Beauty

அடர்த்தியான புருவங்களை விரைவில் பெற 8 சிறந்த வழிகள்!

Nithya Lakshmi  |  Oct 30, 2019
அடர்த்தியான புருவங்களை விரைவில் பெற 8 சிறந்த வழிகள்!

அழகான புருவங்கள் ஒருவரது முகத்தை உயர்த்திக் காட்டும். புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் உங்களை இளமையாக காண்பிக்கும்! புருவங்களில் உள்ள கூந்தல் வளர எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கிறது. சரி, உங்கள் புருவத்தை எளிதில் அடர்த்தியாக (eyebrows growth tips) மாற்ற 8 சிறந்த வழிகளை பார்ப்போம். 

அடர்த்தியான புருவங்களை பெற 8 சிறந்த இயற்கை முறைகள்

1 கற்றாழை (Aloe vera for eyebrows)

சருமத்திற்கும், கூந்தலுக்கும் என்ன பயன்படுத்துவது என்றால் முதலில் வரும் பொருள் கற்றாழைதான். எல்லோருக்கும் தெரிந்த பொருள்தான். ஆனால், எளிதில் கிடைப்பதால் பயன்படுத்த மாட்டீர்கள். இதில், அலோனின் என்ற சத்து புருவம் வளர உதவும். முடி உடையாமல் இருக்க, கெரட்டின் போன்ற சத்து இதில் இருக்கிறது. சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோளை சீவி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் புருவத்தில் தடவினால் போதும். வேறு இந்தப் பொருளையும்விட இது எளிமையானது, நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியது.

2. வெந்தயம் (Fenugreek for eyebrows)

Shutterstock

வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை புருவங்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.

இது புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தரும்.இதில் நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் ஆகியவை இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் வளர மிகவும் உதவும்.

3. விளக்கெண்ணெய்(castor oil for eyebrows )

இது ஒரு பழங்காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் மிகவும் பயனுள்ள பொருள். விரல் நுனிகளால் தடவி, மசாஜ் செய்து ஒரு மணிநேரம் வைத்திருந்து துடைத்துவிடலாம். தினமும் பயன்படுத்தினால், அடர்த்தியான, கருமையான புருவங்கள் வளரும். விளக்கெண்ணெயில், புரதச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் புருவத்தின் வேருக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது. 

4. ஆலிவ் எண்ணெய் (olive oil for eyebrows)

Shutterstock

ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து இருப்பதால், உங்கள் புருவங்கள் நன்றாக வளர உதவும். வெது வெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை புருவங்களுக்கு தினமும் தடவி வாருங்கள். 

5. முட்டை மஞ்சள் கரு (egg yolk for eyebrows)

முட்டையின் மஞ்சள் கருவில் புரதச்சத்து மற்றும் பயோடின் என்னும் சத்து அதிகம் இருப்பதால், புருவம் வளர மிகவும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தூரிகையின் உதவியுடன் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும் . இது உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், கூந்தல் உதிர்வதற்கான வாய்ப்புகளையும் குறைகிறது. 

6. ஜோஜோபா எண்ணெய் (jojoba oil for eyebrows)

Shutterstock

ஜோஜோபா எண்ணெய் புருவம் வளருவதற்கு ஏதாவது அடைப்பு இருந்தால் அதை நீக்கிவிடும். அதனால் முடி வேகமாக வளரும். இந்த எண்ணெய்யையும் தூங்கும்போது பயன்படுத்தலாம். 

7. வெங்காயச்சாறு (onion juice for eyebrows)

வெங்காயத்தில், சல்பர், செலினியம், மினெரல்ஸ், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளதால் புருவம் நன்றாக வளரும். மயிர்கால்களை நன்றாக உறுதியாக்குகிறது. வெங்காயத்தை தோள் உரித்து, ஜூஸ் செய்து, அதை தடவினால் போதும். வெங்காயம் ஒரு வாசனை கொடுக்கும் என்பதால், சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.

8. தேங்காய் எண்ணெய் (coconut oil for eyebrows)

Pixabay

மேல் கூறிய (டிப்ஸ்) எதுவும் இல்லையென்றால் வெறும் தேங்காய் எண்ணையே போதுமானது! இது தண்ணீரைப்போல இருப்பதால், பெரும்பாலும் உதாசீனப் படுத்துகிறோம். ஆனால் தேங்காய் எண்ணெய் கண்டிஷனர் போல வேலை செய்யும். இயற்கையான புரதச்சத்து முடி உடைவதை தவிர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள லாரிக் அமிலம், ஆன்டி-மைக்ரோபையல் தன்மை கொண்டதால், முடிக்காலில் இன்பெக்ஷன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். வாரத்தின் சில நாட்கள் பயன்படுத்தினாலே நல்ல பிரதிபலன் கிடைக்கும். இரவு தூங்கும்முன் புருவங்களில் தடவிக்கொண்டு தூங்கலாம்.

 

அடர் தடிமனான புருவங்களை பெற (how to grow stronger thicker eyebrows)

Shutterstock

அடர்த்தியான புருவங்களை பெற நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் :

  1. அதிகப்படியான மேக்கப் போடுவதை தவிர்க்கவும். இது புருவம் வளருவதை குறைக்கும்.
  2. புருவ முடியை சீவி விடுங்கள். இது புருவ முடியின் பகுதியில் நல்ல ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். 
  3. வேக்சிங் மற்றும் ப்ளக்கிங்(waxing, plucking) முடிந்தவரை தவிருங்கள். அது புருவ முடியின் வேர்களை பாதிக்கும். தேவைக்கேற்ப முக்கிய நாட்களில் மட்டும் செய்துகொள்ளவும். 
  4. தினமும், புருவத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதுவும் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  5. கிரீம், லோஷன் போன்ற ரசாயனங்களை தவிருங்கள். புருவம் வளருவதை இது பாதிக்கும்.
  6. பயோட்டின் என்ற வைட்டமின் புருவம் வளர ஏதுவான சத்து. 
  7. எப்போதும் சொல்லும்குறிப்புதான் – போதிய அளவு தண்ணீர் குடித்து உங்களை நீரோட்டமாக வைத்திருக்க வேண்டும்.
  8. உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். வைட்டமின் பி மற்றும் டி உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள், அவை உங்கள் கூந்தல் வளர்வதற்கு உதவும் சத்துக்கள். 

உங்கள் புருவம் கருமையாகவும் தடிமனாகவும் வளரும் வரை, வெளியில் செல்லும்போது இந்த தந்திரங்களை பின்பற்றுங்கள்!  

 

மேலும் படிக்க – கெட் தி லுக் – ஐஸ்வர்யாவின் டஸ்கி ஸ்கின் குறைபாடற்ற தோற்றத்தை பெறுவதற்கான 12 படிகள் ! மேலும் படிக்க – ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது? படிப்படியான விளக்கங்கள் உடன் சில உத்திகள்

பட ஆதாரம்  – Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

Read More From Beauty