Self Help

வாழ்க்கையில் ஒரு உத்வேகம் இல்லையா? உங்களை எப்போதும் ஊக்குவிக்க 32 சுவாரசியமான மேற்கோள்கள் !

Nithya Lakshmi  |  May 24, 2019
வாழ்க்கையில் ஒரு உத்வேகம் இல்லையா? உங்களை எப்போதும் ஊக்குவிக்க 32 சுவாரசியமான மேற்கோள்கள் !

வாழ்க்கையில் பல தருணங்களில் குழப்பத்தில், தெளிவு இல்லாமல், நம் சிந்தனைகளில் திணறி தொலைந்து விடலாம். இதுபோன்ற சமயங்களில் ,உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொள்ள , முன்னோக்கி செல்ல ,உங்களுக்கு உத்வேகம் அளிக்கும் சில மேற்கோள்கள் (inspirational quotes) இங்கு  உள்ளது.

1. ” புதிதாக ஒரு விஷயத்தை செயும்போது நிச்சயம் தவறுகள் நடக்கும், அதை ஏற்றுக்கொண்டு, நமது மற்ற புதிய விஷயங்களை மெருகேற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்” – ஸ்டீவ் ஜாப்ஸ் , ஆப்பிள் .

2. ” பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்யவேண்டிய வேலை தட்டிக்கொடுப்பது மட்டும்தான் ” – விவேகானந்தர்.

3. ” குணம், பொறுப்பு, தன்னம்பிக்கை, மரியாதை தைரியம் இருந்தால் போதும். படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒரு மனிதனால் வெற்றி பெற முடியும்” – ஷிவ் கேரா

4. ” வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது. நாம்தான் நடந்து நடந்து பாதை போட வேண்டும்” – டிஸ்ரேலி

5. “தவறு செய்பவர்களை மன்னித்து விடு ஆனால் அவர்களைத் திரும்ப நம்பும் அளவிற்கு முட்டாளாக இருக்காதே” – புத்தர்.

6. ” பகை, கோபம் ஆகியவற்றை யார்மீதும் திணிக்காதீர்கள். அது வட்டியும் முதலுமாக உங்களிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்” – விவேகானந்தர் 

7. ” வன்முறை என்பது மோசமானது ஆனால் அடிமைத்தனம் வன்முறையைக் காட்டிலும் மோசமானதும்” – சுபாஷ் சந்திர போஸ்

8. ” கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை” – புத்தர்

9. ” உன் கடமையை செய்தால் யாருக்கும் தலை வணங்க தேவையில்லை. உன் கடமையை செய்யத் தவறினால் எல்லோருக்கும் தலை வணங்க வேண்டும்” – அப்துல் கலாம்

10. ” ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு . காரணமின்றி விளைவில்லை .இவை இரண்டும் இணைந்து செல்கின்றன. நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது” – புத்தர்

தமிழில் தந்தையர் தின பரிசு ஆலோசனைகளையும் படியுங்கள்

11. ” ஒளிமயமான மலர்கள் இருளான வேர்களிலிருந்து தான் மலர்கின்றன ” – ஓஷோ

12. ” நல்ல தொடக்கம் பாதி வேலை முடிந்ததற்கு சமம்” – ஹோரஸ்

13. ” நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும், நீ நீயாக இரு” – அப்துல் கலாம்

14. ” உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்த கூடாது ” – சார்லி சாப்ளின்

15. ” தெரியாது என்பதை தைரியமாக ஒப்புக் கொள்ளுங்கள் அதேநேரம் தெரியாததை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்” – அப்துல் கலாம்

Also Read : ஆண்களுக்கான ஆபரணங்கள்

16. ” அதிகாலையில் நீ நினைக்கும் நேரத்தில் எழுந்து விட்டாள் தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கிக் கொள்ளும் “- அப்துல் கலாம் 

17. ” நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன ஆனால் அனுபவமோ தவறான முடிவில் இருந்து தான் கிடைக்கிறது” – பில்கேட்ஸ் 

18. “ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே” – அப்துல் கலாம்

19. ” பிறக்கும் போது உன்னோடு இல்லாத உன் பெயர் நீ இறக்கும் பொழுது உன்னோடு தான் இருக்கும். அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு” – ஹிட்லர்

20. “எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் இருந்தால் அதில் ஆறு மணி நேரம் கோடாரியை பெருமைப்படுத்துவேன்” – ஆபிரகாம் லிங்கன்

21. ” அறிவு மிக்கவனாக ஒருபோதும் ஆகிவிடாதே எப்போதுமே கற்றுக் கொண்டே இருக்கின்ற செயல்பாட்டில் இரு .அறிவுஜீவித்தனம் மக்களை மனநோயாளிகளாக ஆக்கிவிடுகிறது. கற்றுக் கொள்கின்ற திறன் படைத்த ஒரு மனிதன் ஒருபோதும் மனநோயாளியாக ஆகமாட்டான் ” – ஓஷோ

 

22. ” அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம் குணம்தான் மரியாதையைப் பெற்றுத் தரும் ” – ப்ரூஸ்லி

23. “தேடு கண்டுபிடி, பல தவறுகள் நிகழும், ஆனாலும் வேறு வழி இல்லை. பயிற்சியும் தவறுகளும்தான் வழி . மெல்ல மெல்ல தவறுகள் குறையும், மேலும் மேலும் தெளிவு பிறக்கும். இடையில் நிறுத்தி விடாதே! ” – ஓஷோ

மேலும் படிக்க – கேர்ள் பாஸ் (Girl Boss) : உங்களுக்கு யாரும் தெரிவிக்காத ஐந்து ‘கேர்ள் பாஸ்’ விஷயங்கள்

24. ” தோல்வி இல்லாத வாழ்வால் பயனும் உண்டாகாது. வாழ்வின் சுவையை போராட்டத்தில் தான் இருக்கிறது ” – விவேகானந்தர்

25. “எதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆப்ரஹாம் லிங்கன்

26.  ” பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய். செடிகளாக இரு அப்போதுதான் பூத்துக் கொண்டே இருப்பாய் ” – விவேகானந்தர் 

27. “முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன் வரும் தயக்கம். ‘முடித்தே தீருவேன்’ என்பது வெற்றிக்கான தொடக்கம் ” – கலைஞர் கருணாநிதி

28. ” பயத்தின் முடிவே வாழ்க்கையின் ஆரம்பம் ” – ஓஷோ

29. “எனது வெற்றிகள் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள் .எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் வந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள் ” -நெல்சன் மண்டேலா

30. “ஏமாற்றுவதை காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது” – ஆபிரகாம் லிங்கன்

31. ” வேலையை வெறுத்து செய்பவன் அடிமை , வேலையை விரும்பி செய்பவன் அரசன் ” – ஓஷோ 

32. ” மனமே எல்லாம். நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்!” – கவுதம புத்தர் 

மேலும் படிக்க – அலுவலக வேலையை சாமார்த்தியமாக கையாள : வெற்றிகரமான பெண்மணிகள் அலுவலகத்தில் முதல் மணிநேரத்தை எவ்வாறு கையாளுகிறார்கள் ?

பட ஆதாரம்  – பிக்ஸாபெ,பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்  

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

You Might Like This

சுதந்திர தின வாழ்த்துக்கள்

Read More From Self Help