ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியல்.. தென்னிந்திய நடிகைகளில் அனுஷ்கா தேர்வு!

ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியல்.. தென்னிந்திய நடிகைகளில் அனுஷ்கா தேர்வு!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற நாளிதழ் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் யார் என்று வருடம்தோறும் வாக்கெடுப்பு நடத்தி பட்டியல் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் பாலிவுட் நட்சத்திரமான ஆலியா பட் 2019ம் ஆண்டின் கவர்ச்சிப் பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மேலும் நடிகை தீபிகா படுகோனே கடந்த பத்து ஆண்டுகளாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் கவர்ச்சிப் பெண்ணாக (Sexiest Asian Woman Of The Decade) அறிவிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தைத் தளமாக கொண்ட வார இதழான 'ஈஸ்டர்ன் ஐ' கவர்ச்சியான ஆசியப் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆசியாவின் கவர்ச்சிப் பெண்ணாக ஆலியா பட் முதல் இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

twitter

இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோனே உள்ளார். கவர்ச்சியான ஆசியப்பெண் பட்டியல் ஆன்லைன் வாக்குகள், ஊடகக் கவரேஜ் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபிகா படுகோனே ஆசியாவின் கவர்ச்சிப் பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஆலியா பட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தீபிகா படுகோனே கடந்த பத்து ஆண்டுகளின் கவர்ச்சியான பெண் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் நடிகை என்பதைத்தாண்டி நவீன யுக பெண் சக்தியின் சின்னமாக ஆலியா இருக்கிறார் என்று ஈஸ்டர்ன் ஐ நிறுவனரும், ஆசிரியருமான அஸ்ஜத் நஸிர் தெரிவித்துள்ளார்.

twitter

இதுகுறித்து  பேசிய ஆலியா, தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ”உண்மையான அழகு என்பது வெளித் தோற்றத்தை தாண்டியது என்று நான் எப்போதுமே நம்புகிறேன். அதுதான் உண்மையும் கூட. நமக்கு வயதாகும், தோற்றங்கள் மாறும்.

ஆனால் நல்ல மனது நம்மை எப்போதும் அழகாக வைத்திருக்கும். அதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நட்சத்திரம் ஹினா கான் 2019 பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். 4வது இடத்தில் உள்ள மஹிரா கான் , 5வது இடத்தில் சுர்பி சந்தனா, கத்ரீனா கைஃப்(6), சிவாங்கி ஜோஷி (7), நியா சர்மா (8), மெஹ்விஷ் ஹயாத் (9), பிரியங்கா சோப்ரா (10) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

twitter

அனுஷ்கா ஷெட்டி 22வது இடத்திலும் 46 வயதான ஐஸ்வர்யா ராய் 39வது இடத்திலும் உள்ளனர். இதன் மூலம் செக்ஸியஸ்ட் பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு தென்னிந்திய நடிகை என்ற பெருமையை நடிகை அனுஷ்கா ஷெட்டி (anushka) பெற்றுள்ளார். 

மேலும் செக்ஸியஸ்ட் ஆஃப் டிகேட் என்ற பட்டியலில் அனுஷ்கா ஷெட்டி 8வது இடம் பிடித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் அனுஷ்கா அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் அவருக்கு (anushka) வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது ஹேமந்த் மதுக்கர் இயக்கியுள்ள நிசப்தம் படத்தில் நடித்துள்ளார். மாற்றுத்திறனாளி பெண்ணாக அவர் நடித்துள்ள இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இதையடுத்து தனுஷ் நடித்த அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் வேடத்தில் நடிக்க அழைத்தபோது அவர் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மேலும் நிசப்தம் படப்பிடிப்பை முடித்த பிறகு சில இளவட்ட டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த அனுஷ்கா (anushka) , அந்த படங்களில் ஒரு படத்தைகூட ஓகே பண்ணவில்லையாம். கதை பிடிக்கவில்லை, கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று சொல்லி தவிர்த்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!