புஷ்பவனம் குப்புசாமி மகளை காணவில்லை என புகார்.. யாரும் கடத்தவில்லை என பேஸ்புக்கில் பதிவு!

புஷ்பவனம் குப்புசாமி மகளை காணவில்லை என புகார்.. யாரும் கடத்தவில்லை என பேஸ்புக்கில் பதிவு!

பிரபல தமிழிசைக் கலைஞரான அனிதா குப்புசாமி, புஷ்பவனம் குப்புசாமி தம்பதியர்கள் தொடர்ந்து தமிழக மேடைகளில் மக்களிசையை முதன்மையாகப் பாடி வருபவர்கள். இதில் புஷ்பவனம் குப்புசாமி தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றிருப்பவர்.

சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் பயின்ற அனிதாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி அனிதா குப்புசாமியும் பிரபல பாடகியாவார். இவர்கள் இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்குச் சென்று தமிழர்கள் நடத்தும் விழாக்களில் இசைக் குழுவினரோடு சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார்கள். 

சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடி உள்ளனர். புஷ்பவனம் குப்புசாமி, அவர் மனைவி அனிதாவுடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ளார்கள். இவர்களின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

twitter

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வரும் இவர்களுக்கு பல்லவி (pallavi), மேகா என இரண்டு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி தற்போது மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கௌசிக் என்பவர் அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் டாக்டர் பல்லவியை காணவில்லை என்று புகார் ஒன்றினை தந்துள்ளார். 

மேலும் படிக்க - ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியல்.. தென்னிந்திய நடிகைகளில் அனுஷ்கா தேர்வு!

அந்த புகாரில், புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவிக்கும் அவரது சகோதரிக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்துடன் காரை எடுத்து கொண்டு சென்றுள்ளார் பல்லவி (pallavi). ஆனால், நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

instagram

பல்லவியின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை போனில் தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் முடியவில்லை. அவரின் நண்பர்களிடம், பல்லவி எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

அதனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் காணாமல் போன புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவியை தேடி வந்தனர்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல்லவி அகர்வால் (pallavi) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

facebook

மேலும் அந்த பதிவில் "நண்பர்களே, நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போய் விட்டதாகவோ கூறி சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன்.போலியான செய்திகளை தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க -குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்...பிரதமர் மோடி வேண்டுகோள்!

இந்த பதிவின் காரணமாக, பல்லவி காணாமல் போய் விட்டாரா அல்லது பத்திரமாக இருக்கிறாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எங்கு இருக்கிறேன் என்ற தகவல் குறித்து அவர் தகவல் அளிக்கவில்லை. மேலும் அவரது செல்போன் தண்ணீரில் விழுந்து விட்டதால் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

instagram

சில வருடங்களுக்கு முன்னர் மகன் புஷ்பவனம், மருமகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தன்னை கவனிக்காமல் இருப்பதாகவும், மருமகள் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் புஷ்பவனம் குப்புசாமியின் தாயார் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். 

இந்நிலையில் தற்போது அவரது மகளை காணவில்லை என்ற தகவல் பரவி வருகிறது. இதுவரை புஷ்பவனம் குப்புசாமி குடும்பத்தினர் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர்கள் சொல்வதே உண்மையாக இருக்க முடியும் என்பதால் மக்கள் அவர்களின் விளக்கத்துக்காக காத்துள்ளனர்.

மேலும் படிக்க - நடிகர் விஷாலின் தங்கை இவ்வளவு அழகா..! வைரலாகும் விஷால் தங்கை புகைப்படம் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!