சரும அழகிற்கு கமலாப்பழம் தோல் - வீட்டில் எளிய முறையில் பேஸ் பாக் செய்யலாம்!

சரும அழகிற்கு கமலாப்பழம் தோல் - வீட்டில் எளிய முறையில் பேஸ் பாக் செய்யலாம்!

கமலாப்பழத்தில் அதிக சுவையும், சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த பழம் உடலுக்கு பல நன்மைகளைத் தரும். எனினும், நாம் அனைவரும், இந்த பழத்தை உண்டபின், தோலை குப்பையில் போட்டு விடுகிறோம். ஆனால், இந்த பழத்தோலில் (orange peel) பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றை சரும அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம்.

 • இந்த தோலில் அதிகம் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது ப்ரீ ராடிகல்ஸ்களை எதிர்த்து போராட உதவும்
 • பருக்கள் மற்றும் தழும்புகளை போக்க உதவும்
 • இது ஒரு நல்ல ப்ளீசிங் ஏஜென்டாக வேலை செய்கின்றது. அதனால் சருமத்தில் இருக்கும் கரும் வளையம் மற்றும் கறைகளை போக்கும்
 • சருமத்தில் அதிக அளவு இருக்கும் எண்ணையை போக்க உதவும்
 • தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும்
 • இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றத்தை போக்கி, சருமம் நல்ல ஈரத்தன்மையோடு இருக்க உதவும்
 • சருமத்தை மிருதுவாக்கும்
 • இதில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டசியம் மற்றும் மக்னேசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது

கமலாப்பழத் தோலை சரியான முறையில் பயன்படுத்தினால், பல நன்மைகளை நீங்கள் பெறலாம். இதனை எப்படி எளிய முறையில் உங்கள் வீட்டில் பேஸ் பாக் செய்ய பயன்படுத்துவது என்று இங்கே பார்க்கலாம்.

செய்முறை 1

Pexels

 • ஆரஞ்சு தோலை நன்கு காய வைத்து பொடி செய்து கொள்ளவும்
 • இந்த பொடியை ஒரு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்தலாம்
 • சிறிது பொடியை எடுத்து பாலில் கலந்து பசை போல செய்து கொள்ளவும்
 • இந்த பசியை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்
 • பின்னர் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்
 • இது முகத்திற்கு நல்ல பலபலப்பையும், பொலிவையும் தரும்

செய்முறை 2

 • இந்த பேஸ் பாக் (face pack) முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க உதவும்.
 • சிறிதளவு கமலாப்பழ தோல் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது தேன் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
 • பின்னர், பசை போல செய்து, முகத்தில் தேய்த்து, மிதமாய் மசாஜ் செய்யவும்
 • சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
 • இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்

செய்முறை 3

Pexels

 • இந்த பேஸ் பாக் முகத்தில் இருக்கும் பருக்களையும், அரிப்பு மற்றும் சருமத்தில் இருக்கும் புண் போன்றவற்றையும் போக்க உதவும்
 • சிறிது கமலாப்பழ தோலை பொடி செய்தோ அல்லது சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தோ எடுத்துக் கொள்ள வேண்டும்
 • இதனுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை பல சாறை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
 • இந்த கலவையை முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும்
 • பின்னர் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்
 • இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்

செய்முறை 4

 • இந்த பேச பாக் மிருதுவான சருமத்தை பெற உதவும்
 • சிறிது கமலாப்பழ தோலை அரைத்து எடுத்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது பேகிங் சோடா மற்றும் ஓட்மீல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
 • இந்த கலவையை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
 • பின்னர் சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
 • இது முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களையும் போக்க உதவும்

செய்முறை 5

Pexels

 • இது வறண்ட சருமத்தை போக்க உதவும்
 • தேவையான அளவு கமலாப்பழ தோலை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது பால் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்கு கலக்கவும்
 • இந்த கலவையை முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும்
 • சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும்
 • பின்னர் மிதமான சுடு தண்ணீரில் முகத்தில் கழுவி விட வேண்டும்
 • இது உங்கள் சருமம் எப்போதும் ஈரப்பதத்தோடு இருக்கவும், பலபலப்பாக இருக்கவும் உதவும்

செய்முறை 6

 • இந்த  ஃபேஸ் பேக் சுருக்கங்களை போக்க உதவும்
 • தேவையான அளவு கமலாப்பழ பொடியை எடுத்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது சந்தானம் மற்றும் பனீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
 • இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
 • பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
 • இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

மேலும் படிக்க - சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !