கரைசேரவில்லை. தொடர்ந்து இரண்டாம் உலகம் படத்தில் நடித்தபோது அனுஷ்கா-ஆர்யா இருவருக்கும் இடையில் காதல் எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.இஞ்சி இடுப்பழகி படத்திலும் இந்த ஜோடி சேர்ந்து நடித்தது. வழக்கம்போல இந்த காதலும் பெரிய பாதிப்பை எற்படுத்தாமலே பிரிந்தது.


நிலா சோப்ராஎனினும் நிஜத்திலும் ஆர்யாவுக்கு ஒரு காதல் எழுந்தது. ஆர்யாவும், அன்பே ஆருயிரே பட நாயகியுமான நிலா சோப்ராவும் காதலித்து பின்னர் பிரிந்து
விட்டனர். எதனால் இருவரும் பிரிந்தார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் இந்த காதல் தோல்வியில் முடிந்தது நிஜம்.
அதற்குப்பின் கோலிவுட்டின் பிளேபாய் ஆக வலம்வர ஆரம்பித்தார் ஆர்யா.


கிசுகிசு நாயகன்சினிமாவுலகில் பிளேபாய்,ரோமியோ என சகட்டுமேனிக்கு கிசுகிசுக்கள் எழுந்தாலும் அவற்றை எல்லாம் ஏதோ தனக்கு ஆஸ்கர் கொடுத்த ரேஞ்சிலேயே டீல் செய்வார் ஆர்யா. எந்த நடிகையுடன் இணைத்து கிசுகிசு எழுந்தாலும் அதனை 'ஜஸ்ட் லைக் தட்' ஆக டீல் செய்வதில் ஆர்யாவுக்கு நிகர் ஆர்யாவே. கடந்த ஆண்டு வரை நண்பன் விஷாலுடன் இணைந்து சிங்கிள் தான் கெத்து என சுற்றிக்கொண்டு இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் விஷால் இனி சிங்கிள் இல்லை என அறிவிக்க, ஆர்யா தனியாகவே சுற்றிக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார்.


எங்க வீட்டு மாப்பிள்ளைஇவருக்கு ஒரு கல்யாணம் பண்ணியே தீரணும் என தனியார் தொலைக்காட்சி ஒன்று கடந்த வருடம் களத்தில் இறங்கி எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியின் வழியாக அவருக்குப் பெண் தேடியது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். இறுதி போட்டிக்கு 3 பெண்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், யாரையும் திருமணம் செய்யாமல் விலகி விட்டார். ஒருவரை மணந்தால் மற்ற இருபெண்கள் மனது புண்படும் என்று மொக்கையாக அதற்கு ஒரு காரணமும் சொன்னார்.


கோலிவுட் சல்மான்கான்அமரகாவியம் படத்தின் வழியாக அறிமுகமான ஆர்யாவின் தம்பி சத்யா கடந்த வருடம் தான் காதலித்த பெண்ணை மணந்துகொள்ள அதற்கும் சென்று உற்சாகமாக போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார் ஆர்யா. இந்த நடவடிக்கைகளை பார்த்து இவர் கோலிவுட்டின் சல்மான்கானாக உருவெடுப்பார் என அனைவரும் ஆர்யா பற்றி நினைத்துக்கொண்டு இருந்தனர்.


சாயிஷா(Sayyeshaa)இந்தநிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தபோது ஆர்யா(Arya)-சாயிஷா(Sayyeshaa) இருவருக்கும் நிஜமாக கெமிஸ்ட்ரி வொர்க் ஆனது. தொடர்ந்து காப்பான் படத்தில் நடித்தபோது ஹீரோ சூர்யா அமைதியாக இருக்க ஆர்யாவுடன் ஊர் சுற்றி
பொழுதைக்கழித்துள்ளார் சாயிஷா(Sayyeshaa). அப்போது ஆர்யாவின் அக்கறை, கேரக்டர் எல்லாம் பிடித்துப்போய் விட கடைசியில் இரு வீட்டாருக்கும் முறைப்படி சொல்லி அனுமதி வாங்கிவிட்டனர். ஆர்யாவை விட 17 வயது சிறியவராக இருந்தாலும் சாயிஷா காதலுக்கு அவர்கள் வீட்டில் பச்சைக்கொடி காட்டியதுதான் இதில் ஹைலைட்.


காதலர் தினம்(Valentines Day)ஆர்யா-சாயிஷா இருவரும் தங்கள் காதலை முறைப்படி அறிவிக்கவில்லை எனவே இதுவும் வதந்திதான் என அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்க
காதலர் தினமான(Valentines Day) இன்று தங்கள் காதலை ஊர்-உலகத்துக்கு முறைப்படி அறிவித்து இருக்கிறார் சாயிஷா. இதுகுறித்து அவர் தனது
ட்விட்டர் பக்கத்தில், ''எங்கள் இருவீட்டாரின் ஆசிர்வாதத்துடன் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருக்கிறோம். உங்கள்
அனைவரின் அன்பு, ஆசிர்வாதம் எங்கள் புதிய வாழ்க்கைக்கு வேண்டும்,'' என தெரிவித்து இருக்கிறார். இதேபோல நடிகர் ஆர்யாவும் தனது ட்விட்டர்
பக்கத்தில் முறைப்படி தெரிவித்திருக்கிறார்.


அநேகமாக கோலிவுட்டின் ஷார்ட் அண்ட் க்யூட் லவ் ஸ்டோரி இதுவாகத்தான் இருக்கும். வாழ்த்துகள் ஆர்யா-சாயிஷா..


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.